-
4th April 2013, 09:44 PM
#2451
Senior Member
Diamond Hubber
உலக நடிகர்கள் எல்லாரிடமும் அவரின் சாயல் எங்கோ நிச்சயம் தென்படும் ஏனெனில் அவர் ஒரு வாக்கியமோ,உரையோ அல்ல .அவரே எழுத்து.
அருமை கண்பத் சார். அந்த தெய்வத்தின் மெய்யில் நம் அனைவருடைய உயிரும் கலந்து அந்த எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அல்லவோ மெய்யான பொருளாக உள்ளது!
-
4th April 2013 09:44 PM
# ADS
Circuit advertisement
-
4th April 2013, 10:08 PM
#2452
Senior Member
Diamond Hubber
Cinema express march 16th
-
4th April 2013, 10:11 PM
#2453
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
தங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி. கோபால் சார் வார்த்தைகளில் விவேகத்தை அதிகப் படுத்தினால் போதும் மற்றபடி குறை சொல்ல முடியாது.
மிதமான நடிப்பை விரும்புவார்கள் என்று எப்போதும் வட மாநில மக்களைப் பற்றி மேம்போக்காக ஒரு கருத்து நிலவுவது உண்டு. ஆனால் அதனை மறுதலிக்கும் வகையில் தான் அதே வட மாநிலத்தில் ஆர்ப்பாட்டமான ஆட்டமும் பாட்டமுமாக ஷம்மி கபூர், பின்னர் கோவிந்தா போன்ற கலைஞர்களும் புகழ் பெற்றுள்ளனர். சில காட்சிகளில் அங்க சேஷ்டைகள் இருந்தாலும் பல படங்களில் ஷம்மி கபூரின் நடிப்பு உள்ளத்தை உருக்கும் வகையில் இருக்கும். ராஜ் கபூரின் ஜீனாயஹா இன்று வரை ஹிந்தி திரையுலகில் தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ளது. எனவே மிதமான நடிப்பு என்கிற போர்வையில் அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கே பல நடிகர்களிடத்தில் நிலவி வந்துள்ளது. தெற்கே பார்வையைத் திருப்ப முன்வராத வட நாட்டு கலைஞர்கள் இருக்கும் வரையில் தென் மாநிலங்கள் கலையில் சிறப்பும் அங்கீகாரமும் பெறுவது மிகவும் அபூர்வமாகத் தான் நடைபெற்றுகிறது.
இந்த வரிசையில் இடம் பெறும் பல வடநாட்டுக் கலைஞர்களில் திலீப் குமாரும் ஒருவர். தங்களுடைய வருத்திக் கொள்ளத் தேவையில்லை என்கிற மனோ பாவத்திற்கு ஒத்து வராத பாத்திரத்தை மறுப்பதற்கு ஒரு காரணமாகத் தான் அவர்கள் நடிகர் திலகத்தைப் புகழ்வது என்பது நிகழ்கிறது என்பதாகத் தான் நான் பொருள் கொள்கிறேன். என்னுடைய அனுமானம் தவறாக இருந்து அவர்களுடைய புகழில் நேர்மையிருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th April 2013, 11:21 PM
#2454
Senior Member
Seasoned Hubber
டியர் வாசு சார்,
மறைந்த மூத்த பத்திரிகையாளர் லைட்ஸ் ஆன் வினோத் என்கிற செல்லப்பா அவர்கள் தமிழ்த் திரையுலக தகவல் களஞ்சியம் என்று கூறினால் மிகையாகாது. அவருடைய திருப்பு முனை திரைப்படங்கள் தொடர் பழைய படங்களைப் பற்றிய தகவல் களஞ்சியமாக விளங்கியது. அந்த வரிசையில் வியட்நாம் வீடு திரைப்படத்தின் கதைச்சுருக்கம் இடம் பெற்ற பக்கத்தை இங்கு நம்முடன் பகிரந்து கொண்ட தங்களுக்கு மிக்க நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
4th April 2013, 11:25 PM
#2455
Senior Member
Seasoned Hubber
The Fabulous Senorita ... ராபர்ட் கிளார்க் நடித்து 1952ல் வெளி வந்த ஆங்கிலப் படம்
http://www.chucksmemorylane.com/imag...s-senorita.JPG
சரி இதை இங்கே தருவதற்குக் காரணம் ?
இருக்கிறதே .. அடுத்து நமது திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள படத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்திய படம் .. இதனைத் தழுவித் தான் நமது பட்டியலில் அடுத்து இடம் பெற உள்ள படம் உருவாக்கப் பட்டது என சொல்வார்கள்..
Last edited by RAGHAVENDRA; 4th April 2013 at 11:31 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th April 2013, 04:09 AM
#2456
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்
Thank you Vasu sir for detailed information about Mrs. MN Rajam. Not sure whether you knew it or not, she is from Madurai and her mother tongue is Sourashtra like mine. 
Her husband mother tongue is also Sourashtra and he is from Kumbokonam.
Cheers,
Sathish
-
5th April 2013, 07:10 AM
#2457
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
The Fabulous Senorita ... ராபர்ட் கிளார்க் நடித்து 1952ல் வெளி வந்த ஆங்கிலப் படம்
http://www.chucksmemorylane.com/imag...s-senorita.JPG
சரி இதை இங்கே தருவதற்குக் காரணம் ?
இருக்கிறதே .. அடுத்து நமது திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள படத்திற்கான தாக்கத்தை ஏற்படுத்திய படம் .. இதனைத் தழுவித் தான் நமது பட்டியலில் அடுத்து இடம் பெற உள்ள படம் உருவாக்கப் பட்டது என சொல்வார்கள்..
ராகவேந்தர் சார்,
மணமகன் தேவை- நான் ரசித்த ஆரம்ப கால NT படங்களில் ஒன்று. NT western பாணி stylised நடிப்பை ஆரம்ப பயிற்சி எடுத்த படம். காலத்தை முந்தியது.(ahead of its time )
-
5th April 2013, 08:21 AM
#2458
Senior Member
Seasoned Hubber
well said... NT Himself is well ahead of His time ...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
5th April 2013, 10:49 AM
#2459
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. வாசுதேவன் (நெய்வேலி) அவர்களே,
தங்கள் மீள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும், நடிகர் திலகத்துடன் நடித்த நாயகியர் தொடருடன்!
எம்.என்.இராஜம் அவர்களைப் பற்றிய தொடரும், நிழற்படங்களும், செய்திகளும் சுவை.
தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள சௌரிராஜன் ஸ்ரீ அவர்களே,
தங்கள் வரவு நல்வரவாகுக!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்புள்ள திரு. ராகவேந்திரன் அவர்களே,
திரு. கோபால் அவர்களின் "நடிகர் திலகம் - இந்தியாவின் ஒரே உலக அதிசயம்" தொடருக்கு மேலும் வலுவூட்டுவதாக உங்கள் பதிவுகள் அமைந்திருக்கிறது. உங்களிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
5th April 2013, 10:56 AM
#2460
Senior Member
Senior Hubber

Originally Posted by
vasudevan31355
அருமை கண்பத் சார். அந்த தெய்வத்தின் மெய்யில் நம் அனைவருடைய உயிரும் கலந்து அந்த எழுத்து உயிர்மெய்யெழுத்தாக அல்லவோ மெய்யான பொருளாக உள்ளது!
அன்புள்ள திரு. கண்பட் அவர்களே,
தங்களின் தீந்தமிழைச் சுவைத்து சில நாட்களாகிறது. தொடர்ந்து அமுதளியுங்கள்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
Bookmarks