Results 81 to 90 of 138

Thread: Sivaji Ganesan School of Acting

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-43

    ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.

    முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ,ஹாம்லெட் பாத்திரங்களுக்கு மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.

    ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.

    சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.

    ஹாம்லெட் பாத்திர காட்சி சிறிதே சிக்கலான monologue .(இதே மன போராட்ட காட்சி சாந்தி படத்தில் வேறு வடிவில்),வாழ்வதா சாவதா, சாவுக்கு பின் என்ன என்ற மன போராட்டம்.வாழ்க்கை பற்றிய கேள்விகள். Odipus Complex கொண்டு தன் அன்னையிடம் வெறுப்பு கலந்த நேசம் ,இரண்டாம் தந்தையை (சித்தப்பன்)பழிவாங்கும் உணர்வு, தந்தையின் ஆவியால் துன்புற்று, காதலியை துறக்க முயலும் சிக்கல். வெறித்த விழிகளோடு , கத்தியுடன் stylised முறையில் சிந்தனை கலந்த நடையில் அவர் திரும்பும் விதம் இந்த காட்சிக்கு புத்துயிர்ப்பு கொடுக்கும்.இதற்கு குரல் கொடுத்த பேராசிரியர் சுந்தரம் இந்த பாணியில் இந்த காட்சி நடிக்க பட்டதே இல்லையென்றும் ,வசனங்களை காட்சியுடன் இணைக்க மிகவும் பிரயத்தனம் எடுத்ததாகவும் வியந்து பாராட்டி உள்ளார்.

    சத்ரபதி சிவாஜி காட்சி அவருடைய கனவு கதாபாத்திரம் ஆனதால் உச்சம் தொடும்.தன்னை தாழ்ந்தவன்,அரசியல் அறியாதவன் என்று மகுடம் சூட்ட மறுப்பவர்களை ,தன்னிலை விளக்கத்துடன் எள்ளும் முறை.Porna கோட்டை வெற்றியை பெருமிதத்துடன் குறிப்பிடுவதும்,புரந்தர் கோட்டை வெற்றி தன்னை மீறிய எதிரியை எச்சரிக்கை மீறி வெற்றி பெற்ற சாதனை விளக்கமும்,ராஜகிரி கோட்டை எதிரி கொக்கரிப்பை எதிர் கொண்டு கைப்பற்ற பட்ட வீர்யம், கல்யாண் கோட்டையில் பகைவரிடம் அகப்பட்டு துன்புற்றவரை காத்த கருணை வீரம் ,இறுதியில் nihilist instinct கொண்டு அடையும் ஆவேசம் ...
    ஒவ்வொரு கோட்டைக்கும் நடை மாற்றம் மட்டுமன்றி, கை முக குறிப்புகளின் நுண்ணிய மாற்றங்கள்,வசன முறைகளில் ஏற்ற இறக்கம், தாள லய சுர மாற்றங்களும் ,reciting poetically என்ற முறையில் தமிழையும் அழகு படுத்தி நடிப்பிலும் ஒருங்கிணைவு படுத்தி ,அந்தந்த content க்கு ஏற்ப மாறு படுத்துவார்.

    மேற்கண்ட காட்சிகளை படித்து ரசிப்பதை விட, கண்டு கேட்டு ரசித்தால் அதன் அருமை, versatality (பன்முகத்தன்மை) உங்களுக்கே புரியும்.

    ----To be Continued.
    Last edited by Gopal.s; 3rd October 2013 at 06:53 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •