-
21st March 2013, 01:23 AM
#11
Junior Member
Senior Hubber
நீயில்லாத த்மிழகம்
நிலவில்லாத வானம்
தலைவனில்லா உன்
தொண்டர்கள்
தாயில்லா
குழந்தைகள்
நீ கண்டதோ
மக்கள் ஆட்சி
இன்று
தம் மக்கள் ஆட்சி
மாதம் மும் மாரி
பொழிந்தது
மன்னவன் உன் ஆட்சியில்
மறைந்தாய் நீயும்
சுனாமி முதல் சூறாவளி
தமிழகமே அல்லலில்
படிக்காத நீ
படிக்கும் குழந்தைக்காக
திட்டங்கள் தீட்டினாய்
செய்யும் தொழிலே தெய்வம்
நீ சொன்ன பாடம்
திருடனும் திருந்தணும்
நீ சொன்ன வேதம்
உன் முகம் திரையில்
உள்ளம் மகிழ்ந்தோம்
பெரியவரை மதிக்கும்
பெண்மையைப் போற்றும்
பண்புகள் உந்தன்
படங்களில்
ஏழையை மிதிக்கும்
அதிகாரம் கண்டால்
எதிர்த்து நிற்க
பாடங்கள் சொன்னாய்
முறைகெட்ட வாழ்வு முறை
மாற்றச் சொன்னாய்
எதிரியை மன்னித்து
மறக்கச் சொன்னாய்
சண்டைகள் செய்தாய்
தமிழன் வீரம் சொல்ல
பாடல் மூலம்
வாழ்வியல் சொன்னாய்
நன் காதல் மூலம்
தமிழன் பண்பு கொண்டாய்
முத்தமிழ் போற்றும்
மதுரையில்
கோட்டை
கொண்டாய்
இயல் இசை நாடகம்
ஏற்றம் கண்டாய்
கொடுத்துச் சிவந்த
பொன்மன செம்மலே
எடுத்து சொன்ன
எங்கள் தங்கமே
மக்கள் மனதில் வாழும்
மக்கள் திலகமே
நீ
இருந்திருந்தால்
தமிழீழம்
இன்று
மலர்ந்திருக்கும்
தேசியத் தலைவனே
காவிரியில் நீர்
பாய்ந்திருக்கும்
நெல்லு வயல்
சாய்ந்திருக்கும்
இல்லாமை இல்லாமல்
தமிழ் மக்கள்
வாழ்ந்திருப்பார்
உன் கனவு
நனவாயிருக்கும்
by MGR baskaran
nanri - penmai photo from this thread
Last edited by mgrbaskaran; 21st March 2013 at 02:03 AM.
-
21st March 2013 01:23 AM
# ADS
Circuit advertisement
Bookmarks