-
13th May 2013, 09:29 AM
#11
Senior Member
Diamond Hubber
மிக அரிய புகைப்படம்.
நடிகர் திலகம் சர்வ துறைகளிலும் தலை சிறந்த மேதை என்பதற்கு இன்னொரு உதாரணம். நம் தலைவர் 'சித்ரவீணா' வை எவ்வளவு அழகாக வாசிக்கிறார் பாருங்கள்! இது சினிமாவுக்காகவோ, வேறு விளம்பரத்திற்காகவோ எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. இசையின் மேல் நம் தலைவருக்கு உள்ள ஆர்வம்தான் இது.
ஒருமுறை நடிகர் திலகம் பெங்களூரு சென்றிருந்தபோது புகழ் பெற்ற வீணை கலைஞர் திரு N.நரசிம்மன் அவர்களை தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வரவழைத்து வீணை வாசிப்பின் நுணுக்கங்களைக் கேட்டு அறிந்து கொண்டாராம். அதுமட்டுமல்லாமல் ஒரு கைதேர்ந்த வீணை வித்வான் போல அவ்வளவு அழகாக வீணை மீட்டிக் காண்பித்தாராம்.
'பாலும் பழமும் கைகளை ஏந்தி' பாடலையும் அருமையாக இசைத்துக் காண்பித்தாராம். பின் ஒருநாள் வித்வானுடன் முழுக்கத் தங்கியிருந்து வீணை வாசிப்பை நன்கு practice செய்து கொண்டாராம்.
சகல கலைகளிலும் கைதேர்ந்த செம்மல், அடக்கமே உருவாய் இருந்த பெருமையை என்னவென்று சொல்வது!
ஆதாரம்: 'தி ஹிந்து' நாளிதழ் December 15, 2012.
தலைவருக்கு இடது புறம் இருப்பவர் 'சித்ரவீணா' திரு N.நரசிம்மன் அவர்கள். வலது புறம் இருப்பவர் திரு N.நரசிம்மன் அவர்களின் சகோதரர் திரு.ராமரத்தினம் அவர்கள்.
Last edited by vasudevan31355; 13th May 2013 at 09:51 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
13th May 2013 09:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks