- 
	
			
				
					25th June 2013, 08:42 AM
				
			
			
				
					#761
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  Murali Srinivas  
 கோபால்,
 
 School Of Acting திரியில் எழுத வேண்டாம் என்ற எண்ணமில்லை. நான் உங்களிடம் சொன்னது போல நீங்கள் எழுதுவதை supplement செய்யவும் அந்த பதிவுகளை  மேன்படுத்தி காட்டவும் என் பதிவுகள் உதவுமேயானால் அதை மனமுவந்து செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன். உங்கள் பதிவுகளுக்கு அப்படிப்பட்ட ஒரு அணிலாக இருக்க முடியுமா என்று முயற்சிக்கிறேன்.
 
 அன்புடன்
 
 
 
 தலைவரே,
 கொஞ்சம் மெனக் கெட்டு எழுதுவதை மெனக்கேட்டுதான் படியுங்களேன். அப்படி என்ன சோம்பேறித்தனம்? நீங்கள் ஒரு Gama element என்று சொல்வது போல அடித்தள ரசிகர்களுடன் என்னை இணைக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தற்போது ராகவேந்தர் சார், வாசு மற்றும் கண்பட் சார் செய்கின்றனர். சாரதி சார் அவ்வப்போது வந்து உத்வேகம் அளிக்கிறார். வெங்கி ராம், P _ R  அடிக்கடி வர இயலாவிட்டாலும் ,உரிய அங்கீகாரம் தந்து ,போகும் பாதை சரியே என்று காட்டியுள்ளனர். நீங்கள்,கார்த்திக் சார் போன்ற சிவாஜி படங்களை கரைத்து குடித்து கரை கண்ட ஆட்களின் பார்வை எனக்கு உதவுமே?
 (பாலம் கட்ட உதவாத அணிலை சுட்டு சாப்பிட்டு விடுவார்கள்.சீக்கிரம் உதவுங்கள்.)
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							25th June 2013 08:42 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 09:45 AM
				
			
			
				
					#762
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 09:53 AM
				
			
			
				
					#763
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு,
 பலமுறை படித்து ரசித்து சுவைத்த பேட்டிதான் என்றாலும் மிக முக்கிய பிற்கால ஆவணம்.
 மிக நன்றி.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 09:54 AM
				
			
			
				
					#764
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 02:35 PM
				
			
			
				
					#765
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Mr Vasudevan Sir,
 
 Expecting the Jothi at Chennai and hereafter no need to write Chittoor
 as I will be moving to Chennai shortly. Hereafter I will be attending every
 film screened by the NT Fans society at Chennai.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 03:09 PM
				
			
			
				
					#766
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  s.vasudevan  
 Mr Vasudevan Sir,
 
 Expecting the Jothi at Chennai and hereafter no need to write Chittoor
 as I will be moving to Chennai shortly. Hereafter I will be attending every
 film screened by the NT Fans society at Chennai.
 
 
 
 வருக "நல்ல" வாசு தேவரே(இனிமேல் உம்மை இவ்வாறே அழைக்க போகிறேன்). சென்னை உமது வருகையால் சுத்தமாகி மும்மாரி பொழியட்டும்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 07:18 PM
				
			
			
				
					#767
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							Respected Gopal Sir,
 Ungal Karuthukkalum sari Ungal Vimarisanagalum sari athil nagaichuvai ullathu.  Namathu Rasiga deivangal megavum arivanavargal mattum alla megavum sensitive anavargal. Ungal sorkalil ulla karuthukkal pathukakka mattum all pottrathakkathu . Nalla ennam kondu thangal seiyum Nadigarthilaga thondu Oru naal ungalai Ooyarthum vanagum
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					25th June 2013, 07:32 PM
				
			
			
				
					#768
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							நாளை (26.06.2013) வாழும் நாள்வரை உத்தமனாக வாழ்ந்து காட்டிய (நடித்துக் காட்டிய அல்ல) ஒரிஜினல் உத்தமனின் ""உத்தமன்"" திரைக்காவியத்தின் 38-வது ஆண்டு உதயம். 
 
 அதனையொட்டி......
 
 பம்மலார் அவர்கள் தனது பொக்கிஷ விளம்பரப் பதிவுகளைத் தந்து அசத்துவார்கள் என்றும்,
 
 நெய்வேலியார் அவர்கள் நிழற்படங்கள் மற்றும் அரிய தகவல் களஞ்சியங்களைத் தந்து அதிர வைப்பார்கள் என்றும்,
 
 ராகவேந்தர் அவர்கள் படம் வெளியான காலத்தில் சாந்தியில் நிகழ்ந்த நினைவேடுகளைத் தந்து அசர வைப்பார்கள் என்றும்,
 
 முரளியார் அவர்கள் மதுரை நிகழ்வுகளைத் தந்து மகிழ்விப்பார்கள் என்றும்,
 
 கார்த்திக் (நான்தான்)  படவெளியீட்டின் முதல் நாளன்று வடசென்னை கிரௌன் அரங்கின் அளப்ப்ரைகளை பதிவிடுவான் என்றும்,
 
 கோபாலர், சௌரியார், மற்றும் அனைவரும் தங்கள் பங்களிப்புகளை அள்ளித்தந்து அதம் புரிவார்கள் என்றும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th June 2013, 01:43 AM
				
			
			
				
					#769
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
				
					
						
							உத்தமன் - சில நினைவுகள் - I 
 
 இந்த படத்திற்குள் போவதற்கு முன் ஒரு சின்ன முன்னோட்டம். 1974 வரை மதுரை மாநகரில் முழுமையாக குளிர்சாதன வசதியூட்டப்பட்ட திரையரங்குகளே இல்லை. சென்னை மாநகரிலும் கோவையிலும் கூட ஏ.சி. அரங்குகள் [கோவையில் ரெயின்போ அரங்கின் விளம்பரத்தில் Air cooled என்று போடுவார்கள் என நினைவு]. 1970-ல் அன்றைய நாட்களில் மதுரையின் சற்றே புறநகர் பகுதி போன்ற ஆனால் social status-ல் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் வாழ்ந்த பகுதி income tax அலுவலகத்தை தாண்டி இருந்த பகுதிகள்.அங்கே ஒரு புதிய திரையரங்கம் மூவிலாண்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த அரங்கிலும் பால்கனி மட்டுமே ஏசி செய்யப்பட்டிருந்தது. எங்கிருந்தோ வந்தாளின் மூலப் படமான கிலோனாவை இந்த அரங்கில்தான் பார்த்தேன்.
 
 முழுமையான ஏசி இல்லை என்பதாலும் நகருக்கு வெளியே என்பதாலும் புதிய படங்களை திரையிட விநியோகஸ்தர்கள் தயங்கினர்ர்கள். விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் மட்டும் நல்ல நேரம் படத்தை அலங்காரிலும் இங்குமாக திரையிட்டாகள்.[இதற்கு கூட காரணம் என்னவென்றால் நான் முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன். சங்கே முழங்கு, நல்ல நேரம் மற்றும் ராமன் தேடிய சீதை ஆகிய மூன்று படங்களுமே சிந்தாமணியில் chart செய்யப்பட்டிருந்தன. அப்படி நடந்தால் முதல் இரண்டு படங்களுமே 35 நாட்களில் தூக்கப்பட வேண்டிய சூழல் வரும் என்பதால் சேது பிலிம்ஸ் நல்ல நேரத்தை தியேட்டர் மாற்றி ரிலீஸ் செய்தார்கள்]. முழுமையான ஏசி தியேட்டர் கனவாகவே தொடர்ந்தது. 1973- 74 காலகட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் பேருந்து நிலையத்திற்கு பின்னால் [மதுரையை தெரிந்தவர்களுக்கு சொல்வதென்றால் கலெக்டர் ஆபிஸ் பஸ் ஸ்டாண்ட்ற்கு பின்னால்] சாத்தமங்கலம் என்று அழைக்கப்படும் பகுதியில் இரண்டு தியேட்டர்கள் கொண்ட ஒரு complex கட்டப்படுகிறது என்று செய்தி வந்தது. எப்படி மாதவரம் என்றால் பால் பண்ணை நினைவிற்கு வருமோ அது போன்று மதுரையில் சாத்தமங்கலம் என்றால் பால் பண்ணை இயங்கி வரும் இடம். அங்கேதான் 1974 மார்ச் மாதம் ப்ரியா complex திறக்கப்பட்டது. பெரிய அரங்கிற்கு பெயர் சினிப்ரியா. 400 பேர் அமரக்கூடிய சிறிய அரங்கு மினிப்ரியா. அது முழுமையாக ஏசி செய்யப்பட்டிருந்தது. மதுரையில் முதல் முழு ஏசி அரங்கும் முதல் மினி தியேட்டருமாக அமைக்கப்பட்டது மினிப்ரியா அரங்கு.
 
 1969-ல் ஆராதனா தொடங்கி ஹிந்தி படங்கள் கோலோச்சி கொண்டிருந்த காலம். ஹிந்தி படங்கள் வெளியிடுவதற்கு என்றே ஒரு தியேட்டர் தேவைப்பட்டிருந்த காலம். நான் முன்பே ஒரு முறை எழுதியது போல் தங்கம் தியேட்டரில் நீதி திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து ஒரு ஒன்றரை வருட காலத்திற்கு [அதாவது 1973 பிப்ரவரி 2 தொடங்கி 1974 ஆகஸ்ட் 14 வரை] ஹிந்தி படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன. 1974 ஆகஸ்ட் 15 அன்று தங்கத்தில் வெளியான அத்தையா மாமியா திரைப்படம்தான் அந்த ட்ரெண்டை மாற்றி அமைத்த படம். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் அன்றைய தினம் முதல் [ஆகஸ்ட் 15] தொடர்ந்து 5 தினங்கள் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டிருந்த 70% கேளிக்கை வரியை எதிர்த்து தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்திலும் தங்கம் தியேட்டர் அதில் கலந்து கொள்ளாது காட்சிகள் நடத்திக் கொண்டிருந்தது.
 
 மீண்டும் நாம் மினிப்ரியாவிற்கு வருவோம். அரங்கிற்கு சென்று படம் பார்த்தவர்கள் அதன் அமைப்பினாலும் இடையிடே ஏசியை off  செய்யாமல் முழுமையாக work செய்த விதத்தையும் பார்த்து impress ஆனார்கள். அங்கே முதலில் திரையிடப்பட்ட ஹிந்தி படம்தான் Aa Gale Lag Jaa. தமிழில் சொல்வதென்றால் அணைக்கவே அழைக்கிறேன் [ஹிந்தி தெரிந்தவர்கள் தவறென்றால் திருத்தலாம்]. படத்தை அங்கே நாங்கள் பள்ளி நண்பர்கள் 4 தடவை பார்த்தோம். படம் பிடித்தது மட்டுமல்ல அரங்கத்தில் அமர்ந்து பார்ப்பதும் ஒரு சுகானுபவமாக இருந்தது.  வாதா கரோ நஹி சோடோ பாடலும் ஹேய் மேரே பேட்டே பாடலும் மிகுந்த popular ஆனது. என்னை பொறுத்தவரை ஹீரோ சசிகபூரை விட டாக்டர் ரோலில் வந்த சத்ருக்கன் சின்ஹாவை மிகவும் பிடித்தது. ஷர்மிளா தாகூர் எப்போதும் போல் graceful. அவரின் தந்தையாக வந்த ஓம் பிரகாஷ் நன்றாக செய்திருந்தார்.
 
 ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் வி.பி.ராஜேந்திர பிரசாத் தெலுகு திரையுலகில் பெரிய தயாரிப்பளார் இயக்குனர். இன்னும் சொல்லப் போனால் என் தம்பி படத்தின் மூலப்படமான தெலுகு படத்தை இவர்தான் எடுத்திருந்தார்.[இதை என் தம்பி விமர்சனத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்]. இவர் நடிகர் திலகத்தை வைத்து எடுத்த எங்கள் தங்க ராஜா சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. ஆனாலும் அடுத்த படம் எடுக்க தாமதமானது. அதன் பிறகு 1975 இறுதியில் உத்தமன் பட அறிவிப்பு வந்தது. உடனே படப்பிடிப்பும் துவங்கி விட்டது.
 
 நாம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம் 1975 அக்டோபர் 2 அன்று ஏற்பட்ட பெருந்தலைவரின் மறைவு அதை தொடர்ந்து 75-76 காலகட்டத்தில் நேர்ந்த அரசியல் நிகழ்வுகள் அதன் காரணமாக நடிகர் திலகத்தின் படங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்.
 
 பாட்டும் பரதமும் அதற்கு பின் வெளிவந்த உனக்காக நான் போன்றவை சராசரி வெற்றியாக போனது. கிரகப்பிரவேசம் படத்திற்கு நல்ல ரிப்போர்ட். 10 வாரங்கள் வெற்றிகரமாக போனது. அதன் பின்னால் வெளியான சத்யம் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. அப்படிப்பட்ட ஒரு சோதனையான காலகட்டத்தில்தான்  உத்தமன் வெளியாகிறது.
 
 (தொடரும்)
 
 அன்புடன்
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					26th June 2013, 01:48 AM
				
			
			
				
					#770
				
				
				
			
	 
		
		
			
				
				
						
						
							
						
				
					
						
							உத்தமன் - சில நினைவுகள் - II
 
 Aa Gale Lag Jaa படத்தை தமிழில் எப்படி எடுத்திருப்பார்கள் என்பது பற்றிய விவாதங்கள் நண்பர்களுக்கிடையே நடந்துக் கொண்டிருந்தது.படம் ஜூன் 25 வெள்ளியன்று மதுரையில் எங்கள்  வீட்டிற்கு அருகாமையில் உள்ள நியூசினிமா அரங்கில் வெளியானது. அன்று ஸ்கூல் working டே. ஆகவே ஸ்கூல் போய் விட்டோம். மாலையில் வந்த பிறகு தியேட்டர் பக்கம் சென்று பார்த்தால் நல்ல கூட்டம். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அந்த காலகட்டத்தில் என் கஸினும் வெளியூரில் வேலை கிடைத்து சென்று விட்டதால் அந்த information source-ம் missing. அங்கே இருந்தவர்களிடம் கேட்டதற்கு நல்ல ரிப்போர்ட் என்றார்கள்.
 
 நாங்கள் மறுநாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கெட் வாங்கியிருந்தோம். நானும் நண்பனும் இரண்டாம் நாள் சனிக்கிழமை மாலைக் காட்சி சென்றோம். படம் தொடங்கிய உடன் வரும் வாதோ கரோ பாடல் தமிழில் படகு படகு ஆசை படகு என்று ஆரம்பித்தது. ஸ்கேட்டிங் செய்துக் கொண்டே வரும் eve டீசிங் பாடல் இந்தியில். ஆனால் தமிழில் அதற்குள்ளே கனவு காட்சியாக விரிந்தது. முதலில் லைலா மஜ்னு கதை இரண்டாவது சரணத்தில் சலீம் அனார்கலி காதல். இரண்டுமே சோதனைகளை சந்தித்து தோல்வியில் முடிந்தவை. பட கதையில்  வரும் காதலுக்கும் சோதனைகள் காத்திருக்கின்றன என்பதை பாரவையாளனுக்கு உணர்த்தும் முயற்சியாக எடுக்கப்பட்டதா என்று யோசித்தோம். உடன் உடனாக இரண்டு பாடல்கள். ஹரி ஓம் ரங்க ஹரி மற்றும் நாளை நாளை என்றிருந்தேன் பாடல்கள் காஷ்மீரில் படமாக்கப்பட்ட காட்சியமைப்புகளோடு வந்தது.
 
 ஹிந்தியில் மொத்தமே நான்கு பாடல்கள்தான். ஆனால் இங்கே இடைவேளைக்கு முன்பாகவே 4 பாடல்கள். நாளை நாளை பாடல் நன்றாக படமாக்கப்பட்டிருந்ததுடன் நடிகர் திலகத்தின் ஸ்டைலிற்கும் இடம் கொடுத்து அமைக்கப்பட்டிருந்த காட்சிகள். அதில் கழுத்தில் ஸ்கார்ப் போன்ற துணியை அவர் போட்டுக் கொண்டு வரும் அழகே அழகு. கேளாய் மகனே பாடலை மாமா அப்படியே ஹிந்தியிலிருந்து சுட்டிருந்தார். அந்த பாடல் முடியும் போதுதான் மகன் ஸ்கேட்டிங் floor -ல் கிழே விழுவதோடு interval. இந்த காட்சியில்தான் சினிமாகாரர்களின் பாஷையில் atmosphere என்று அழைக்கப்படும் [காட்சியின் தன்மைக்கேற்ப பின்புலத்தில் நடமாடுபவர்கள்] அந்த காட்சியில் இடம் பெறும் ஆர்ட்டிஸ்ட்களில் ஒருவராக இளையதிலகம் பிரபு அவர்கள் முதன் முறையாக திரையில் முகம் காட்டினார்.
 
 Interval-ல் வெளியே வருகிறோம். வேறு ஒரு தெரிந்த நண்பர் கண்ணில் பட்டார். அவர் அன்று இரண்டாம் முறையாக படம் பார்க்கிறார் எனபதை குறிப்பிட்டார். படம் நல்ல ரிப்போர்ட் என்றும் எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார். வேறு சிலரையும் அங்கே பார்க்க நேர்ந்தது.அனைவரும் ஒரே கருத்தை சொன்னார்கள்.
 
 படத்தின் second half. அதிலும் பாலாஜி அறிமுகமாகி நடிகர் திலகம் மகனோடு மஞ்சுளா வீட்டில் நடக்கும் விழாவில் பங்கு பெறும் காட்சி. நடிகர் திலகமும் மஞ்சுளாவும் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் காட்சி. அப்போது முதல் பால்கனி ஆடியன்ஸ் மத்தியில் சுவாரஸ்யம் கூடுவதை உணர முடிந்தது. அதிலும் அந்த பாடலில் அந்த சிறுவன்
 
 ஊரிலுள்ள பிள்ளைகளுக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன்?
 
 என்று பாடி விட்டு அந்த சரணத்தின் இறுதி வரியாக
 
 என் தாயை மட்டும் காட்டு என்று சாமியை கேட்டேன்! சாமியை கேட்டேன்
 
 என்று தேம்பி தேம்பி அழும்போது தாய்குலங்கள் அப்படியே உணர்ச்சிவசப்படுவது தெரிந்தது. அந்தப் பையனால் பாட முடியாமல் போனவுடன் அனைவரும் சிரிக்க நடிகர் திலகம் உணர்ச்சி வேகத்தோடு நாளை நாளை என்று தொடங்கும் போது பலத்த கைதட்டல். இறுதி சரணத்தில்
 
 உதயமாகும் நேரம் என்று கிழக்கில் நின்றேன்; அவள்
 
 பொழுது போகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள்
 
 அஸ்தமன சூரியன் என்று அவளை சொல்லவா; நான்
 
 அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா?
 
 என்ற வரிகளுக்கெல்லாம் ஒரே ஆரவாரம்.
 
 அதன் பிறகு வி.கே.ஆர். மற்றும் அந்த பையனுக்கு நடுவில் நடக்கும் அந்த சண்டை கலந்த விளையாட்டுகள், சிவாஜி மஞ்சுளா காட்சிகள், பாலாஜி இவர்கள் இருவரும் இருக்கும் போது சிலநேரம் சொல்லும் சில வசனங்கள் என்று படம் கிரிப்பாக போனது. விகேஆரின் வீட்டில் வைத்து நடக்கும் வாக்கு வாதத்தில் அவர் முகத்தில் அடித்தது போல் பதில் பேசி விட்டு நடிகர் திலகம் நடந்து வரும் அந்த நீண்ட ஒரே shot-ற்கு அரங்கமே அலறியது.
 
 நடிகர் திலகத்தின் வீட்டிற்கு வரும் மஞ்சுளா கோபி நீங்க உண்மையா என்னை நேசிக்கலை என்று கேட்க என் மகனை பெத்த அம்மாவை தவிர நான் யாரையும் சத்தியமாக நேசிக்கலை என்ற வசனத்திற்கெல்லாம் சரியான கைதட்டல்.
 
 தேவன் வந்தான்டி பாடல் மீண்டும் ஒரு அலப்பறை. டிரஸ் change மற்றும் படமாக்கப்பட்ட விதம் [கப்பலில்] ரசிக்கப்பட்டது. [படத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதிலும் சுசீலா தேனினும் இனிய குரலினில் இமய மலை சாரலுக்கு நன்றி சொல்லடி என்று லேசாக இழுக்கும் போது ஆஹா! ]
 
 பெரிய அலப்பரை கனவுகளே பாடலுக்குதான். அதிலும் கண்ணதாசன்  வெகு நாட்களுக்கு பின்  புகுந்து விளையாடியிருப்பார். ஒவ்வொரு சரணமும் பிரமாதம்.
 
 சிலை வடிக்க கல்லெடுத்தேன் சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
 
 சிலை வடித்து முடியும் முன்னே   தலை வெடித்து போனதம்மா
 
 
 அவள் ஆடி வர பார்த்திருந்தேன் ஆடி வந்து சேர்ந்ததம்மா
 
 ஐப்பசிக்கு காத்திருந்தேன் எப்பசியும் தீரவில்லை
 
 உன் கதையை நான் எழுத உயிரை வைத்துக் காத்திருந்தேன்
 
 என் கதையை நீ எழுதி ஏடுகளை மறைத்து விட்டாய்.
 
 பின்னாட்களில் இந்த பாடல் காட்சி முடிந்தவுடன் சில ரீப்பீட் ஆடியன்ஸ் எழுந்து செல்வதை நான் கவனித்திருக்கிறேன்.
 
 வெளியில் வரும்போது சந்தோஷம். நன்றாக போகும் என்று நம்பிக்கை. அது பொய்க்கவில்லை. மதுரை நியூசினிமாவில்  தொடர்ந்து 106 அரங்கு நிறைந்த காட்சிகள். 106 Continuous ஹவுஸ் புல் shows போனதோடு மட்டுமல்லாமல் 105 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அது மட்டுமல்ல, 1976 ம் ஆண்டு மதுரையில் 100 நாட்கள் படம் கொடுத்த ஒரே பெரிய நடிகர் நடிகர் திலகம் மட்டுமே என்ற பெருமை கிடைத்தது. மதுரை மாநகரில் 1958 முதல் 1979 வரை தொடர்ந்து 22 ஆண்டுகள் [நடுவில் இடைவெளி விடாமல்] 100 நாட்கள் படங்கள் கொடுத்த ஒரே நடிகன் அன்று முதல் இன்று வரை நடிகர் திலகம் மட்டுமே.
 
 இந்த படம் வெளி வந்த அடுத்த மாதத்தில் என்று நினைவு. அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 20 அம்ச திட்டத்தை தமிழக மக்களிடையே எடுத்து சொல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார் நடிகர் திலகம்  அந்த வேலையாக மதுரை வந்த அவர் [மதுரை மேலமாசி வீதி ஆரியபவன் மாடியில் ஒரு கூட்டம் நடந்தது. அவசர நிலையினால் பொதுக் கூட்டங்கள் தடை செய்யப்படிருந்த நேரம்] அன்றைய தினம் இரவு காட்சிக்கு நியூசினிமா வந்தார். அரங்க உரிமையாளரின் உறவினரான நண்பன் போயிருந்தான். [திடீரென்று சொன்னதால் உன்னை கூட்டி போக முடியவில்லை என்று என்னிடம் சமாதானம்]. அவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் பெரிய கூட்டம் கூடி விட்டது. படம் 75 - 80 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் போது கூட -[ நான் மூன்றாவது முறை சென்ற இரவு காட்சிக்கு கூட] நல்ல கூட்டம்
 
 இலங்கையிலும் இரண்டாவது வசந்த மாளிகை என சொல்லப்படும் அளவிற்கு பிரமாண்டமான வெற்றி. கொழும்பு சென்ட்ரலில் 203 நாட்கள், யாழ் - ராணியில் 179 நாட்கள், மட்டுநகர் -விஜயாவில் 114 நாட்கள் என்று வெற்றி சூறாவளியே சுழன்றடித்தது.
 
 கார்த்திக் தயவில் மீண்டும் அந்த பொன்னான நினைவுகளை அசை போட வாய்ப்பு. நன்றி கார்த்திக், நன்றி அனைவருக்கும்.
 
 அன்புடன்
 
 
 
 
 
 
 
Bookmarks