-
29th August 2013, 05:04 PM
#11
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகத்தின் ஸ்டைல் நடிப்பிற்கு மற்றொரு படம். அவலை நினைத்து உரலை இடித்த கதை, அல்ல்து இது போன்ற ஏதாவதொரு பழமொழியை நினைவூட்டிக் கொள்ள வாய்ப்பளித்த படம். பானுமதி மதாலஸா என்ற ராணியாக நடித்திருந்தார். பத்மினி வைஜயந்திமாலா பண்டரிபாய் என பெண்கள் முக்கியமான பாத்திரங்களில் அமைக்கப் பட்டிருந்தாலும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை படத்தை மிகவும் மெதுவாக நகர்த்தி வேகத்தைக் குறைத்து விட்டது. நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பு அழகான தோற்றம் இவையனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக்கி விட்டன. நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை மேலும் மெருகூற்றி திரைக்கதையை அமைத்து அவர் இன்னும் அதிக காட்சிகளில் நடிக்க வாய்ப்பளித்திருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும். வலுவான கதை, பலவீனமான திரைக்கதை அமைப்பு படத்தை மக்களிடம் சரியான முறையில் சென்றடைய விடாமல் செய்து விட்டன. நடிகர் திலகத்தைத் தவிர இப்படத்திற்கு ஆறுதல் சேர்த்தவை, பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும் கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் இசையமைப்பும்.
பாலசரஸ்வதி தேவியின் பெயர் பின்னணி பாடகர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் இசைத் தட்டில் பார் முழுதும் பாடலைப் பாடியவர் பெயராக அவர் பெயர்தான் இடம் பெற்றது என கேள்விப் பட்டுள்ளேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
29th August 2013 05:04 PM
# ADS
Circuit advertisement
Bookmarks