-
4th September 2013, 02:00 PM
#1721
Junior Member
Seasoned Hubber
Mr Gopal Sir,
We can include the following songs in your love duet of NT.
1. Kannoru Pakkam with Vanishree in Niraikudam
2. Mannikanga Vendukiren with Padmini in Iru Malargal
3. Vellikinnamthan again with Vanishree in Uyarndha Manithan
4. Oru tharam with JJ in Sumathi En Sundari
etc.,
-
4th September 2013 02:00 PM
# ADS
Circuit advertisement
-
4th September 2013, 02:40 PM
#1722
Senior Member
Senior Hubber
இதையும் சேர்த்துக் கொள்ளலாம்..
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் - சாந்தி - என் டி.. தேவிகா
இனியவளே என்று பாடி வந்தேன் - சிவகாமியின் செல்வன் - வாணிஸ்ரீ யுடன்

Originally Posted by
s.vasudevan
Mr Gopal Sir,
We can include the following songs in your love duet of NT.
1. Kannoru Pakkam with Vanishree in Niraikudam
2. Mannikanga Vendukiren with Padmini in Iru Malargal
3. Vellikinnamthan again with Vanishree in Uyarndha Manithan
4. Oru tharam with JJ in Sumathi En Sundari
etc.,
-
4th September 2013, 03:10 PM
#1723
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
ஒரு பாடல் காதலர்களின் காதல் ஆழத்தையும், அவர்கள் இணைவு நாடும் அமைதியையும், காம புயலால் அலைக்கழிக்க படும் மனதின் வன்மையையும், இன்பத்தை நாடி எதிர்பார்ப்பில் துடிக்கும் இரு உள்ளங்களை ,மெலடி மூலம் இணைக்க முடியுமா? கண்ணதாசன்- கே.வீ.எம்., TMS ,சுசீலா ,சிவாஜி-தேவிகா இணைவில் சாதித்தனர். முன்போ பின்போ இந்த வகை fusion நிகழவே இல்லை. என்னை மன அமைதியுடன் ,காம தீயில் வேக வைக்கும் இந்த அதிசய பாடல் "மடி மீது தலை வைத்து".
கடவுளே, எங்களை இப்படி இன்ப துடிப்பில் ஆழ்த்தவே இவர்களை படைத்து, எங்களையும் படைத்தாயோ??
பொதுவாக காதலர்கள் தனியே சந்திக்கும் போதுஒரு fantasy நிலையிலேயே இருப்பார்கள்..அதில் பெண்ணின் romantic content அதிகமாகவும்,ஆணின் erotic content அதிகமாகவும் இருக்கும்.அந்த பெண்ணும் சாமர்த்தியமாக அந்த mix ratio நீர்த்து போகாமல் பார்த்துக்கொள்வாள்.அந்த ஆணோ அவளை தன பக்கம் இழுக்க முயற்சிப்பான்..இந்த erotica வை சரியான முறையில் வெளிப்படுத்த தலைவரை விட்டால் வேறு யார் உளர்??
கொஞ்சம் தவறினால் பெரியவர்(அவரேதான்) பாதைக்கு கொண்டு செல்லும். (பாலியல் பலாத்காரம்)
அடக்கி வாசிக்க முயன்றால் அது சிவகுமார் பாதை (சவலைக்குழந்தைபார்வை),
கொஞ்சம் கம்பீரத்தை சேர்க்க நினைத்தால் முத்துராமனின் குழப்ப பார்வையில் முடியும்.
ஜெமினியோ,அந்த பெண் "நீங்கள் வரலாம்" என stamp பேப்பரில் எழுதி கையெழுத்து இடும் வரை,
அவளிடமிருந்து தள்ளி சங்கல்ப முத்திரையில் நின்றிருப்பார்.
SSR அந்த பெண்ணை விட அதிகம் வெட்கப்படுவார்.
AVM ராஜன் எந்த பார்வையையும் "அருள்" பார்வையாக்கி விடுவார்..
ஜெய்ஷங்கரும்,ரவியும் அப்போ சின்ன பசங்க!
தலைவர் ஒருவர்தான் அவர் விரும்பிய அளவில் அதை வெளிப்படுத்துவார்..
இதை நண்பர் கோபால் அவர் "பாணியில்" அருமையாக விவரித்துள்ளார்.வாழ்த்துக்கள்.
Last edited by Ganpat; 4th September 2013 at 03:16 PM.
-
4th September 2013, 03:18 PM
#1724
Junior Member
Newbie Hubber
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -
மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்-சாந்தி
அம்மா கண்ணு சும்மா சொல்லு- ஞான ஒளி
மன்னிக்க வேண்டுகிறேன்- இரு மலர்கள்
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
கண்டேனே உன்னை கண்ணாலே -நான் சொல்லும் ரகசியம்
ஒரு நாளிலே உறவானதே-சிவந்த மண்
உந்தன் கண்ணுக்குள்ளே என்னை பாரு-மரகதம்
நெஞ்சில் குடியிருக்கும்-இரும்பு திரை
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம்-நிறை குடம்
வெள்ளி கிண்ணந்தான்- உயர்ந்த மனிதன்
பொட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி
அங்கே மாலை மயக்கம்- ஊட்டி வரை உறவு
எத்தனை அழகு கொட்டி கிடக்குது-சிவகாமியின் செல்வன்
மேளதாளம்- சிவகாமியின் செல்வன்
இனியவளே- சிவகாமியின் செல்வன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லதொரு குடும்பம்
சந்தன குடத்துக்குள்ளே-தங்க சுரங்கம்
முத்துக்களோ கண்கள்-நெஞ்சிருக்கும் வரை
அலங்காரம் கலையாத-ரோஜாவின் ராஜா
வாழ நினைத்தால்- பலே பாண்டியா
அன்பாலே தேடிய என் அறிவு செல்வம்-தெய்வ பிறவி
காவியமா நெஞ்சின் ஓவியமா-பாவை விளக்கு
புது பெண்ணின் மனசை தொட்டு-பராசக்தி
ஆகாய பந்தலிலே- பொன்னூஞ்சல்
வருவான் மோகன ரூபன்- பொன்னூஞ்சல்
மதன மாளிகையில்-ராஜ பார்ட் ரங்கதுரை
வேலாலே விழிகள்- என்னை போல் ஒருவன்
பூ மாலையில்- ஊட்டி வரை உறவு
இதய ஊஞ்சல் ஆடவா- பேசும் தெய்வம்
ஒன்றா இரண்டா- செல்வம்
பாவை யுவராணி-சிவந்த மண்
கொடுத்து பார் பார் பார் உண்மை அன்பை-விடி வெள்ளி
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி 520
காதலிக்க கற்று கொள்ளுங்கள்- தெய்வ மகன்
கல்யாண பொண்ணு- ராஜா
நீ வர வேண்டும்- ராஜா
கேட்டுக்கோடி உறுமி மேளம்-பட்டிக்காடா பட்டணமா
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு-ராஜா
ரோஜாவின் ராஜா- ரோஜாவின் ராஜா
ஒஹஹோ லிட்டில் ப்ளவர் -நீல வானம்
ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே-நீல வானம்
இங்கே ஆஹா இங்கே-பாலாடை
கங்கை யமுனை- இமயம்
அந்தபுரத்தில்-தீபம்
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோயில்
அந்தமானை- அந்தமான் காதலி
காதல் ராணி கட்டி கிடக்க-திரிசூலம்
திருமாலின் திரு மார்பில்-திரி சூலம்
யமுனா நதி இங்கே-கவுரவம்
இரவுக்கும் பகலுக்கும்-எங்கள் தங்க ராஜா
மும்மும்முமும் முத்தங்கள் நூறு-எங்கள் தங்க ராஜா
ஆடிக்கு பின்னே-சிவகாமியின் செல்வன்
வந்த இடம்- கலாட்டா கல்யாணம்
மெல்ல வரும் காற்று- கலாட்டா கல்யாணம்
தேவன் வந்தாண்டி- உத்தமன்
நாளை நாளை - உத்தமன்
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
செந்தமிழ் பாடும்- வைர நெஞ்சம்.
புது நாடகத்தில்-ஊட்டி வரை உறவு.
பாலக்காட்டு பக்கத்திலே-வியட்நாம் வீடு
இரவும் நிலவும்- கர்ணன்
கனவின் மாயா லோகத்திலே- அன்னையின் ஆணை
கண்களோ காதல் காவியம்- சாரங்கதாரா
தேனுண்ணும் வண்டு- அமர தீபம்
நிறைவேறுமா - காத்தவராயன்
முல்லை மலர் மேலே- உத்தம புத்திரன்
அன்பே அமுதே அருங்கனியே- உத்தம புத்திரன்
தேன் மல்லி பூவே- தியாகம்
ஆஹா மெல்ல நட -புதிய பறவை
சிட்டு குருவி- புதிய பறவை
எனது ராஜ சபையிலே - கல்யாணியின் கணவன்
அமைதியான-ஆண்டவன் கட்டளை
நான் என்ன சொல்லி விட்டேன்- பலே பாண்டியா
இன்று நமதுள்ளமே- தங்க பதுமை
மோகன புன்னகை வீசிடும்-வணங்காமுடி
இகலோகமே- தங்க மலை ரகசியம்
பாவாடை தாவணியில்- நிச்சய தாம்பூலம்
மாலை சூடும் மண நாள்-நிச்சய தாம்பூலம்.
வசந்த முல்லை போலே வந்து-சாரங்கதாரா
தாழையாம் பூ முடிச்சு- பாக பிரிவினை
என்னங்க சொல்லுங்க-எங்க மாமா
நதி எங்கே போகிறது- இருவர் உள்ளம்
அழகு சிரிக்கிறது-இருவர் உள்ளம்
கொடியசைந்ததும் -பார்த்தல் பசி தீரும்
யாருக்கு மாப்பிளை யாரோ- பார்த்தல் பசி தீரும்
கொக்கர கொக்கரக்கோ சேவலே- பதி பக்தி
மான் தோரண வீதியில்- பாட்டும் பரதமும்
கண்ணெதிரே தோன்றினாள்-இருவர் உள்ளம்
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
-
4th September 2013, 04:03 PM
#1725
Junior Member
Devoted Hubber

Originally Posted by
Gopal,S.
நான் மிக மிக ரசித்த சிவாஜி காதல் பாடல் காட்சிகள் -
நான் பேச நினைப்பதெல்லாம்-பாலும் பழமும்
இந்த தளத்தில் நான் நுழைய பயப்படுவதே இதற்குத்தான்..
இப்படி ஒரு போஸ்டை பார்த்தே வெல வெலத்து போய் நிற்கையில்,இதை தொடர்ந்து
அத்தனை படங்களின் பாட்டு புஸ்தகங்களையும் ராகவேந்தர் சார் ஸ்கேன் செய்து போடுவார் பாருங்கள்..
நண்பர் கோபாலுக்கு ஒரு யோசனை..
தலைப்பை சற்று மாற்றியிருந்தால் ஓரிரு பாடல்களோடு முடித்திருக்கலாமே..
"நான் ரசிக்காத சிவாஜி காதல் பாடல் காட்சிகள் "-
-
4th September 2013, 04:52 PM
#1726
Senior Member
Veteran Hubber
ஞானஒளி யின் உணர்ச்சிப்பெருக்கில் மூழ்கியிருக்கும்போது இது என்ன இன்ப அதிர்ச்சி. வசந்த் தொலைக்காட்சியின் தேனருவி நிகழ்ச்சிக்கும், முரசு தொலைக்காட்சிக்கும் நான் அதிகமதிகம் நன்றி சொல்வது, இந்த 'மடிமீது தலைவைத்து' பாடலை அடிக்கடி ஒளிபரப்புவதற்காகத்தான். என்ன ஒரு அற்புதமான டூயட். கருப்பு வெள்ளையில், இன்டோரில் இவ்வளவு துல்லியமாக ஒரு காதல் பாடலை செதுக்கித் தந்த பி. மாதவனும் இங்கே நினைவு கூறப்பட வேண்டியவர்.
வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மடியிலே காலம் நடக்கும் உறவிலே
.................................................. ...................
இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரை பிரிக்காதே..
.................................................. ...................
மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி சிலிர்ப்பிலே பொழுதும் புலரும் அணைப்பிலே
மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்.
ஒவ்வொரு வார்த்தையும் துல்லியமாக கேட்கும் ஒலிப்பதிவு, ஒவ்வொரு அசைவும் துல்லியமாக தெரியும் ஒளிபபதிவு. ஒவ்வொரு வரியையும் அனுபவித்துப் பாடும் டி.எம்.எஸ். மற்றும் சுசீலா. நம்மை அடுத்த உலகத்துக்கு அழைத்துச் செல்லும் அண்ணனும் அண்ணியும். (ரொமான்ஸ்னா இதுதான் ரொமான்ஸ்). எக்காலத்துக்கும் திகட்டாத இளமை ஜோடி. பார்த்தாலே பரவசப்படுத்தும் பருவ ஜோடி. நினைத்தாலே நெஞ்சை அள்ளும் நிகரில்லா ஜோடி. மொத்தத்தில் 'மடிமீது தலைவைத்து' பாடல் காட்சி ஒரு பொக்கிஷம்.
பதிவிட்ட கோபால் அவர்களுக்கு பல்லாயிரம் நன்றிகள்....
-
4th September 2013, 05:14 PM
#1727
Senior Member
Senior Hubber
பாலிருக்கும் பழமிருக்கும் - பாவ மன்னிப்பு
இரவும் நிலவும் வளரட்டுமே - கர்ணன்
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே - எங்கிருந்தோ வந்தாள்
எண்ணிரண்டு பதினாறு வயது (சோலோ தான்..பாட்டு வரிகள் அப்படியே கேப்ச்யூர் பண்ணியிருப்பார்)
ம்ம் இன்னும் வரும் நினைவுக்கு
-
4th September 2013, 05:14 PM
#1728
Senior Member
Veteran Hubber

Originally Posted by
Ganpat
தலைப்பை சற்று மாற்றியிருந்தால் ஓரிரு பாடல்களோடு முடித்திருக்கலாமே..
"நான் ரசிக்காத சிவாஜி காதல் பாடல் காட்சிகள் "-
பால் பொங்கும் பருவம் அதில்
நான் தங்கும் இதயம்
நடிகர்திலகம் - உஷா நந்தினி - குன்னக்குடி - மனிதனும் தெய்வமாகலாம்
(சொதப்பல்)
-
4th September 2013, 05:25 PM
#1729
Senior Member
Diamond Hubber
ஆண்டனியின் அட்டகாசங்கள். (ஒரு கூர்பார்வை)

'ஞான ஒளி' டைட்டில் காட்சியில் ஆண்டனியாக ஆண்டவர் மணி அடிக்கும் போதே நடிகர் திலகத்தின் கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்து விடுகிறது. கள்ளங்கபடமில்லாமல் அவர் கோவில் மணியின் கயிற்றை லேசாக வலது கீழ் உதட்டை பற்களால் கடித்து சிரித்தபடியே அற்புத கேமராக் கோணங்களில் இழுத்து அடிக்கும் போது நம்மை நடிப்புக் கயிற்றால் கட்டிப்போட ஆரம்பித்து விடுவார். அப்போது வீச ஆரம்பிக்கும் நடிப்புப் புயல் 'வணக்கம்' கார்ட் போடும் வரை வலுப்பெற்றுக் கொண்டே போகுமே ஒழிய கொஞ்சம் கூட ஓயவே ஓயாது. குறையவும் குறையாது.
நடிகர் திலகத்திற்கும், விஜயநிர்மலாவுக்கும் ஏற்பட்ட குழாயடிச் சண்டையை பாதிரியார் தீர்த்து வைத்து அனுப்பியவுடன் வி .நிர்மலா பின்னாலேயே ஓடி வரும் இவர் "போறா பாரு நல்லா கோயில் காளை மாதிரி.... சும்மா லங்கு லங்குன்னு"... என்று சொல்லும்போது எதிரே ஒரு பாதிரியார் எதிர்பாராதவிதமாக வந்து விட 'டக்' கென்று கைகளைக் கோர்த்து குனிந்தபடியே ஒன்றும் தெரியாதவாறு ஒரு தோத்திர வணக்கத்தைப் போடுவார் பாருங்கள். படு நேச்சுரல்.
ஓட்டை பிரித்து வி.நிர்மலாவை கயிறு கொண்டு தூக்கும் போது அவருக்கே உரித்தான ஸ்பெஷல் காமெடி பஞ்ச் உண்டு. (குதிரு கனம் கனக்குறா) உடனே நாய் குரைக்கும். அதற்கு இவர் அலறுவதைக் கேளுங்கள் (உங்க அப்பா கூப்பிடறாரு...உங்க அப்பா கூப்பிடறாரு). என்னா ஒரு நக்கல்!... என்ன ஒரு சூப்பரான, கண்ணுக்கு மாறுதலான ஜோடி! இருவரின் உடல் வாகும் கனகச்சிதம். கோபால் சார் சொல்வது போல தலைவர், வி.நிர்மலா ஜோடி இன்னும் சில படங்களில் சேர்ந்து நம்மை சந்தோஷப் படுத்தியிருக்கலாம்.
(இந்த "பணமா பாசமா" புகழ் 'அலேக்' விஜய நிர்மலா தெலுங்குப் படவுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கிருஷ்ணா அவர்களின் மனைவி ஆவார். தலைவர் தெலுங்கில் நடித்த 'பெஜவாடா பெப்புலி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர் இவரே! எனவே தலைவரை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.)
சேஷாத்திரி சவப்பெட்டி வேண்டாம் என்று மறுத்தவுடன் வரும் வேகம், கோபம் டாப். பிரசவ வேதனையில் மனைவி பக்கத்தில் இருக்க முடியாமல் காசாசை காட்டி இப்படி செய்து விட்டாரே என்ற ஆத்திரத்தில் கொதிக்கும் கொதிப்பு அற்புதம். ("இதுக்குன்னு யாராவது வராமலா போயிடுவாங்க" என்று சேஷாத்திரி பெட்டியைப் பார்த்து கூறியவுடன் "அடப் போய்யா...தெரியும்...என்ற அந்த சீற்றச் சீறல்,"யாரையாவது கொன்னுதான் உள்ள போடணும்" என்ற ஆத்திரக் கடுப்பு ஆங்காரமாய் வெளிப்படும்.)
ராணி இறந்து விட்ட சேதியை பாதிரியார் இவரிடம் சூசகமாகச் சொல்ல சொல்ல விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தும் புரிந்து கொள்ளாததுமான முக பாவங்கள்... மெல்ல சந்தேகப்பட்டு வாயிலிருந்து வரும் நம்ப முடியாத கேள்விகள்.
(பாதிரியார்: "இப்பவே தூக்கிக்கிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்கடா"....
ஆண்டனி: தூக்கிகிட்டா?... ஏன் சாமி! ராணியால நடந்து வர முடியாதா?")
"ராணி போயிட்டாடா" என்று பாதிரியார் இவரிடம் சொன்னவுடன் மிக மிக குளோஸ்-அப் காட்சியில் அதிர்ந்தபடியே இவர் முகத்தில் மற்ற இடங்கள் உணர்ச்சியற்ற நிலையில் அந்தக் கன்னக் கதுப்புக்கள் மட்டும் லேசாகத் துடிக்குமே... இவை யாவும் பூலோக விந்தைகள் அல்லாமல் வேறு என்ன!
ஊரிலிருந்து மகள் வந்தவுடன் தனக்காக அவள் என்ன வாங்கி வந்திருக்கிறாள் என்று ந.தி.கேட்க, சாரதா இவருக்காக தான் வாங்கி வந்திருக்கும் பொருள்களை எடுத்துக் கொடுக்க சற்று தூரத்தில் மரப்பெட்டியின் மேல் வைக்கப் பட்டிருக்கும் சூட்கேஸை எடுக்க ஓடுவார். நடிகர் திலகம் சாரதா ஓடுவதை திரும்பிப் பார்ப்பார். திரையில் பார்க்கும் நமக்கு நடிகர் திலகத்தின் பின் பக்க உருவம் முழுமையாகத் தெரியும். அந்தக் காட்சியை நன்கு கவனியுங்கள். இடது கை பழக்கம் உள்ளவனின் மானரிசங்கள் அப்போது அச்சு அசலாக அற்புதமாக நமக்கு இவரால் காட்டப்படும் ...அதாவது இடது கையை மிக லூஸாக விட்டு உடலை ஒட்டியபடி இல்லாமல் சற்று தள்ளி வைத்தவாறு, கொஞ்சம் மேல் நோக்கித் தூக்கியபடி அதுவும் கையை ஆட்டியவாறு இருப்பார். மிகக் கம்பீரமாக இயல்பான ஸ்டைலில் நிற்பார். அந்தப் பின்பக்கக் காட்சியின் போது கூட மார்பை இடது கையால் மறக்காமல் தடவி விடுவார். மருந்துக்குக்கூட தவறு நேராது.
ஊருக்கு வந்த மகளுடன் பாதிரியாரிடம் சென்றிருப்பார். உள்ளே போக மாட்டார். மகள் மாற்றி எடுத்து வந்த ஸ்ரீகாந்தின் இறுக்கமான பேண்ட், ஷர்ட்டை போட்டுக் கொண்டு ஒரு டையை ஏனோதானோவென்று கட்டிக் கொண்டு கூச்சப்பட்டுக் கொண்டு வெளியே நிற்பார். பாதிரியார் கூப்பிட்டவுடன் வருவதைப் பார்க்க வேண்டுமே! ("வாங்கோ... வாங்கோ துரை அவர்களே" என்று பாதிரியார் கிண்டலாகக் கூப்பிட்டவுடன் மகளிடம் "பார்த்தியா" நான்தான் அப்பவே சொன்னேன் இல்ல... சாமி என்னை துரைன்னு கூப்பிடுவாருன்னு" என்ற அர்த்தத்தில் சாரதாவிடம் கைகளால் சைகை செய்து பெருமிதத்தைக் காட்டுவார்)
பரீட்சை நல்லா எழுதியிருக்கியா? என்று பாதிரியார் சாரதாவிடம் கேட்பார். அதற்கு சாரதா "ஒ...யுனிவர்சிட்டியிலேயே பர்ஸ்ட்டா வருவேன் பாதர்" என்று பதிலுரைப்பார். இந்த உரையாடலை இடது கையால் மார்பை தேய்த்தபடியே கவனித்துக் கொண்டிருக்கும் என் தெய்வம் சாரதா பதில் கூறி முடித்தவுடன் இடது கையால் வலது கையை 'சபாஷ்' என்பது போல ஒரு தட்டு தட்டுவார். ஆஹா! என்ன அற்புதமான ரியாக்ஷன்.
மகள் யுனிவர்சிட்டியிலேயே பர்ஸ்ட்டா வருவாள் என்று சொன்னவுடன் தனக்கும் ஏற்படும் அந்தப் பெருமிதம், மகளின் படிப்பின் மேல் உள்ள நம்பிக்கை, "எம் பொண்ணு எம் பொண்ணுதான்" என்ற கௌரவ கர்வம், என்னுடைய வளர்ப்பு... வீண் போகுமா?....அனைத்தும் அந்த ஒரு கைகொட்டலிலேயே நமக்கு உணர்த்தப்பட்டு விடும். உரையாடல் செய்து கொண்டிருப்பது வேறு நபர்கள்... தான் சும்மாதான் நிற்கிறோம்... நமக்கென்ன என்று இருந்து விடாமல் அவர்களையும் கவனித்து அவர்களை மீறி இவர் காட்சிகளில் ஸ்கோர் செய்வதால்தான் உலக நடிகர்களின் குருவாகிறார். நமக்கு தெய்வமாகிறார்.
மேற்கூறிய காட்சி தொடரும். பாதிரியார் பேசியபடியே நடந்துவந்து சாய்வு நாற்காலியில் கைப்பிடிகளைப் பிடித்தபடி அமர்வார். வயது முதிர்ந்த பாதிரியார் அமர சிரமப்படும் போது அருகில் நிற்கும் நடிகர் திலகம் சட்டென பாதிரியார் உட்கார உதவி செய்ய பாதிரியாரின் தோள்களை ஆதரவாகப் பிடித்து அமரச் செய்வார். நடிப்பில் என்ன ஒரு கவனம்! என்ன ஒரு நேர்த்தி! என்ன ஒரு அசாத்திய ஞாபகத்தன்மை! வயதானவர்கள் அமரும் போது நம்மையறியாமல் நாம் உதவி செய்ய எத்தனிப்போமே அதை இந்தக் காட்சியில் அப்படியே நேரிடையாக இவரிடம் காணலாம். (சாரதாவிற்கும் அப்படி உதவி செய்யுமாறு காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும்... hidden... புரிந்து கொள்க)
இன்னும் அந்தக் காட்சி தொடரும். "...... ஆண்டவன் இந்தப் பயலை எனக்குக் கொடுத்தாரு... இவன் மூலமா உன்னைக் கொடுத்தாரு" என்று சாரதாவிடம் பாதிரியார் கூற நடிகர் திலகம் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பாதிரியாரின் மடியின் கீழ் சிறு குழந்தை போல அமர்ந்து லேசான சிரிப்புடன் (உள்மனதில் தான் பட்ட கஷ்டங்களை நினைத்தபடி) அவரது கைகளைப் பிடித்தபடியே அமர்ந்திருப்பார். "பாவம்... வாழ்க்கையிலே எந்தவிதமான சுகத்தையும் காணாதவன்" என்று பாதிரியார் சாரதாவிடம் சொல்லி இவரிடம் இரக்கம் கொள்ளும்போது அமைதியான விசும்பலுடன் பாதிரியாரின் கைகளை இறுகப் பிடித்து அழுத்த முத்தங்கள் கொடுத்தபடியே முத்திரை நடிப்பைப் பதித்து பார்ப்பவர் இதயங்களை இடி விழுந்தது போல கலங்க வைப்பாரே! (எப்பேர்ப்பட்ட ஆய்வாளரும் இந்த ஒரு காட்சியில் நடிகர் திலகம் நடிக்கும் நடிப்புக்கான அர்த்தத்தை விளக்கி விடுங்கள் பார்ப்போம்!). அதுதான்யா என் தெய்வம்...எவராலும் நெருங்க முடியாத நடிகர் திலகம். இந்தக் காட்சியில் நான் எத்தனை முறை கதறி இருக்கிறேன் என்பதை என்னால் கூற முடியாது. நெஞ்சடைக்க, வாயடைக்க மேற்கண்ட பாராவை எழுதுவதற்குள் பெரும்பாடு பட்டு விட்டேன். இனி எழுதத் திராணி இன்று இல்லை.
நாளை தொடர்கிறேன்.
இனம் புரியா மனச் சுமையுடன்
ஆண்டனியின் அடிமை வாசுதேவன்.
Last edited by vasudevan31355; 4th September 2013 at 06:10 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
4th September 2013, 05:37 PM
#1730
Senior Member
Veteran Hubber
சிறிது இடைவெளிக்குப்பின் தனக்கே உரித்தான முத்திரைப் பதிவுடன் வருகை புரிந்திருக்கும் 'நெய்வேலி ஆண்டனி அருண்' அவர்களை (முந்தைய பெயர் வாசுதேவன்) அன்புடன் வரவேற்பதுடன், அற்புதமான பதிவுக்கு நன்றியையும் சமர்ப்பிக்கிறோம்.
ஒவ்வொருவரையும் வரவழைக்க ஒரு யுக்தி இருக்கிறது. தங்களை வரவேற்கும் உத்தி, 'ஞானஒளி' பற்றி பதிவிடுவது.
(கோபால் சொல்கிறார்:: "கார்த்திக்கை வரவழைக்க வழி 'அண்ணனையும் அண்ணியையும்' இணைத்து ஒரு பதிவை இடுவது")...
Bookmarks