-
9th May 2013, 07:30 AM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Gopal,S.
இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-23
எதிர்காலத்தில் யாருமே வெளிச்சமில்லாமல் ,பிறரின் தொடர்ந்த தலையீடு(ஆத்மார்த்தமாக இன்றி அனாவசிய),குறுக்கீடு இல்லாமல்,வாழவே வழியில்லாத நிலை மீடியா மற்றும் பல வகை electronic gadgets இனால் உருவாக்க படுவதை,allegory என்ற முறையில் சொன்ன படம் trumam show என்ற jim carrey யின் படம்.இதில் truman தவிர ஏனையோர் அனைவரும் நடிப்பவர்கள். கிட்டத்தட்ட இது போன்ற நிலைதான் நம் நாயகன் கோபாலிற்கு. அவனை தவிர சுற்றியிருப்போர் அனைவரும் நடிப்பவர்கள். கோபால் வாழ்க்கை, அவன் காணும் பிரச்சினைகள் எல்லாமே மற்றவர்களால் கட்டமைக்க படுபவை. கோபால் படும் அவதி மட்டுமே நிஜம். படத்திலேயே வருவது போல் பரிதாபத்துக்குரிய வாழ்க்கை.
Perfect summing up of the character.
இதில் கோபால் ஒரு தனியன். fixations ,obsessions ,உடைய பணக்கார sophisticated person with ceremonial politeness . Impulsive , breaks down at the first opportunity when confronted with adversity .
Clear picture presented of the character. super.
இந்த மாதிரி ஒரு பாத்திரத்தை நடிகர்திலகம் மட்டுமே அதன் நிஜமான உள்வாங்கலோடு , தன் அபார திறமையால் உள்வாங்கியதை மிக மிக துல்லியமாக வெளிபடுத்துவார்.இந்த படத்தில் ஒரு இயக்குனரின் அபார பங்களிப்பு அவர் பாத்திரத்தை இமயத்துக்கே உயர்த்தி விடும்.
வேறு நடிகரென்றால் ஒரு வருஷம் வீட்டுப்பாடம் செய்வார்களோ...
இந்த படத்திற்காக நடிகர்திலகம் தேர்ந்தெடுத்த உடல் மொழி, ஒரு introverted ceremonial politeness கொண்டது. புகை வண்டியை காணும் போது ஒரு tremor (வலிப்பு அல்ல)என்ற mild hysterical action .
can be interpreted as ...action for reaction
பொதுவாக ஒரு சோர்வு ததும்பும் meloncholic look . சந்தோஷத்தை அளவாகவே வெளியிடுவார். Anxiety வரும் போது தடுமாறி உடைந்து போவார். depression என்ற அளவிற்கு தள்ள படும் போது விரக்தி கலந்த frustration .(உலகமே மூழ்கி விட்டது போல் ).நம்பிக்கை குலைவு ஏற்படும் போது அழிக்க நினைக்கும் (bout of nihilism )தன்னை மறந்த வெறி,
எம்.ஆர்.ராதா டம்ளரை உடைத்தவுடன் காட்டும் நடிப்பு...
வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ள படும் போது ஒரு பிரமை கலந்த monologue (தான் மட்டும் உண்மை. சுற்றியிருப்பதெல்லாம் பொருட்டில்லை என்ற பாவம் ), குழந்தை போல் தன் கருத்தை மட்டும் அழுத்தி சொல்லும் தன்முனைவு,
confession scene at the climax
சின்ன சின்ன தற்காலிக நம்பிக்கைகளை மலை போல் நம்பி குதூகலிக்கும் ,நம்ப ஆசைபடும் விழைவு என்று flawless character sketch .
கை ரேகை கிடைத்த செய்தியைக் கேட்டவுடன் ....
இனி அந்த பாத்திரத்துக்குள் ஆழமாக நுழைவோம். ஆனால் நான் கூறியவற்றை தயவு செய்து இன்னொரு முறை படித்து தெளிவு செய்து கொள்ளவும். நாம் பேச போவது சராசரி விஷயம் அல்ல.இந்த தயாரிப்பு நமக்கு அவசியம்.
-----To be continued .
காத்திருக்கிறோம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
9th May 2013 07:30 AM
# ADS
Circuit advertisement
Bookmarks