-
12th June 2013, 10:34 AM
#441
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Murali Srinivas
வாசு சார்,
ஒரே பதிவில்
கார்த்திக்கிற்கு பிடித்த வரலாற்று சுவடுகள்!
கோபாலை குஷிப்படுத்த வசந்த மாளிகை!
ராகவேந்தர் சாரின் மனம் கவர்ந்த ராஜா!
வாசுவின் உள்ளதோடு கலந்து விட்ட ஞான ஒளி!
சுப்புவிற்கு ராஜ ராஜ சோழன்!
அன்புடன்
என்ன விளையாட்டா? ராஜா,ஞான ஒளி எல்லாம் என் படங்களும் கூட.
ராஜ ராஜ சோழன் சௌரிக்கு இனாமாகவே விட்டு கொடுத்து விடுகிறேன்.
Last edited by Gopal.s; 12th June 2013 at 10:36 AM.
-
12th June 2013 10:34 AM
# ADS
Circuit advertisement
-
12th June 2013, 02:04 PM
#442
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
கார்த்திக் சார்,
நானும் recommend பண்ணுகிறேன். நிஜமாகவே மிக நல்ல சுவாரஸ்யமான பதிவு அது.திரி-10 .பக்கம்-126. பதிவு எண்கள் 1256,1257. அவர் பாணியில் சொன்னால் "அற்புதம்" என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.(முரளி சார் ,நீங்கள் பம்மலார் என்ற புனை பெயரில் எழுதியிருந்தால் கார்த்திக் சார் ஓடோடி வந்திருப்பார்.)
அன்புள்ள கோபால் சார்,
முரளி அவர்களின் பதிவை நிச்சயம் நான் பார்த்திருக்கவில்லை. இல்லையெனில் அப்போதே என் பதிலை நிச்சயம் எழுதியிருப்பேன். தற்போது அதனை தேடிக்கொண்டு இருந்தபோது தங்கள் பதிவு (பாகம் எண், பக்க எண், பதிவு எண் இவற்றோடு) சமய சஞ்சீவியாய் வந்து வழிகாட்டியது.மிகவும் நன்றி.
ஆனாலும் அந்த அடைப்புக்குறிக்குள் அந்த வாசகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். என்னைப்பொருத்தவரையில் பம்மலார் வேறு, முரளி வேறு, வாசு வேறு, கோபால் வேறு என்று நினைத்ததில்லை. வரலாற்றுப் பதிவுகள் இடும்போது முரளி, அவரே ஆவணப்பதிவுகள் இடும்போது பம்மலார், அவரே ஸ்டில்ஸ் மற்றும் பாடல் காட்சிகள் பதிவேற்றும்போது வாசுதேவன், அவரே பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்போது கார்த்திக் என்று நினைப்பவன் நான்.
அன்புள்ள முரளி சார்,
கோபால் உதவியால் தங்கள் பதிவைப்பிடித்து விட்டேன். மிகப்பெரிய பதிவு குறைந்தது மூன்று நான்கு முறை படித்து என் பதிலை பதிவிடுகிறேன். என்னை நினைவு வைத்து நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.
Last edited by mr_karthik; 12th June 2013 at 04:00 PM.
-
12th June 2013, 02:15 PM
#443
Junior Member
Newbie Hubber
அப்போது கோபால் வேறு என்று நினைக்கிறீங்க?
(நானாட்சி செய்து வரும் நான் மாடகூடலிலே.....)
Last edited by Gopal.s; 12th June 2013 at 02:23 PM.
-
12th June 2013, 03:05 PM
#444
Junior Member
Newbie Hubber

Originally Posted by
mr_karthik
இது என்ன வம்பா போச்சு. சும்மா ஒரு உதாரணத்துக்கு நாலைந்து பெயர்களை சொன்னால் அதிலும் பங்கு கேட்கிறீர்களே. எனக்குள் நீங்கள் அனைவரும் அடக்கம் என்பதால்தான் என் பெயரையும் சேர்த்துக்கொண்டேன். போதுமா?.
மெனக்கெட்டு தேடி பிடிச்சு பதிவு போட்டவன் பேரையே மறக்கும் அளவா பாசம் கண்ணை மறைக்கும்?
உங்களுக்குள் அனைவரும் அடக்கமா? திருவிளையாடல் range லே போயிட்டீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!
Last edited by Gopal.s; 12th June 2013 at 03:20 PM.
-
12th June 2013, 03:16 PM
#445
Senior Member
Seasoned Hubber
அடுத்த புதன்கிழமை ஜனவரி 26. நம் யாராலும் மறக்க முடியாத ராஜா ரிலீஸ் ஆன நாள். விமானப் படை அதிகாரிகளின் குடும்ப நல நிதிக்காக [ராகவேந்தர் சார், கரெக்ட்தானே?] சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் காலையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இரண்டு நாள் மீண்டும் மாளிகை ஷூட்டிங். 28-ந் தேதி வெள்ளி இரவு நடிகர் திலகம் கொடைக்கானல் புறப்பட்டார்.
ராஜாவைப் பொறுத்த மட்டில் முதல் நாள் சிறப்புக் காலைக் காட்சி எனக்கு ஞாபகம் இருந்த வரையில் ரசிகர் மன்றக் காட்சியாக நடைபெற்றது. அதை ஒட்டி வந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இரு தியேட்டர்களில் ராஜா சிறப்புக் காலைக் காட்சி நடைபெற்றதாக நினைவு. ஓம் விக்நேஸ்வரா சபா சார்பாக ஆனந்த் தியேட்டரிலும் விமானப் படை வீரர்களுக்கான சிறப்புக் காட்சி தேவி பேரடைஸிலும் நடைபெற்றது என நினைக்கிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
12th June 2013, 03:23 PM
#446
Junior Member
Newbie Hubber
ஹைய்யா, ராஜா முதல் காட்சி முதல் நாள் குடந்தையில் பார்த்தேன். பட்டிக்காடா பட்டணமா முதல் நாள் evening show 85 பைசா மதுரை சென்ட்ரலில் பார்த்தேன். வசந்த மாளிகை கொஞ்சம் delay .நான்காம் நாள் குடந்தை ஜுபிட்டர்.
-
12th June 2013, 04:41 PM
#447
Senior Member
Veteran Hubber
நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).
காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"
பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"
எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".
சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"
உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"
என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.
ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).
-
12th June 2013, 05:11 PM
#448
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
ஹைய்யா, ராஜா முதல் காட்சி முதல் நாள் குடந்தையில் பார்த்தேன். பட்டிக்காடா பட்டணமா முதல் நாள் evening show 85 பைசா மதுரை சென்ட்ரலில் பார்த்தேன். வசந்த மாளிகை கொஞ்சம் delay .நான்காம் நாள் குடந்தை ஜுபிட்டர்.
பெரும்பாலும் முதல்நாள் மாலைக்கட்சி ரிசர்வ் செய்து பார்ப்பது வழக்கம். ரிசர்வ் செய்யாமல் முதல்நாள் முதல்காட்சி பார்த்த படங்கள்.
சென்னை பிளாசாவில் 'ஞானஒளி'... போலீஸ் தடியடி தூள் பரத்திக்கொண்டிருக்க, கியூவில் நின்ற எங்கள் தலைக்கு மேல் இன்னொரு கியூ போய்க் கொண்டிருந்தது. எப்படியோ டிக்கட் கிடைத்து படம் பார்த்துவிட்டோம்.
சென்னை ஓடியனில் 'தர்மம் எங்கே'.... 2,60 டிக்கட் பிளாக்கில் 20 ரூபாய் கொடுத்து வாங்கிப் பார்த்தது. என் சக்திக்கு அப்போது அது அதிகத்தொகை. தலைவர் படமாச்சே, எவ்வளவானால் என்ன.
-
12th June 2013, 06:59 PM
#449
Senior Member
Diamond Hubber
'ஞானஒளி' தேவாலயம்.

Originally Posted by
Murali Srinivas
வாசு சார்,
29-ந் தேதி சனிக்கிழமை முதல் பிப்ரவரி 1 வரை நான்கு நாட்கள் கொடைக்கானலில் ஞான ஒளி படப்பிடிப்பு. தேவனே என்னைப் பாருங்கள் பாடலும் மற்றும் சில வெளிப்புற காட்சிகளும் அப்போதுதான் படமாக்கப்பட்டன.
நன்றி முரளி சார்!
'ஞானஒளி' பற்றிய மேலதிக விவரங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை.
முரளி சார்!
நான் ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட்டே தீர வேண்டும். 1995 மார்ச் 12 ம் தேதி எனது திருமணம் நெய்வேலியில் நடைபெற்றது. எனது தங்கையின் கணவர் அப்போது கொடைக்கானலில் BSNL ல் Junior Engineer ஆக பணி புரிந்து வந்தார். அதனால் புதுமணத் தம்பதிகளான எங்களை அவர் திருமணம் முடிந்த கையோடு கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று விட்டார். அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள். எனவே தங்குவதற்கோ, உணவுக்கோ, வாகனங்களுக்கோ பஞ்சமில்லை.
மூன்று நாட்கள் கொடைக்கானலில் தங்கினோம். கொடைக்கானல் சென்ற அன்று இரவாகி விட்டதால் அன்று நன்றாக ரெஸ்ட் எடுத்தோம்.
அடுத்தநாள் என் தங்கையின் கணவர் அன்று எங்கு செல்லலாம் என்று என்னிடம் கேட்டார். "பில்லர் ராக் போகலாமா?" என்று கேட்டார். அதற்கு நான் "பில்லர் ராக், சில்வர் ஃபால்ஸ் எல்லாம் அப்புறம்தான். நான் இன்று கொடைக்கானல் சர்ச்சைப் பார்க்கணும்" என்றேன். அவர் ஆச்சர்யத்துடன் "ஏன் சர்ச்சுக்குப் போகணும் என்கிறாய்?" என்று வியந்த தொனியில் கேட்டார். நான் "சொல்கிறேன்... ஜீப்பை சர்ச்க்கு விடுங்கள்" என்றேன். என் மனைவிக்கும், ஒன்றும் புரியவில்லை. சர்ச்சுக்கு ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திலேயே ஜீப்பை நிறுத்திவிட்டு மேடான அந்த சாலையில் அருமையான வாடைக்காற்று சிலுசிலுவென வீச, அமைதியாக இயற்கை சூழல்களை என் மனைவியும் மைத்துனரும் ரசித்தபடி வந்தனர். ஆனால் என் மனம் எதிலும் லயிக்கவில்லை. மனம் முழுக்க 'ஞான ஒளி'யின் அருமை அருண் தேவனே என் மனம் முழுக்க வியாபித்திருந்தார். இதோ இதோ இன்னும் கொஞ்சம் தூரம்தான். சர்ச் மிக அருகில் வந்துவிட்டது. என் மனதிலும் படபடப்பு தொற்றிக்கொண்டது. என் தெய்வத்தின் பாதம் பட்ட இடங்களை நான் தொழும் தருணம் வந்துவிட்டது அல்லவா!. என் மனதை என்றும் ஆக்கிரமிக்கும் 'ஞானஒளி' காவியத்தின் அற்புத பாடல் படமாக்கப்பட்ட, என் தெய்வம் pray செய்த தெய்வத்தின் சன்னதி. அந்த புனிதத் தலத்தில் இப்போது நான். இனம் புரியா இன்பமா அல்லது சோகமா, இல்லை இல்லை ஏதோ ஒன்று என் மனதை பிசைந்து கொண்டிருந்தது. "ஏன் ஏதும் பேசாமல் வருகிறீர்கள்?" என்றார்கள் என் மனைவி. "வா! சொல்கிறேன்" என்றேன் மெதுவாக. சர்ச்சின் வாயிலை அடைந்தோம். பின் காலணிகளைக் கழற்றிவிட்டு சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே இருந்தேன். என் மைத்துனர் "என்ன ஆயிற்று உனக்கு? என்று செல்லமாக கோபித்தார். அழகான தேவாலயம். தூய வெள்ளை மாளிகை போல புனிதமான தேவாலயம். கண்கொள்ளா அழகு. எவருடைய மனதும் அங்கிருக்கும் போது அந்த ஆலயம் போலவே தூய்மையாகிவிடும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும்.

'தேவனே என்னைப் பாருங்கள்' பாடலின் முதல் சரணம் முடிந்து பல்லவி மீண்டும் ஆரம்பிக்கும் போது நெடிதுயர்ந்த யூக்லிப்டக்ஸ் மற்றும் விண்ணை மறைக்கும் காட்டு மரங்களின் இடையே தவழும் கருமை மற்றும் வெண்மேகங்கள் அப்படியே காமெராவுக்குள் சுழன்றடிக்க, கைகளை வீசாமல் உடம்போடு ஒட்டியபடியே வைத்து, தேவாலயத்தின் நுழைவுப்பக்கம் செல்லும் மேடான சாலையின் குறுக்கே நிமிர்ந்தவாரே நடந்து, பின் கைகளைக் கோர்த்தபடியே தலைவர் இந்த இடத்தில் தானே கர்த்தரைத் தொழுவார் என்று அந்த சரிவுப்பகுதிக்கு மீண்டும் இறங்கி ஓடி வந்தேன். படத்தில் பார்ப்பதற்கும், நேரில் உணர்வதற்கும் நிரம்ப வித்தியாசம் இருந்தது. சீக்கிரம் பிடிபடவில்லை. சிறிது நேரம் தலைவரை மனதில் தியானித்து விட்டு பின் தேவாலயப் படிக்கட்டுகளில் சென்று அமர்ந்து கொண்டேன்.
பின் தேவாலயப் படிக்கட்டுகளை விட்டு நான் அரைமணி நேரத்திற்கு எழுந்திருக்கவே இல்லை. மனம் வரவில்லை. இந்தப் படிக்கட்டுகளில்தானே "கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ!" என்றபடி என் இதயதெய்வம் ஓடிவருவார் என்று அந்தப் படிக்கட்டுகளை ஒவ்வொன்றாகத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டேன்.

"என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி" என்று தேவாலய முன்வாயில்களைப் பிடித்தவாறே நடிகர் திலகம் பண்ணும் அற்புத மூவ்மென்ட்டுகளை நினைத்துக் கொண்டே அந்த வாயில்களை நானும் அவ்வாறே பிடித்துப் பார்த்தேன். அதில் ஒரு தாங்கொணாத் திருப்தியும்,சந்தோஷமும் கிடைத்ததை உணர்ந்தேன். சர்ச்சில் அன்று வேறு யாரும் இல்லை. என் மனைவியும், மைத்துனரும் மாதாவின் ஒளிவீசும் உருவச் சிலையின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, இங்கே நான் நடிகர் திலகம் நடந்த இடங்களை சுற்றி சுற்றி பார்த்தபடி அவர் பெயரை ஜெபித்துக் கொண்டிருந்தேன். மனம் வேறு எதிலும் செல்ல மறுத்து அடம் பிடித்தது. முழுக்க முழுக்க அருண் அவர்களின் ஆக்கிரமிப்பே நிறைந்திருந்தது. செவிகளில் "தேவனே என்னைப் பாருங்கள்" ஒலித்துக் கொண்டே இருந்தது. கண்கள் நடிகர் திலகம் உலாவிய இடங்களிலேயே அலைந்து கொண்டிருந்தது.
திருமணமான புதிதாகையால் அப்போது மனைவிக்கு இதுபற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் மைத்துனருக்கு நன்றாகத் தெரியும் தலைவர் பித்து பிடித்தவன் என்று. சினிமாக்களைப் பற்றியும் நன்கறிந்தவர். அவர் அழகாகக் கண்டு பிடித்து விட்டார்.
"ஓ! 'ஞானஒளி' மனசில் ஓடிக் கொண்டிருக்கிறதா?!... அதற்காகத்தான் முதலில் சர்ச்சுக்கு கூப்பிட்டுக் கொண்டு போகச் சொன்னாயா?...இப்போதுதான் புரிகிறது" என்று சிரித்தபடியே கேட்டார். (அந்த மைத்துனர்தான் மதுரை "கர்ணன்" நிகழ்வுகளை போட்டோ எடுத்து அனுப்பியது) பின் சர்ச்சின் படிக்கட்டுகளில் அமர்ந்து மனதில் ஓடிக் கொண்டிருந்ததை இருவரிடமும் கொட்டித் தீர்த்தேன். பின் எனக்குத் தெரிந்தவரையில் ஒவ்வொரு இடமாக சுட்டிக் காண்பித்து இங்குதான் தலைவர் இப்படி நிற்பார்... இங்கேதான் அழகாக நடந்து வருவார்... இங்கேதான் நின்று பிரார்த்தனை செய்வார் என்று அதீத ஆவலுடன் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தேன்.
'இப்படியா ஒரு ஆள் இருப்பார்' என்ற வியப்பான ஆச்சரியக்குறி முகத்தில் படர மனைவி என்னைப் பார்த்தார். எனக்கு 'போகப் போகத் தெரியும்' சர்வர் சுந்தரம் பாடல்தான் நினைவுக்கு வந்தது. பின் ஒருமணி நேரத்திற்கு மேலாகவும் சர்ச்சில் இருந்துவிட்டு, 'ஞானஒளி' எண்ண அலைகளில் மூழ்கிவிட்டு, அதிலிருந்து விடுபடமுடியாமல் 'தேவனே என்னைப் பாருங்களை' முணுமுணுத்தபடியே அடுத்த இடத்திற்குச் செல்ல மனமில்லாமல் மனைவியுடனும், மைத்துனருடனும் சற்று எரிச்சலுடனேயே நடையைக் கட்டினேன்.
இப்போது சேனல்களில் 'தேவனே என்னைப் பாருங்கள்'" பாட்டைப் போட்டாலே என்னை விட என் மனைவி அதிக டென்ஷனாகி விடுவார்கள். "என்னங்க என்னங்க...உங்க பாட்டு... ஓடி வாங்க... ஓடி வாங்க" என்று அவர்கள் குரல் கொடுத்தவுடன் எந்த வேலை எப்படி இருந்தாலும் சரி அப்படியே போட்டுவிட்டு, பாடல் காட்சியை முழுமையாகப் பார்த்து அனுபவித்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்வோம். அது இன்றுவரை தொடர்கிறது. இனியும் தொடரும்.
(எங்க வீட்டு அம்மாவுக்கு 'தேவனே' வை விடவும் "அந்த நாள் ஞாபகம்" ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பது வேறு விஷயம்)
இப்போது சொல்லுங்கள் முரளி சார்! "ஞான ஒளி' என்றாலே என் நாடி நரம்பெல்லாம் ஏன் முறுக்கேறாது என்று?
அற்புதமான நினைவலைகளை எழுத்து வடிவில் கொண்டு வரச் செய்ததற்கு மிக்க நன்றிகள் முரளி சார்!
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
Last edited by vasudevan31355; 12th June 2013 at 10:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th June 2013, 07:13 PM
#450
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
'ஞானஒளி' தேவாலயம்.
[SIZE=2][COLOR="brown"][B]நன்றி முரளி சார்!
'ஞானஒளி' பற்றிய மேலதிக விவரங்களை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை.
"ஞான ஒளி "வாசுதேவன் என்று இனி இவர் அழைக்க படுவார். "தில்லானா " மோகனாம்பாள் போல. என்னுடைய 7,8 வகுப்புகளின் class teacher R .B என்றழைக்கப்பட்ட பால சுப்ரமணியன்.(நெய்வேலி N .L .C block -12)ஒரு தீவிர NT ரசிகர். என்னுடன் இந்த படத்தை ஐந்து முறை பார்த்து விட்டு ஐந்தாவது முறையும் எத்தனை style நடை என்று கணக்கெடுத்து ,அங்கேயும் ஒரு கிளாஸ் நடத்தி விடுவார் தேவனே பாட்டில்.
"ஞான ஒளி " வாசுதேவன் வாழ்க.
Bookmarks