Page 46 of 399 FirstFirst ... 3644454647485696146 ... LastLast
Results 451 to 460 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #451
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆண்டவன் கட்டளை-

    ஒரு மறக்க முடியாத படம் ,ஆலயமணி போலவே . Form &Content அவ்வளவு வித்யாசம்.

    சிவாஜி-தேவிகா இணைவில் சாந்தி, நீலவானம் மற்றும் இந்த படம் முன்னிலையில். தேவிகா கிக்கின்னா கிக்கு ,அத்தனை கிக்கு ஏத்துவார். அழகே வா பாட்டில் கற்றை முடி ஈரத்துடன் நெற்றியில் புரள இவரின் காம விழைவு அழைப்பில் ,professor நொறுங்கி போவதில் ஆச்சர்யம் என்ன? அந்த மன போராட்ட காட்சி சிவாஜி-சங்கர்-விசு,ராமு கூட்டாக நடத்தும் மந்திர ஜாலம். தமிழுக்கு ரொம்ப புதுசு. இடை வேளை (ஆறுமனமே வரை)வரை படம் இமயத்துக்கு உயரும். பிறகு........ தரைக்கும் கீழே அதல பாதாளம்.

    இந்த படத்தின் பிளஸ் கள் - சிவாஜி,தேவிகா, சங்கர், விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கொட்டாரக்கரா மற்றும் ஜாவர் (Form &Content ),ஆறுமனமே வரை உச்சம் தொடும் விறுவிறு.

    minus கள் -தேவைஇல்லா தூயதமிழ் வசனங்கள், சந்திர பாபு, ஆறு மனமே பாட்டுக்கு பின் பாதாளத்துக்கு சரியும் consistency அற்ற ஏனோ தானோ திரைகதை.

    கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி செதுக்கியிருந்தால் ஆலய மணி பெற்ற வெற்றியை பெற்றிருக்க கூடிய சாத்தியகூறுகள் கொண்டது.

    எனக்கு ஒரு மகா வருத்தம்- எனது ஆதர்ஷ எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் எழுதிய masterpiece படகு வீடு ,சிவாஜி நடிப்பில் உருவாவதாக இருந்து ,ஆரம்ப வேலைக்கு பின் ஆண்டவன் கட்டளை சாயலில் இருப்பதாக சொல்லி கை விட பட்டதே.
    Last edited by Gopal.s; 13th June 2013 at 09:15 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #452
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள வாசுதேவன் சார்,

    தங்களின் கொடைக்கானல் தேனிலவு அனுபவம் சிலிர்க்க வைக்கிறது. திருமணம் முடிந்து தேனிலவு சென்ற இடத்திலும் தலைவரின் நினைவு மற்றும் அவர் நடித்த இடங்களில் நீங்களும் நடந்தபோது கொண்ட பரவசம் அனைத்தும் அருமையான அனுபவங்கள். உங்களின் விவரிப்பு எங்களையும் அங்கு நடை போட வைத்தது.. ஞானஒளி தங்களின் உயிரோடு ஒன்றிவிட்டதில் வியப்பில்லை. (என் மனைவியின் அபிமானப்பாடல் 'தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே'. கிட்டத்தட்ட மூணும் ஒரே 'கேட்டகரியாக இல்லை?.)
    Last edited by mr_karthik; 12th June 2013 at 07:58 PM.

  4. #453
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'ஞானஒளி' தேவாலயம்.
    நெய்வேலி வாசுதேவன்[/COLOR][/SIZE][/B]
    "ஞான ஒளி" வாசு சார்!

    இப்படி ஒரு பக்தியா!!

    மெய் சிலிர்க்கிறது..உங்கள் நிகழ்விற்கு ஒரு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,தலைவரின் இன்னொரு ரசிகரும்,தன் தேன் நிலவிற்கு அதே கோடைக்கானலிற்கு போயிருந்தார்.ஆனால் அவர் முதலில் சென்றதோ,"வெள்ளிக்கிண்ணம்தான்"பாடல் படமெடுக்கப்பட்ட இடம்.
    ம்ம்ம்ம்... பக்தியிலும் சுத்தமான, ஆசாரமான, பக்தி உங்களுடையது!

  5. #454
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Ganpat View Post
    "ஞான ஒளி" வாசு சார்!

    இப்படி ஒரு பக்தியா!!

    மெய் சிலிர்க்கிறது..உங்கள் நிகழ்விற்கு ஒரு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,தலைவரின் இன்னொரு ரசிகரும்,தன் தேன் நிலவிற்கு அதே கோடைக்கானலிற்கு போயிருந்தார்.ஆனால் அவர் முதலில் சென்றதோ,"வெள்ளிக்கிண்ணம்தான்"பாடல் படமெடுக்கப்பட்ட இடம்.
    ம்ம்ம்ம்... பக்தியிலும் சுத்தமான, ஆசாரமான, பக்தி உங்களுடையது!
    ம்ம்ம்....நக்கலு.... எங்கள் ஆள் வெள்ளிக் கிண்ணத்தை முடித்து விட்டே சர்ச்சுக்கு போனார்....இதையெல்லாமா சொல்லி கொண்டிருக்க முடியும்???

  6. #455
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by NTthreesixty Degree View Post
    நம்முடைய திரி நண்பர்களுக்கு,

    நமது மையம் திரியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை பற்றிய எவராலும் பேசபடாத அல்லது அவரது பல திறமைகள் பகிரங்கமாக தாழ்புணர்ச்சி காரணம் மறைக்கப்பட்ட விஷயங்களை எடுத்து கூற என்ன வழி என்று நமது நண்பரும், "சித்தரின்" தீவிர அபிமானியுமான திரு.ஆனந்தும், நானும் யோசித்து அதை ஒரு ஒலி-ஒளி வடிவமாக கொண்டு சென்றால் என்ன என்ற எண்ணத்தின் பயனாக விளைந்ததுதான் இந்த 29 நிமிட கருத்து பரிமாற்றம் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!

    எங்கே இதை எடுக்கலாம் என்று எண்ணும்போது நமது நினைவுக்கு வந்தது அண்ணாசாலையில் உள்ள செம்மொழி பூங்கா. எந்த வித முநேர்பாடும் இல்லாமல், என் கையில் இருந்த Sony Ericson Hazel Mobile Phone வழியாக ஹெட்-செட் மாட்டிகொண்டு மாறி மாறி படம் பிடித்தோம்.

    இதில் பாடல்கள் வரும் இடத்தில் மற்றும் சில காட்சிகளில் பாடலுக்கு பதிலாக ஒரு மேலைநாட்டு இசை பயன்படுத்திஇருக்கிறோம் காரணம், இதை பார்க்கும்போது பாடல்களில் கவனம் சிதறக்கூடாது என்பதற்குதான்.

    எதனால் நடிகர் திலகம், நடிகர் திலகமாக அழைக்கப்பட்டார் என்ற கேள்வி முதலில். வெறும் நடிப்பு மட்டுமா..அல்லது மற்ற எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற திறமை காரணமா ? இந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியின் முதல் பாகம் தான் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!

    திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !

    இந்த ஒளி-ஒலி ஒரு சிலருக்கு முதலில் இருந்து வருவதற்கு YouTube Play cursor சிறிது பின்னோக்கி இழுத்தால் முதலிலிருந்து ஒளிபரப்பாகும்.



    பாகம் - 2 : அனைவராலும் காப்பியடிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் உடை அலங்கார நளினம்..!


    "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !! திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !


  7. #456
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    நமது அண்ணனும் எங்கள் அண்ணியும் இணைந்து கலக்கிய / கலக்கிக்கொண்டிருக்கும் / இன்னும் கலக்கப்போகும் இணையில்லா காவியம் "ஆண்டவன் கட்டளை" இன்று பொன்விழா ஆண்டு துவக்கம் (12.06.1964 - 12.06.2013).

    காலத்தால் அழியாத தத்துவ விருட்சம் "ஆறு மனமே ஆறு"

    பார்க்கப் பார்க்க திகட்டாத "அமைதியான நதியினிலே ஓடம்"

    எக்காலத்து கவர்ச்சி நடிகையும் தோற்றுப் போகும் "அலையே வா அருகே வா".

    சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது"

    உடன் நடிப்பவர்களுக்கும் டூயட் பாட வைத்து அழகு பார்க்கும் பெருந்தன்மைப் பெட்டகத்தின் படத்தில் "கண்ணிரண்டும் மின்ன மின்ன"

    என்ன இல்லை இக்காவியத்தில். எல்லாம் உண்டு இந்த ஓவியத்தில்.

    ரசிகப்பெருமக்கள் பதிவுகளைத் தந்து மகிழலாமே. (இப்படம் பிலிமோகிராபியில் இடம்பெறும்போது பதிவுகள் அங்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும்).
    Sure sir, will share my view about this movie

  8. #457
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Vasu sir,

    Your experience in visiting the church in which NT shot for Gana Oli was so real, raw that it was like a linear narration. nice article

  9. #458
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சாருக்கு ஞான ஒளி எப்படியோ, அதைப் போல, சுமதி என் சுந்தரி திரைப்படத்திற்குப் பிறகு என்னுள் மிகவும் ஆழமாக ஊடுருவி அமர்ந்த படம் ஆண்டவன் கட்டளை. கதையமைப்பு எவ்வாறிருந்தாலும் நடிகர் திலகத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு இலக்கியம். நூறாண்டு காலத் தமிழ்த் திரையுலகத்தின் வரலாற்றில் பாடல்களைப் பற்றி எழுதும் போது முதல் 10 லிருந்து 20 இடங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம் பெறக் கூடிய பாடல் அமைதியான நதியினிலே மற்றும் ஆறு மனமே ஆறு இரண்டுமே ஆகும். நான் முரளி சாரிடம் பேசும் போதெல்லாம் குறிப்பிடத் தவறாத காட்சி, அந்த மன ஊசலாட்டக் காட்சி. சிற்றின்பம் மற்றும் பேரின்பம் என்ற இரண்டு மன நிலைகளிலே மனித மனம் தள்ளாடுவதை, இதற்கு முன்னும் பின்னும் யாராலும் சித்தரித்திருக்க முடியாது என்று ஆணித்தரமாய்க் கூற முடியும். ஒரு லட்சம் தடவை பார்த்தால் கூட மேலும் மேலும் புதிய பரிணாமத்தில் அவருடைய நடிப்பை ஆய்வு செய்யத் தூண்டும் காட்சி. அந்த இடத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. விட்டத்தைப் பார்த்தவாறே அமர்ந்து முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட தன் உள்ளத்துக்குள் எழும் போராட்டத்தை விஷுவலாகக் கொண்டு வந்த இந்தக் காட்சியில்

    உலகத்தில் வேறு எந்த நடிகராலும் எந்த மொழியிலும் எந்தக் காலத்திலும் எந்தப் பிறவியிலும் செய்ய முடியாது

    என்று அறுதியாக, உறுதியாகக் கூற முடியும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #459
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஆண்டவன் கட்டளை'. கார்த்திக் சாருக்காகவே ஸ்பெஷல் நிழற்படங்கள்.



    நடிகர் திலகமே தெய்வம்

  11. #460
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    இன்னும் மேலே போங்க. இந்த காட்சி பற்றி இன்னும் விரிவாக நீங்கள் சொல்லி ரசிக்க ஆசையாக இருக்கிறது. எனக்கு மிக மிக பிடித்த காட்சிகளில் ஒன்று.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •