-
14th June 2013, 12:05 AM
#491
வாசு சார்,
சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சித்தாலும் வார்த்தைகள் நமக்கு கை கொடுக்காத சூழல் நிலவும். அப்படிப்பட்ட ஒரு சூழல், உணர்வு, உங்கள் 1995 மார்ச் மாதம் கொடைக்கானல் அனுபவத்தைப் பற்றி படித்ததும் தோன்றியது. அபிமான நடிகன், ரசிகன் என்பதை தாண்டி, அபிமான் நடிகன் நடித்த படங்களில் மிகப் பிடித்த படம் என்பதை தாண்டி ஞான ஒளி உங்கள் உள்ளத்தை ஊடுருவி இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தப் படம் திரையரங்கில் வந்தால் மிக்க மகிழ்ச்சி. இல்லையேல் உங்களுக்காக நமது NT FAnS அமைப்பின் சார்பாக நிச்சயம் திரையிட்டு விடுவோம். வந்து விடுங்கள்.
அன்புடன்
-
14th June 2013 12:05 AM
# ADS
Circuit advertisement
-
14th June 2013, 08:15 AM
#492
Junior Member
Newbie Hubber
நான் ஒரு ஜோசியர் பார்த்தேன். அவர் நம் எல்லோர் ஜாதகங்களையும் NT ஜாதகத்தோடு ஒப்பிட்டு ஞான ஒளி திரையீடலுக்கு நாள் குறித்து கொடுத்துள்ளார் 20/7/2013 மிக மிக சிறந்த முஹுர்த்த நாளாகும்.(18.30 to 21.30)
-
14th June 2013, 08:17 AM
#493
Senior Member
Seasoned Hubber
இந்த நாளைக் குறித்துக் கொடுக்கச் சொல்லி ஜோசியரிடம் குறித்துச் சொன்னது யாரோ?
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th June 2013, 08:25 AM
#494
Senior Member
Diamond Hubber
இன்றைய ஸ்பெஷல் புகைப்படம் (பார்த்தசாரதி சாருக்காக)
-
14th June 2013, 08:25 AM
#495
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
இந்த நாளைக் குறித்துக் கொடுக்கச் சொல்லி ஜோசியரிடம் குறித்துச் சொன்னது யாரோ?
எனக்கு சகஸ்ரநாமம் என்றொரு நண்பர் உண்டு. அவரிடம் சொல்லி செல்வம் பட ஜோசியர் மூலம் நாள் கிடைத்தது.(நடிகர்திலகத்தை ஒன்றா இரண்டா என்று தவிக்க வைத்த அதே நம்பிக்கைக்குரிய ஜோசியர் தான்)
-
14th June 2013, 08:26 AM
#496
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
நான் ஒரு ஜோசியர் பார்த்தேன். அவர் நம் எல்லோர் ஜாதகங்களையும் NT ஜாதகத்தோடு ஒப்பிட்டு ஞான ஒளி திரையீடலுக்கு நாள் குறித்து கொடுத்துள்ளார் 20/7/2013 மிக மிக சிறந்த முஹுர்த்த நாளாகும்.(18.30 to 21.30)
peraasai.
-
14th June 2013, 08:32 AM
#497
Senior Member
Diamond Hubber
'ஞானஒளி' திரையிடப் பட்டால் அனைத்து ஹப்பர்களும் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். இது அன்புக் கட்டளை. அனைவருக்கும் தேநீர் விருந்து என் செலவாக்கும். என் உயிரே அந்தப் படத்தில்தானே இருக்கிறது. சித்தூரார் அவசியம் வருவார். ஒளியைப் பார்க்க வருகிறாரோ இல்லையோ வேறு ஒருத்தரைப் பார்க்க வேண்டுமாம். நான் கூட்டி வருகிறேன்.
-
14th June 2013, 08:37 AM
#498
Junior Member
Newbie Hubber
என்னது தேநீரா? படம் முடிந்தவுடன் 21.30 க்கு அனைவரும் கொலை பசியுடன் அலைந்து கொண்டிருப்போம். dinner சால சிறந்ததாகும். (கடலூர் பண்ணையாருக்கு இதெல்லாம் ஜுஜுபி)
-
14th June 2013, 08:44 AM
#499
Senior Member
Seasoned Hubber
பரவாயில்லை, தேநீரை வாசு சார் தருவார், டின்னரை கோபால் சார் பார்த்துக் கொள்வார். நமக்கு வேட்டை தான்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
14th June 2013, 08:58 AM
#500
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
என்னது தேநீரா? படம் முடிந்தவுடன் 21.30 க்கு அனைவரும் கொலை பசியுடன் அலைந்து கொண்டிருப்போம். dinner சால சிறந்ததாகும். (கடலூர் பண்ணையாருக்கு இதெல்லாம் ஜுஜுபி)
பேருதான் பெத்த பேரு. தாகத்துக்கு நீலு லேது. பண்ணையாராம் பண்ணையார். அது இருக்கட்டும் போன தடவை கொண்டு வந்த மாதிரி கொண்டு வா. மறந்துறாதே.
Bookmarks