Results 1 to 10 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராகவேந்திரன் சார்.

    அருமையான சாரங்கதாரா மற்றும் சபாஷ் மீனா பதிவுகள் கலக்கல்.

    'சபாஷ் மீனா' கடலூரில் கமலம் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டு வழக்கம் போல் வெற்றிக்கொடி நாட்டியது.

    தலைவர் படு அழகாக இருப்பார். அளவான உடம்பு. காமெடி கலக்கலாக செய்வார். ஊதாரித்தனத்தையும், சோம்பேறித்தனத்தையும் இவரை விட எவரால் அவ்வளவு அற்புதமாகப் பிரதிபலிக்க முடியும்?

    குலதெய்வமும், இவரும் போடும் சூப்பர் திட்டம். குலதெய்வம் வீடுகளின் கண்ணாடியை உடைப்பது... தலைவர் பின்னாலேயே போய் உடைந்த கண்ணாடிகளை சரி செய்வது. ஒரு வீட்டில் குலதெய்வம் கண்ணாடியை உடைக்கும் முன்பாகவே தலைவர் அங்கே சென்று கண்ணாடியை இன்னும் உடைபடலியா என்று கேட்டு வம்பை விலைக்கு வாங்குவது வயிறு குலுங்க வைக்கும் காமெடி.

    அதே போல ஒண்டிக்கட்டையாய் தலைவர் பசி என்னவென்றே அறியாமல் பசியால் அவஸ்தைப்படும்போது குலதெய்வம் அவரிடம் "இது மனுஷனுக்கு வரக்கூடாத வியாதியாச்சே" என்பார். சிரிக்காமல் இருக்க முடியுமோ?

    அதுபோல 'ஆசைகிளியே கோபமா' பாட்டில் சந்திரபாபுவும், இவரும் அடிக்கும் கூத்துக்கள் ரகளை. அடிக்கடி சந்திரபாபுவிடம் 'சிறுவா... சிறுவா' என்று தலைவர் புத்திமதி உரைக்கும் அழகே அழகு.

    காரில் டிரைவராக தன் தந்தை அமர்ந்திருக்கிறார் என்று அறியாமல் அவரிடமே நூறு ரூபாய் நோட்டைத் தந்து சிகரெட்டை வாங்கி வரச் சொல்லி பின் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்னும் ஜோர்.

    ஓட்டல்காரனுக்கு காசு தராமல், இருக்கும் பணத்தை அம்போவேனத் தெரியாமல் விட்டுவிட்டு வயலினில் சோகம் இழையோட தலைவர் ஒன்றி வாசிப்பது அருமை.

    சந்திரபாபு... கேட்கவே வேண்டாம். இரட்டை வேடங்கள். பிரமாதம். அதுவும் ரிக்ஷாக்காரனின் அந்த மெட்ராஸ் பாஷை அமர்க்களம். ஒரு சந்திரபாபுவை பேயோட்டும் களேபரங்கள்... ஆக்ஷன் காமெடி பக்கோடா.

    இந்தப் படத்தில் நடிக்க சந்திரபாபுவை அணுகியபோது "ஹெவியான ரோல்... சிவாஜியை விட பைசா அதிகமாகத் தந்தால்தான் நடிப்பேன்" என்று பாபு அடம் பிடிக்க விஷயம் நடிகர் திலகத்தின் காதுகளுக்கு எட்டியதும் "அதனாலென்ன அவருக்கு வெயிட்டான ரோல். .. கொடுக்கலாம்... எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை" என்றாராம். எவ்வளவு பெருந்தன்மை! பரந்த மனம்!

    சபாஷ் நடிகர் திலகம்!
    Last edited by vasudevan31355; 30th May 2013 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •