Results 1 to 10 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-35

    அதை போல் தான் நடிகர்திலகத்தின் வசன உச்சரிப்புகளும். தமிழனுக்கு தமிழை எழுத கற்று கொடுத்தவர்கள் வள்ளுவர் முதல் பாரதி வரை ஏராளம். ஆனால் தமிழை அதன் அழகுடன், அர்த்தத்துடன் பேச தமிழனுக்கு கற்று கொடுத்த ஒரே மேதை நடிகர்திலகம் அல்லவா?
    உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வரியிலிருந்தே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம். அதாவது 'அல்லவா'. இந்த வார்த்தையை கட்டபொம்மனில் அவர் விதவித பாவங்களுடன், மிகச் சரியான ஏற்ற இறக்கங்களுடன், அம்சமான அழுத்தம் திருத்தங்களுடன், இம்மிகூட பிசகாமல் நடிப்பைக் குரலுடன் கலக்க வைத்து கலக்குமிடம்.

    தானாதிபதிப் பிள்ளை ஸ்ரீவைகுந்தத்தில் வெள்ளையர்களின் நெல் கிடங்கில் பொம்மனுக்குத் தெரியாமலேயே கொள்ளை அடித்துவிட்டு, காவலாளியையும் தன்னிச்சையாக கொலைசெய்துவிட, வெள்ளையனிடமிருந்து வந்த தூதுவன் பதிலுக்கு தானாதிபதிப் பிள்ளையின் உயிரைப் பணயமாக கேட்டு கலெக்டர் லூசிங்டன் அனுப்பிய ஓலையை கட்டபொம்மனிடம் நீட்ட, அதற்கு பிள்ளையை வரவழைத்து முதலில் பிள்ளைக்கு சாதகமாகப் பேசுவது போல பேசி, பின் பொங்கி வரும் கோபத்தை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி, பின் மந்திரியின் தவறை சுட்டி குத்திக் காட்டும் முறை அபாரமானது.

    இந்தக் காட்சியில் நீங்கள் கூறிய வசன உச்சரிப்பு முறை மிகச் சரியாகப் பொருந்தும்.

    அதாவது உடல் அசைவுகள், முக பாவங்களில் பின்னிப் பெடலேடுத்தாலும் இந்தக் காட்சியில் அந்த 'அல்லவா' உச்சரிப்பு அவற்றுடன் இணைந்து காட்சிக்கு ஒரு முழுமையை, அழுத்தத்தை, சிறப்பைக் கொடுத்து காட்சியை மேலும் மெருகுபடுத்துவதை நன்றாகவே நாம் உணரலாம். உணர்ச்சிகள் பொங்க, ஆத்திரம் கொப்பளிக்க, வார்த்தைகள் கனலைக் கக்க, கொள்ளைக்காரானைக் க(த)ண்டிக்கப் போய் தமது மந்திரியே கொலைகாரனாயும், கொள்ளைக்காரனாயும் பழி சுமந்து வந்து நிற்பதைத் தாங்க மாட்டாமல்,

    "நீரே கொள்ளயடித்தீர் கொலை செய்தீர் அல்லவா!
    இன்று எதிரி நம்மை ஏளனம் செய்யவும் வழி காட்டினீர் அல்லவா!
    இத்தனைக்கும் உமக்குதவியது உமது மந்திரித்தனம்... பதவி என்ற மதுபோதை அல்லவா!"

    என்று கர்ஜிக்கும் போது

    வார்த்தை(யை)களை எந்த இடத்தில் எப்படி ஏற்ற இறக்கங்களுடன் பாவம் குன்றாமல் உச்சரிப்பது என்பதை குருவாய் வெளிப்படுத்தும் படிக்காத மாமேதையாய்த் திகழ்கிறார் நடிகர்களுக்கெல்லாம் திலகம்.
    Last edited by vasudevan31355; 5th June 2013 at 12:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •