-
5th April 2013, 02:07 PM
#11
Moderator
Platinum Hubber

Originally Posted by
Gopal,S.
Meisner School.
இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.
நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).
அடிக்கோடிடப்பட்ட பகுதியை நீங்கள் கீழே குடுத்த எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்க சிரமமாக இருக்கிறது.
வசனங்கள் தட்டையாக உள்வாங்கப்பட்டு, வெளிப்படுத்தும்போது அந்தக்கணத்தின் (முன்தீர்மானம் இன்றி) உணர்ச்சியுடன் வெளிப்படத்தவேண்டும் (என்று இவ்வகை கூறுகிறது) என்று புரிந்துகொண்டேன்.
குறிப்பாக உடன் நடிப்பவர்கள் காட்சியின் டைனமிக்ஸ் இவை சார்ந்து மேலெழும் performance என்பதை படிக்காத மேதை, ப.ம.போதுமா போன்றவற்றில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பரை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.
(நான் பார்த்தவரை) காட்சிகளின் கதியும் (pace), உடன் நடிப்பவர்களுடன் உள்ள interactionஸும் சட்சட்டென்று மாறிக்கொண்டே வரும் (because of the episodic nature of that film). உதாரணம்: ஒரு காட்சி முன்புதான் சந்தித்த முத்துராமன் குடும்பத்துடன் ஒரு துயரத்தில் பங்கெடுக்கவேண்டிய அடுத்த காட்சி. இதற்கு முன்: முற்றிலும் வேறுபட்ட ஞானசம்பந்தர் காட்சி. உடன் யாருமே நடிக்காத : மலை ஏறும் காட்சி.
இவற்றில் உள்ள consistency அபாரமானது. அதில் ஒரு வித தீர்க்கமான முன்தீர்மானமும், சூழலுக்கு அப்பால் (மேலே உயர்ந்து!) இயங்கும் தன்மையும் எனக்குத் தெரிகின்றன.
என் புரிதல் முழுமையில்லை என்று நினைக்கிறேன்...
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
5th April 2013 02:07 PM
# ADS
Circuit advertisement
Bookmarks