Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சௌரிராஜன்
    இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.

    இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பயனற்ற பதிவுகள் என்று ஆவணங்களையும் நிழற்படங்களையும் கிண்டலடித்தவர்களும் உண்டு. அவற்றின் மகிமை தெரியாமல் மேம்போக்காக கேலி செய்தது மட்டுமின்றி இங்கு அவை இடம் பெறக் கூடாதென்பதற்கும் முயற்சிகள் நடந்தன. இதற்காக தனித்திரி துவங்கப் பட்டு பம்மலார் தன் பணியினை ஆற்றி வந்தார். அவர் வருகையில்லாமல் இப்போது அத்திரி முடக்கப்பட்டுள்ளது.

    இவையெல்லாம் தங்களிடம் கூறுவதற்குக் காரணம், எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டு இந்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தங்களுக்கு உணர்த்தவே.

    திருவிளையாடல் பதிவினைப் பொறுத்த வரை தங்களுக்கு நான் பாராட்டுத் தெரிவித்ததற்குக் காரணம் ... [பொதுவாக அனைத்து நண்பர்களின் பதிவுகளுக்குமே நான் பாராட்டுக் கூறாமல் இருக்க மாட்டேன் ...] தாங்கள் அதனைக் கூற முன் வந்த விதமே.

    நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன் [QUOTE] என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.

    அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.
    Last edited by RAGHAVENDRA; 7th May 2013 at 07:01 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •