MGR Sarojadevi amazing performance in western dance this dance still popular
MGR Sarojadevi amazing performance in western dance this dance still popular
Sarojadevi in Periya idathu pen
periy pen-1.jpg
![]()
'அபிநய சரஸ்வதி' B.சரோஜாதேவி ஸ்பெஷல்
நடிகர் திலகத்த்துடன் B.சரோஜாதேவி
'பாகப் பிரிவினை'யில்.
நடிகர் திலகத்தின் பல வெற்றிப்படங்களின் கதாநாயகி. இந்த கர்நாடகத்துப் பைங்கிளி. கமர்ஷியல் கதாநாயகியாய், கவர்ச்சிப் பாவையாய் தமிழ்ப்படங்களில் வலம் வந்தவர் நடிகர் திலகத்துடன் ஆரம்ப காலங்களில் ஜோடி சேர இயலவில்லை. தங்கமலை ரகசியம், 'சபாஷ் மீனா' என்று நடிகர் திலகத்தின் படங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்திருந்தாலும் 1959 இல் வெளியான காலத்தால் அழிக்கமுடியாத காவியமான 'பாகப் பிரிவினை' யில் தலைவரின் நேரடி ஜோடியாக நடிக்கும் தங்க வாய்ப்பை பெற்றார். அழகுப் பதுமையாய், அலங்காரப் பாவையாய் முத்திரை குத்தப்பட்ட இவரது இன்னொரு பரிமாணம் 'பாகப்பிரிவினை' படத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறந்த நடிப்பையும் தன்னால் வழங்க முடியும் என்று நிரூபித்து தன் கிளாமர் இமேஜ் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து சிறந்த நடிப்புத் திறமை கொண்ட நடிகை என்ற பெயரை வாங்கத் துவங்கினார். இதற்குக் காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமே! . அதே போல நடிகர் திலகத்துடன் இணைந்தாலே நடிப்பும் தன்னால் வந்து விடுமே!
கன்னையாவுக்கேற்ற பொன்னியாய் 'தாழையாம் பூ முடித்து தடம் பார்த்து நடை நடந்த' கனப்பொருத்தமான ஜோடியாய் சேர்ந்து 'அட நம்ம சரோஜாதேவியா இது' என்று அனைவரும் வாய் பிளக்குமளவிற்கு நடித்து பெரும் பெயர் பெற்றுவிட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அன்றும் இன்றும், என்றும். பைங்கிளியின் வாழ்விலே திருப்புமுனை. நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்ததால் திறமையான நடிகை என்று பெயரும் புகழும் பெருக ஆரம்பித்தது. அடுத்து வந்த 'இரும்புத்திரை'யில் வாய்ப்பு. ஆனால் ஜோடி கிடையாது.
'இரும்புத் திரை' படத்தில்.
'விடிவெள்ளி' யில்.
1959-ல் வெளியான தன்னுடைய 'கல்யாணப்பரிசு' பிரம்மாண்ட வெற்றியின் (கதாநாயகி சரோஜாதேவி) காரணமாகவும், ராசியான கதாநாயகி என்ற சென்ட்டிமென்ட் காரணமாகவும்1960 இல் வெளியான 'விடிவெள்ளி' யில் ஸ்ரீதர் இவரை நடிகர் திலகத்தின் ஜோடியாக்கினார். இதிலும் அருமையான ரோல். 'கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை' என்று அன்பைப் பொழிந்து இரண்டாவது முறையாக அமைந்த இந்த ஜோடி மீண்டும் வெற்றிக்கனியைப் பறித்து சுவைத்து மகிழ்ந்தது. ராசியான ஜோடி என்ற முத்திரையும் விழத் தொடங்கியது. சரோஜாதேவி வாழ்விலும் விடிவெள்ளி முளைத்தது.
பாலும் பழமும்
அடுத்த வருடம் 1961 மிகப் பெரிய திருப்பத்தை இந்த ஜோடிக்கு ஏற்படுத்தித் தந்ததோடல்லாமல் அளவற்ற பெண் ரசிகர்களை நடிகர் திலகத்திற்குப் பெற்றுத் தந்தது. அதுமட்டுமல்ல... கணவன் மனைவி என்றால் டாக்டர் ரவி சாந்தி தம்பதியர் போல இருக்க வேண்டும் என்று ஒரு குடும்ப இலக்கணமே வகுத்துக் கொடுத்தது இந்த 'பாலும் பழமும்' ஜோடி. படமோ மெகா ஹிட். நடிகர் திலகத்துடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்த மூன்றாவது படமும் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது.
சரோஜாதேவி அவர்களே "நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்த பின்னரே நல்ல திறமை வாய்ந்த நடிகை என்ற புகழை அடைந்தேன். இந்தப் பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்" என்று பலமுறை பேட்டிகளில் மறக்காமல் கூறியிருக்கிறார்.
பார்த்தால் பசிதீரும்
பின் 1962 -ல் 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் இந்த ஜோடி இணைந்து மீண்டும் சாதனை புரிந்தது. 'கொடியசைந்ததும் காற்று வந்ததா... காற்று வந்ததும் கொடியசைந்ததா...நடிகர் திலகத்துடன் இணைந்ததால் நடிப்பு வந்ததா.... நடிப்பு வந்ததால் நடிகர் திலகத்துடன் இணைய முடிந்ததா... தற்போது பெங்களூருவில் வசித்து வரும் சரோஜாதேவி தனது வரவேற்பறையில் மாட்டியிருக்கும் புகைப்படம் என்ன தெரியுமா?
சாரண உடையில்
சாரண உடை அணிந்து 'பார்த்தால் பசி தீரும்' படத்தில் அழகான சின்னப் பெண்ணாய் காட்சியளிப்பாரே... அந்தப் புகைப்படம்தான். (தகவலுக்கு நன்றி வினோத் சார்)
ஆலயமணி' யில் தியாகுவுடன்.
பின் அதே வருடம் வளர்பிறை. அதையடுத்து 1962-இல் மீண்டும் ஒரு இமாலய சாதனை புரிந்தது இந்த வானம்பாடி நடிகர் திலகத்துடன் ஜோடி சேர்ந்து. ஆம்... தமிழ் திரையுலகை ஒரு உலுக்கு உலுக்கிய 'ஆலயமணி' தியாகுவின் மனைவியாக சரோஜாதேவி. மிக அற்புதமாக நடித்து காதலிக்கும், மனைவிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணியமாக உணர்த்தி, அந்த முள் மீது நடக்கும் கேரக்டரை நடிகர் திலகத்தின் வழிநடத்தல்கள் மூலம் அற்புதமாக பரிமளிக்க வைத்தார் இந்தப் பைங்கிளி. படமோ ராட்சஷ வெற்றி. உன்னதமான பல உயரங்களை நடிகர் திலகத்தின் ஜோடியாக பல படங்களில் நடித்ததன் மூலம் அடைந்தார் சரோஜாதேவி. அது மட்டுமல்ல. விருதுகள் பலவும் அவரை நாடி வந்தன. பொன்னை விரும்பும் பூமியிலே தியாகுவை விரும்பிய ஓருயிராக அனைவர் நெஞ்சங்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் இன்று வரை நிலைத்து வாழ்கிறார் இந்த கொஞ்சும் கிளி.
இருவர் உள்ளம்
பின் 'இருவர் உள்ளம்'1963 இல். அதில் செல்வம், சாந்தா ஜோடி மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தை எழுதத்தான் வேண்டுமா. அழகு சிரிக்க ஆசை துடிக்க நம் அனைவரையும் வசீகரித்த ஜோடி. சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் TRP (Target Rating Point) rating ஐ எங்கோ எகிற வைத்து விட்ட ஜோடி.
Last edited by vasudevan31355; 5th July 2013 at 08:29 AM.
நடிகர் திலகமே தெய்வம்
குலமகள் ராதை
சமகால நடிகை தேவிகாவுடன்
'குலமகள் ராதை' படப்பிடிப்பில்
1963 -ல் வெளியான 'குலமகள் ராதை' யிலும் இந்த ஜோடி அட்டகாசம் செய்தது. "ராதே உனக்குக் கோபம் ஆகாதேடி" என்று பைங்கிளியின் பின்பக்கமாக நின்று அவரின் இரு ஜடைகளையும் நம்மவர் பிடித்து இழுக்க, இருவர் பிம்பங்களும் எதிரே இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அழகை மறக்க முடியுமா! அருமையான ஜோடியாக அமைந்த இன்னொரு வெற்றிப் படம்.
'கல்யாணியின் கணவன்' திரைப்படத்தில் நடிகர் திலகத்துடன்
அதே வருடம் பக்ஷி ராஜாவின் கடைசிப்படம் 'கல்யாணியின் கணவன்'. இதிலும் இந்த ஜோடியே ஆக்கிரமித்தது. அதுவும் முதல் பாதியில் இருவரும் பண்ணும் சேட்டைகளும் அமர்க்களங்களும் மறக்க முடியாதவை. நமது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்தான். இரவுபகல் தூக்கமில்லாமல் செய்த ஸ்டைல் டூயட்டை மறக்க இயலுமா?
'புதிய பறவை'
1964 -ல் இந்த ஜோடியின் இன்னொரு சுனாமி. இது கலர் சுனாமி. பிரம்மாண்ட சுனாமி. 'புதிய பறவை' என்னும் சுனாமி. அதுவரை கறுப்புவெள்ளையில் பார்த்து பரவசப்பட்ட இந்த ஜோடி வண்ணத்தில் நம் எண்ணமெல்லாம் குளிர காட்சியளித்தது. கண்பட்டுவிடக் கூடிய அளவிற்கு இன்றைய இளையதலை முறையினரும் வியந்து பார்க்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது இந்த ஜோடி.'காதல் பாட்டுப் பாட காலம் இன்னும் இல்லை' என்ற வண்ண மயிலாளிடம் 'ஆஹா!...மெல்ல நட... மெல்ல நட... உன் மேனி என்னாகும்?' என்று அழகன் அக்கறைப்பட, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்ததைப் பார்த்து அன்றைய திரையுலகில் புதிய பறவைகளாய் பறந்து வந்து புதுமை புரிந்த ஜோடி. ஜோடிகள் எல்லாவற்றிக்கும் அப்போதைய உச்சகட்டம். அபிநய சரஸ்வதியை ரசிப்பதெற்கென்றே கூட ஒரு தனிக் கூட்டம் அலைந்தது. இந்த புதிய பறவை மட்டும் பழைய பறவையாக ஆகவே ஆகாது. தரத்திலும் சரி! வசூலிலும் சரி!
1968-இல் 'என் தம்பி'யில் நேற்றுப் பிறந்தவர் போல நடிகர் திலகம் அழகில் மிளிர நேரம் தெரிந்து வந்த அபிநய சரஸ்வதி சரியான ஜோடி"என் தம்பி"யில். 'நெஞ்சத்தில் நடுக்கம் ஏனோ' என்று தேவி கேட்டதும் 'நடுக்கமா...எனக்கா?' என்று சாட்டையடி தந்து சடையிலிருந்து பூவையும் ,பாலாஜி கையில் இருந்து சிகரெட் கேஸையும் நடிகர் திலகம் சாட்டையால் பறிக்கும் போதும், சரோஜாதேவி சுழன்று சுழன்று ஆடும் போதும் ஜனம் ஆர்ப்பரித்ததே. அந்த வெற்றிக்கும் இந்த ஜோடிதானே காரணம்!
அன்பளிப்பு
1969- ல் 'வள்ளி மலை மான் குட்டி'யுடன் 'அன்பளிப்'பில் ஜோடி சேர மீண்டும்தேரு வந்தது போல் இருந்தது சரோஜாதேவி வரும்போது. .
அஞ்சல் பெட்டி 520
அதே வருடம் அஞ்சல் பெட்டி 520. காமெடியிலும் கொடி நாட்டுவோம் என்று நிரூபித்து இதிலும் வெற்றி கண்டது இந்த ஜோடி. குறைந்த செலவில் சிம்பிள் சினிமா என்றாலும் திருமகள் தேவையான அளவிற்கு தயாரிப்பாளர் வீட்டில் தேடி சென்று வாசம் செய்த படம். பத்துப் பதினாறு முத்தமிட்ட ஜோடி.
'அருணோதயம்'
'தேனும் பாலும்'
1971-ல் 'அருணோதயம்' கண்டு 'முத்து பவழம் முக்கனி சர்க்கரை' அளித்த ஜோடி அதே வருடம் 'தேனும் பாலும்' அளித்து மனதினில் வெள்ளம் கரைபுரண்டோடச் செய்தது.
அப்புறம்... நாயகியின் வயது முதிர்வு. பல நாயகிகளின் போட்டி. நடிகர் திலகத்திற்கு வேறு ஜோடிகள்.
ஒன்ஸ்மோர்
பிறகென்ன... நடிகர் திலகத்திற்கும் வயதாகாதா? வயதானதும் ஒன்ஸ்மோர் இந்த ஜோடியை 'ஒன்ஸ்மோரி'ல் நடிக்க வைத்தார் இயக்குனர் சந்திரசேகரன் இன்றைய இளம் கதாநாயகன் விஜய்யுடன். பல சாகசங்களை நிகழ்த்திய ஜோடி ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜோடியாக சாகசம் நடத்தி படத்தை மாபெரும் வெற்றியாகியது. அதற்கு தங்கள் பழைய இருவர் உள்ளமும் கலந்தது. அனைவரையும் கவர்ந்தது. வயதாகியும் மீண்டும் போராடி சாந்தாவைக் கைபிடித்தார் நாயகன்.
Last edited by vasudevan31355; 29th June 2013 at 06:36 PM.
நடிகர் திலகமே தெய்வம்
நடிகர் திலகமே தெய்வம்
E=vasudevan, thanks lot and you collect sivaji sarojadevi pair stills and there hits performance.
You take good effort to collect all their films details and you made good presentation
Sivaji sarojadevi pair were also super hit pair actually they shoud aci some more films surely they would be hit
மிக்க நன்றி வாசு. சரோஜா தேவியின் நடிப்பு திறமையை முழுதும் வெளி கொணர்ந்த படங்கள் பாக பிரிவினை, பாலும் பழமும்,ஆலய மணி,இருவர் உள்ளம்,புதிய பறவை, தேனும் பாலும் . வயது,நிறம், தோற்றம் எல்லாவற்றிலும் சிவாஜி-சரோஜாதேவி படு பாந்தமான பொருத்தமான ஜோடி. முக்கியமாக அன்பளிப்பு, அஞ்சல் பெட்டி 520 போன்ற படங்களில் இருவருமே அவ்வளவு அழகு.
during makkal thilagam ''thirudathe'' 50 th anniversary function at chennai .
![]()
1993 'பாரம்பரிய'த்தில் சரோஜாதேவியின் தோற்றம் மிகவும் அழககவுள்ளது
her age may be 53 but she looks young and her smile is same as in the year 60's
what a marvelaus actres we have
Bookmarks