-
27th August 2013, 12:46 PM
#1551
Junior Member
Senior Hubber
kartik sir.you are absolutely right SOME HUBBERS NOT ALL in the other thread always dragging NADIGARTHILAGAM for no reasons, he was always doing his job according to the directions given by direcor and others NOT OF HIS OWN UNLIKE OTHER ACTORS, BECAUSE HE HAD FAITH AND CONFIDENCE ON HIS PERFORMANCES ALWAYS, WHICH HE HAS VERY WELL SUCCEEDED. Atleast hereafter will they stop their dialahes.
-
27th August 2013 12:46 PM
# ADS
Circuit advertisement
-
27th August 2013, 01:19 PM
#1552
Junior Member
Devoted Hubber

Originally Posted by
KCSHEKAR
இத்திரியில் 2011 ஆம் ஆண்டு பதிவிட்டதை இங்கு மறுபதிவிட்டிருக்கிறேன். (அதன்பிறகு இணைந்துள்ள சில நண்பர்களுக்காக)
நடிகர்திலகத்தின் விசிட்டிங் கார்டு (அவருக்கு விசிடிங் கார்டு தேவையா என்ற கேட்பது எனக்குத் தெரிகிறது) சந்தனத்திலானது. வெளிநாடு செல்லும்போது மட்டும் உபயோகப்படுத்துவது.
நட்பு கலந்த நன்றியுடன்,
சேகர் சார்,
அவர் மணப்பார் என்பது இவ்வுலகமே அறியும்.ஆனால்
அவரின் visiting card உம் மணக்கும் என நீங்கள் சொல்லித்தான் அறிந்தேன்.
ம்ம்ம்.... வேறு என்ன சொல்வது.!!!
உங்களை நினைத்தால்
மகிழ்ச்சியாகவும் இருக்கிறது;பொறாமையாகவும் இருக்கிறது..
:
கோடானு கோடி நன்றிகள்..
-
27th August 2013, 01:28 PM
#1553
Junior Member
Newbie Hubber
இப்போதுதான் ஒருவரை ஒருவர் மதிப்பதை பற்றி பேச்சு வந்தது. புதிதாக ஒருவர் பாசமலரை பற்றி துவங்கி விட்டார். என்னுடைய ஒரே பதில். எங்கள் படங்களை நாங்கள் கவனிக்கிறோம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். அந்த காலத்தில் வயிற்றெரிச்சல் பிடித்து அலைந்தது போதாதென்று இந்த காலத்திலுமா?
-
27th August 2013, 03:06 PM
#1554
Senior Member
Diamond Hubber
பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

-
27th August 2013, 03:27 PM
#1555
Junior Member
Newbie Hubber
நடிகர்திலகத்தின் நட்சத்திர அந்தஸ்தை மூன்று பத்தாண்டுகளில் எவருமே நெருங்க கூட முடிந்ததில்லை என்பதை நாம் ஆதாரத்தோடு காட்டிய பிறகும் பொய்கள் ,புனைசுருட்டுகள் நிற்கவில்லை. அமைதியோடு வாழ, சிலருக்கு விருப்பமில்லை போலும். நம் படங்கள் ஓடுவதில் நம்மை விட அவர்களுக்குத்தான் அக்கறை அக்காலத்திலும் இக்காலத்திலும். 1952-1960 ,1961-1970,1971-1980 மூன்று பத்தாண்டுகளிலும் சிவாஜியின் success Rate அருகில் கூட யாரும் நெருங்க முடிந்ததில்லை. எந்த ஒரு திரையுலக பிரபலத்திடம் கேட்டாலும் சொல்வார் No 1 என்றால் படவுலகில் சிவாஜி மட்டுமே என்று. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான வெற்றி நாயகன் நடிகர்திலகம் மட்டுமே. 1950 களில் ஜெமினி நடிகர் திலகத்திற்கு அடுத்து நம்பர் 2 இடத்தில் இருந்தார். 1960 களில் நிறைய நடிகர்கள் நுழைந்து அரசியலும் நுழைந்த காலத்திலும் நடிகர்திலகம் No 1 ஆகவே தொடர்ந்தது பெரிய அதிசயம். அதிலும் அவர் இளைத்து இளமை மீண்டதும் ,அவர் எல்லா Genre படங்களிலும் நடித்து ABC மூன்றிலும் முடிசூடா மன்னனாகவே விளங்கினார். அவரின் புகழுக்கு அரசியல் துணையோ, பிரச்சாரங்களோ,பத்திரிகை பலமோ ,என்றுமே தேவை பட்டதில்லை. அந்த கால ராணி,தினத்தந்தி போன்ற பத்திரிகை பாமர மக்களிடையே அந்த தமிழனுக்கு எதிராகவே தவறான செய்திகளை போட்டும் நடிகர்திலகத்தின் புகழை அசைக்க கூட முடிந்ததில்லை.
எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது போல "அவர் மறைவின் போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."
Last edited by Gopal.s; 27th August 2013 at 07:19 PM.
-
27th August 2013, 06:36 PM
#1556
Senior Member
Seasoned Hubber
-
27th August 2013, 07:45 PM
#1557
Senior Member
Veteran Hubber
Dear Friends,
I already informed you that, I will search the posts of Saradha mam and Murali Srinivas sir about the wonderful movie “Dharmam Enge”. Fortunately our Raghavendar sir already re-produced the post of Saradha mam from her blog.
So, I re-produce the post of our Murali Srinivas sir about ‘Dharmam Enge’. Now over to Murali sir…..
தர்மம் எங்கே படம் சம்பந்தப்பட்ட தகவல்களை வழக்கம் போல சுவையாக வழங்கி இருக்கிறார் சாரதா. சாரதாவின் போஸ்டை படிக்கும் போது, எனக்கு மீண்டும் அந்த நினைவுகள். அந்த கால கட்டத்தில் NT பல படங்கள் நடித்து கொண்டிருந்தார், 1972-இல் முதலில் ராஜா வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது. பிறகு வெளியான ஞான ஒளி-யும் வெற்றி. மூன்றாவதாக வெளி வந்த பட்டிக்காடா பட்டணமா (May 6th,1972) மகத்தான வெற்றி பெற, NT ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம். சாரதா குறிப்பிட்டது போல தர்மம் எங்கே-விற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும். சொந்த படம் வேறு. நான் பழைய போஸ்ட்-இல் சொன்னது போல ஒரு ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தர்மம் எங்கே. Plan-படி ஜூலை 1 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. PP படத்திற்கு 56 நாட்கள் Gap. த.எ. படத்திற்கு 56 நாட்கள் Gap விட்டு தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 ரிலீஸ் அதன் பிறகு 70 நாட்கள் Gap, நவம்பர் 4 அன்று தீபாவளி. அன்று வசந்த மாளிகை ரிலீஸ்.இப்படி இருந்த திட்டம் PP- யின் அசாதாரண வெற்றியினால் மாறியது. த.எ. இரண்டு வாரங்கள் தள்ளி போடப்பட்டு ஜூலை 15 அன்று வெளியானது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால், முக்தா ஸ்ரீநிவாசன் தனது தவபுதல்வனை சொன்ன மாதிரியே ஆக் 26 அன்று வெளியிட்டார்.(படம் வெளி வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் NT-யின் தாயார் ராஜாமணி அம்மையார் காலமானார்.ஆனாலும் படம் வெளியிடப்பட்டது). இந்த நேரத்தில் ராஜாவின் மகத்தான வெற்றியை தொடர்ந்து பாலாஜி நீதி- யை விரைவாக எடுப்பதை பார்த்த ராமாநாயுடு, தனது வசந்த மாளிகையை செப் 29 அன்று வெளியிட்டார். நீதி டிசம்பர் 7 அன்று வெளியானது. 1972 தீபாவளிதான் NT படம் வெளி வராத தீபாவளி. அதற்கு பிறகு 1987 தீபாவளிதான் மிஸ் ஆனது.
Coming to தர்மம் எங்கே., இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்தில், நடிகர் திலகத்தின் ரசிகர்களின் மத்தியில் இருந்த உணர்ச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. படம் ரிப்போர்ட் சுமார் என்று வந்த போதும்,தியேட்டரில் மிக பெரிய கூட்டம். The atmosphere was electric. You could actually touch it. இரண்டாவது நாள் மாலை காட்சி,அது போல ஒரு மக்கள் வெள்ளத்தை நான் பார்த்ததில்லை. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. பிளவுபடாத நேரம். இந்த படத்தின் கதைப்படி அன்று இருந்த அரசியல் சூழ்நிலைக்கேற்ப பொடி வைத்த வசனங்கள்,அதுவும் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டது. அரங்கிற்கு உள்ளேயும் வெளியேயும் நடிகர் திலகம் வாழ்க என்று விண்ணதிர குரல்கள். நாங்கள் உள்ளே நுழையும்போது படம் ஆரம்பித்துவிட்டது. முதல் காட்சியே நடிகர்திலகம் அறிமுகமாகும் பாடல் காட்சி(சுதந்திர பூமியில் பல வகை மனிதரும்). தொடர்ந்து NT-யின் தங்கையாக வரும் குமாரி பத்மினியை ஒரு அடியாளிடமிருந்து காப்பாற்ற முத்துராமன்,அவனை கொலை செய்துவிட, ஊர் மத்தியில் எல்லோரையும் சோதனை செய்யும் வீரர்கள், அந்த நேரம் முத்துராமனின் உடையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை NT கவனித்து,அதை யாருக்கும் தெரியாமல் முத்துராமனிடம் சுட்டிக்காட்ட, முத்துராமன் மெதுவாக அந்த இடத்தை விட்டு விலக, ஆரம்பமே அமர்களமாக இருக்கும். அந்த விறுவிறுப்பு மட்டும் இடைவேளைக்கு பிறகு இருந்திருந்தால்,படம் மிக பெரிய வெற்றி பெற்றிருக்கும். இப்படி இருந்தும் முதல் 10 நாட்கள் மதுரையில் படம் எல்லா காட்சிகளும் House Full.
இந்த படத்தில் இடைவேளைக்கு முன்னால் நம்பியாரின் கோட்டைக்கு ரகசியமாக 5 பேர் சென்று புரட்சியை நடத்த முடிவு எடுக்கப்படும். பெண் என்பதால் JJ வேண்டாம் என்று NT சொல்லுவார். பிறகு வண்ண காசுக்களை எல்லோரும் எடுக்க செய்து அதில் சிவப்பு(?) வண்ணம் யார் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் செல்வதாக முடிவாகும். JJ-விற்கு அது கிடைக்க, மீண்டும் எதிர்ப்பு வரும். அப்போது JJ பேசும் ஒரு வசனம்"நான் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவள். என்னை யாரும் நிராகரிக்க முடியாது".
ஆங்கில மூலப்படத்தில் கதாநாயகன் இறுதியில் பீரங்கி குண்டுக்களுக்கு இரையாகி இறந்துவிடுவதாக இருக்கும். தமிழிலும் அப்படிதான் முதலில் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் தான் தலைப்பு கூட கேள்விக்குறியாக வைக்கப்பட்டது. (இடைவேளைக்கு முன்னால் "தர்மம் எங்கே? நியாயம் எங்கே? நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே?" என்ற சீர்காழி பாடலும் இடம் பெற்றது).ஆனால் அந்த காலத்தில் நடிகர்திலகத்தின் தொடர் வெற்றிகள் சோக முடிவை சந்தோஷ முடிவாக மாற்றியது. சோக முடிவிற்காக வைக்கப்பட்ட தலைப்பை கடைசி காட்சியில் முத்துராமனை விட்டு ஒரு வசனம் பேச வைத்து "தர்மம் எங்கே என்று கேட்டவர்களுக்கு,அது இங்கே இருக்குன்னு நீ நிரூபிச்சிடே" என்று Justify பண்ணுவார்கள்.மதுரையில் 49 நாட்கள் ஓடின இந்த படம் AVM ராஜன் நடித்த பதிலுக்கு பதில் வெளியான போது(செப் 2,1972) மாற்றப்பட்டது..
-
27th August 2013, 11:18 PM
#1558
Junior Member
Diamond Hubber
thiru ragavendra and mr.gopal avarhalukku pudhiavaahia ennai receive seithatharkku nandri. mattrum ungal ellorudaya pathivuhalum armai. athodu neriyana correct -aana thahavalkalai perithum ethirnoakkum anban...
-
28th August 2013, 07:07 AM
#1559
Junior Member
Devoted Hubber
நண்பர்களே,
இன்றைய தினமலர் செய்தித்தாள் வலைத்தளத்தில் வந்துள்ள ஒரு உருக்கமான கடிதம்..உங்கள பார்வைக்கு..(நன்றி:தினமலர்)
================================================== ================================================== =======================
சினிமா நூற்றாண்டு விழா கமிட்டிக்கு சிவாஜி ரசிகனின் கண்ணீர் கடிதம் - ஸ்பெஷல் ஸ்டோரி!
22
Sivaji fans request to 100th Indian Cinema Celebration Committee : Special Story
அன்புள்ள சினிமா நூற்றாண்டு விழா அமைப்பாளர்களுக்கு அடியேன் சிவாஜி ரசிகனின் அன்பு வணக்கம்...
நம்ம பாரத தேசத்துக்குள்ள சினிமா வந்து 100 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். நம்ம தமிழ்நாட்டுக்குள்ள சினிமா வந்து 75 வருஷம் ஆகிப்போச்சுங்களாம். அந்த விபரமெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நான் வணங்குற தெய்வம், என் அன்பு அண்ணன் சிவாஜி பத்திதான் எனக்கு தெரியுமுங்க. விழுப்புரம் கணேசனா இருந்தவரு சிவாஜி கணேசனா மாறின கதைதான் தெரியுமுங்க. பராசக்திலேருந்து பூப்பறிக்க வருகிறோம் வரைக்கும் 300க்கும் கூடுதலா அவர் நடிச்ச படங்கதான் தெரியுமுங்க. சிவபெருமான், சிவத் தொண்டர், வீரபாகு, கிருஷ்ணன், இப்படியாப்பட்ட கடவுள்கள நாங்க அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். கப்பலோட்டிய தமிழன், பாரதி, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் இவுங்களையும் அவர் உருவத்துலதாங்க பார்த்திருக்கோம். இன்னிக்கு நாலு வேடத்துல நடிக்கிறோம் அஞ்சு வேடத்துல நடிக்கிறோம்னு பீத்திக்கிறாங்களே அன்னிக்கே 9 வேஷத்துல நடிச்ச மனுஷன் அவரு. சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்குறோம்னு பெருமையா சொல்றாங்களே. புதிய பறவையை விடவாய்யா ஒரு சக்சஸ் த்ரில்லர் வேணும்.
அவரு பண்றதெல்லாம் ஓவர் ஆக்டிங்குன்னு அவருக்கு பிடிக்காதவங்க சிலபேரு சொல்லுவாங்க. அந்த காலத்துல அதுதான்யா நடிப்பு. அவரும் தேவர் மகன், முதல் மரியாதையில நீங்க சொல்ற யதார்த்த நடிப்ப காட்டலியா. சிலபேரு அவரு ரொம்ப சிக்கனவாதி, யாருக்கும் எதுவும் செய்றதில்லேன்னு நாக்குல பல்லுபடாம சொல்லுவாங்க. மற்றவங்க மாதிரி உதவி பண்ணிக்கிட்டு அதை பப்ளிசிட்டி பண்ணிக்க தெரியாது அவருக்கு. வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை இருக்கே பாஞ்சாலங்குறிச்சியில அதுக்கு இடமும் வாங்கி கொடுத்து சிலைய அமைச்சும் கொடுத்தது யாரு.. இன்னும் நிறைய இருக்கு.
மக்களுக்காக கட்சி ஆரம்பிச்சு சொத்துல பாதிய இழந்தது யாருக்காவது தெரியுமாய்யா?, பொய் சொல்லத் தெரியாம, துரோகம் பண்ணத் தெரியாம வேளைக்கு ஒண்ண பேசத்தெரியாம அரசியலுக்கு நாம லாயக்கில்லேண்ணு ஒதுங்கினவருய்யா அவரு. காமராசர் ஒருத்தரை மட்டும்தான் கடைசி வரைக்கும் தலைவரா நினைச்சு வாழ்ந்தவரு. இன்னிக்கு புதுசா நடிக்க வர்றவங்க ரெண்டு படத்துலயே நாலு பங்களா கட்டிக்கிறாங்களே. ஆனா என் தலைவனுக்கு இப்பவும் அன்னை இல்லமும், ராயபுரம் சிவாஜி பிலிம்சும், சூரக்கோட்டை பண்ணையும்தான்ய்யா சொந்தம்.
இதையல்லாம் நான் ஏன் உங்களுக்கு எழுதுறேன்னா. சினிமாவோட 100வது பிறந்த வருஷத்தை கொண்டாடப்போறீங்க. ரொம்ப சந்தோஷம். அம்பது வருஷம் சினிமா நடிப்புன்னு வாழ்ந்தானே என் தலைவன் அவனுக்கு என்னய்யா செய்யப்போறீங்க. இதுவரைக்கும் என்ன செஞ்சிருக்கீங்க. அவரு செத்த அன்னிக்கு சினிமா உலகமே கூடி அழுததோட சரி, அதுக்குபிறகு அவரை மறந்துட்டு அவுங்கவுங்க வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நடிகர் சங்கம் என்னிக்காவது அந்த மனுஷனோட பிறந்த நாளை நினைவு நாளை கொண்டாடி இருக்கா. ஆளுயரத்துக்கு அவரோட படத்தை மாட்டி வச்சிருக்காங்களே அதுக்காவது ஒரு மாலைய வாங்கிப் போட்டிருப்பாங்களா. ஆனா மேடையில பேசுறப்போ மட்டும் சிவாஜியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்னு நாக்கூசாம சொல்லுவாங்க.
அடையார் சத்யா ஸ்டூடியோவுக்கு எதிர்ல 2005ம் வருஷம் 22ந் தேதி சிவாஜி மணிமண்டபம் கட்டப்போறோம்னு பூமி பூஜை போட்டப்ப அம்புட்டு சந்தோஷப்பட்டோம். இன்னிக்கு 8 வருஷம் தாண்டிப்போச்சு யாராவது அதை எட்டிப்பார்த்திருக்கீங்களாய்யா. அரசாங்கம் ஒதுக்கின 12 கிரவுண்டு இடமும் சும்மா கிடக்குது. அரசு ஒதுக்கின இடத்தை பயன்படுத்தலேன்னா குறிப்பிட்ட வருஷத்துக்கு பிறகு அரசாங்கம் அதை எடுத்துக்கும் அந்த வருஷத்தையும் நெருங்குது தெரியுமாய்யா? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரெண்டு நடிகராவது ஆட்சிக்கு வேண்டியவங்களா இருக்கீங்க. யாராவது இதை அரசாங்கத்தோட கவனத்துக்கு கொண்டு போயிருக்கீங்களா?
சிவாஜி மணிமண்டபத்துல தியேட்டர் வரப்போவுது, நாடக கொட்டகை வரப்போவுது, நடிப்பு கல்லூரி வரப்போவுது, சிவாஜி மியூசியம் அமைச்சு அதுல அவரோட போட்டோ அவர் அணிந்த உடைகள் எல்லாத்தையும் வைக்கபோறோம்னு கதை கதையா சொன்னீங்க; எல்லாம் எங்கேய்யா போச்சு. சினிமால காட்டுற மாதிரியே சிவாஜி ரசிகனுக்கும் சீன் காட்டிட்டீங்கல்ல. அன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல கட்டப்போறதா திட்டம் சொன்னீங்க. இன்னிக்கு ஒரு கோடி ரூபாய்ல காம்பவுண்டு சுவர்கூட கட்ட முடியாதுங்களே.
சரி அதுபோகட்டும் விடுங்க, அம்மா மணிமண்டபத்துக்கு இடம் கொடுத்தாங்க. அதை கட்டினா பேரு அம்மாவுக்கு போயிடும்னு, அய்யா அதை அப்படியே போட்டுட்டு நாற்பதாண்டுகால நண்பனுக்கு சிலை வைக்கறேன்னு பீச் ரோட்டுல சிலை வச்சாரு. அதுக்கு இன்னய வரைக்கும் தினமும் மாலைபோடுறது சிவாஜி குடும்பந்தான்யா. அட அதுக்குகூடவா நடிகர் சங்கத்தால முடியாம போச்சு. அரசாங்கம் சார்புல பிறந்த நாள் நினைவு நாளுக்கு அமைச்சருங்க மாலை போட்டு மரியாதை செய்வாங்க. அந்த லிஸ்ட்டுலகூட என் தலைவன் இல்லய்யா. அட நீங்களாவது அவரது பிறந்த நாள், நினைவு நாளுக்கு அவரது சிலைக்கு மாலை போட்டிருக்கீங்களா. கர்நாடகாவுல போயி பாருங்க ராஜ்குமாரோட பிறந்த நாளை தீபாவளி மாதிரி கொண்டாடுறாங்க. தெலுங்கு பக்கம் போயி பாருங்க என்.டி.ஆரை தெய்வமா கொண்டாடுறாங்க. நீங்க அந்த அளவுக்கு செய்யவேணாம்யா. அந்த மனுஷனை நினைச்சாவது பார்க்கலாமுல்ல.
இன்னும் நிறைய வவுத்தெரிச்சல் இருக்குது. யாருகிட்டபோயி சொல்றதுன்னுதான் தெரியல. ஏதோ நீங்க விழா கொண்டாடப்போறதால உங்ககிட்ட சொன்னா எதுனாச்சும் செய்வீங்கல்ல அதான் சொன்னேன். குறைஞ்ச பட்சம் அவரோட மணிமண்டபத்துக்காவது ஒரு வழி சொல்லாம நீங்க சினிமா 100 விழா கொண்டாடினீங்கன்னா சாமி இல்லாம தேர்திருவிழா கொண்டாடின மாதிரிதான் இருக்கும். தப்பா எதுனாச்சும் சொல்லியிருந்தா மன்னிச்சிருங்க சாமிங்களா.
அன்புள்ள
சிவாஜி ரசிகன்
-
28th August 2013, 07:53 AM
#1560
Junior Member
Newbie Hubber

Originally Posted by
suharaam63783
thiru ragavendra and mr.gopal avarhalukku pudhiavaahia ennai receive seithatharkku nandri. mattrum ungal ellorudaya pathivuhalum armai. athodu neriyana correct -aana thahavalkalai perithum ethirnoakkum anban...
சுகாராம்,
நீங்கள் பதிவுகளை மாற்றி மாற்றி போடுவதால் ,குழம்பி விட்டீர்களா? இங்கு சுத்தமான சுகாதாரமான, நெறியான, நேர்மையான, ஆதாரத்துடன் கூடிய உண்மை செய்திகளை மட்டுமே எதிர்பார்க்கலாம். நடிகர்திலகம் தன வாழ்வில் காந்திய,காமராஜ் வழியில் நெறிமுறைகளை கடைபிடித்தது போல, படித்த ,பண்புள்ளவர் கூடும் இடமாக இந்த திரி புகழ் அடைந்துள்ளது.நீங்களும் நேர்மையான பதிவுகளை இங்கு இடலாம். உங்களுக்கு பிடித்த நடிகர்திலகத்தின் படங்களுக்கு ஏற்கெனெவே விமர்சனங்களும் ,ஆய்வுகளும் நடந்தேறி விட்டன. கூடிய விரைவில் லிங்க் தருகிறேன்.
Bookmarks