கமலஹாசன் அவர்களின் ஆரம்ப கால படங்களில் குறிப்பிடத் தக்கது உயர்ந்தவர்கள். சஞ்சீவ் குமார் ஜெயா பாதுரி நடித்த கோசிஷ் ஹிந்தித் திரைப்படம், முதலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணஸ்ரீ நடிக்க மௌனம் எனது தாய்மொழி என்ற பெயரில் உருவாகத் திட்டமிடப் பட்டது. பல்வேறு காரணங்களினால் அது மேற்கொண்டு தொடரவில்லை. பின்னர் கமலஹாசன், சுஜாதா நடிக்க உயர்ந்தவர்கள் என்ற பெயரில் உருவாகி வெளியானது. இத்திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிகச் சிறப்பாக இருக்கும். அதில் ஒன்று இருவரும் தொலைபேசியில் உரையாடுவதாக வரும் காட்சி. இதில் சஞ்சீவ் குமார், பிரேம் நசீர் இருவரும் பதில் கூறுவதாக வரும் காட்சி மிகவும் பிரசித்தமானது.
தற்போது உயர்ந்தவர்கள் திரைப்படம் டிவிடியாக வெளிவந்துள்ளது. அதனுடன் கூட லக்ஷ்மி, கமலஹாசன் சேர்ந்து நடித்த மலையாளப் படம் ஒன்றின் மொழிமாற்றப் படமும் தரப் பட்டுள்ளது. அந்த டிவிடியின் முகப்பு நம் பார்வைக்கு
இனி உயர்ந்தவர்கள் திரைப்படத்திலிருந்து சில நிழற்படங்கள்
படத்தில் கமலஹாசன் சுஜாதா திருமணக் காட்சியில் ஜெய்சங்கர் வாழ்த்திப் பேசுவதாக ஒரு காட்சி உண்டு. அதனுடைய நிழற்படம்
![]()
Bookmarks