Page 357 of 398 FirstFirst ... 257307347355356357358359367 ... LastLast
Results 3,561 to 3,570 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3561
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    உலக சினிமா நூற்றாண்டு விழா - இந்த ஆண்டு நடை பெறும்நிலையில்
    உலகளவில் நமது மக்கள் திலகம் சினிமா துறையில் பதித்த சாதனைகளை நினைவு கூறுவது
    நமது கடமையாகும் .


    இந்திய திரை பட துறையில் பல நடிகர்கள் வெவ்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் .
    மக்கள் திலகத்தின் சாதனைகள் -1947-1977
    ஒரே மொழியில் தமிழ் படங்களில் மக்கள் திலகம் 115 படங்களில் கதா நாயகனாக நடித்தவர் .
    இந்தியா - இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா நாடுகளில் புகழ் பெற்ற நடிகர் .
    உலகளவில் அதிக ரசிக மன்றங்களை பெற்ற நடிகர்
    ஒரு அரசியல் இயக்கத்தில் தொண்டராக சேர்ந்து - கட்சி பதவி - சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பதவி பெற்று 1967 தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினாராக வெற்றி பெற்றவர் .
    30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் ஹீரோ வாக ,திரை உலக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் .
    பல வெள்ளி விழா , வெற்றிவிழா , நூறு நாட்கள் படங்கள் தந்தவர் .
    தன்னுடைய வாழ் நாளில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - தொழிலாளர்கள் - திரைப்பட கலை வல்லுனர்கள் - அனைத்து தரப்பினரையும் வாழ வைத்தவர் .

    சமுதாய சீர் திருத்தத்தை தன்னுடைய படங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியவர் .
    1977 -2013 இந்த இடைப்பட்ட 36 வருடங்களில் அவரது படங்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஓடி கொண்டு வருவது உலக சாதனையாகும் .
    ஒரு இந்திய மொழியின் தமிழ் கதாநாயகனாக புகழ் பெற்று , இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்க பட்ட நடிகர் மக்கள் திலகம் எம்ஜியார் உலகளவில் புகழ் பெற்று
    மறைந்து 25 ஆண்டுகள் பின்னாலும் அவரது உலகமெங்கும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக , உலக சினிமா வரலாற்றில் புகழ் பெற்ற நடிகராக , மனித நேய பண்பாளராக ,பூஜித்து வருவது உலக சினிமா நூற்றான்று விழா கொண்டாடும் இத்தருணத்தில் மிகவும் பொருத்தமான ''world famous indian actor mgr '' என்றால் அது மிகையாகது .
    Last edited by esvee; 27th March 2013 at 05:48 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3562
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3563
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  5. #3564
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post



    பழம்பெரும் நடிகை சுகுமாரி அவர்கள் காலமானார். Our heartfelt condolences.
    சுமார் 2500 தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டவர். தலைவருடன் சில படங்களில் நடித்து உள்ளார். மதுரை வீரன் முதல் படம் என்று நினைக்கிறேன். நேற்று இன்று நாளை படத்தில் அவர் லதாவிற்கு தாயாக வருவார் ஐசரிவேலன் லதாவிடம் கேள்வி கேட்க சுகுமாரி அவர்கள் முந்திக் கொண்டு பதில் சொல்வார். ஐ.நா. சபை பற்றி என்ன நினைக்கிறிங்க? அந்த சபையிலே என் பெண்ணே ஆட கூப்பிட்டங்க நான் தான் அனுப்ப வில்லை என்பார்கள். ரசித்து சிரித்தேன்.

    எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    Last edited by MGR Roop; 27th March 2013 at 07:27 AM.

  6. #3565
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    உலக சினிமா நூற்றாண்டு விழா - உலக சினிமாவின் தரத்தை உயர்த்திய உன்னத நடிகர்..தனது நடிப்பின் மூலம் சமுதாய மாற்றம் ஏற்படுத்திய தன்னிகரில்லா தலைவர்..ஆம் தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்லை ஏற்படுத்தி அனைவருக்கும் வழிகாட்டியான மகத்தான தலைவர் அவர்..அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி சினிமா உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த புரட்சிதலைவர்..எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையே தன்னுடைய கொள்கையை, நல்ல கருத்துகளை தனது திரைப்படங்களில் புகுத்தி அனைவருக்கும் நல்வழி காட்டியவர். அவருடைய படங்கள் சமுதாயத்தையே ஈர்த்தபோது என்னையும் ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை.. சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைத்து தரப்பினரையும் ஈர்த்த நடிகர் நடிகப்பேரரசர் ஒருவர்தான். இந்த பெருமையை அடைய அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல..சிறு சிறு பாத்திரங்கள் மூலம் தோன்றி..அந்த பாத்திரங்களிலே முத்திரை பதித்து அந்த கால கட்டத்தில் திரையில் ஜொலித்த நட்சத்திரங்களின் ஒளியை மங்க செய்த சந்திரன் அவர். அவருடைய ஒவ்வொரு படங்களும் அவரே செதுக்கிய சிலைகள்..அதனால்தான் அத்திரைப்படங்கள் வெறும் படங்களாக மட்டுமல்லாமல் பாடங்கள் ஆயிற்று..மக்கள் திலகத்தின் படங்கள் அனைத்தும் வைரக்ரீடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினங்கள் என்றாலும் கோஹினூர் வைரம் என என்னை ஈர்த்த படங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்:

    1. மோகினி

    மக்கள் திலகமும் அவர் தம் துணைவியாரும் இணைந்து நடத்த ஈடில்லா திரைக்காவியம்..தலைவரின் அழகிய முகமும், துள்ளுகின்ற அவருடைய நடிப்பும் அனைவரையும் ஈர்க்கும். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றிருந்த தலைவர்..திரையுலகில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த காலம்..அந்த காலகட்டத்தில் கூட தன்னுடைய புரட்சி வசனங்களை, பொது நல கருத்துகளை இடம் பெற செய்திருந்தார். படத்தின் இறுதி கட்டத்தில் அவர் குகையில் வீரமாக பேசும் வசனத்தைக் கண்டு பிரம்மித்து போனேன். அந்த காலங்களில் கூட அப்போதிருந்த சூப்பர் ஸ்டார்கள் கூட இவ்வளவு வீரமாகவும் புரட்சிகரமாகவும் வசனங்களை பேசியதாகவும் வரலாறு இல்லை. தான் வளர்ந்து வரும் கால கட்டத்தில் கூட பேசிய வசனங்களை கேட்டாலே உடம்பெல்லாம் புல்லரிக்கும்..தலைவருடைய வழக்கமான பாணி இந்த திரைப்படத்தில் தெரியும். அவரை பார்த்து இப்படித்தான் கதாநாயகர்கள் நடிக்கவேண்டும் என்று அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் கற்றுகொண்ட படம்.

  7. #3566
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    நாடோடி மன்னன் - பாபநாசம் -அய்யம்பேட்டை -

    மக்கள் திலகம் அவர்களின் நாடோடி மன்னன் திரைப்படம் வரும் 29-3-2013 முதல்

    பாபநாசம் - அய்யம்பேட்டை - வேல்முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகள் .

    நமது நண்பர் திரு சுப்பு அவர்கள் தனது சுற்று பயணத்தின் போது கண்ட தகவல் .
    நன்றி சுப்பு சார் .

  8. #3567
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    உலக சினிமா நூற்றாண்டு விழா - இந்த ஆண்டு நடை பெறும்நிலையில்
    உலகளவில் நமது மக்கள் திலகம் சினிமா துறையில் பதித்த சாதனைகளை நினைவு கூறுவது
    நமது கடமையாகும் .


    இந்திய திரை பட துறையில் பல நடிகர்கள் வெவ்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் .
    மக்கள் திலகத்தின் சாதனைகள் -1947-1977
    ஒரே மொழியில் தமிழ் படங்களில் மக்கள் திலகம் 115 படங்களில் கதா நாயகனாக நடித்தவர் .
    இந்தியா - இலங்கை - சிங்கப்பூர் - மலேசியா நாடுகளில் புகழ் பெற்ற நடிகர் .
    உலகளவில் அதிக ரசிக மன்றங்களை பெற்ற நடிகர்
    ஒரு அரசியல் இயக்கத்தில் தொண்டராக சேர்ந்து - கட்சி பதவி - சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பதவி பெற்று 1967 தேர்தலில் சட்ட மன்ற உறுப்பினாராக வெற்றி பெற்றவர் .
    30 வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் ஹீரோ வாக ,திரை உலக சக்ரவர்த்தியாக வலம் வந்தவர் .
    பல வெள்ளி விழா , வெற்றிவிழா , நூறு நாட்கள் படங்கள் தந்தவர் .
    தன்னுடைய வாழ் நாளில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரை அரங்கு உரிமையாளர்கள் - தொழிலாளர்கள் - திரைப்பட கலை வல்லுனர்கள் - அனைத்து தரப்பினரையும் வாழ வைத்தவர் .

    சமுதாய சீர் திருத்தத்தை தன்னுடைய படங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்ல படங்களை மக்களுக்கு வழங்கியவர் .
    1977 -2013 இந்த இடைப்பட்ட 36 வருடங்களில் அவரது படங்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஓடி கொண்டு வருவது உலக சாதனையாகும் .
    ஒரு இந்திய மொழியின் தமிழ் கதாநாயகனாக புகழ் பெற்று , இந்திய அரசாங்கத்தின் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்க பட்ட நடிகர் மக்கள் திலகம் எம்ஜியார் உலகளவில் புகழ் பெற்று
    மறைந்து 25 ஆண்டுகள் பின்னாலும் அவரது உலகமெங்கும் உள்ள கோடிக் கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக , உலக சினிமா வரலாற்றில் புகழ் பெற்ற நடிகராக , மனித நேய பண்பாளராக ,பூஜித்து வருவது உலக சினிமா நூற்றான்று விழா கொண்டாடும் இத்தருணத்தில் மிகவும் பொருத்தமான ''world famous indian actor mgr '' என்றால் அது மிகையாகது .
    Mr.Vinod Sir,

    Thank u.

  9. #3568
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    உலக சினிமா நூற்றாண்டு விழா!
    திரைப்படம் என்ற மகத்தான சாதனத்தை அதன் இலக்கணம் வழுவாமல் மக்களுக்காக மக்களை நெறிப்படுத்துவதற்காக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் மக்கள் திலகம் மட்டுமே.
    20 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் தன் அயராத உழைப்பினால் உயர்ந்து சிம்மாசனத்தை அடைந்து கடைசிவரை அந்த சிம்மாசனத்தை விட்டு இறங்காமல் , மண்ணுலகை விட்டு மறைந்து 25 ஆண்டுகள் ஆனபின்னும் அவரது சிம்மாசனத்தை அப்படியே தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். தான் சார்ந்த துறையின் சகல தொழில்நுட்பங்களிலும் தன்னிகரில்லா தேர்ச்சி பெற்று ஒப்பற்ற இடம் பிடித்தவர் உலக அளவில் வேறு ஒருவரும் இல்லை.
    தனக்கென்று ஒரு பாணி, இயற்கை நடிப்பு, கொண்ட கொள்கையில் இருந்து வழுவாத நெறி, உலக இதிகாசங்களை விஞ்சும் அறவுரைகள் என்று படங்களை பாடங்களாய் ரசிகர் உள்ளங்களை கோயில்களாக மாற்றிய மனித தெய்வம் புரட்சித் தலைவர், மக்கள் திலகம், மன்னாதி மன்னன், ஊருக்கு உழைப்பவன், எம்.ஜி.ஆர். மட்டுமே. அதனால் தான் அவர் மனித சமுதாயத்திற்கே கலங்கரை விளக்கமாக இன்றும் திகழ்கிறார்.
    திரையுலகில் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான பாரத் விருது பெற்றார். மனிதப் பண்புகளால் இந்தியாவின் சிறந்த மனிதருக்கான பாரத ரத்னா விருது பெற்றார்.
    தான் சந்தித்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தன்னை விதைத்தவர், ஆலவிருட்சமாய் இன்றும் அனைவர் இதயங்களிலும் வீற்றிருப்பவர் அவர் ஒருவரே.
    நடிப்பு, நல்ல இசை ஞானம், இலக்கிய இலக்கணப் புலமை, ஒளிப்பதிவுத் திறன், படத்தொகுப்புப் பணியில் தேர்ச்சி, இயக்கும் திறன் உள்ளிட்ட அனைத்திலும் அவருக்கு நிகர் அவரே.
    அதிர்ஷ்டத்தால் உயர்இடம் பிடிக்கவில்லை. பல ஆண்டு போராட்டத்திற்குப் பின் இடம் பிடித்தார். பின் அத்தனை படங்களிலும் தனி இடம் பிடித்தார். அவரது அனைத்து படங்களும் இன்றும் அனைவர் நெஞ்சங்களிலும் கொலுவிருக்கும். இருப்பினும் எனது மனத்தில் இடம் பிடித்த முதல் 25 திரைப்படங்கள்
    1. நாடோடி மன்னன்
    2. எங்க வீட்டுப் பிள்ளை
    3. உலகம் சுற்றும் வாலிபன்
    4. பாசம்
    5. பெற்றால் தான் பிள்ளையா
    6. நாடோடி
    7. அன்பே வா
    8. நீதிக்குத் தலைவணங்கு
    9. ராஜாதேசிங்கு
    10. திருடாதே
    11.மாட்டுக்கார வேலன்
    12. மதுரை வீரன்
    13. அடிமைப்பெண்
    14. ரிக் ஷாக்காரன்
    15. நம்நாடு
    16. ஒளிவிளக்கு
    17. பறக்கும் பாவை
    18. அரசகட்டளை
    19. பல்லாண்டு வாழ்க
    20. வேட்டைக்காரன்
    21. ஆயிரத்தில் ஒருவன்
    22. பணம் படைத்தவன்
    23. நினைத்ததை முடிப்பவன்
    24. பெரிய இடத்துப் பெண்
    25. நல்லவன் வாழ்வான்.
    சமீப காலம் வரை ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் (கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை) எங்கள் ஊரில் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 30 படங்களுக்குக் குறைவில்லாமல் தொடர்ந்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த திரைப்படங்கள் மக்கள் திலகத்தின் படங்கள் மட்டுமே. அது மட்டுமல்ல. அவர் நடித்த படங்களில் பெரிய பேனரில் வெளிவந்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவரால் பெரிய நிலை அடைந்த தயாரிப்பாளர்கள் தான் அதிகம். அவரால் உயர்ந்த தயாரிப்பாளர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், எண்ணில் அடங்காதவர்கள்.
    உலக அளவில் ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே எம்.ஜி.ஆர்.
    அவரது இடம் யாராலும் எட்ட முடியாத இடம்.
    வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்.
    Last edited by jaisankar68; 27th March 2013 at 10:35 PM.

  10. #3569
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    தெலுங்கு தெரிந்தவர்கள் தயவு செய்து மொழிபெயர்த்து உதவவும்.

  11. #3570
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலியபெருமாள்

    இனிய நண்பர் திரு ஜெய்

    உலக சினிமா நூற்றாண்டு விழா - மக்கள் திலகத்தின் கலை உலக சாதனைகள் பற்றிய உங்களின் கட்டுரை மிகவும் அருமை .ஒவ்வொரு வரிகளும் மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் வைர வரிகள் .
    மக்கள் திலகத்தின் புரட்சிகரமான நடிப்பும் , கொள்கை பிடிப்பும் , மக்கள் மனதில் நிலயான இடத்தை பிடித்தும் இன்றும் வாழ்கிறார் என்றால் அது உலகளவில் மக்கள் திலகம் ஒருவரே .

    இந்த சாதனை உலக சினிமா நூற்றாண்டு விழா நடை பெறும் நேரத்தில் மக்கள் திலகம் அவர்களுக்கு கிடைத்த ஒரு மாபெரும் பரிசு .
    Last edited by esvee; 28th March 2013 at 06:07 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •