-
23rd April 2013, 07:17 AM
#2981
Senior Member
Seasoned Hubber
Pathi Bakthi Tamil Classic - Sivaji Ganeshan full movie
-
23rd April 2013 07:17 AM
# ADS
Circuit advertisement
-
23rd April 2013, 07:18 AM
#2982
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan, Savitri Comedy Scene - Navarathri Tamil Movie
-
23rd April 2013, 07:19 AM
#2983
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan Saving Savitri Scene - Navarathri Tamil Movie
-
23rd April 2013, 07:19 AM
#2984
Senior Member
Seasoned Hubber
Sivaji Ganesan, Savitri Comedy Scene - Navarathri Tamil Movie
-
23rd April 2013, 08:20 AM
#2985
Senior Member
Seasoned Hubber
Dear சதீஷ்,
நடிகர் திலகத்தின் ஒவ்வொரு ஸ்டில்லுக்குமே நாம் ஆயிரம் பக்கங்களுக்கு பொழிப்புரை எழுதலாம். ஒவ்வொரு காட்சிக்குமே ஏராளமான ஆய்வுரைகள் படைக்கலாம். தாங்கள் அள்ளி வழங்கியிருக்கும் நிழற்படங்களுக்கும் காணொளிகளுக்கும் 1000 பாகங்களுக்கு நமது மய்யம் திரியில் இடம் தேவைப் படும். அ்வ்வளவு விஷயங்கள் அ்ந்த மேதை நமக்கு சொல்லியிருக்கிறார். எதை எடுப்பது எதை விடுப்பது என தெரியாமல் முழிக்கின்றோம்.
மிக்க நன்றி.
ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு நிதானமாக அலசுவோமே. எதுவும் விட்டுப் போகாமல் இருக்கும்.
தாங்கள் இடும் காணொளிகளுடன் அதனைப் பற்றிய தங்கள் குறிப்புகளையும் படிக்க ஆவலாயிருக்கிறோம். அந்தப் படத்தைப் பற்றிய தங்கள் பழைய நினைவுகள், அதில் தங்கள் மனதில் தோன்றும் சிறப்பு அம்சங்கள் இவற்றையும் குறிப்பிட்டால் பல்வேறு தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தின் படங்கள் எப்படிப் பட்ட தாக்கங்கள், நெகிழ்வுகள் போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிய மிகவும் ஆவலாயுள்ளேன்.
இனி வரும் காலங்களில் தங்களின் காணொளிகளுடன் தங்களின் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு நேரத்தில் ஒன்று என்று அமைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ஆவலுடன் தங்களுடைய பதிவுகளை எதிர்நோக்குகின்றோம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2013, 08:26 AM
#2986
Senior Member
Seasoned Hubber
உடைகளுக்கு உயரமளித்த உயர்ந்த மனிதன்
தமிழ்க் கலாச்சாரத்தின் அடிப்படையே வேட்டிதான். ஒவ்வொரு நேரத்திலும் அதனுடைய அமைப்பு பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும். அதைக் கட்டும் முறையிலேயே பல்வேறு விதமான உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் சித்தரித்து விடும். அந்த வேட்டிக்கே சிறந்த முறையில் அங்கீகாரம் தந்தவர் நடிகர் திலகம். தான் வேட்டி கட்டும் பாவனையிலேயே அந்த பாத்திரத்தின் தன்மையைக் கூறும் வல்லமை படைத்தவர் உலகிலேயே நடிகர் திலகம் மட்டும் தான். கை கொடுத்த தெய்வம் படத்தில் ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலில் பெண்ணோடு தோன்றி சரணத்தின் போது வேட்டியை சற்றே உயர்த்திப் பிடித்து கோபமாக முறைப்பதாகட்டும், சவாலே சமாளி படத்தில் அதே வேட்டியை மடித்துக் கட்டி வயலில் உழும் போதாகட்டும், பஞ்சாயத்தில் சவாலுக்கு தயாராகும் போதாகட்டும், ஒவ்வொரு சூழ்நிலையில் வேட்டி கட்டும் முறையிலேயே சூழ்நிலையை சித்தரித்தவர் நடிகர் திலகம்.
படம் முழுதும் வேட்டியுடன் நடித்து மாபெரும் வெற்றியைப் பெற வைத்த ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். உதாரணம் சவாலே சமாளி. அதுவும் 150வது படம். 150வது படம் என்பதற்காக, காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல், டூயட் பாட்டு இல்லாமல், கனவுக் காட்சி, சண்டைக் காட்சி என்று மசாலா அம்சங்கள் இல்லாமல் தந்தவரும் நடிகர் திலகம் மட்டுமே.
உதாரணத்திற்கு கை கொடுத்த தெய்வம் படத்தில் இடம் பெற்ற ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ பாடலைப் பார்ப்போம்.
வேட்டியையும் நடிக்க வைக்க முடியும் என ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டியவர் ஒப்பற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும் தான்.
இன்னும் தொடரும் காலங்களில் பல்வேறு விதமான சூழ்நிலைகளில் வேட்டியின் மூலம் பாத்திரத்தை சித்தரித்த அவருடைய சிறப்பை நாம் காணுவோம்.
Last edited by RAGHAVENDRA; 23rd April 2013 at 10:05 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
23rd April 2013, 11:02 AM
#2987
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Sowrirajan Sree
Dear Sir,
Your efforts in the form of sending a notice to the producer of Kalpathi Agoram New Film is commendable and appreciated..!
We all should get united and take these type of people to task in a proper way.
Superb Sir ! Great Job !!
SRS
Dear Sowrirajan Sir,
Thanks for your appreciation.
-
23rd April 2013, 11:06 AM
#2988
Senior Member
Diamond Hubber
வேந்தரின் மாய வேட்டிகள்

இல்லறஜோதியில் இனிதான வேட்டி
முதல் தேதியில் முத்தான வேட்டி
மங்கையர் திலகத்தில் மணியான வேட்டி
வாழ்விலே ஒரு நாளில் வளமில்லா வேட்டி
மக்களை பெற்ற மகராசியில் மண் மணக்கும் வேட்டி
நா(ம்)ன் பெற்ற செல்வத்தின் நலுங்காத வேட்டி
பாகப் பிரிவினையில் பட்டிக்காட்டான் வேட்டி
நிச்சயத் தாம்பூலத்தில் நிலா வேட்டி
தெய்வப் பிறவியில் தெய்வாம்ச வேட்டி
படிக்காத ரங்கனின் பகட்டில்லா வேட்டி
பாசமலரில் பாங்கான வேட்டி
அறிவாளியில் அழகு வேட்டி
பந்த பாசத்தில் பணிவான வேட்டி
குலமகள் ராதையில் குணமான வேட்டி
கல்யாணியின் கணவனில் கண்ணியமான வேட்டி
கை கொடுத்த தெய்வத்தின் கை தூக்கும் வேட்டி
முரடன் முத்துவின் முரட்டு வேட்டி
பழனியின் பாவமான வேட்டி
நவராத்திரியில் நாட்டுப்புறத்தான் வேட்டி
நீலவானத்தில் நீட்டான வேட்டி
செல்வத்தின் செல்வாக்கான வேட்டி
ஊட்டி வரை உறவின் ஒய்யார வேட்டி
லட்சுமி கல்யாணத்தில் லட்சணமான வேட்டி
உயர்ந்த மனிதனின் உன்னத வேட்டி
அன்பளிப்பில் அலுங்காத வேட்டி
சிக்கலாரின் சிலுசிலு வேட்டி
எங்க ஊர் ராஜாவின் எகத்தாள வேட்டி
விளையாட்டுப் பிள்ளையின் விறுவிறு வேட்டி
வியட்நாம் வீட்டின் பிராமண வேட்டி
எதிரொலியில் எடுப்பான வேட்டி
சொர்க்கத்தில் சொகுசான வேட்டி
குலமா குனமாவில் குணமான வேட்டி
சுமதி என் சுந்தரியில் சுடர் விடும் வேட்டி
சவாலே சமாளியில் சவால் விடும் வேட்டி
தேனும் பாலும் படத்தில் தேனான வேட்டி
பட்டிக்காடா பட்டணமாவில் பண்பாட்டு வேட்டி
பாரத விலாசில் பரபரக்கும் வேட்டி
பொன்னூஞ்சலில் பொன்னான வேட்டி
கௌரவத்தில் கனிவான வேட்டி
ராஜபார்ட்டில் ரம்மியமான வேட்டி
தாயில் தன்மான வேட்டி
சௌத்திரியின் தீபாவளி வேட்டி
அன்பைத்தேடியில் அழகான வேட்டி
சத்தியத்தில் சாந்தமான வேட்டி
கிரஹப் பிரவேசத்தில் கிளாஸ் வேட்டி
அண்ணன் ஒரு கோயிலில் ஆர்ப்பாட்ட வேட்டி
திரிசூலத்தில் மங்கள வேட்டி
முதல் மரியாதையில் மரியாதை வேட்டி
என்று இன்னும் இன்னும் நிறைய வேட்டிகள் நடிகர் திலகத்தோடு சேர்ந்து நடித்துள்ளன.
ராகவேந்தர் சார்! இப்படி உசுப்பேற்றி விட்டீர்களே! நியாயமா? நான் வேலைக்குப் போக வேண்டாமா?
Last edited by vasudevan31355; 24th April 2013 at 06:15 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
23rd April 2013, 12:44 PM
#2989
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
வேந்தரின் மாய வேட்டிகள்
என்று இன்னும் இன்னும் நிறைய வேட்டிகள் நடிகர் திலகத்தோடு சேர்ந்து நடித்துள்ளன.
ராகவேந்தர் சார்! இப்படி உசுப்பேற்றி விட்டீர்களே! நியாயமா? நான் வேலைக்குப் போக வேண்டாமா?
Awesome Vasu sir. NT has given new dimension to Dhotis.
-
23rd April 2013, 12:46 PM
#2990
Senior Member
Devoted Hubber
ஆனந்த கண்ணீர் ..........
பரிச்சைக்கு நேரமாச்சு .................
வா கண்ணா வா ..................
கருடா சௌக்கியமா .....................
Bookmarks