-
2nd July 2013, 09:34 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
Ganpat
நண்பர் கோபால் அவர்களே,
இரண்டு உதாரணங்களை கொடுத்து விதண்டாவாதங்களும் தேவையற்ற விமரிசனங்களும் எப்படி முறியடிக்கப்பட்டன என விளக்க விழைகிறேன்..
1) நாதுராம் கோட்சே விற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது.பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம்.உள்துறை அமைச்சர் ராஜாஜி பொறுமையாக கேட்டுகொண்டிருக்க, எதிர் கட்சியினர் அந்த தண்டனை கூடாதென ஆரவாரம் செய்கின்றனர்.ஒரு உறுப்பினர் எழுந்து சொன்னார்."இப்பொழுது காந்திஜி இருந்திருந்தால் அவரே இந்த தண்டனை கூடாது என சொல்லியிருப்பார்".இதற்குதான் காத்திருந்தது போல ராஜாஜி அவர்கள் துள்ளி எழுந்து சொன்னார்,"காந்திஜி இருந்திருந்தால் நாங்களும் கோட்சேவிற்கு தூக்கு தண்டனை அளித்திருக்க மாட்டோம்!"அவை கலகலத்தது..தண்டனைக்கு ஆதரவாக ஓட்டளித்தது.
2)சுப்புடு ஒரு பிரசித்தி பெற்ற இசை விமரிசகர்.குற்றங்குறை காண்பதில் வல்லவர்.பொதுவாக வித்வான்கள் பலருக்கு அவரைப்பிடிக்காது.ஒரு சமயம் பண்டிட் ரவிசங்கர் அவர்களின் சிதார் கச்சேரி டெல்லியில் நடந்தபோது,இவர் அதை கடுமையாக விமரிசனம் செய்திருந்தார்.அதில் எதோ ஒரு இடத்தில ஒரு ஸ்வரம் தவறியதைக்கூட பெரிது படுத்தி இருந்தார்.இதை ரவிசங்கர் அவர்கள் ரசிக்கவில்லை.சரியாக ஒரு மாதம் கழித்து சென்னை மியூசிக் அகாடமியில் அவர் கச்சேரி.முன் வரிசையில் சுப்புடு.ஒரு இடத்தில மீண்டும் ஸ்வரம் சிறிது பிரள .வசிப்பதை நிறுத்தி விட்டு அந்த மேதை மைக்கில் சொன்னார்.."இப்பொழுது சரியாக மணி 10:22.ஒரு ஸ்வரம் தவறிவிட்டது.தேவைபட்டோர் குறித்துக்கொள்ளலாம்.".அவை சிரிப்பில் அதிர,சம்பந்த பட்டவர் முகத்தில் ஈயாடவில்லை.
முடிவாக ஒரு குறிப்பு.
Inglourious Basterds படத்தில் எப்படி நடித்தாரோ,அதில் ஒரு தினையளவு மாற்றமின்றி "Django Unchained" படத்தில் நடித்திருக்கும் Christopher Waltz ற்கு,இரண்டு படத்திற்குமான சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் வியன்னாவில் பிறந்ததால் தப்பித்தார்.ஒரு வேளை விழுப்புரத்தில் பிறந்திருந்தால் நாமே same side goal அடித்து விமரிசித்து தள்ளியிருப்போம்.
விஞ்ஞானிகளில் ஐன்ஸ்டைன் எப்படியோ,விளையாட்டு வீரர்களில் பிராட்மன் எப்படியோ,தலைவர்களில் ஆபிரகாம் லிங்கன் எப்படியோ,இசை மேதைகளில் பீதோவன் எப்படியோ,ஓவியர்களில் மைக்கேல் ஏஞ்சலோ எப்படியோ,அப்படித்தான் நடிகர்களில் நம்தலைவர்.
விமரிசிப்பவர்கள்,முதலில் உங்கள் நாற்பது அத்தியாயங்களை படித்து விட்டு வரட்டும்.
Dear Ganpat,
Thanks for your apt reply. There can be no doubt about the greatness of "Nadigar Thilagam".
-
2nd July 2013 09:34 AM
# ADS
Circuit advertisement
Bookmarks