Page 35 of 73 FirstFirst ... 25333435363745 ... LastLast
Results 341 to 350 of 722

Thread: 'Kalai Nilavu' RAVICHANDRAN

  1. #341
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இதயம் பொல்லாதது .... மாமாவின் one of the masterpieces .
    எந்தப்பாடல் பெரிசா ஹிட் ஆனது?. ஒண்ணுமே இல்லை. 'அனாதை ஆனந்தனை' யே அனாதையாக தவிக்க விட்டவர் கே.வி.மகாதேவன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #342
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    கொடுத்த ஒரேயொரு படத்தையும் (எதிரொலி) குட்டிச்சுவராக்கிய கே.வி.எம். வீட்டு வாசல் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை கே.பாலச்சந்தர்.

    அதே பாலச்சந்தர் கொடுத்த இன்னொரு ஸ்டேட்மென்ட் : "அபூர்வ ராகங்கள் ஒரு மியூசிக் சப்ஜக்ட். அதுக்கு தகுந்த மாதிரி பாடல் போடுங்கள் என்று மட்டும்தான் சொன்னேன். கண்ணதாசனும் விஸ்வநாதனும் சேர்ந்து படத்தை எங்கோ உயரத்துக்கு கொண்டுபோய் விட்டனர்"...

  4. #343
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கே.வீ.எம் போன்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். Too Much .

    பேசும் படம் வாசகர் ஒருவர் கேள்வியும் பதிலும் 1968 இல் வெளியானது.

    எதிர்நீச்சல் படத்தில் குமார் இசையமைத்த அடுத்தாத்து அம்புஜத்தை ,சேதி கேட்டோ போன்ற பாடல்களின் இனிமையை ,அதே எதிர்நீச்சல் படத்தில் விஸ்வநாதன் இசையில் வெளியான என்னம்மா பொன்னம்மா பாட்டில் காணவில்லையே?

    பாவம் .பிரிவு வாட்டுவதுடன், புதியவர்களுக்கு ஈடு கொடுக்க திணறுகிறார்.

    குமாருடன் இந்த பாடு.

    ஓஹோ, அபூர்வ ராகங்கள், சங்கராபரணம் படத்தை விட கர்நாடக இசையால் சிறந்ததா?
    நல்ல செய்திதான் .
    Last edited by Gopal.s; 19th June 2013 at 02:01 PM.

  5. #344
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    இது ரவிச்சந்திரன் திரியா அல்லது விஸ்வநாதனை வசைபாடும் திரியா என்பது தெரியவில்லை.
    கார்த்திக் சார் ,
    நான் விஸ்வநாதன் சாருக்கு எதிரானவன் இல்லை. தமிழக இசை மேதைகளை விஸ்வநாதன், ரகுமான், இளையராஜா என்று வரிசை படுத்துபவன் நான்.
    ஆனால் சேர்ந்து கொடுத்த சாதனைகளை இவருடையதாக்கும் முயற்சிகளுக்கு எதிரி. அவருடைய அரசியல் நடத்தைகளுக்கு (அப்பாவி போன்ற அற்புதமான நடிப்பாற்றல்)நான் எதிரி. ராமநாதன், சுப்பராமன், A .M .ராஜா ,கே.வீ.மகாதேவன் தான் trend setters என்பதில் உறுதியானவன். ராமமூர்த்திக்கு உரிய இடம் கொடுக்க படாததை கண்டிப்பவன்.
    இனிமேல் இந்த வாதத்தை இந்த திரியில் தொடர போவதில்லை.

  6. #345
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கே.வீ.எம் போன்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம். Too Much .

    பேசும் படம் வாசகர் ஒருவர் கேள்வியும் பதிலும் 1968 இல் வெளியானது.

    எதிர்நீச்சல் படத்தில் குமார் இசையமைத்த அடுத்தாத்து அம்புஜத்தை ,சேதி கேட்டோ போன்ற பாடல்களின் இனிமையை ,அதே எதிர்நீச்சல் படத்தில் விஸ்வநாதன் இசையில் வெளியான என்னம்மா பொன்னம்மா பாட்டில் காணவில்லையே?

    பாவம் .பிரிவு வாட்டுவதுடன், புதியவர்களுக்கு ஈடு கொடுக்க திணறுகிறார்.

    குமாருடன் இந்த பாடு.

    ஓஹோ, அபூர்வ ராகங்கள், சங்கராபரணம் படத்தை விட கர்நாடக இசையால் சிறந்ததா?
    நல்ல செய்திதான் .
    தலைவரே,
    அந்த வாசகரும், அவருக்கு பதிலளித்த பேசும்படம் ஆசாமியும் தங்கள் ரகம் போலும். 'எதிர்நீச்சல்' வந்தது 1968-ல். இவர்கள் பிரிந்தது 1965 மத்தியில். 68-க்கு முன் இரண்டரை ஆண்டுகளாக விஸ்வநாதன் போட்ட போடை அந்த ஆசாமி கேட்கவில்லையா?. ராமமூர்த்திக்கு வாழ்வு தந்த ராமண்ணாவுக்கு 1966-ல் எம்.எஸ்.வி. போட்ட அருமையான ட்யூன்கள் பறக்கும் பாவை, நீ, குமரிப்பெண் பாடல்கள் அந்த செவிடர் காதுகளில் விழவில்லையா?

    'எதிர் நீச்சலில்' ஒரேயொரு பாடலுக்கு திணறுவதாக மனசாட்சியை அடமானம் வைத்த 'பேசும் படம்' ஆசாமி, அதற்கு முந்தைய 67-ல் அதே பாலச்சந்தருக்கு இசையமைத்த பாமாவிஜயம் கேட்கலையா?. சென்னையில் காது மருத்துவர்கள் நிறைய உண்டே. எதிர்நீச்சலுக்கு முன்னர் வந்தவைதானே காவல்காரன், ஊட்டிவரை உறவு, இருமலர்கள், எங்க பாப்பா, சித்தி, தங்கை, மோட்டார் சுந்தரம்பிள்ளை, அன்பே வா, நான் ஆணையிட்டால், ராமு என ஏராளமாக உண்டே. அதையெல்லாம் அந்த பேசும்படம் ஆசாமி பார்க்கவில்லையா?. ஏன்?. ஓசி பாஸ் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இப்படி எழுதினாரா?. அவர்தான் எழுதினார். அதை இங்கே எடுத்து பிரசுரித்த தங்களைப்பற்றி இதைப்படிப்போர் என்ன நினைக்கக்கூடும்?.

    1968-ல் எம்.ஜி.ஆர் அவர்களின் எட்டு படங்கள் வெளியாயின. அவற்றில் புதிய பூமி, கணவன், கண்ணன் என காதலன், ரகசிய போலீஸ் 115, ஒளிவிளக்கு, குடியிருந்த கோயில் ஆகிய படங்களின் எம்.எஸ்.வி. பாடல்களை விட, கே.வி.மகாதேவனின் தேர்த்திருவிழா, காதல் வாகனம் ஆகிய படங்களின் பாடல்கள் டாப் என்கிறீர்கள் அப்படித்தானே. சபாஷ்... சபாஷ்...

    (அத்தகைய கால கட்டத்தில் கே.வி.எம்.முக்கு ஜாமீன் கொடுத்துக் காப்பாற்றியவை ஏ.பி.நாகராஜனின் புராணப்படங்கள் மட்டுமே).

    கே.பி. யின் படங்களான எதிரொலியையும், அபூர்வ ராகங்களையும் பாடல் ரீதியாக ஒப்பிட்டால் உடனே உங்கள் துருப்புச்சீட்டான சங்கராபரணத்தை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறீர்கள். ஏன்?. எதிரொலி பாடல்கள் டப்பா, சரிதானே.

    அப்புறம் என்ன ஒப்பீடு டூ மச?...

  7. #346
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இனிமேல் இந்த வாதத்தை இந்த திரியில் தொடர போவதில்லை.
    நானும் நிறுத்திக்கொள்கிறேன்...

  8. #347
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    தலைவரே,
    அந்த வாசகரும், அவருக்கு பதிலளித்த பேசும்படம் ஆசாமியும் தங்கள் ரகம் போலும். 'எதிர்நீச்சல்' வந்தது 1968-ல். இவர்கள் பிரிந்தது 1965 மத்தியில். 68-க்கு முன் இரண்டரை ஆண்டுகளாக விஸ்வநாதன் போட்ட போடை அந்த ஆசாமி கேட்கவில்லையா?. ராமமூர்த்திக்கு வாழ்வு தந்த ராமண்ணாவுக்கு 1966-ல் எம்.எஸ்.வி. போட்ட அருமையான ட்யூன்கள் பறக்கும் பாவை, நீ, குமரிப்பெண் பாடல்கள் அந்த செவிடர் காதுகளில் விழவில்லையா?
    1965-1966- சுமார் பதினெட்டு படங்கள் இணைவு இசையே . ஆனால் ஒருவர் பெயரில் வெளியானது. நீலவானம், கலங்கரை விளக்கம் ,நீ உட்பட.

    1967- விவசாயி இசையை மறந்தீர்களோ? பேசும் தெய்வத்தையும், செல்வத்தையும் விட எந்த படம் இனிமை?

    1968- ஒப்பு கொள்கிறேன்.ஆனால் பணமா பாசமா பாடல்கள்தான் super hit ரகம் என்ன செய்வது?
    Last edited by Gopal.s; 19th June 2013 at 03:18 PM.

  9. #348
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்று கண்ட முகம்-1968

    கதையை விட்டு சற்றும் அங்கே இங்கே நகராத (True to the story line ) ரக திரைக் கதை,காட்சியமைப்பு.. contemporary appeal நிறைந்த period போர்வையில் வந்த படம். கல்கி மூலக்கதை சற்றே தேவனின் வாசனை கொண்டது. கல்கி செக்ஸ் கதை எழுதினாலும் அதில் காந்தியம் ,மறியல், கதர் இல்லாமல் போகாதே. ராமகிருஷ்ணன் இயக்கி தயாரித்த ஐந்து லட்சம்,சிநேகிதி எல்லாமே சுவாரஸ்மான சுமார் வெற்றி படங்களே.

    ஆத்மநாதன் என்கிற வக்கீல் தனது ஜூனியர் ஆக சேரும் காஞ்சனாவை நேசிக்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் தன் பணக்கார கட்சிகாரர் அழைப்பை ஏற்று ஊட்டி செல்லும் போது காஞ்சனாவையும் அழைத்து சென்று தன் ஆசையை வெளியிட, காஞ்சனா ஏற்று கொள்ளாமல் ,சிறிது அவகாசம் கோருகிறாள். ஒரு முறை வெளியில் செல்லும் போது ஒரு வாலிபன் கைதி உடையில் மயக்கமாய் இருப்பதை பார்த்து ,வீட்டுக்கு எடுத்து வந்து சிகிச்சையளிக்கிறாள். ராஜேந்தர் என்ற வாலிபன் கண் விழித்ததும் ஆத்மநாதன் கண்டு அதிர்ச்சியாகி ,தன்னையும் தன் அன்னையையும் தவிக்க விட்டு ஓடிய மூத்த அண்ணனே என்றும், ஒரு வெள்ளை அதிகாரி கொலை வழக்கில் தான் தண்டனையடைய காரணமானவனும் அவனே என கூறுகிறான்.தான் சிறையிலிருந்து தப்பித்தது அன்று கண்ட பெண்ணின் முகத்துக்காக என கூறும் போது ,அந்த முகமான காஞ்சனாவும், ராஜும் காதலிக்க தொடங்கி விடுகின்றனர். போலீஸ் உடன் சில தனி நபர்களும் ராஜ் பின்னால் அலைய ,சிலர் அவனை கொல்லவும் முயல, பின்னர் உண்மை கொலையாளி ராஜின் நண்பனே என்றும், அந்த நண்பனை காக்க அவன் தந்தைதான் ராஜ் போலீசில் மாட்ட அல்லது தீர்த்து கட்ட அலைகிறார் என்று தெரிந்து பிரச்சினை தீர வேண்டிய சந்தர்ப்பத்தில் நண்பன் விபத்தில் மரணமடைய ,ஆத்ம நாதன் தம்பிக்கு தான் இழைத்த கொடுமைக்கு தற்கொலை செய்து கொள்கிறார். காஞ்சனா கோர்ட் டில் வாதாடி காதலனை மீட்டு சுபமாக்குகிறாள் முடிவை.

    இதில் எனக்கு பிடித்தவை ரவியின் அருமையான நாலு சண்டை காட்சிகள் (ரவியின் சுறுசுறுப்பு கலந்த ஸ்டைலுக்கு ஜே )அக்கால சண்டை என்றால் கொஞ்சம் boxing ,கொஞ்சம் மல்யுத்தம், கொஞ்சம் ஜூடோ,அப்புறம் காலால் X பிடி,கைமுறுக்கல் இவைதான்..ரவி- ஜெயா மேடம் chemistry அருமை. பாடல்கள் இதயம் பொல்லாதது,கண் படைத்தான், வாடா மச்சான் இசை,படமாக்கம் அருமை.(வழக்கொன்று பாடல் சுமார் ,காட்சி ஜோர்).நாகேஷ்-ரவி இணைவு நடனம் எப்போதுமே களை கட்டும்.இதிலும் அப்படியே. இக்கால road chase படங்களின் சாயல் கொண்ட விறுவிறுப்பு. கடைசி கோர்ட் காட்சி படு matured ஆக ,sensible ஆக இருக்கும். வசனம் ,காட்சிகள் சில ரொம்ப surprise கொடுக்கும். ஜாக்ரதை என்று ஜெயா சொல்லி விட்டு கதவை உடனே தட்டி எச்சரிக்கையின்றி திறக்கும் ரவியை இதுதான் உங்க ஜாக்ரதையா என்று கேட்பது,நண்பர் வக்கீலி டம் நடந்து முடிந்ததற்கு உங்கள் அட்வைஸ் வேண்டாம். நடக்க போறதை பேசலாம் என்பது.இப்படி பல.ரவியின் constipation முக பாவம்,பேச்சு சிறையிலிருந்து தப்பி வந்த கைதியின் anxiety கலந்த கவலைக்கு படு பாந்தமாய் அமைகிறது.ஜெயா மேடம் superb .மற்றவர்கள் ஓகே .

    பிடிக்காதவை -அவ்வப்போது உட்கார்ந்து விடும் லாஜிக் இல்லா காட்சிகள்.அசோகன் காதல் வெளியிடும் காட்சி. ரவியின் ஓவர் வளைசல் .

    மொத்தத்தில் ரொம்ப வித்யாசமான ரவியின் படம். இயக்குனர் ராமகிருஷ்ணன், வசனம் (மாரா ),இசை (மாமா) பலத்துடன் ஜெயித்தார். (வெற்றி படமே)
    Last edited by Gopal.s; 20th June 2013 at 02:55 PM.

  10. #349
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்று கண்ட முகம்-1968

    'இதயம் பொல்லாதது'



    கண் படைத்தான் உன்னை காண்பதற்கு



    வாடா மச்சான் வாடா

    Last edited by vasudevan31355; 20th June 2013 at 03:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #350
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Andru kanda mugam. (Full movie)

    நடிகர் திலகமே தெய்வம்

Page 35 of 73 FirstFirst ... 25333435363745 ... LastLast

Similar Threads

  1. Was Kalai Arasi the first Indian film to feature aliens?
    By inetk in forum Tamil Films - Classics
    Replies: 3
    Last Post: 18th November 2010, 03:19 AM
  2. Hariharan gets `kalai mAmaNi'
    By app_engine in forum Current Topics
    Replies: 1
    Last Post: 15th February 2006, 10:12 PM
  3. Songs from "Pagalil oru nilavu"
    By S.Balaji in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 17
    Last Post: 19th October 2005, 09:37 PM
  4. NILAVU SONGS
    By Justice in forum Current Topics
    Replies: 72
    Last Post: 1st October 2005, 10:52 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •