-
13th June 2013, 02:10 PM
#471
Junior Member
Newbie Hubber
தங்கள் வரிசை தப்பானது .தங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல் பதிவு அடியேனுடையது .
-
13th June 2013 02:10 PM
# ADS
Circuit advertisement
-
13th June 2013, 02:16 PM
#472
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
தங்கள் வரிசை தப்பானது .தங்கள் வேண்டுகோளை ஏற்ற முதல் பதிவு அடியேனுடையது .
ஒரு தடவ கடைசியில்தான் இருந்துட்டுப் போயேன். சும்மா சும்மா நொய்ங்... நொய்ங்ன்னு
-
13th June 2013, 02:17 PM
#473
Senior Member
Diamond Hubber
Go,
n.c.nammaruvai paarthirunthaal enna aaagiyirukkum?
-
13th June 2013, 02:34 PM
#474
Senior Member
Diamond Hubber
தேவாலயப் பதிவை முதலில் ரசித்த கோபால்...கோபால்...கோபால்...கோபால்! (போதுமா!?) அப்புறம் கார்த்திக் சார், அருமை நண்பர் கண்பத் சார், ரசிகவேந்தர் சார் (போனிலும்), தம்பி ராகுல்ராம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
-
13th June 2013, 02:37 PM
#475
Senior Member
Diamond Hubber
கார்த்திக் சார்,
'ஆண்டவன் கட்டளை' பதிவுகளுக்கான தங்கள் உயர்ந்த பாராட்டிற்கு நன்றி! தங்கள் சந்தோஷமே எங்கள் சந்தோஷம். அண்ணியார் தங்களை ஏன் இந்த அளவிற்கு கவர்ந்தார் என்று இன்னும் நன்றாகப் புரிகிறது. அதுவும் சோகத்தில் ஓடம் ஒட்டுவது போன்ற அந்த கைகளின் பாவனை. அற்புதம்.
-
13th June 2013, 03:10 PM
#476
Junior Member
Newbie Hubber

Originally Posted by
vasudevan31355
தேவாலயப் பதிவை முதலில் ரசித்த கோபால்...கோபால்...கோபால்...கோபால்! (போதுமா!?) அப்புறம் கார்த்திக் சார், அருமை நண்பர் கண்பத் சார், ரசிகவேந்தர் சார் (போனிலும்), தம்பி ராகுல்ராம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
இந்த மைக் செட் , பந்தல் எல்லாம் தந்து ஒத்துழைத்த அருமை நண்பர்களுக்கு நன்றி .
-
13th June 2013, 04:10 PM
#477
Junior Member
Seasoned Hubber
ஆண்டவன் கட்டளை
இந்த படம் பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல் . என்னமோ எதோ எப்போது DVD கடைக்கு sendralum இந்த படம் வாங்க மட்டும் மாட்டேன் . ஒரு நாள் காலை ஜெயா டிவியில் இந்த படம் ஒளிபரபினர்கள் ஒரு 10 நிமிடம் பார்த்தேன் எங்க அப்பாவும் தான் , இந்த படத்தின் கதை என்ன என்று கேட்டேன் அவர் அதை சரியாக சொல்லவில்லை காரணம் மறதி , அவர் professor என்பதை மட்டும் சொன்னார் .
என் வண்டி அன்று ஆபீசில் இருந்து வரும் பொழுது வேற எங்க போகும் நேர DVD கடைக்கு தான் எப்படியோ அந்த படத்தை வாங்கி விட்டேன் . வாங்கி கொண்டு வந்து வீட்டில் எங்கோ வைத்துவிட்டேன். கிட்ட தட்ட 3 வாரம் கழித்து நேற்று கிடைத்தது . நமது திரியை browse செய்யும் பொது தான் தெரிய வந்தது இந்த படத்துக்கு இது பொன்விழா ஆண்டு என்று
இந்த படத்தை பார்க்காமல் ஒத்திவைத்து கொண்டே இருந்தேன் பொன்விழா ஆண்டு என்று தெரிந்ததும் இந்த படத்தை பார்த்தேன் .
பார்க்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன் . இந்த மாதிரி ஒரு படத்தை இத்தனை நாள் பார்க்காமல் விட்டுவிட்டோம் என்பதை நினைத்து . ஒரு விஷயம் சொன்னால் என்னை எல்லோரும் அடிக்க வருவீர்கள் , அது என்னக்கு தேவிகாவின் முகம் மட்டும் நினைவில் இருக்காது , பலே பாண்டிய படத்தில் கூட அப்படி தான் .
பொதுவாக PSV pictures , சிவாஜி மற்றும் சங்கர் கூட்டணி படங்களில் ஒரு விதமான மனோதத்துவம் குணம் அடிபடையில் கதை அமைந்திருக்கும் இந்த படமும் அப்படி தான் . இதே கூட்டணி 1962ல் ஆலயமணி என்ற ஒரு மிக பெரிய வெற்றி படத்தில் ஒன்று சேர்ந்தது . கூட விஸ்வநாதன் ராமமூர்த்தி , கண்ணதாசன், ஜாவர் சீதாராமன் போன்ற stalwarts சேர்ந்தால் என்ன ரிசல்ட் கிடைக்கும் ரசிகர்களுக்கு ஒரு விருந்து தான் அது தான் இந்த படம் .
சச்சின் முதல் பால் லே சிக்ஸ் அடித்தல் எப்படி இருக்குமோ அப்படி பட்ட உணர்வு தான் இந்த படம் டைட்டில் போடும் போதே என்னை தொற்றிகொண்டது .
இந்த படத்தின் antagonist ஒரு professor மிகவும் படித்திவார், அவரை கண்டால் ஊரில் அனைவரும் மரியாதையை கலந்த பயம் கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணாமல் இந்த கேரக்டர் யை டைட்டில் போடும் போதே நமக்கு பதிய வைத்துவிடுகிறார்கள் . அதுவும் அந்த கேட் சத்தம் போடும் போது நம்மவர் அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுவதும் , தொடர்ந்து 7 நிமிடம் நடக்கும் போது ஒரு மிக பெரிய கம்பீரம் நம்மளையும் தொற்றிகொல்கிறது நம்ம சிவாஜி ரசிகர்கள் என்று .
எனக்கு தெரிந்து எந்த ஒரு நடிகரும் இவ்வளவு கம்பீரமாக இப்படி ஜல் ஜல் என்று நடந்ததாக நினைவு இல்லை . அதுவும் அவர் அந்த கோட் யை புல்லா கவர் செய்து கையில் கொடையுடன் நடந்து செல்லும் விதம் அழகே அழகு . அதே மாதிரி நான் பார்த்த படங்களில் அதிக நேரம் காலேஜ் க்கு உள்ளே அதாவது classroom காட்சிகள் அதிகம் உள்ள படம் இதுவாக தான் இருக்கும் .
Prof .கிருஷ்ணன்க்கு மாணவர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு அதே கல்லூரியில் டிரில் மாஸ்டர் ஆக இருக்கும் அசோகன்க்கு வெறுப்பை வரவைக்கிறது.
கல்லூரியில் சிட்டி பாபு செய்யும் குறும்பை பற்றி விசாரிக்க ladies ஹோச்டேல் க்கு செல்லும் prof கிருஷ்ணன் அங்கே இருக்கும் (ராதா) தேவிகா வை கண்டதும் சட்ட்று தடுமர்கிறார் . அந்த மல்லிகை பூ அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்து மூஞ்சியை அஷ்ட கோணலாக வைத்து அதை எரியும் காட்சி , அதை தொடர்ந்து அவர் வெளியே செல்லும் பொழுது அந்த பூ காய்ந்து போய் இருப்பதாய் பார்த்து அவர் சொல்லலும் வார்த்தைகள் ஒரு கவிதை
அதே prof .கிருஷ்ணன் தன் மாணவன் (AVM Rajan ) யை கண்டித்து விட்டு ராதாவை சந்திக்கும் பொழுது கொடையை ராதா விடம் கொடுத்து விட்டு ஒரு விதமான நடையில் (கையை பின்னாடி கட்டி கொண்டு ) நடக்கும் பொழுது , நடையில் இத்தனை வகை இருக்கிறதா என்பதை போலே நம்ம எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறார் . தொடர்ந்து அவர் காதல் வசப்படும் காட்சியல் அவரின் மனசை ஒரு கண்ணாடி மூலம் வேறு வேறு முகங்களை பிரதிபலிக்கிறார் கூட நம்ம தேவிகாவும் நம்மளை எங்கோ கொண்டு செல்கிறார் அற்புதமான direction .
அதை தோன்றது வரும் அலையே வா அருகே வா பாடலும் அதில் இந்த ஜோடியின் நடிப்பும் , நம்ம சிவாஜி உணர்ச்சிக்கு அடிமை படுவதும் அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பதும் சிறந்த நடிப்பு.
இவ்வளவு நாள் வெறும் சாமி படங்கள் , தத்துவ வாக்கியங்கள் உள்ள இல்லத்தில் இப்பொழுது கொஞ்சம் மாடர்ன் வாசம் வீசுகிறது . அடுத்தது உடை , நம்மவர் இப்போ அந்த tranformation யை உடை மூலம் நம்மளுக்கு உணர்த்துகிறார் இப்போ அவர் court , suit மற்றும் bow அணிந்து சும்மா கலக்கிறார் எந்த காதல் தேவை இல்லை என்று சொன்னாரோ அவரே இப்போ அதன் மகத்துவத்தை பற்றி பக்கம் பக்கமாக பேசுகிறார் .
ஆனால் இந்த காதல் பிடிக்காத அசோகன் (ராதாவின் முறை மாமன் ) இந்த விஷியத்தை பற்றி மாணவர்கள் யிடம் சொல்ல அது பெரும் பிரச்சனை ஆகி விடுகிறது , கிருஷ்ணன் இந்த காதலை ஒற்று கொண்ட உடன் அவர் மரியாதையை குறைகிறது .
ராதா வின் தாயாரோ ஒரு பண பேய் , ராதாவை திருமணம் செய்து கொள்ள கிருஷ்ணன் கடன் வாங்குகிறார் ஆனாலும் மீண்டும் அசோகனின் சதியில் சிவாஜியால் தேவிகாவை மணக்க முடியாமல் போகிறது . இந்த ஜோடி படகில் போகும் பொழுது ஒரு விபத்தில் சிக்கி ராதா இறந்து விடுகிறார் , கொலை குற்றவாளியாக கிருஷ்ணன் தக்க ஆதரம் இல்லாததால் விடுதலை செய்ய படுகிறார் . இதற்கு இடையில் அவர் தாயர் இறந்து விடுகிறார் , கிருஷ்ணனின் முறை பெண் இப்போ கஷ்ட படும் நிலையில், கிருஷ்ணனோ ஒரு சாமியார் போலே ஊர் ஊராக சுத்துகிறார் ஆறு மனமே ஆறு என்று (என்ன அற்புதமான ஒரு பாடல் , வரிகள் , நடிப்பு )
புஷ்பலதாவை (முறை பெண்ணை) கண்டு பிடிக்கும் கிருஷ்ணன் அவர் உடன் வேற ஊர்க்கு செல்கிறார் சந்திரபாபு உடன் , இந்த இடத்தில அவர் உடை மற்றும் முக அமைப்பில் ஒரு மாறுதல் , ஏழமையை குறிக்கும் விதமாக நடிகர் திலகத்துக்கு மற்றுமே உரித்தான ஒரு dedication .
விதி சிவாஜியை , பாலாஜியின் கம்பெனியில் வேலைக்கு அமர்த்துகிறது . அங்கே ராதாவை பார்த்து ஆச்சரியம் அடைகிறார்
ஆனால் ராதா விபத்தில் தன் நினைவை இழந்து விடுகிறார் . சில நாட்களில் பாலாஜியின் பையன் யிடம் அமைதியான நதியினிலே ஓடம் என்ற பாடலை படும் பொழுது ராதாவுக்கு நினைவு வருகிறது . இங்கே ஏவிஎம் ராஜன் மிக உயர்ந்த நிலைக்கு வருகிறார் அவர் பாலாஜியிடம் தன் குரு கிருஷ்ணன் தான் மூர்த்தி என்பதை சொல்லி விடுகிறார் முடிவில் ஏவிஎம் ராஜன் புஷ்பலதாவை திருமணம் செய்து கொள்ள , ராதா கிருஷ்ணனை கரம் பிடிக்க நம அனைவரும் ஒரு நல்ல படத்தை பார்த்த மகிழ்ச்சி உடன் வீட்டுக்கு செல்வோம்
சந்திரபாபு வின் நடிப்பும் அபாரம் குறிப்பாக சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் "சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடலில் அவர் செய்யும் சஹாசங்கள் சூப்பர் .
அவர் சொல்லும் ஒரு வசனம் உங்களுக்கு தெரியாதது அவருக்கு தெரியும் , அவருக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது . வசனம் ஷார்ப் இது மற்றும் இல்லை படம் முழுவதும் வசனம் சூப்பர் உபயம் ஜாவர் சீதாராமன்
என்ன இல்லை இக்காவியத்தில் ஆனாலும் இந்த படம் ஏன் 100 நாட்களை தொடவில்லை என்பது மிக பெரிய கேள்வி குறி தொடர்ந்து மூன்று 100 நாட்கள் படங்கள் கொடுத்த பாதிப்பு மட்டுமே எனக்கு தெரிந்த ஒரே காரணம் அவர் படங்களே இந்த படத்தின் மிக பெரிய வெற்றியை தடுத்து இருக்கும் என்றே தோன்றுகிறது
Last edited by ragulram11; 13th June 2013 at 06:29 PM.
-
13th June 2013, 06:17 PM
#478
Senior Member
Seasoned Hubber
எளிமைத் திலகத்தின் ஏற்றமிகு தோற்றம்

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் . முகநூல் மூலமாக
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th June 2013, 06:20 PM
#479
Senior Member
Seasoned Hubber
இதுவும் மிக அபூர்வமான போட்டோ ....

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக
கல்தூண் படத்தின் நூறாவது நாள் விழா என நினைக்கிறேன்.
Last edited by RAGHAVENDRA; 13th June 2013 at 07:45 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
13th June 2013, 06:22 PM
#480
Senior Member
Seasoned Hubber
நல்லி சின்னசாமி செட்டி அதிபருடன் நடிகர் திலகம், மற்றும் அன்னை கமலா அம்மையார்

நன்றி - நமது அருமை நண்பர் எம்.எல்.கான் - முகநூல் மூலமாக
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks