-
7th May 2013, 03:10 PM
#11
Senior Member
Seasoned Hubber
இங்கு இருக்கும் சிவாஜி ரசிகர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு புலமை உள்ளது. இதனை நான் முன்னமேயே கூறியுள்ளேன். நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு எழுத்து என்பது கைவந்த கலை. மிகக் குறுகிய காலத்தில் தமிழில் பதிவுகளை இட பழகி விட்டதே தங்கள் திறமையைக் காட்டுகிறது. அப்படி இருக்கும் போது தங்கள் கருத்துக்களைப் பதியும் தங்களின் புலமை தெரியாமலா இருக்கும். அதில் எள்ளளவு ஐயமும் இல்லை.
இது தங்களுக்காக என்பதை விட பொதுவாக எழுதியதாய் எடுத்துக் கொள்ளுங்கள். அதனைத் தாங்கள் தனியே quote பண்ணியிருந்தால் தெரிந்திருக்கும்.
Anyway, I am very happy that you have taken this in right perspective and thank you very much.
இது ஒரு புறம் இருக்கட்டும்... கோபால் கூறியது போல் Sree வேறு Sri வேறா ... சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் ... ப்ளீஸ்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
7th May 2013 03:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks