-
11th May 2013, 10:56 PM
#3461
Junior Member
Veteran Hubber
dear Sowrirajan Sir. Dialogue delivery has always been the sole property of our NT. His stage performances and the training had always helped him memorize lengthy dialogues effortlessly. But when it comes to the delivery before a camera, ..... imagine .... the meticulous way of his expressions in tandem with his modulations in dialogue delivery like a cannon ball discharge! The Parasakthi boy remains the bench mark for any other actor and the role model to reach super duper stardom for generations of actors to come. From Parasakthi to his last film we have seen lot of transformations in NT with time. While other actors remain with almost the same stature of course with signs of aging, NT's stature was also at variance with movies in an unbelievable manner when he became slim and thinner in movies like Enga Maamaa, Thanga Surangam, GAlatta Kalyanam, Sumathi En sundari..... We can imagine polishing of diamonds with tools but one can never imagine that a diamond will polish itself to remain forever like NT. No other actor in this universe has undergone such turmoils and shown dedication to the roles he took up or assigned with. Still he remained unassumed throughout the course of his career depicting his level of maturity of having seen successes and failures alike!
-
11th May 2013 10:56 PM
# ADS
Circuit advertisement
-
11th May 2013, 11:44 PM
#3462
புதிய பறவையின் montage shot-ஐ பதிந்ததற்கு மிக்க நன்றி வாசு சார்
இந்த திரைப்படம் திரையரங்குகளில்தான் வெகு நாட்களாக வரவில்லை, நல்ல பிரதி டிவிடி வடிவத்திலாவது வராதா என்று ஏங்கி கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் dupe negative என்ற format-லிருந்து பிரதி எடுக்கப்பட்டு இந்த மாதம் 19 அல்லது 26-ந தேதி அன்று கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் அற்புத காவியம் - இருவர் உள்ளம்.
அன்புடன்
srs, என் சார்பில் பேசியதற்கு நன்றி.
-
12th May 2013, 04:55 AM
#3463
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
புதிய பறவையின் montage shot-ஐ பதிந்ததற்கு மிக்க நன்றி வாசு சார்
முரளி, வாசு,
தாங்களிருவரும் குறிப்பிட்டுள்ளது போல் அந்த புதிய பறவை காட்சி montage அல்ல. montage என்பது நிறைய குட்டி குட்டி shot களை dissolve /fade முறையில் edit செய்து தொகுப்பது.Sergi Isenstein என்ற ரஷ்ய மேதையால் Battle ship Potemkin என்ற ஒரு cult classic மௌன படத்தில் 1925 இல் அறிமுக படுத்த பட்டது.
-
12th May 2013, 06:42 AM
#3464
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gopal,s.
முரளி, வாசு,
தாங்களிருவரும் குறிப்பிட்டுள்ளது போல் அந்த புதிய பறவை காட்சி montage அல்ல. Montage என்பது நிறைய குட்டி குட்டி shot களை dissolve /fade முறையில் edit செய்து தொகுப்பது.sergi isenstein என்ற ரஷ்ய மேதையால் battle ship potemkin என்ற ஒரு cult classic மௌன படத்தில் 1925 இல் அறிமுக படுத்த பட்டது.
உதாரணம் ... தற்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் sunfeast விளம்பரத்தை ஓரளவு சொல்லலாம். Fade in / fade out or dissolve in / dissolve out முறையில் காட்சிகளைத் தொகுப்பது. Gradual ஆக காட்சி தோன்றுவதும் gradual ஆக காட்சி மறைவதும் ஆனால் காட்சிகளின் நீளம் மிகவும் குறைவானதாக அமைக்கப் படுவதும் பயன்படுத்தப் படும் யுக்தி. இது பெரும்பாலும் ஆங்கிலப் படங்களின் முன்னாட்டங்களில் காணலாம்.
மான்டேஜ் யுக்தி என்பது பல்வேறு இயக்குநர்களால், ஒளிப்பதிவாளர்களால், தொகுப்பாளர்களால், பல்வேறு விதங்களில் பொருள் காணப் படுகிறது. குறிப்பிட்டு இதைத் தான் மான்டேஜ் என நேரடியாக சொல்ல முடியாவிட்டாலும் கூட ... பெருவாரியாக மான்டேஜ் எனப்படும் யுக்தி ...கோபால் சார் சொன்னது போன்ற காட்சித் தொகுப்பே மான்டேஜ் எனப் படும். சில சமயம் படத்தில் நேரடியாக காட்சிகளை சொல்ல முடியாவிட்டாலோ அல்லது காட்சிகளை எடுக்கத் தவறி விட்டிருந்தாலோ கடைசி முயற்சியாக இந்த முறை பயன் படுத்தப் படும். அல்லது கதைக்களத்திலேயே இதனுடைய தேவை உணர்த்தப் படும்
உதாரணத்திற்கு ஒரு காட்சி
குறிப்பு.. மேலே உள்ள காட்சியில் FADE or DISSOLVE EFFECT அதிகம் பயன் படுத்தப் பட வில்லை. ஆனால் காட்சிகள் மிகவும் குறைந்த நீள அளவிற்கே பயன் படுத்தப் பட்டுள்ளன
Last edited by RAGHAVENDRA; 12th May 2013 at 06:51 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2013, 07:17 AM
#3465
Senior Member
Diamond Hubber
விளக்கத்திற்கு நன்றி கோபால் சார், ராகவேந்திரன் சார்.
-
12th May 2013, 07:19 AM
#3466
Junior Member
Newbie Hubber
இருக்கும் இடத்தை விட்டு.......
montage shots -மிக சிறந்த உதாரணங்கள் முதல் மரியாதை,தேவர் மகன் படங்களில் கிடைக்குமே தலைவா?
-
12th May 2013, 07:32 AM
#3467
Senior Member
Seasoned Hubber
உதாரணங்கள் ஏராளமாய் உள்ளன. ஒரு மேற்கோளாகத் தான் இந்தக் காட்சி தரப்பட்டுள்ளது. இந்த மான்டேஜ் ஷாட்கள் 50களிலும் ஏன் அதற்கு முன்னரும் கூட பயன்படுத்தப் பட்டுள்ளன. இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான நிமாய் கோஷ் அவர்களிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது அவர் கூறிய தகவல் இது. அவரைப் பொறுத்த வரையில் மான்டேஜ் ஷாட்கள் மிகவும் அவசியமாயிருந்தால் மட்டுமே பயன் படுத்துவாராம். முடிந்த வரையில் அதனைத் தவிர்ப்பாராம். அதே போல் பீம்சிங் படத்திலும் இந்த மான்டேஜ் ஷாட்கள் அதிகம் இடம் பெறாது. கதைக்குத் தேவையிருந்தால் மட்டுமே அந்த யுக்தி பயன் படுத்தப் படும் என்றார் நிமாய் கோஷ். அவர் பணியாற்றிய ஒரு படத்தில் இந்த மான்டேஜ் டெக்னிக்கை இடம் பெறச் செய்ய இயக்குநர் கேட்டுக் கொண்டாராம். ஆனால் அது இல்லாமலேயே அவர் கேட்ட ரிஸல்டைத் தந்தாராம் கோஷ் அவர்கள். . அதற்கு அவர் கூறிய காரணம், மான்டேஜ் ஷாட்களினால் கண் பார்வை பாதிக்கப் படும் வாய்ப்புள்ளது. அதனை நான் விரும்ப மாட்டேன். கருப்பு வெள்ளை படங்களில் அதிகம் தெரியாது. ஆனால் வண்ணப் படங்கள் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.
இவையெல்லாம் அவரே என்னிடம் கூறியதாகும்.
Last edited by RAGHAVENDRA; 12th May 2013 at 07:36 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2013, 07:40 AM
#3468
Senior Member
Diamond Hubber
இன்று அன்னையர் தினம்.
-
12th May 2013, 07:42 AM
#3469
Senior Member
Seasoned Hubber
பொதுவாக கட் ஷாட்டுகளின் தொகுப்புகளைக் கூட மான்டேஜ் என சொல்வதுண்டு. மிகவும் அபூர்வமாக அல்லது முதன் முறையாக நீ பாதி நான் பாதி படத்தில் நிவேதா பாடல் 150 கட் ஷாட்டுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. ஒரு காதல் பாடல் இத்தனை கட்ஷாட்டுகளைக் கொண்டு அமைக்கப்பட்டது இதுவே முதன் முறை. இதன் பின்னர் பெரும்பாலான டூயட் பாடல்கள் இந்த முறையில் தான் தொகுக்கப் பட்டு வருகின்றன. இவையும் ஒரு வகையில் மான்டேஜ் வகையில் சேர்ந்தது எனலாம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th May 2013, 07:43 AM
#3470
Senior Member
Seasoned Hubber
ராஜாமணி என்னும் அன்னை முகத்தில் நாளும் திகழும் குங்குமம் ... இந்த வரிகளை ஞாபகப் படுத்தி அன்னையர் தினத்தை துவக்கியுள்ளீர்கள் வாசு சார். மிக்க நன்றி.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks