Page 393 of 401 FirstFirst ... 293343383391392393394395 ... LastLast
Results 3,921 to 3,930 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3921
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Mr. Vasudevan sir,

    Thanks for publishing the rare advertisement of 'VALAR PIRAI'. Now I understood it was also released at Shanti. We request you to publish more ads in future.

    I also support your idea of starting Part 11 by our Mr. S.Gopal.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3922
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ="#4B0082"]நடிகர் திலகம் பாகம் பத்து முடிவடைய இன்னும் எட்டு பக்கங்களே பாக்கியுள்ள நிலையில் பாகம் பதினொன்றை தொடங்கி வைக்க திரு கோபால் சார் பெயரை நான் முன்மொழிகிறேன். ஹப்பர்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #3923
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Tms & nt
    Attached Images Attached Images

  5. #3924
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    நான் நிச்சயம் திரு.கோபால் அவர்கள் எழுதுவதற்கு வழிமொழிய மாட்டேன்.

    திரு.கோபால் எழுதுவதற்கு நிச்சயம் என்னால் வழிமொழிய முடியாது

    பின்னே...வழிமொழிவது என்ன வழிமொழிவது? அன்பு கட்டளைதான் இட முடியும் !

  6. #3925
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    என் உயிரில் கலந்த காட்சி.



    காவியம்: தெனாலிராமன்.

    பாமினி சுல்தானின் கைப்பாவை கிருஷ்ணாவின் (பானுமதி) சூழ்ச்சியான மோக வலையில் சிக்கி நாட்டைக் கவனியாமல் வீழ்ந்து கிடக்கிறார் விஜயநகர சாம்ராஜ்ய சக்கரவர்த்தி கிருஷ்ண தேவராயர் (என்.டி.ராமாராவ்). இதைக் கண்டு வெகுண்டெழுகிறான் ராயரின் அன்புக்கினிய தெனாலிராமன். ராஜாங்க விதூஷகனும் கூட. ராயரின் தவறை சுட்டிக் காட்டுகிறான் அவரிடமே. கிருஷ்ணாவின் மயக்கத்தில் இருக்கும் ராயர் தெனாலி ராமனின் அறிவுரையை அலட்சியப் படுத்துகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராயர் ராமனுக்கு மரணதண்டனை அளிக்கவும் தயங்கவில்லை.

    தேசப்பற்று உடைய ராமன் மந்திரியின் (V.நாகையா) துணை கொண்டு கிருஷ்ணாவை நாட்டை விட்டு துரத்த எண்ணுகிறான். ஆனால் நடுவில் ராயர் இருக்கும் போது? ஒரு அருமையான சந்தர்ப்பம் ராமனுக்குக் கிட்டுகிறது. ராயரின் மனைவி (சந்தியா...சாட்சாத் அம்மாவின் அம்மாதான்) ராயரின் செய்கைகளினால் உடல்நலம் குன்றுகிறாள். இதைக் கேள்விப்பட்ட ராயர் தன் அன்பு மனைவியைக் காண விரைகிறார். இப்போது கிருஷ்ணா ராயரின் அந்தப்புரத்தில் தனியாக. வாட்டமான இந்த சந்தர்ப்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொள்கிறான் ராமன்.

    நேராக கிருஷ்ணாவிடம் செல்கிறான் ராயர் தன்னைத் தவிர யாரும் அங்கு நுழையக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையையும் மீறி. கிருஷ்ணாவை நாட்டை விட்டுப் போய்விடும்படி எச்சரிக்கிறான். கிருஷ்ணா மசிவேனா என்கிறாள். முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்கும் ராமன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கோபமேறி கிருஷ்ணாவை, அவள் திட்டங்களை தவிடுபொடி ஆக்குகிறான்.

    தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு அற்புதக் காட்சியமைப்பின் கரு இது.

    இப்போது நடிகர் திலகத்திடம் வருவோம்.

    தெனாலி ராமனாக நடிகர் திலகம். கிருஷ்ணாவான பானுமதியின் அந்தப்புரத்தில் நுழைந்து பானுமதியை படிப்படியாய் எச்சரிக்கும் காட்சி.

    என்ன ஒரு அற்புதமான பங்களிப்பு! என்ன ஒரு தெனாவட்டான தொனி! கிருஷ்ணா ராயரில்லாமல் தனியாகத்தான் இருக்கிறாள் என்ற முழு சுதந்திரத்தில் என்ன ஒரு மிரட்டும் தோரணை! அவள் ஆள்மயக்கிதானே என்ற எகத்தாளமான கேலி! நையாண்டியும் கிண்டலும் கொண்ட 'நறுக் நறுக்' வார்த்தைப் பிரயோகம். கிருஷ்ணாவின் கேள்விகளுக்கும், மேனாமினுக்கித்தனத்திற்கும் தரும் பதிலடி. நடுவில் சிறிது கெஞ்சல் (உன் எடைக்கு எடை தங்கம் தருகிறோம்... ராயரை விட்டு விடு) இறுதியில் பலமான எச்சரிக்கை.

    அந்தப்புரத்தில் நுழைந்தவுடன் கிருஷ்ணா ராமனிடம் அது முறையற்ற செய்கை என்று கோபப்பட,

    அதற்கு இவர் படு நக்கலாக சிரித்துவிட்டு ,"ஏதோ...முறையான செய்கையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாமென்றுதான் வந்தேன்... ஒழுங்கான உலகத்திற்கு இலக்கணமே தாங்கள்தானே!"

    என்று நையாண்டி தர்பார் நடத்தும் விதம்.

    கிருஷ்ணா, "என்ன கேலியாய் செய்கிறாய்?" என்று வினவ,

    "சேச்சே! அந்தரி...சுந்தரி...நிரந்தரி என்று அரசர் போற்றிப் புகழும் இந்த அற்புத உருவத்தை நானா கேலி செய்வேன்?" என்று சிரித்தபடியே விடும் நக்கல்.

    "உன் புகழ் எனக்குத் தேவையில்லை" என்று பானுமதி கூறும்போது அதை ஏற்றுக் கொள்வது போல "ஆகட்டும்" என்ற தொனியில் ஒரு சிறு தலையாட்டலில் அப்படியே அள்ளிக் கொண்டு போய்விடுவார்.

    வாக்குவாதங்கள் தொடரும் போது கிருஷ்ணா தன் அழகில் மன்னர் மயக்கமாய் கிடப்பதற்கு விளக்கமளித்து ராமனிடம்," நீ ஒரு பெண்ணாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்று கேட்க,

    அதற்கு நடிகர் திலகம்,"மயங்கிய மன்னரின் முகத்திலே தண்ணீரைத் தெளித்து "எழுந்திரு மன்னவா! என்ன வேண்டியிருக்கிறது காதல்? (இந்த இடத்தில் அவர் காட்டும் முகபாவத்தை எப்படி எழுதுவது?) சூழ்ந்திருக்கிறார்கள் பகைவர்கள்... தூளாக்கப் புறப்படுங்கள்... என்று வாளைக் கொடுத்து வழியனுப்பி வைத்திருப்பேன்" என்று விவேகத்துடன் வீரமுழக்கமிடுவது அட்டகாசம்.

    இறுதியில் "கிருஷ்ணா தேவியாரே! நீங்களாகப் போகிறீர்களா?...அல்லது உங்களைப் போக வைக்க வேண்டுமா?" என்று கைகளைக் கொட்டியபடியே விடும் எச்சரிக்கையில், அந்த சிறிய சிறிய தலைவெட்டுதல்களில் சிகரங்களையெல்லாம் தாண்டி பயணிப்பார். இறுதியில் கைகளால் "எச்சரிக்கை" என்று திரும்பியவாறே வேகமாக நடக்கத் துவங்கும் அழகே அழகு!

    என் உயிரில் கலந்த காட்சி இது...

    எல்லாவற்றையும் சொல்லி விட்டால்....

    நீங்களே இப்போது கண்டு உணருங்கள்.... அனுபவியுங்கள்.


    இணையத்தில் முதன் முதலாக....

    Last edited by vasudevan31355; 27th May 2013 at 12:35 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3926
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு சந்தோசம் கரை மீறுவதை உணர்கிறேன். Joe ,பம்மலார்,முரளி,வாசுதேவன் வரிசையில் வந்து ,நான் நேசிக்கும் இந்த திரியை துவக்கி வைப்பதை எனக்கு அளிக்க பட்ட உன்னத பெருமையாய் எண்ணி குதூகலம் அடைகிறேன். நான் இந்த பணியை 31/5 க்கு பிறகு அல்லது திரி 400 ஐ எட்டிய பிறகு நிச்சயம் சிரமேற்கொண்டு ஏற்கிறேன் . என் மேல் அன்பு கொண்டுள்ள உள்ளங்களுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளேன்.

  8. #3927
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    எனக்கு சந்தோசம் கரை மீறுவதை உணர்கிறேன். Joe ,பம்மலார்,முரளி,வாசுதேவன் வரிசையில் வந்து ,நான் நேசிக்கும் இந்த திரியை துவக்கி வைப்பதை எனக்கு அளிக்க பட்ட உன்னத பெருமையாய் எண்ணி குதூகலம் அடைகிறேன். நான் இந்த பணியை 31/5 க்கு பிறகு அல்லது திரி 400 ஐ எட்டிய பிறகு நிச்சயம் சிரமேற்கொண்டு ஏற்கிறேன் . என் மேல் அன்பு கொண்டுள்ள உள்ளங்களுக்கு என்றென்றும் கடன் பட்டுள்ளேன்.
    கண்கள் பனிக்கின்றன...இதயம் கனக்கிறது. (tit for tat) (நான் யாருகிட்டேயும் கடன் வச்சுக்கிறதில்ல... ரைட்)....
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3928
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    காட்டாற்று வெள்ளத்தை கரைபோட்டுதான் தடுத்திடமுடியுமா..சந்தோஷ அலைகள் கரயைதொடுவதைத்தான் நிறுத்தமுடியுமா...? முடியாது...நிச்சயமாக முடியாது...!

    இந்த சந்தோஷம் ஒரு அனுபவம் ...அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது வேந்தே விவரிக்க முடியாது...!

    அனுபவித்துனர்வதை அனுபாவிதுனர்ந்தால் தான் அனுபவம், அனுபவமாக இருக்கும்..இது அனுபவமாக இருந்தாலும் சரி..அனுமானமாக இருந்தாலும் சரி..!

    அனுமானத்தை அனுபவத்தின் மூலம் சொல்லிவிடலாம்...
    ஆனால் அனுபவத்தை அனுமானமாக சொல்லமுடியாது..

    காரணம்..அனுபவத்தை அனுமானமாக சொல்ல கூட அனுபவம் தேவை...!

    அப்பாட...செந்தமிழ்ல எப்படியோ எழுதியாச்சு...நம்மக்கு எப்படியும் அடுத்த சான்ஸ் குடுப்பாங்க..! ஐயா ஜாலி !!

  10. #3929
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    காட்டாற்று வெள்ளத்தை கரைபோட்டுதான் தடுத்திடமுடியுமா..சந்தோஷ அலைகள் கரயைதொடுவதைத்தான் நிறுத்தமுடியுமா...? முடியாது...நிச்சயமாக முடியாது...!

    இந்த சந்தோஷம் ஒரு அனுபவம் ...அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது வேந்தே விவரிக்க முடியாது...!

    அனுபவித்துனர்வதை அனுபாவிதுனர்ந்தால் தான் அனுபவம், அனுபவமாக இருக்கும்..இது அனுபவமாக இருந்தாலும் சரி..அனுமானமாக இருந்தாலும் சரி..!

    அனுமானத்தை அனுபவத்தின் மூலம் சொல்லிவிடலாம்...
    ஆனால் அனுபவத்தை அனுமானமாக சொல்லமுடியாது..

    காரணம்..அனுபவத்தை அனுமானமாக சொல்ல கூட அனுபவம் தேவை...!

    அப்பாட...செந்தமிழ்ல எப்படியோ எழுதியாச்சு...நம்மக்கு எப்படியும் அடுத்த சான்ஸ் குடுப்பாங்க..! ஐயா ஜாலி !!
    எங்க குட்தாங்கோ?
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3930
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தெனாலி ராமன் - உன்னத திரைக்காவியம் மட்டுமல்ல, நடிகர் திலகம் என்கிற உலக மகா கலைஞன் பரிணமிக்கக் காரணமாயிருக்கும் இன்னொரு காவியமும் கூட. பல்வேறு வித பரிணாமங்களிலும் நடிப்பின் பரிமாணத்தை உணர்த்தியவர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இக்காட்சி. இது போன்ற அபூர்வமான திரைக்காவியங்களைப் பற்றி நமது நண்பர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் உணர்த்தும் தங்கள் பணி மிகச் சிறந்தது. நடிகர் திலகத்தின் பரிபூரண ஆசி தங்களுக்குள்ளதையே இது காட்டுகிறது.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •