-
6th May 2013, 04:53 PM
#11
Senior Member
Seasoned Hubber
சத்தியமாய் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த தற்செயல் ராகவேந்தர் சார். முரளியை சீண்டியும், தங்களுடன் நிஜமாகவே உதவி கோரியும் போட பட்ட பதிவுதான் அது. நான் தங்களை முதல் இரண்டு வரிகளுடன் தொடர்பு படுத்தி போடவில்லை. இம்முறை ,நிஜமாகவே நான் அப்பாவிதான்.
உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி சார்.
நன்றியெல்லாம் எதற்கு சார். எல்லோருக்கும் பயன் பட வேண்டும், அது எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பது தான் நோக்கம்.
தாங்கள் இனி எம்முறையும் அப்பாவியாகவே இருங்கள். நடுவில் ட போட வைத்து விட வேண்டாம் என்பது தான் என் ஆசை.
Jokes apart, let's be serious in our business. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் பல காதங்கள் உள்ளன. இன்னும் 100 பாகங்கள் நமக்கு ஒதுக்கினாலும் போதாத அளவிற்கு நடிகர் திலகத்தைப் பற்றி நமக்கு விஷயங்கள் உள்ளன. இனி முழுமையாக தாங்கள் தங்கள் ஆய்வினைத் தொடர்ந்து எழுதுங்கள். அனைவரும் வந்து இணைந்து கொள்வார்கள். தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நம்மிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விஷய தாகத்தையும் உண்டாக்கும். எனவே தங்கள் பணியைத் தொடருங்கள். தங்களுடைய நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ளவும் நடிகர் திலகமே வழி வகுப்பார். அவருடைய படங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும்.
அனைவரைப் போல் தங்கள் ஆய்வுக் கட்டுரையை மேலும் மேலும் எதிர்பார்க்கும்
அன்பு நண்பன்
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
6th May 2013 04:53 PM
# ADS
Circuit advertisement
Bookmarks