-
3rd May 2013, 06:51 AM
#11
Senior Member
Seasoned Hubber
ஒவ்வொருவரும் நடிகர் திலகத்தைப் பற்றி எழுதும் போது, அவர் மேல் இருக்கும் பக்தி தம்மையறியாமலேயே அல்லது அறிந்தே எழுத்து வன்மையைக் கொண்டு வருகிறது. நாளடைவில் இதனுடைய மெருகேறிக்கொண்டு வந்து இத்திரியின் மேன்மையை மட்டுமின்றி இம் மய்ய இணைய தளத்திற்கும் பெருமையைத் தேடித் தரும் வகையில் அமைந்து வருகிறது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் ஒரு சிறப்பம்சம் என்ன வென்றால் ஒவ்வொருவருவருடைய ஸ்டைலும் தங்களுடைய தனித்தன்மையைக் கொண்டிருப்பது தான். இது நடிகர் திலகத்திற்கு அவருடைய ரசிகர்கள் செய்யும் மிகச் சிறந்த தொண்டு என்பதையும் தாண்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் விளங்கி வருகிறது.
டியர் சௌரிராஜன்
என்னுடைய நம்பிக்கை வீண் போகவில்லை. தங்களுக்குள் உள்ள தமிழ்ப் புலமையை நடிகர் திலகம் எப்படி வரவழைத்து விட்டார் பாருங்கள். இனி தொடர்ந்து தாங்கள் இது போன்று அழகிய தமிழ் நடையிலேயே எழுதுங்கள். பாராட்டுக்குள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
3rd May 2013 06:51 AM
# ADS
Circuit advertisement
Bookmarks