-
10th July 2013, 03:26 PM
#1041
Senior Member
Senior Hubber
அன்புள்ள திரு. சுப்பு / செளரி (NT three sixty degree) அவர்களே,
தங்களின் பல் வேறு கட்டுரைகளை சமீபத்தில் தான் படித்தேன். (தங்களது அண்மை வீடியோ பதிவுகள் அல்ல!) மிகவும் சரளமாக எழுதுகிறீர்கள். நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்கு (ஏன் நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் அதீத பக்தி அசலாக தெரிக்கிறது.
தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
10th July 2013 03:26 PM
# ADS
Circuit advertisement
-
10th July 2013, 06:46 PM
#1042
Junior Member
Devoted Hubber

Originally Posted by
kalnayak
இங்க பாருங்க NTthreesixty Degree என்ற சுப்பு என்ற சௌரி என்ற ... , நான் முன்னாடியே சொல்லியிருக்கேன். நீங்க செந்தமிழில் எழுதினால் என்னை போல சிலர் பயப்படுவாங்கன்னு. மறந்து போய் இப்ப ஆங்கிலத்தை கலந்து உங்க செந்தமிழில் (செங்காங்கிலம்?) எழுதுவதா. இப்ப பாருங்க. Ganpat பயந்து போயிட்டு ஜில்லுவை கூப்பிட்டுட்டார். நல்லா அழகா எழுதுறீங்க. அப்பப்ப இப்பிடி பண்ணிடறீங்களே!!!
நல்ல விஷயம் தானே திரு.Khalnayak (எ) அதிராம் (எ) வனஜ்-KV (எ) ......,
எப்புடி எடுத்துகுடுக்கரேன் உங்களுக்கு பாருங்க...! (மற்ற கதாபாத்திரம் அனைவரும் இப்போது இங்கே மறுப்பு மூலமாக மீண்டும் நுழைவது சுலபம்)
மறக்கறது நல்லதுதானே ! அந்தகாலத்திலேயே சொல்லலியா களவும் கற்று மற என்று !!!! அதன் படி கண்பட் நடக்கிறார் அவளோதான்..!
Take it Easy ! சுலபமா எடுத்துக்கோ !
-
10th July 2013, 06:49 PM
#1043
Junior Member
Devoted Hubber

Originally Posted by
parthasarathy
அன்புள்ள திரு. சுப்பு / செளரி (NT three sixty degree) அவர்களே,
தங்களின் பல் வேறு கட்டுரைகளை சமீபத்தில் தான் படித்தேன். (தங்களது அண்மை வீடியோ பதிவுகள் அல்ல!) மிகவும் சரளமாக எழுதுகிறீர்கள். நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்கு (ஏன் நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் அதீத பக்தி அசலாக தெரிக்கிறது.
தொடருங்கள்.
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
அன்பு நண்பர் பார்த்தசாரதி அவர்களுக்கு
தங்களுடைய மேன்மையான பாராட்டிற்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றி !
முயற்சி திருவினையாக்கும் ! முயற்சிக்கிறேன் !
-
10th July 2013, 06:52 PM
#1044
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Ganpat
ஐயோ ஜில்லு என்னக்கொல்லாத ஜில்லு கொல்லாத!!எனக்கு நாதஸ்வரமே
மறந்துடும்போல இருக்கு..

களவும் கற்று மற ...நாதஸ்வரமும் வாசித்து மற
-
10th July 2013, 07:17 PM
#1045
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ragulram11
இது நம் நடிகர் திலகம் நடித்து 1969 ல் வந்து கலக்கிய படம்
ஏற்கனவே நடிகர் பாலாஜி திலகத்தை வைத்து என் தம்பி என்ற மாபெரும் வெற்றி சித்திரத்தை கொடுத்தார் . இதுவும் ஒரு மாற்று மொழி படம் தான் அதே நடிகர் திலகம், இயக்குனர் , தயாரிப்பாளர் கூட்டணியில் 1969 ல் வந்தது இந்த படம் .
இங்கே உள்ள பலர் தெரிவித்தது போல 1969 ல் நம்மளுக்கு 9 படங்கள் ரிலீஸ் என்று நினைவு . ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
நம்ம சிவாஜி சார் வேறே தெய்வ மகன் ல் எங்கோ சென்று விட்டார் நடிப்பில் அந்த படம் வெற்றிகரமா ஓடி கொண்டு இருக்கும் பொழுதே அதே இயக்குனர் , நடிகர் கூட்டணியில் வந்த படம் நம்ம சிவாஜி சார் படம் மாக தான் இருக்கும்
இது போதாது என்று தீபாவளிக்கு சிவந்த மண் வேறு
அவர்க்கு நிகர் அவரே என்பது போல தெய்வமகன் , சிவந்த மண் இடையில் திருடன்
Final product மேல் இருந்த நம்பிக்கையில் இந்த படம் ரிலீஸ் செய்ய பட்டது .
என் தந்தையை போல் ஏக பட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்கள் இந்த படத்தின் வெற்றியை பார்த்து அதுக்கு அச்சரம் இந்த படத்தில் தலைவர் துப்பாக்கியை ஸ்டைல் அக வெச்சு சுடும் காட்சி , என் தம்பி படத்தில் கத்தி மற்றும் சாட்டை stills க்கு நிகராக
கதை
ஒரு திருடன் ஜெயில் ல் இருந்து விடுதலை ஆகி வெளியே சென்றால் இந்த சமுகம் அவரை எப்படி treat செய்கிறது என்பதே , இந்த படத்தில் மேஜர் சிவாஜியை தொடர்ந்து கண்காணிக்கிறார் , பாலாஜி சிவாஜியை திருடன் அக முயல்கிறார் இதற்க்கு எடையில் குடும்பம் வேறு .
சிவாஜி நல்லவனாக வாழ்கிறார் , எப்படி தன முடிவில் உறிதியாக இருக்கிறார் என்பதே கதை
சிவாஜி என்றாலே ஸ்டைல் இந்த படத்தில் மீண்டும் இதை நிருபித்து இருக்கிறார் குறிப்பாக உடை அலங்காரம். அவர் அறிமுகம் ஆகும் காட்சியில் மேஜர் கிழே இருந்து பார்ப்பது போலே கேமரா அமைந்து இருக்கும் (சந்திரமுகி படத்தில் ரஜினி இன்றோ போலே ) உபயம் : மஸ்தான் மற்றும் விஸ்வநாத் ராய் , கூடவே MSV யின் RR வேறு. இதுக்கு சிகரம் வைப்பது போல் black & black டிரஸ் +பெல்ட் புல் தந்து சட்டை யை slack போல் மடித்து விட்டு இருப்பார் . மேஜர் இடம் காடும் உறுதி + கொஞ்சம் திமிர் அதே நேரம் jailor இடம் காடும் பணிவு என்று முதல் சீன் ல் ஸ்கோர் செய்து இருப்பார். அதே மனிதர் வெளியே சென்ற உடன் வேலை கேட்கும் பொழுது சட்டையை எறக்கி விட்டு button போடு இருப்பார் (professionalism ) .
KR விஜய அறிமிகம் ஆகும் காட்சியில் அவர் ஆன் வேடம் போட்டு இருப்பார் அஹ்டில் சிவாஜி கன்னடத்தில் பேசி வேறு ஜம்மைத்து இருப்பார்.
KR விஜயாவிடம் அவர் தன கண்டனத காலத்தை விவரிக்கும் பொழுது அவர் குரல் நடிக்கும் (Modulations டாப் )
பாலாஜியின் கூடாரத்தில் சிவாஜி சுட்டு பழகும் காட்சி highlight அதில் அவர் அணிந்து இருக்கும் embroidery போட்ட வெள்ளை சட்டை, pant மற்றும் shoe , கையில் அணியும் கோல்ட் கலர் watch அந்த ஸ்டில் தான் இந்த படத்தின் முகவரி.
பாலாஜி திருடுவதுக்கு பிளான் சொன்ன உடன் done பாஸ், I சைட் Done என்று சொல்லும் விதம் intelligence with arrogance என்பார்களே இதை தான் , சொன்ன படி இயக்குனர் போலே வேடம் போட்டு அதை நிறைவேத்தி விடுவர்
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஜனரஞ்சகமான படம்
கோட்டை மதில் மலே ஒரு வெள்ளை பூனை வீட்டு மதில் மலே ஒரு பெட்டை பூனை...பாடலில் நடிகர் திலகம் அவர்களின் APPEARANCE .....அடேயப்பா ! கம்பீரமாக இருக்கும் !
இரெண்டாம் முறை அவர் அறைக்குள் சென்று தாழ் இட்டுக்கொண்டு நம் எல்லோரையும் suspensil ஆழ்திவிடுவார்...பின்பு கதவு திறந்து அந்த பழைய உடையில் கழுத்தில் கட்டப்பட்ட கைக்குட்டையுடன் வரும் STYLE ஒன்றே இவர் STYLE CHAKRAVARTHY மட்டும் அல்ல STYLE SAMRAAT என்பதை ஊர்ஜிதம் செய்யும்..
நாகேஷ் நல்ல படம் முக்கால்வாசியிலும் ஒரு ஸ்பீட் பிரேக்கர் !
அருமையான அலசல் திரு.ரகுல்ரம் அவர்களே !
-
10th July 2013, 10:50 PM
#1046
Junior Member
Devoted Hubber
திரை உலக சித்தர் சிவாஜி
தொடர்கிறது....
நடிகர் திலகத்தின் படங்களில் பெரும்பான்மையானவை குடும்பத்துடன் பார்க்கும்படியான திரைப்படங்கள். அன்றும் செரி...இன்றும் செரி ! தாய் தந்தையார் நல்ல திரைபடத்திர்ற்கு தனது பிள்ளைகுட்டிகளுடன் திருவிழாவிற்கு செல்வது போல குதூகலத்துடனும் உற்சாகத்துடனும் சென்றார்கள், செல்கிறார்கள் என்றால் அது நடிகர் திலகத்தின் திரைப்படத்திற்கு மட்டுமே !
அதற்க்கு காரணம், நடிகர் திலகம் என்றுமே தன்னுடைய திரைப்படத்தில் குடிக்காதே, புகைபிடிகாதே, திருடாதே என்று மேம்போக்காக அறிவுரை உரைக்கமாட்டார். காரணம் நம் எல்லோருக்கும் அடிபடயிலயே இது தெரிந்த விஷயம்தான்.
எல்லாவற்கும் தெரியும் குடிப்பது கெடுதல்,
புகைபழக்கம் தீயது,
திருடுவது நல்ல நெறி அல்ல என்று...!
காரணம் நம் பெற்றோர் நமக்கு அறிவுறுத்துவார்கள், அவர்கள் கடமையுனற்சியுடைய குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட நல்ல பெற்றோராயின் !
இது போன்ற அறிவுரைகள் எல்லாம், பஸ் ரோட்டில்தான் ஓடும், விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும், கப்பல் தண்ணீரில் தான் மிதந்து செல்லும் என்பதுபோன்ற ரகத்தை சேர்ந்த அறிவுரைகள்.
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பார்தோமென்றால், ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குடும்பத்தில் நடக்கின்ற விஷயங்களை பிரதிபலிப்பது போல இருக்கும். ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சனைகள், அதிலிருந்து எவ்வாறு விடுபடுகிறான்,
குடும்பம் என்றால் உண்மையில் என்ன?
எந்த அளவில் ஒரு தலைவனும் தலைவியும் விட்டுகொடுத்து வாழவேண்டும் குடுப்பம் என்ற தேரை நகர்த்த !
அண்ணன் தங்கை உறவு, பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
கணவன் மனைவி பாசம் எத்தகையதாக இருக்கவேண்டும்,
தந்தை மகன் பாசம் எப்படி எந்த நிலையில் இருக்கவேண்டும்,
குடும்பம் பெரிதா கடமை பெரிதா?
இப்படி பலதரப்பட்ட விஷயங்கள் நம் சித்தர் திரைப்படங்களில் மக்களுக்கு அவர்கள் வாழ்விற்கு அவர்கள் குடும்பத்தை பொருப்புள்ளபடி கொண்டுசெல்வதற்கு துணை நிற்கும்படி அமைந்திருக்கும். அதனால் தான் இன்றளவும் பெரும்பான்மையான குடும்பபொறுப்பு அதிகம் உள்ள குடும்பங்கள் நடிகர் திலகம் திரைப்படங்கள் மட்டுமே விரும்புவார்கள்.
ஆகையால் குடும்பக்கதை என்று வரும்போது கூடுமானவரையில் வன்முறைகாட்சிகள் பெரும்பான்மையாக தவிர்க்கபட்டிருக்கும்.
ஒரு காலகட்டத்தில் நடிகர் திலகதிற்கு சண்டை வராது என்று ஒரு சிலர் எள்ளி நகயாடியபோது, அவர்கள் முகத்தில் கரிபூசியது போல, கன்னத்தில் பளார் என்று அறைவிழுந்ததுபோல தன்னுடைய படங்களில் சண்டைகாட்சிகள் அமையும் வண்ணம் பார்த்துகொண்டார் !
நாம் பொதுவாக ஒரு சில நாயகர்கள் படங்களை பார்த்தால், அதுவும் சண்டைகாட்சிகளை பார்க்கும்போது அந்த சண்டைகாட்சி ஒருதளைபட்சமாகவே இருக்கும்.
அதாவது...நாயகன் மூன்று அடிக்கு மேல் வாங்கவே மாட்டார். வில்லன் எவ்வளவு ஆஜானுபாகுவாக திறமையாளனாக இருந்தாலும் வேண்டுமென்றே இப்படி அந்த வில்லனுடைய பராக்கிரமம் அமுக்கபட்டிருப்பது அப்பட்டமாக தெரியும்.
சண்டைகாட்சி 3 நிமிடம் என்றால் அதில் நாயகன் முதலில் வாங்கும் மூன்று அடிகளோடு சரி...அதற்க்கு பிறகு...மொத்த அடியும் வில்லனுக்கு தான் விழும்.
வில்லனுக்கு இந்தகதி என்றால் அவன் அடியாட்களோ...அடி வாங்க மட்டுமே குறுக்கும் நெடுக்குமாக வந்து வந்து அடிவாங்கிகொள்வார்கள்...
இதை படிப்பவர் யாராக இருந்தாலும் சிறிது யோசித்து கூறுங்கள்? இது இயற்கையான அல்லது இயற்கையாக அமைக்கப்பட்ட சண்டைகாட்சியா?
நம் சித்தரோ உச்சத்தில் இருக்கும் நடிகன் - நினைத்திருந்தால் சண்டைகாட்சியில் வில்லனுக்கு சம சந்தர்ப்பம் கொடுக்காமல், தான் மட்டுமே வில்லனை அடித்துகொண்டிருக்கலாம்... ஆனால் சண்டைகாட்சிகளில் அதுபோல செயர்க்கைதன்மையை ஒருபோதும் நம் நடிகர் திலகம் புகுத்தியதில்லை.
நடிகர் திலகத்தின் மற்றும் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் இவர்கள் இருவர் படங்களில் மட்டுமே பெரும்பான்மையான சண்டைகாட்சிகள் "மிக" "மிக" "இயற்கையாய்" அமைக்கப்படும்.
வில்லன்கள் உண்மையிலயே மிகவும் பலசாலிகளாக இருப்பார்கள்...வில்லன் மட்டும் அல்ல அந்த வில்லனின் அடியாட்கள் கூட மிகுந்த பலசாலிகளாக காட்சியளிப்பார்கள். வெறும் கும்..கும்...என்று குத்து மட்டுமே வாங்கும் சதைபிண்டங்களாக என்றுமே அவர்களை படங்களில் காட்டியதில்லை.
நம் நடிகர் திலகம் எதற்குமே விதிவிலக்கானவர் அல்லவா ! முதல் படத்திலயே புரட்சி என்ற வார்த்தையை திரை உலகிற்கு அறிமுகபடுத்தி, அதை வருடா வருடம் புழக்கத்தில் விட்டவர் ஆயிற்றே !
அவர் திரைப்படங்களில் வரும் சண்டைகாட்சிகளிலும் புதுமை புரட்சி செய்தார் ! அந்த புரட்சி என்னவென்றால் வில்லன்களுக்கு வில்லனின் அடியாட்களுக்கு சமபலம் பொருந்திய சண்டைகாட்சியை அமைக்க விடுவது ! எவ்வளவு பெரிய புரட்சி பாருங்கள்..அதுவரை திரை உலகம் சண்டைகாட்சிகளில் கண்டிராத புரட்சி !
நடிகர் திலகத்தின் இயற்கையான, வில்லனை சமபலம் வாய்ந்தவனாக பார்பவர்கள் கருதவைக்கும் சண்டைகாட்சி
சண்டைகாட்சிகளின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கவேண்டுமென்றால் நாயகன் முகத்தை சீரியஸ் ஆகா வைத்துக்கொள்ளவேண்டும். அதுதான் இயற்க்கை. நம் நடிகர் திலகமும் சண்டைகாட்சியில் ஈடுபடும்போது அந்தகாட்சிகுண்டான முக்கியத்துவம் அந்த சண்டைகாட்சியில் தெரியும்.
சிரித்துகொண்டு...புன்வுருவலுடன் ஒரு சண்டைகாட்சியை செய்தால் அந்த சண்டைகாட்சியின் முக்கியத்துவமே போய்விடும். அதன் நம்பகத்தன்மையே கேள்விகுரியாகிவிடுகிறது !
உதாரணமாக நாம் ஒரு இரண்டு ஆட்களுடன் கைகலப்பில் ஈடுபடும்போது சிரித்துகொண்டா கைகலப்பில் ஈடுபடுவோம்..இல்லை நம்மிடம் சண்டைபிடிப்பவர் சிரித்துகொண்டு அடிக்கவருவாரா ? இரெண்டுமே இல்லை. காரணம் இதுதான் நடைமுறை.
அந்த இயற்கைத்தன்மையை நன்கு உணர்ந்ததால்தான் நடிகர் திலகம் சண்டைகாட்சி இயற்கைதன்மையுடன் தென்படுகிறது..!
தர்மம் எங்கே திரைப்படத்தில் வில்லன் மற்றும் அடியாட்களை எவ்வளவு பலசாலிகளாக காட்டியிருக்கிறார்கள் பாருங்கள். வேறு ஏதாவது நடிகராக இருந்தால்.....? இருந்தால் என்ன...! 3 அடி formula தான்..!
என்தம்பி திரைப்படத்தில் மேலைநாட்டு FENCING முறையில் அமைந்திருக்கும் வாள்பயிற்சி பாலாஜியுடன்
தங்கசுரங்கம் திரைப்படத்தில் வில்லன் அடியாட்களுடன் ...இதில் சண்டை முடிந்தபிறகு பாரதியுடன் உரையாடல் தொடங்கும்போது நடிகர் திலகம் cigarette பட்ற்றவைக்கும் ஸ்டைல் பாருங்கள். இவரன்றோ பல ஸ்டைல்களின் முன்னோடி...!
தங்கை திரைப்படத்தில் இயற்கையான சண்டைகாட்சி பயில்வானுடன்
ராஜா திரைப்படத்தில் உண்மையான மல்யுத்த வீரனுக்கு மதிப்புகொடுக்கும் வகையில் சம சந்தர்ப்பம் கொண்ட சண்டைகாட்சி
திருடன் திரைப்படத்தில் உயிருக்கு போராடும் தாய்க்காக தான் திருடி கொடுத்த குழந்தையை தன சகஆட்களிடமிருந்து கவர்ந்து அந்த தாயிடம் கொடுக்க போராடும் பதட்டமான சண்டைகாட்சி..எவ்வளவு இயற்கைதன்மை சண்டைகாட்சியில் ஆஹா..!
சொர்க்கம் திரைப்படத்தில் ரயிலில் வரும் வில்லன் அடியாட்களுடனான சண்டைகாட்சி...அடியாட்கல்தானே...கதாநாயகன் தான் அடித்துகொண்டிருப்பான் என்று எண்ணவேண்டாம்..பாருங்கள்..எவ்வளவு இயற்கைதன்மையுடன் எடுக்கபட்டிருக்கும் சண்டைகாட்சி. வில்லன் அடியாட்கள் கூட சரிக்கு சரியாக அடிகொடுபார்கள்...வெறும் dummy பீஸ் ஆக அடிமட்டும் வாங்காமல்.
அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் துளிகூட டூப் நடிகர் பயன்படுத்தாமல் உண்மையான மல்யுத்த வீரருடன் " மல்யுதம் " செய்யும் நடிகர் திலகம். நடிகர் திலகத்தின் உடற்கட்டு இதில் "V " வடிவம் போல அமைந்து இருக்கும். இதைபோல இயற்கையான மல்யுத்த காட்சி எந்த திரைப்படத்திலும் எந்த கதானாயகரும் செய்ததில்லை.
வீடியோ உதவி - வேறு யார் ? நம்முடைய நெய்வேலியார்தான் ! நன்றி...நன்றி..நன்றி...நெய்வேலியார் அவர்களே !
தொடரும்......!
Last edited by NTthreesixty Degree; 10th July 2013 at 11:31 PM.
-
10th July 2013, 11:19 PM
#1047
Senior Member
Seasoned Hubber
டியர் சௌரி சார்
நடிகர் திலகத்தின் சிறப்புகளை எழுதுவதில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதைத் தங்கள் பதிவுகள் கூறுகின்றன. பாராட்டுக்கள்.
தொடர் பதிவுகளில் இன்னும் புதிய கருத்துக்களை உங்களிடம் எதிர்பார்க்க வைக்கிறது தங்கள் பாணி
g tttt ... தங்களுடைய ஸ்பெஷல்... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
11th July 2013, 06:32 AM
#1048
Junior Member
Newbie Hubber
சவுரி,
சிக்ஸர் ஆகவே அடித்து தள்ளுகிறீர்கள்.வாழ்த்துக்கள். thoroughly enjoyable .வாசு சார் உடல் நிலை காரணமாக ஓய்வெடுத்து கொள்ளும் நிலையில் எங்கள் திரியின் இரண்டாவது வாசுவாக உருவெடுத்து விட்டீர்கள். இரண்டாம் வாசுதேவன் வாழ்க.
(அது சரி. சித்தூர் வாசுதேவன் என்ன ஆனார்?சென்னை வாசுதேவன் ஆகி விட்டாரா?)
Last edited by Gopal.s; 11th July 2013 at 06:34 AM.
-
11th July 2013, 06:47 AM
#1049
Junior Member
Newbie Hubber
கர்ணனை பற்றி நான் எழுதியது ஜாம்பவான்கள் ராகவேந்தர் சார்,கண்பட் சார்,சாரதி,முரளி அனைவரையும் இழுத்து வந்தது என் பாக்கியமே. விஸ்வமித்திரனை(ஒரு வசிஷ்டர்தான்) விட அதிக பெருமிதம் எனக்கு. வசிஷ்டர்கள் வாயால் பிரம்மரிஷி.
-
11th July 2013, 10:54 AM
#1050
Senior Member
Seasoned Hubber
Bookmarks