-
26th May 2013, 08:41 AM
#1301
Senior Member
Seasoned Hubber
As a tribute to T.M. Soundararajan, I will be posting some of my favourite songs
that he sang for Tamil movies. The songs will be in random order.
Here we go...
திரைப்படம்: இரு மலர்கள்
பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
இவள் காதலன் நானிருக்க பேரெழிலாய்
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட
நல்ல மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
.................................................. ..................
இங்கே மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
.................................................. .................
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்...
-
26th May 2013 08:41 AM
# ADS
Circuit advertisement
-
26th May 2013, 09:59 AM
#1302
Senior Member
Senior Hubber
இந்தப் பாடலில் விளையும் பாவங்கள்... மற்றவர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான்.. அசால்டாக பாடியிருப்பார் டிஎம் எஸ்.. அண்ட் பாவனைகள்..சிவாஜி வாவ்.. நன்றி ஆர்டி
-
26th May 2013, 09:26 PM
#1303
Senior Member
Seasoned Hubber
திரைப்படம்: சந்திரோதயம்
பாடல்: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
எந்நாளும் பிரியாத உறவல்லவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சைத் தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடல் இல்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
-
27th May 2013, 12:04 PM
#1304
Senior Member
Diamond Hubber
ஆஹா.. இது திரைப்படத்தில் வந்த version. ரேடியோவுல எல்லாம் சில பல வரிகள் வேறாக இருக்கும். அதை எல்லாம் சென்சார் செஞ்சுட்டாங்க.
படத்திலேயே அதெல்லாம் வரலை.. ( அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே என்ற வரி அது மேகம் செய்த உருவம் போல மறைவதில்லையே என்று மாறி பாவமன்னிப்பில் ஒலித்தது போல )
-
27th May 2013, 04:02 PM
#1305
Senior Member
Diamond Hubber
ஹய்யா... நானும் ஒரு பாட்டு போடப் போறேன்.....
திரைப்படம்: நீலமலைத் திருடன்
பாடல்: சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: மருதகாசி
இசை: கே.வி.மகாதேவன்
சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா... செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை
இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா நீ
அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா
குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்
குள்ள நரி கூட்டம் வந்து குறுக்கிடும்
நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும்...நீ
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா
எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா - அவற்றை
எமனுலகுக்கனுப்பி வைக்க தயங்காதேடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா செல்லடா....செல்லடா
Last edited by madhu; 27th May 2013 at 04:04 PM.
-
27th May 2013, 04:33 PM
#1306
Senior Member
Diamond Hubber
RD... u cant find video with those words, because the song is picturised with the film version only. ( observe the lip sync )
-
27th May 2013, 04:36 PM
#1307
Senior Member
Seasoned Hubber
Thank you Madhu. I was going to edit my posting, and lost it in the process!
I think it was like this:
Madhu: The lyrics that I posted for சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ are as it is
in the video. In most on-line lyrics sites, however, the following lines are given...
"இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ"
instead of
"எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
மலர்மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ"
I could not find a video with the இதழோடு இதழ் வைத்து lines.
Any idea why this is so?
-
28th May 2013, 01:26 AM
#1308
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
madhu
ஹய்யா... நானும் ஒரு பாட்டு போடப் போறேன்.....
சத்தியமே.... லட்சியமாய் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
TMS had a very special way of singing "thaththuva paadalgaL" and "propaganda songs". Even though some other singers (?
) started singing such songs, especially in MGR-movies of later years, I personally think that TMS was unique in that genre of Tamil Film Music.
-
28th May 2013, 08:28 AM
#1309
Senior Member
Seasoned Hubber
திரைப்படம்: பூவா தலையா
பாடல்: மதுரையில் பறந்த மீன் கொடியை
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
வரிகள்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ
தூத்துக் குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
-
28th May 2013, 09:01 AM
#1310
Bookmarks