- 
	
			
				
					24th June 2013, 11:23 AM
				
			
			
				
					#741
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  kaatu_poochi  
 சிவாஜியின் ரசிகர்கள் மட்டுமல்ல நண்பரே, அனைத்து தமிழக மக்களும், - கலை, அதன் நுணுக்கம், உயர்வு, அருமை பெருமை தெரிந்தவர்களும், காலத்தின் சுவடுகளாக இப்படியும் ஒரு கலைஞன் அந்நாளிலேயே எப்படி திறமை வெளிப்படுத்தியிருந்தான் என வருங்கால சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள அனைவரும் இதற்கு உடன் படவேண்டும்.
 
 இன்றைய தலைமுறையின் பின்னரும் பல நூறு வருடங்களும் மேலும், இம்மனிதன் வாழ்ந்ததற்கு அடையாளமும் சான்றும் விட்டுச் செல்வது நம் கடமை, அல்ல நம் பெருமையும் கூட.
 
 தமிழ்நாடும் இந்தியப்பெருநாடும் இம்மேதைக்கு உரிய மரியாதை தரவில்லை. குறைந்தபட்சம் அவரின் சரித்திர சுவடுகளை விட்டுச் செல்ல வேண்டும். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.
 
 
 
 சபாஷ்! முற்றிலும் உண்மை.
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							24th June 2013 11:23 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 12:54 PM
				
			
			
				
					#742
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  mr_karthik  
 எதுவாயினும் கடந்த 12 ஆண்டுகளாக அரசின் சார்பில் ஒரு துரும்பும் அசைக்கப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான எத்தனையோ நல்ல இடங்கள் இருந்தும் வில்லங்கமான இடத்தை ஒதுக்கியதே இந்த பணி நடைபெறாமல் தடுக்கத்தான். 
 
 இதுவே வெளிநாடாக இருந்திருந்தால் இவர் பெயரில் ஒரு ஊரையே உருவாக்கி இருப்பான். என்ன பாவம் செய்தாரோ தமிழ்நாட்டில் பிறந்து தொலைத்து விட்டார்.
 
 பாகிஸ்தான் எல்லைப்பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர்க்கு தனிநாடு, காவிரி நீர்ப்பங்கீடு இவற்றோடு நடிகர்திலகம் நினைவு இல்லம் விஷயத்தையும் நமது பேரன் பேத்திகள் பேசிக்கொண்டேயிருக்க வைத்து விட்டுப்போவோம்...
 
 
 
 திரு.கார்த்திக் சார்,
 
 உங்கள் கருத்து / ஆதங்கம் சரியானதே.  காவிரிப் பிரச்சினையோ, இலங்கைப் பிரச்சினையோ, அதற்காக போராட்டங்கள் இன்றுவரை நடந்துகொண்டுதானே இருக்கிறது?
 
 நம்பிக்கைதானே வாழ்க்கை!  அழுத பிள்ளைதான் பால்குடிக்கும் என்பதற்கேற்ப நம் கோரிக்கையை தமிழக அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொண்டே இருப்போம்.
 
 விரைவில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, நடிகர்திலகத்திற்கு மணிமண்டபம்  (பராமரிக்கப்படாத மற்றவை போலில்லாமல்) சிறப்பான முறையில், தமிழக அரசால் அமைக்கப்படும் காலம் வந்தே தீரும்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 12:56 PM
				
			
			
				
					#743
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அன்புள்ள கோபால் சார், 
 
 நடிகர்திலகத்தின் ஸ்கூல் ஆப் ஆக்டிங் பற்றிய தங்களின் தொடரை தொடர்ந்து படித்து, மகிழ்ந்து, மலைத்து வருகிறேன். அதில் பங்களிக்கக்கூடாது என்பதெல்லாம் இல்லை.
 
 ஆனால், மேல்நாட்டுப் படங்கள் பற்றிய எனது அறிவு கொஞ்சம் குறைவு. (முழுப்பொய்...., உண்மை என்னவென்றால் மிக மிக குறைவு). பிறந்தது முதலே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஆசாமி நான். எனவேதான் தெரியாத விஷயத்தைப்பற்றி மூக்கை நுழைக்க விரும்புவதில்லை. 'பாராட்டலாமே' என்று கேட்கலாம். ஒரு அருமையான தொடராக வந்துகொண்டிருக்கும் கட்டுரைகளுக்கு நடுவே இரண்டு அல்லது மூன்று வரிப் பாராட்டுக்களால் இடையூறு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்தினால்தான் அவற்றையும் தவிர்த்து விடுவது. பாராட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கிறது நமது பொதுத்திரி.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 01:53 PM
				
			
			
				
					#744
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Mr Karthik Sir,
 
 I fully agreed with your views on NT's Ninaivu Mandapam. Hope our KC Sir will take the necessary
 steps with the co-opeation of all our hubbers.
 
 Mr Vasu Sir,
 
 Your new series on NT's Dressing shows how much time and pain you have undertaken
 by you. We are all proud of your contribution. Pls continue your excellent work.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 01:55 PM
				
			
			
				
					#745
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அன்புள்ள வாசுதேவன் சார், 
 
 'ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன்' தொடரில் அன்பு படத்தில் நடிகர்திலகத்தின் உடையலங்கரமும், அவற்றை மேம்படுத்திக்காட்டும் அவரது ஸ்டைலும் படு சூப்பர். என்ன ஆச்சரியமெனில், அந்த காலகட்டத்திலேயே இவ்வளவு ஸ்டைலான உடைகள் தமிழ்ப்படவுலகில் வந்து விட்டன என்பதும், மற்றவர்கள் அரச உடைகளில் வந்துகொண்டிருந்தபோது நம் தலைவர் இவ்வளவு லேட்டஸ்டான உடைகளில் படங்களில் பவனி வந்துள்ளார் என்பதும்தான்.
 
 நமது முரளி அவர்கள் சொன்னதுபோல, ஆடைகளுக்கேன்றே பிறந்த ஆணழகன் தொடர் என்றதும், அவர் ஸ்டைலாக உடையணிந்த தங்கச்சுரங்கம், சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, சுமதி என் சுந்தரி போன்ற சில படங்களை மட்டும் அலசுவீர்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால் பிலிமோகிராபி போல ஒவ்வொரு படமாக அலசி (ஒரு சிலரை) அதிர வைப்பீர்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.
 
 தங்கள் அயராத உழைப்புக்கு நடிகர்திலகத்தின் ஒவ்வொரு ரசிகரும் கடன்பட்டு விட்டோம். பல தொடர்களை மாறி மாறி தந்து எங்களை கடனாளியாக ஆக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்...
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 02:21 PM
				
			
			
				
					#746
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							அன்புள்ள கோபால் சார், 
 
 அவர் இமேஜ் பார்க்காமல் நடித்தார் என்பதற்கு 'தங்கை'  படமும் ஒரு சான்று. ஒரு சீனில், பாங்க் கேஷியரான செஞ்சி கிருஷ்ணன், தன் மகளின் திருமணத்துக்காக பேங்க் பணத்தை வைத்து சூதாடி, தோற்றுப்போனதும் 'போச்சு, போச்சு' என்று புலம்பிக் கொண்டு போகும்போதும், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்போதும், தாய்க்குலத்தின் வசவுகள் நம் தலைவருக்கு கிடைத்ததை தியேட்டரில் நேரில் பார்த்திருக்கிறேன்...
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 02:43 PM
				
			
			
				
					#747
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Platinum Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							இனிய நண்பர் கார்த்திக்  சார் 
 
 1947 முதல் 1952  வரை
 
 ராஜகுமாரி - என் தங்கை  வரை  மக்கள் திலகம்  அவர்கள்  பல வித்தியாசமான நவீன  ஆடைகள் - அரச உடைகள்  அணிந்து  பல புதுமைகள்  புரிந்துள்ளார் .
 1959-1977  வரை
 
 நடித்த பல படங்களில்  ரசிகர்கள்  மயங்கும்  வண்ணம்  புதுமையான  ஆடைகள்  அணிந்து வந்தார் . அன்று அவர் அணிந்த உடைகளை  இன்றைய தலைமுறையினர்  அணிந்த வருவது  மகிழ்ச்சியே
 
 அதே போல்  நடிகர்திலகத்தின்  ஆடை  அலங்காரம் தொடர்  மிகவும்
 
 அருமை  வாசு சார் .
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 03:46 PM
				
			
			
				
					#748
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று ...
 சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 04:11 PM
				
			
			
				
					#749
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  mr_karthik  
 அன்புள்ள கோபால் சார், 
 
 அவர் இமேஜ் பார்க்காமல் நடித்தார் என்பதற்கு 'தங்கை'  படமும் ஒரு சான்று. ஒரு சீனில், பாங்க் கேஷியரான செஞ்சி கிருஷ்ணன், தன் மகளின் திருமணத்துக்காக பேங்க் பணத்தை வைத்து சூதாடி, தோற்றுப்போனதும் 'போச்சு, போச்சு' என்று புலம்பிக் கொண்டு போகும்போதும், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்போதும், தாய்க்குலத்தின் வசவுகள் நம் தலைவருக்கு கிடைத்ததை தியேட்டரில் நேரில் பார்த்திருக்கிறேன்...
 
 
 
 அது மட்டுமா? என்னை போல் ஒருவன் சேகர் பாத்திரம் , காலுக்கு மருந்து கேட்கும் அம்மாவை துச்சமாய் தூக்கி எரியும் . அப்பா... என்ன ஒரு confidence &Guts .
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					24th June 2013, 04:15 PM
				
			
			
				
					#750
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே ...  அது வடிக்கும் கவிதைகள் ஆயிரம், எல்லாம் உன் எண்ணமே.
						 
 
 
 
 
 
 
Bookmarks