Page 116 of 399 FirstFirst ... 1666106114115116117118126166216 ... LastLast
Results 1,151 to 1,160 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1151
    Junior Member Devoted Hubber
    Join Date
    Apr 2021
    Location
    Virgin Islands
    Posts
    0
    Post Thanks / Like
    ஜூலை 21 - கலைமகள் தன் தவப்புதல்வன் திரை உலகில் சித்தராக விளங்கும் கணேச மூர்த்தியை பிறந்த பயன் முடிவடைந்த காரணத்தால் அவதாரம் எடுத்த கடமை, பயன் முடிந்தது, ஆகையால் திரும்பி வா மகனே என்று அழைத்த அந்த நாள்,

    இன்றோடு 12 வருடம் நிறைவடைகிறது...இருள் சூழ்ந்த அமாவாசை ஒரு நாள் தான்....ஆனால் திரை உலகிற்க்கோ இன்றோடு 12 வருடம் .....!

    நாடக, மற்றும் திரை உலகம் பயன்பெறும் வகையில் நடிப்பு என்றால் என்ன...தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும்... நவரசத்தையும் எப்படி முகத்தில் வரவழைக்கவேண்டும் ...நடிப்பு மட்டும் அல்லாது பிற கலை நுணுக்கங்களையும் எப்படி கற்றுக்கொள்ளவேண்டும் ..கலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்று சகலர்க்கும் ஒரு வழிகாட்டியாய் வாழ்ந்த ஒரு மகான்...இனியும் தொன்றமாட்டாரா என்று உண்மையான தமிழன் மட்டுமல்லாது நாடக மற்றும் திரையை ரசிக்கும் ஒவொருவரும் எண்ணும் நாள் !

    அனைவரது அன்பு வேண்டுகோள் தாளாமல் பாசத்தால் இதோ இருக்கிறேன் நான் உலகெங்கும் உங்களுக்காக என்று சென்ற வருடம் மார்ச் 17 முதல் கர்ணனாய் பிள்ளைகளுக்கு காட்சிதந்து சுமார் 152 நாட்கள் அவர்களுடன் திரைவடிவில் கூடவே இருந்தநாள்.


    அந்த 152 நாட்கள் திரை உலகமே உலகெங்கும் திருவிழகோலம் கண்டது ! தன்னை நேசித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை காட்சிதந்த வைபோகம் தான் கர்ண விஜயம்...!

    இந்த வருடமும் தனது அன்பு பிள்ளைகளும் உண்மையாக தன்னை நேசித்த மக்களுக்காகவும் வரும் மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் சந்திக்கிறேன் என்று கூறி மீண்டும் கலைமகளிடதிலே ஐக்கியமானார் நம் சித்தர்..! தற்போது வருவதற்கான ஆயுத்தம் மேல் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கிறது....வெகு விரைவில் நம் சித்தர் நம்மை எல்லாம் மகிழ்சிகடலில் ஆழ்த்த வருகிறார் என்று நினைக்கும்போது புளகாங்கிதம் அடைகிறது மனது !

    இன்று நினைவுநாள் என்கிறார்கள்...மறந்தால் தானே நினைப்பதற்கு...! ஓய்வில்லாத உழைப்பல்லவா நம் சித்தருடயது...

    1952 முன் நாடகத்திலும்...1952 முதல் 1997 வரை திரை உலகை வாழ வைத்த தெய்வம் அல்லவா...

    ஓய்வு தேவை மீண்டும் வேறு வடிவெடுத்து உழைப்பதற்கு என்று 2001 ஜூலை 21ஆம் தேதி ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.

    அப்படிதான் உண்மை தமிழன் மட்டும்மல்லாது மற்ற உண்மையான மக்களும் என்றும் நினைத்துகொண்டிருக்கின்றனர்.

    நல்லவர் நினைவுநாள் என்பதால் தான் வருணனே இன்று வாழ்த்துகிறான் ! இந்த பேறு ஒன்றே போதும் !





    இந்நாட்டை ஆள்கின்ற திருடர்கள் ஒழியாமல் தேசிய நெஞ்சங்கள் ஓயாது என்ற பகத்சிங் வாக்கினைபோல

    எல்லோர்க்கும் வாழ்வென்னும் கர்மவீரர் பின்னாலே இந்நாட்டின் இளைஞர்கள் எழவேண்டும் என்று
    இன மற்றும் ஜாதி வெறி வளர்த்தவர்கள் மத்தியில் தேசியம் வளர்த்த திரையுலக தந்தையே !

    ஒவ்வொரு காலகட்டத்திலும் சித்தர் வாழ்வில் நிஜத்தில் நடந்ததை பிரதிபலிக்கும் நிழல் காட்சிகள்...!




    Last edited by NTthreesixty Degree; 20th July 2013 at 10:09 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1152
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    காலத்தை வென்ற கலைஞனே !
    ஞாலத்தில் உனை மிஞ்சும்
    நடிகன் நானறியேன்.

    தமிழரின் பெருமையே!
    வாழ்க நீ தந்த கலை!
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  4. #1153
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    இதயதெய்வம் நடிகர் திலகத்துக்கு
    பன்னிரெண்டாம் ஆண்டு புகழாஞ்சலி
    [21.7.2001 - 21.7.2013]


    நடிகர் திலகம் பற்றி பிரபலங்கள் : 16

    நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம்

    வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலர்) [பதிப்பாசிரியர் : திரு. எம்.ஜி.ஆர்] : ஆகஸ்ட் 1962












    பக்தியுடன்,
    பம்மல் ஆர். சுவாமிநாதன்.
    pammalar

  5. #1154
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    என்றும் நீ எங்கள் நடிகர் திலகம் என்றால்

    கோடி ஜென்மங்கள் ரசிகராய் பிறப்போம்

    நன்றி நாங்கள் சொல்ல வார்த்தையேது

    நாளும் உன் காட்சியின்றி வாழ்க்கையேது?


    செந்தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே

    நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான

    ஊற்றாகி நின்றானவன்


    என்ற வரிகளுக்கெல்லாம் முகவரி கொடுத்தவனே!

    இந்த நாளில் உன்னை நேற்றும் இன்றும் என்றென்றும் இதே போல் நினைத்து வாழும் ஒரு எளிய ரசிகனாக

    அன்புடன்

  6. #1155
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    என்றும் நீ எங்கள் நடிகர் திலகம் என்றால்

    கோடி ஜென்மங்கள் ரசிகராய் பிறப்போம்

    நன்றி நாங்கள் சொல்ல வார்த்தையேது

    நாளும் உன் காட்சியின்றி வாழ்க்கையேது?


    செந்தமிழ் நாட்டு கலையுலகின் திலகமே

    நீயே உனக்கு என்றும் நிகரானவன்

    உலகத்திலே ஒருவன் என உயர்ந்து நிற்கும் திலகமே

    நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான

    ஊற்றாகி நின்றானவன்


    என்ற வரிகளுக்கெல்லாம் முகவரி கொடுத்தவனே!

    இந்த நாளில் உன்னை நேற்றும் இன்றும் என்றென்றும் இதே போல் நினைத்து வாழும் ஒரு எளிய ரசிகனாக

    அன்புடன்
    engal uyirudan kalandu vitta DEIVA MAGANE PASA MALERE ENDRUM UM NINAIVUDANE VALDUNDU KOTTIRIKKUMONE OF THE MILLIONS OF PEOPLE ULGAM ULLAVARAI NIN PUGHAL IRUKKUM.

  7. #1156
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா....
    இல்லை இல்லை ...
    இங்கிருந்து தான் வந்தாரு
    இங்கே தான் வாழ்ந்தாரு
    இங்கே தான் மறைந்தாரு...

    வாழ்நாள் முழுதும் தமிழனாகவே வாழ்ந்து தமிழனுக்கு அடையாளம் காட்டி தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொற்றொடருக்கு உயிர் தந்து காலமெல்லாம் தமிழனுக்கு பெருமை தேடித் தந்த சிங்கத் தமிழன் ... உடலால் மட்டுமே மறைந்த நாள்...

    எங்களுக்கு நினைவு நாள் என்று தனியாக தேவையில்லை... உங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நினைத்துக் கொண்டே தான் இருக்கிறோம்...

    எங்கள் இறுதி மூச்சு வரை இது தொடரும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1157
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சுவாமி சார்
    நடிகன் குரல் மிகவும் அபூர்வமான ஆவணம். நம்மிலேயே பலருக்கு இப்படி ஒரு பத்திரிகை வந்தது தெரிந்திருக்காது. நடிகர் சங்கத்தின் தலைவராக எம்.ஜி.ஆர். இருந்த போது பருவ இதழாக மலர்ந்தது. அவரே ஆசிரியராகவும் இருந்தார். 1962ல் நடிகர் திலகம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்று திரும்பிய பின் அதனை யொட்டி நடிகன் குரல் சிறப்பு மலர் வெளியிட்டது. அதில் காணும் பக்கத்தை இங்கே நீங்கள் தந்ததன் மூலம் ஆவணத் திலகம் என்பதையும் அந்நாளைய தமிழ்த் திரையுலகின் பெரும்பான்மையான தகவல்களுக்கு தங்களிடம் ஆவணங்கள் இருக்கின்றன என்பதையும் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளீர்கள்.

    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1158
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் நினைவு நாளையொட்டி நண்பர் எம்.எல். கான் அவர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர்கள்



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1159
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று நான் நினைக்கவே விரும்பாத ஒரு நாள்.
    இது உன் நினைவு நாளாம் .
    என் தெய்வமே ,எனக்கு அனுதினமும் உன் நினைவு நாள்தானே.
    நான் உன்னை விட அதிகம் நேசித்தது இவ்வுலகில் இல்பொருளாகும் .
    உலகில் உன்னை மிஞ்ச யாருமில்லை என்ற ஒற்றை வரியில் முடித்து நெஞ்சு நிமிர்த்தாமல்,
    எத்தனை வரிகளை எழுதி எழுதி இந்த திரியில் சுமை ஏற்றுகிறோம்.
    நீ உன் நடிப்பால் என்னை அழ வைத்த நாட்களை எண்ணி முடிக்கும் வலு என் மூளைக்கில்லை
    ஆனால் நீ உறங்கி கண் மூடி என்னை கதற வைத்த ஒரே நாள்
    உன்னால் எனக்கு கெடுதல் விளைந்து ஊண் உறக்கத்தை தொலைய வைத்த நாள்
    ஆனாலும் இதை நான் நினைவு நாளாக எண்ண வேண்டுமாம்.
    நான் சொல்வேன் இந்த நாளொன்றை தவிர அனைத்துமே எனக்கு உந்தன் நினைவுநாளே...
    Last edited by Gopal.s; 21st July 2013 at 08:44 AM.

  11. #1160
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாச தெய்வத்திற்கு பன்னிரெண்டாம் ஆண்டு நினைவாஞ்சலி



    கண்ணுக்குத் தெரிந்த கடவுள் என்று சூரியனை வழிபட்ட எங்கள் கர்ணனே!
    எங்கள் கண்ணுக்குத் தெரிந்த ஒரே கடவுள் நீதானே!
    ஆண்டவன் படைப்பின் அரிய அற்புதமே!
    எங்கள் உடலின் அனைத்து அணுக்களிலும் ஆட்சி செய்யும் ஆண்டவனே!

    வாழ்க்கை என்னவென்று உணர்த்தி எங்களுக்கு
    வாழக் கற்றுக் கொடுத்தவனே!
    அன்பு ஒன்றையே அடித்தளமாகக் கொண்டு
    பாசத்தைப் போதித்த எங்கள் புத்தனே!

    மகிழ்ச்சியை தவிர வேறொன்றும் தந்தறியாதவனே!
    மானுடப் பிறவியின் மகத்தான படைப்பே!
    மன்னர்க்கெல்லாம் மன்னனே! எங்கள்
    மனமெல்லாம் நிறைந்த மாசற்ற மாணிக்கமே!

    உழைப்பு ஒன்றையே உயர்வெனக் கொண்டு
    உன்னத வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்தவனே!
    உள்ளத்தில், எண்ணத்தில், செயலில், சிந்தையில்
    சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி செய்யும் எங்கள் சிங்கமே!

    இடி, மழை, புயலை நடிப்பில் காட்டியவனே!
    இன்னல்களை இல்லாமல் தீர்த்தவனே!
    கள்ளமற்ற வெள்ளை சிரிப்பில்
    மழலைகளையும் தோற்றோடச் செய்தவனே!

    நடிப்பின் ஆணிவேராய் வேரூன்றி
    ஆல விருட்சமாய் வளர்ந்தவனே!
    அந்நியரும் அகம் மகிழ்ந்த
    அற்புதங்கள் செய்து காட்டியவனே!

    எங்கள் ரத்த நாளங்களில் ஓட்டமாய் இருப்பவனே!
    எண்ண ஓட்டங்களில் என்றும் வாழ்பவனே!
    எண்ணற்ற அதிசயங்களுக்கு சொந்தம் கொண்டாடுபவனே!
    பேச்சிலும் மூச்சிலும் இரண்டறக் கலந்தவனே!

    அன்புச் சங்கிலியால் எங்களைப் பிணைத்து
    அறிவு தீபம் ஏற்றி வைத்து
    எங்களை அணைத்துக் கொண்டவனே!
    அன்னையின் அன்பைக் கொ(கா)ட்டிய ஆண்மகனே!

    'அண்ணன்' என்ற சொல்லுக்கு அலங்காரம் தந்தவனே!
    'ஆண்டவன்' என்று என்றோ ஆனவனே!
    ஆட்சி பீடம் ஏறாமலேயே அரசாட்சி புரிந்தவனே!
    ஆண்மையின் அழகு மிளிர்ந்தவனே!

    சிவனைத் தொழுதால் சிரமகள் விலகும்
    எங்கள் சிவாஜியைத் தொழுதால் சிந்தை குளிரும்
    சிரிப்பையும் அழுகையும் சமமாகக் காட்டியவனே!
    சிம்மக் குரலில் சிந்தை கவர்ந்தவனே!

    இன்று உனக்கு நினைவு நாளாம்! நினைவே நீதானே!
    உயிரே நீதானே! உறவே நீதானே! எங்கள்
    உயிர் பிரிந்தாலும் அது உன்னுடன்தானே கலக்கும்!
    மறுபடி உன் பெயர் சொல்லி ஜனிக்கும்.

    உயிரற்ற உடலாய் நாங்கள்
    நாங்களும் இறந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகி விட்டதே
    அப்புறம் எப்படிப் பிரிவு வந்தது?
    எங்களை மறந்தாலும் உன்னை மறக்க முடியாது.

    எங்கும் நீக்கமுற நிறைந்திருக்கும் பரம்பொருளே!
    எங்களினுள்ளே ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆண்டனியே!
    எட்டுத் திசையும் நின் புகழ் பாடுவதைத் தவிர
    வேறென்ன வேலை எங்களுக்கு?

    உன் பாத மலர் தொட்டு ஜென்ம சாபல்யம் அடைகிறோம்.
    உன் பெயர் உச்சரித்து பாவங்களைக் கழுவுகிறோம்
    உன் அற்புத அசைவுகளைக் கண்டு அசைவற்று நிற்கிறோம்
    உன்னை மனதில் கொண்டு பிற தெய்வங்களை மறக்கிறோம்.


    கண்ணீர் மலர்களால் உன் பாதங்களை அர்ச்சிக்கும்
    உன் அருள் பெற்ற பக்தன்


    வாசுதேவன்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •