டியர் கோபால் சார்,
தங்களுடைய கோரிக்கையில் உள்ள நியாயமும் ஆதங்கமும் புரிகிறது. ஆனால் அவ்வப்போது மற்ற பதிவுகளையும் நாம் தவிர்க்க முடியாது. தாங்கள் எப்படி தங்களுடைய கட்டுரையனை முழுக்க முழுக்க இடையூறின்றி எழுத விழைகிறீர்களோ அதே போல் எங்களுக்கும் தொடர்ந்து இதனைப் படிக்க விருப்பம். அதே சமயம் மற்ற பதிவுகளும் அவ்வப்போது வருவதை தவிர்க்க இயலாது.
என்னுடைய தனிப்பட்ட விருப்பம், இந்த ஆய்வேட்டினைத் தனித்திரியாக பதித்தால் முழு ஈடுபாட்டுடன் இடைவெளி இல்லாமல் எழுதவும் படிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது மட்டுமன்றி கவனமும் சிதறாமல் இருக்கும்.
மற்ற நண்பர்களும் இந்தக் கருத்தினை ஏற்றுக் கொள்வார்கள் என எண்ணுகிறேன். அப்படி ஏற்றுக் கொண்டால் மாடரேட்டர்களின் துணையோடு இந்த ஆய்வேட்டின் தொடர்புடைய அத்தனை பதிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே திரியில் பார்க்கலாம்.
அப்படி அதற்கு கஷ்டமாக இருந்தால் கூட, திரியினை ஆரம்பித்து விட்டு, துவக்கத்தில் முந்தைய பதிவுகளுக்கான இணைப்பினை அப்படியே தந்து விடலாம். ஏனென்றால் அதனுடைய response பதிவுகளும் தொடர்ந்தே வருவதால். இனி வரும் புதிய தொடர்களை புதிய திரியில் எழுதிக் கொள்ளலாம்.
Of course the decision is yours.




Bookmarks