-
27th April 2013, 07:12 AM
#11
Senior Member
Seasoned Hubber
டியர் பம்மலார் சார்

மிகக் கடுமையாக தங்கள் உடல் பொருள் உழைப்பினை அர்ப்பணித்து, இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவில் அற்புதமான முறையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிழற்படங்களின் தொகுப்பை மலராக உருவாக்கி அவர்களே வியந்து, மகிழ்ந்து, பாராட்டி நூறு சதவீத விற்பனையை எட்டி, சாதனை படைத்துள்ளீர்கள். இது எம்.ஜி.ஆர். அவர்களுக்கான படைப்பு என்பதையும் தாண்டி, தமிழ்த் திரையுலகின் ஆவணத் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது என்பதே உண்மை. இதற்கு உரித்தானவர் ஒரு சிவாஜி ரசிகர் என்கிற முறையிலும், நம்முடைய மய்ய நண்பர் என்கிற முறையிலும் தங்களை நான் உளமாரப் பாராட்டுகிறேன். முதன் முதலாக தமிழ்த் திரையுலகிற்கு ஒரு முழுமையான நிழற்பட ஆல்பம், அதுவும் சோலோ ஸ்டில்ஸ் என்கிற முறையில் இது சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்காகத் தங்களுக்கு மீண்டும் என் உளமார்ந்த பாராட்டுக்கள். தங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புத் தந்த வினோத் சார் மற்றும் மற்ற எம்.ஜி.ஆர்.ரசிகர் நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 140 படங்களுக்கே இவ்வளவு பெரிய வரவேற்பு என்றால், தங்களிடமிருந்து மலரப் போகும் நமது காவிய நாயகனின் 305 படங்களுக்கான ஆல்பம் ...
ஆஹா ... நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது.. மெய் சிலிர்க்கிறது...
அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Last edited by RAGHAVENDRA; 27th April 2013 at 07:18 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
27th April 2013 07:12 AM
# ADS
Circuit advertisement
Bookmarks