Page 56 of 399 FirstFirst ... 646545556575866106156 ... LastLast
Results 551 to 560 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #551
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Sowri,
    Thoroughly enjoyed Part 2 .(Rather enjoying midway).You could have included pasamalar piano. I happened to watch a channel while I was in U.S. They telecasted a piano play and finguring style is 100% Pasamalar.What a perfection.
    As I have mentioned in one of my earlier postings, miruthanga chakravarthi 1)Lost touch with Miruthangam.2)Tension due to competition and challenge with his own son.3)Age Factor. 4)Anxiety and you observe his lip sync with thala. The oozing blood could have been avoided.
    Last edited by Gopal.s; 16th June 2013 at 08:40 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #552
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதிய நண்பர் ரமேஷ் சத்யநாராயணன் அவர்களே,
    தங்களுடைய முதல் பதிவினையே நம் நடிகர் திலகம் திரியில் இட்டு பெருமை பெற்று விட்டீர்கள். நமக்கெல்லாம் பெரு மகிழ்வை யூட்டி விட்டீர்கள். தங்களைப் பற்றி அறிய ஆவலாயுள்ளோம். தங்களுடைய வரவு இங்கே, good, very nice
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #553
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    சொந்த வேலை காரணமாக சில நாட்கள் வெளியூர் சென்றிருந்த படியால் இங்கு பங்கேற்க முடியவில்லை. அதற்குள் .... வியப்பையூட்டும் மலைப்பூட்டும் வண்ணம் அருமையான பதிவுகள்.

    வாசு சார்,
    முக்கியமாக குறிப்பிட வேண்டியது வாசு சாரின் ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன். ... தொடர் ... இது வரை இல்லாத அளவிற்கு புதிய அளவில் இத்தொடர் வரவேற்பைப் பெறப் போவது உறுதி. அதற்கு நம் அனைவரும் உறுதுணையாய் இருப்போம். வாசு சார் ஜமாயுங்கள்..

    சாரதி சார்,
    ஞான ஒளி பற்றிய தங்கள் பதிவும் வாசு சாரின் பதிவும் கண்களைக் குளமாக்கி விட்டன. நடிகர் திலகம் என்றாலே உணர்ச்சி மயம் தானோ...

    கோபால் சார்,
    தொடருங்கள் தங்கள் உலக அதிசயத்தை..

    கார்த்திக்,
    எல்லா ரசிகர்களைப் போலவே தங்களுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

    சௌரி சார்,
    தங்களுடைய வீடியோக்களை நான் இனிமேல் தான் பார்க்க வேண்டும். நிதானமாக எழுதுகிறேன்.

    பெயர் விட்டுப் போன மற்ற நண்பர்களனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #554
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெனரல் சக்ரவர்த்தி
    1978 ல் நம்மவருக்கு பல படங்கள் வெளிவந்தது . கிட்ட தட்ட 8 படங்கள் . வெற்றியின் விகிதம் மிக அதிகம் முதலில் வந்த அந்தமான் காதலி 100 நாட்கள் , தியாகம் கேட்கவே வேண்டாம் அப்படி ஒரு ஓட்டம் அதுக்கு அப்புறம் வந்த என்னை போல் ஒருவன் சாராசரி வெற்றி படம் , ஆனால் புண்ணிய பூமி மட்டும்அந்த வருடம் ஏமாற்றிவிட்டது.
    இந்த நிலையில் தான் சின்ன அண்ணாமலை நம்மவர் வை ஒரு மாறுப்பட படத்தில் நடிக்க வைத்து , வெற்றி பட இயக்குனர் யோகானந்த் அவர்களை ஒருங்கிணைந்து ஒரு படம் தயாரிட்டார் .
    அந்த படம் தான் ஜெனரல் சக்கரவர்த்தி

    இந்த படம் சிறந்த குடும்ப சித்திரம்

    ஜெனரல் சக்கரவர்த்தி மிக சிறந்த குடும்ப தலைவர் , மனைவி KR விஜய ஒரு டாக்டர் , மகள் கவிதா காலேஜ் படிக்கிறார் . நன்றாக இருக்கும் குடும்பத்தில் கவிதாவினால் ஒரு பிரச்சனை வருகிறது , அவர் கல்யாணம் ஆகும் முன்பே கருவுற்றகிறார், அதுக்கு காரணம் மோகன் (மோகன் ஷர்மா, கோலங்கள் தொடரில் வரும் தேவயானியின் தந்தை) அவர் இறந்து விடுகிறார். இதை அறிந்த KR விஜயா தான் கர்ப்பமாக இருபதாக அனைவரையும் நம்ப வைக்கிறார் , இதை NT கண்டு பிடித்து விடுகிறார் , இந்த பிரச்னையை NT எப்புடி தீர்வு காணுகிறார் என்பதே கதை

    இந்த படத்தில் என்னக்கு பிடித்த காட்சி :

    NT வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வரும் தன் நண்பர்களை கலாய்க்கும் காட்சி , மிக சரளமாக வெவ்வேறு பாஷையை பேசுவார் , இந்த காட்சியின் பாதிப்பு தான் கமல் நடித்த பஞ்சதந்திரம் காட்சி
    இந்த படத்தில் காமெடி என்ற பெயரில் நம்மளை சோதித்து இருப்பார்கள் , அதுவும் அந்த கட்டபொம்மன் காமெடி , கிட்ட தட்ட ஒரு parody அந்த காட்சியை அனுமதித்தது நடிகர் திலகத்தின் விசாலா மனசை காட்டுகிறது ,
    நீ என்ன கண்ணனா நான் என்ன கம்சனா பாடல் காட்சியில் நம்மவர் காட்டும் உக்கரம் , கண்களில் இருக்கும் ஒரு வித பரபரப்பு , அதை எதிர்கொள்ள பயப்படும் KR விஜயா , கவிதா வின் நடிப்பு அந்த படலை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்கிறது .
    படத்தின் மிக பெரிய பலம் திரைக்கதை , ஒரு குடும்ப கதையை ஒரு வித த்ரில்ளீர் போல கொண்டு சென்று இருப்பார்

    ஆரம்பத்தில் சாதரணமாக செல்லும் படம் , அதுவும் நம்மவர் ஆப்ரிக்கா சென்ற உடன் ஆமை வேகத்தில் நகரும் , நம்மவர் திரும்பி வந்த உடன் கொஞ்சம் வேகம் பிடிக்கும் , நம்மவர்க்கு ,உண்மை தெரிந்த உடன் சுடு பிடிக்கும் கதை , இறுதி வரை அதே வேகத்தில் முடிகிறது

  6. #555
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்,

    ஸ்டில் புதிர் ஒன்று போட்டிருந்தேனே! எங்கே பதிலைக் காணோம்? நழுவி தப்பிக்க வேண்டாம். பதில் சொல்லு. அது ஒண்ணும் வேற்றுமொழிப் படமில்லை. ஒரிஜினல் தமிழ்ப்படம்தான்.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #556
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by ragulram11 View Post
    என்னை போல் ஒருவன் சாராசரி வெற்றி படம்
    ராகுல்,

    தவறு. விவரம் தெரியாமல் எழுத வேண்டாம். எ.போல்.ஒருவன் வசூலில் நிமிர்த்து கட்டிய ஒரு படம். பேய் வசூலை வாரிக் குவித்த படம். இத்தனைக்கும் தியாகம் 04.03.1978 அன்று வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் போதே என்னைப் போல் ஒருவன் 19.03.1978 அன்று வெளியாகி வசூல் பிரளயம் செய்தது. இத்தனைக்கும் நீண்ட நாள் தயாரிப்பில் வேறு இருந்த படம். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படங்கள் வசூலில் தோற்றுத்தான் போய் இருக்கின்றன. ஆனால் எ.போல்.ஒருவன் மாதிரி சில படங்கள் விதிவிலக்கு. எங்கள் கடலூரிலேயே கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு ஓடி கலக்கியது. அதனுடைய வசூல் விவரங்கள் நமது ரசிகர் மன்ற நோட்டீஸ்களில் கொடுக்கப்பட்டது என்னிடம் உள்ளது. ரசிகர் மன்ற நோட்டீஸ் வசூல்களை வெளியிட்டால் சில பிரச்னைகள் வரும் என்று நான் வெளியிடுவதில்லை.

    தயவு செய்து விவரமறியாமல் எழுத வேண்டாம்.
    Last edited by vasudevan31355; 17th June 2013 at 09:02 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #557
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நாகிரெட்டியார் சொன்னது.....

    உழைப்பாளி' படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே "பைரவதீபம்' (தெலுங்கு), கறுப்பு வெள்ளை (தமிழ்) படங்களுக்காக தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டியால் திட்டமிடப்பட்டது.

    கறுப்பு வெள்ளை படத்தை இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் டைரக்ட் பண்ண, சிவாஜிகணேசன் அவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், அவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடிக்கக்கூடாது, நடிக்க முடியாது என்று மருத்துவர் ஆலோசனை வழங்கினார். எனவே, நடிகர் திலகம் நடிக்கவில்லை என்றதும் எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் ஏற்படுத்தியது. அதனால் அவரது கதாபாத்திரத்தில் மாறுதல் செய்து, கறுப்பு வெள்ளை படத்தில் மலையாள நடிகர் திலகன் நடித்தார். கே.எஸ். சேதுமாதவனுக்குப் பதிலாக மனோபாலா படத்தை இயக்கினார்.

  9. #558
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    புதிர் போட்டிகளில் ,இனி கலந்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளேன். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலை ரசிகர்களுக்கும் உரிய வாய்ப்பை வழங்கும் எனது முடிவை மற்ற ரசிகர்களும் வரவேற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
    ஜெய் ஹிந்த் ....

  10. #559
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Nadigar Thilagam's films in TV Channels this week

    Channel Date Time Movie

    J MOVIES
    19.6.13 6 AM PANAM
    22.6.13 1 PM VIETNAM VEEDU
    18.6.13 5 PM AVAN THAN MANITHAN

    JAYA TV
    18.6.13 10 AM UTHAMA PUTHIRAN
    19.6.13 10 AM NEELA VAANAM
    22.6.13 10 AM ETHIROLI
    19.6.13 8.30 PM PUDHIYA PARAVAI

    K TV 18.6.13 1 PM ETHIROLI

    MEGA 24 20.06.13 6.30 PM VETRIKKU ORUVAN

    MEGA TV 19.06.13 12.00 NOON VAA KANNA VAA

    MURASU TV
    18.06.13 7.30 PM MOHANA PUNNAGAI
    22.06.13 7.30 PM UTHAMA PUTHIRAN

    POLIMER TV 23.06.13 1.00 PM JALLIKKATTU

    RAJ DIGITAL PLUS
    21.06.13 10 AM MANGAIYAR THILAKAM
    18.06.13 1 PM PATHI BAKTHI

    VASANTH TV
    19.06.13 2 PM JALLIKKATTU
    20.06.13 2 PM NEETHIPATHI
    23.06.13 2 PM MARUTHA NATTU VEERAN

    ZEE TAMIL 20.06.13 2 PM RISHI MOOLAM

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #560
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    Smile

    Quote Originally Posted by Gopal,S. View Post
    புதிர் போட்டிகளில் ,இனி கலந்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளேன். புதியவர்களுக்கும், ஆரம்ப நிலை ரசிகர்களுக்கும் உரிய வாய்ப்பை வழங்கும் எனது முடிவை மற்ற ரசிகர்களும் வரவேற்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.
    ஜெய் ஹிந்த் ....
    .......
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •