-
4th September 2013, 02:59 PM
#491

Originally Posted by
Gopal,S.
நேற்று சாட்டை கையில் கொண்டு மற்றும் உன்மேல கொண்ட ஆசை பாடல்களை கண்கொட்டாமல் பார்த்து கேட்டு மகிழ்ந்தேன்.
வாலி, சுப்பு ஆறுமுகம், டி.கே.ராமமூர்த்தி,சிர்காழி இவர்கள் ரவி சந்திரனுடன் இணைந்து படைத்த அதிசய காதல் ஜோதி. வண்டி பாடல்கள் எல்லாமே டி.கே.ஆர் கை வண்ணம்.(ஜல் ஜல் அவர் composition தான் இணைவு பெயரில் வந்தாலும்) அப்பா ,என்னொவொரு பீட் வண்டியையும் ரயிலையும் இணைத்து ,சீர்காழியில் துள்ளலுக்கு ரவியின் பொருத்தமான துள்ளல் நடிப்பு. (இந்த அழகான இளைஞனுக்கு வண்டிக்காரன் வேஷம் கூட பொருந்தும் அதிசயம்!!!!).
உன்மேல கொண்ட ஆசை ஒரு உள்ளத்தை அப்படியே உயர மிதக்க வைக்கும் மெலடி. ரவியின் அமைதியான ,அர்த்தம் பொதிந்த romance அற்புதமான காவிய பாடலை இன்னும் உயரே உயரே கொண்டு போகும் ஜாலம்.
நாம் கொடுத்து வைத்தவர்கள்.
ஆனால் கோபால் சார் காதல் ஜோதி ரவி ஜோடி ம.பானுமதி என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை. ஜெய் க்கு இளமை கொஞ்சும் காஞ்சனா என்னதான் விதவா விவாஹம் என்று சொன்னாலும் பானுமதியை இளம் விதவை என்று ஏற்று கொள்ள முடியவில்லை
-
4th September 2013 02:59 PM
# ADS
Circuit advertisement
-
4th September 2013, 06:02 PM
#492
Junior Member
Newbie Hubber
Ravi's ideal pair is barathi followed by Kalai selvi.
-
5th September 2013, 09:16 AM
#493

Originally Posted by
Gopal,S.
Ravi's ideal pair is barathi followed by Kalai selvi.
yes sir to some extent you can add kanchana in "Utharavinderi ulle vaa".
kaviyathalaivi one youthful song "Aarambam indre agattum" excellant spb with L.R.humming. See the pair Ravi with sowcar ?
Gk
-
5th September 2013, 01:30 PM
#494
Senior Member
Veteran Hubber

Originally Posted by
gkrishna
kaviyathalaivi one youthful song "Aarambam indre agattum" excellant spb with L.R.humming. See the pair Ravi with sowcar ?
Gk
ஜி.கே.சார்,
சில முற்றிய நடிகைகள் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும்போது மற்றவர்கள் எடுக்கும் படங்களில் அது முடியாது. அந்த ஆசையை தங்கள் சொந்தப்படங்களில் தீர்த்துக் கொள்வார்கள்.
அந்த வகையில்தான் சௌகார், ரவிச்சந்திரனுடன் காவியத் தலைவியில் ஜோடி சேர்ந்ததும். (இதில் சௌகாருக்கு பெல்பாட்டம் எல்லாம் வேறு)
அதுபோல கே.ஆர்.விஜயா மோகனின் ஜோடியாக - நாடகமே உலகம் சொந்தப் படத்தில் ('சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்' என்று ஒரு டூயட் கூட வருமே. )
'நட்சத்திரம்' சொந்தப்படத்தில் ஸ்ரீபிரியா, தன தம்பி வயதும் தோற்றமும் கொண்ட ஒரு பையனுடன் (பெயர் என்ன? ஹரி பிரசாத்தா?) ஜோடியாக நடித்திருப்பார்....
-
5th September 2013, 03:29 PM
#495

Originally Posted by
mr_karthik
ஜி.கே.சார்,
சில முற்றிய நடிகைகள் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும்போது மற்றவர்கள் எடுக்கும் படங்களில் அது முடியாது. அந்த ஆசையை தங்கள் சொந்தப்படங்களில் தீர்த்துக் கொள்வார்கள்.
அந்த வகையில்தான் சௌகார், ரவிச்சந்திரனுடன் காவியத் தலைவியில் ஜோடி சேர்ந்ததும். (இதில் சௌகாருக்கு பெல்பாட்டம் எல்லாம் வேறு)
அதுபோல கே.ஆர்.விஜயா மோகனின் ஜோடியாக - நாடகமே உலகம் சொந்தப் படத்தில் ('சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்' என்று ஒரு டூயட் கூட வருமே. )
'நட்சத்திரம்' சொந்தப்படத்தில் ஸ்ரீபிரியா, தன தம்பி வயதும் தோற்றமும் கொண்ட ஒரு பையனுடன் (பெயர் என்ன? ஹரி பிரசாத்தா?) ஜோடியாக நடித்திருப்பார்....
உண்மை கார்த்திக் சார் மாலதி படத்தில் கூட சரோஜாதேவி ரவியின் மனைவி ஆக வந்து ரவியை திருத்துவார்.
கே.யார்.விஜயா ஜெய் கணேஷ்(அக்கா என்ற ஒரு படம பாலுவின் மேலோடி ஒன்று "மாலை மலர் பந்தல் இட்ட மேகம் " வாணி யின் துணை குரல் உடன் விச்சு இசை ) அதே போல்
விஜயகுமார் கூட வெள்ளிரதம் என்றஒருபடம் (ஜெயச்சந்திரனசுசீல ் அலைமகள மலைமகள கலைமகள என்ற பாடல் ) எல்லாம் ஜோடி போட்டு தாளித்து இருப்பார்
நாடகமே உலகம் முதலில் ரஜனி கால்ஷீட் கேட்டு அவர் இல்லை என்றவுடன் மோகன் ஜோடி என்று படித்த நினைவு
-
7th September 2013, 02:38 PM
#496
Junior Member
Seasoned Hubber
கடந்த சில நாட்களாக எழுத முடியவில்லை , வேலை பளு மற்றும் ஹர்ட் டிரைவ் பழுது ஆகி விட்டதால் எதுவும் நடக்கவில்லை
இந்த பிரச்சனைகளுக்கு இடையில் naan பார்த்த படம் தான் நினைவில் நின்றவள்
முழு நீல காமெடி படம் .
கதை என்று பார்த்தால் , ஒரு பெண் (KR விஜயா) ஒரு விபத்தினால் தன் நினைவை எழகிறார் ரவி மற்றும் நாகேஷ் உடன் சேர்ந்து வசிக்க நேர்கிறது , ரவி KR விஜயா வை கல்யாணம் செய்து கொள்கிறார் , ஒரு விபத்தில் KR விஜயா வுக்கு பழைய நினைவு வருகிறது , அதனால் ரவி யை கல்யாணம் செய்தது மறந்து போகிறது , ரவி விஜயா வை தேடி அலைகிறார் , முடிவு என்ன என்பதை சிரிக்க சிரிக்க விடை கூறும் படம் தான் இந்த நினைவில் நின்றவள்
இந்த மாதிரி ஒரு சீரியஸ் கதை யை சிரிக்க சிரிக்க சொல்வது சோ வை தவிர யாராலையும் முடியாது . படம் பூரா சிறுப்பு மத்தாப்பை கொளுத்தி போடுகிறார் சோ , இந்த படத்தில் அவர் dual ரோல் வேறு கதை , வசனம் , நடிப்பு என்று
கூட நாகேஷ் வேறு கலகலப்பு க்கு வேறு என்ன வேணும் , இது போதாது என்று சச்சு , மனோரமா கூட சேர்ந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார்
இந்த படத்தில் ரவி க்கு scope கம்மி தான் இருந்தாலும் நாகேஷ் யை முன் நிறுத்தி , தானும் நடித்து , தன்னகும் காமெடி வரும் என்பதை நிருபித்து விடுகிறார்
படத்தின் ஆரம்பம் முதலே சிரிப்பு தான்
முதல் காட்சியில் சோ மனோரமா வின் புடவை யை கிழித்து shirt தைத்து போட்டு கொண்டு அதை மறைப்பதும், தன் அண்ணன் மகள் யை தேடி சென்னையில் அலைவதும் , பெண்கள் யிடம் அடி வாங்கி , அதை பேப்பர் யில் வந்த உடன் மறைப்பதும் , நாகேஷ் க்கு உதவி செய்யும் காட்சி , KR விஜயா தான் ரவி யின் மனைவி என்று தெரிந்த உடன் உதவி செய்ய பொய் மாட்டி கொள்வதும், மனிதர் ஜமாய்த்து இருக்கிறார்
சோவுக்கு சரியான ஜோடி மனோரமா சதா தன் கணவரை திட்டி கொண்டு இருப்பதும் , பேப்பர் யில் தன் கணவர் யின் பெயர் வந்த உடன் அதை மரிக்க எல்லா பேப்பர் யையும் வாங்குவதும் , தான் கர்பிணி என்பதை மாத்தி KRV தான் கர்ப்பம் என்று சொல்லி கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்து கலக்குகிறார்
நாகேஷ் சோ , மனோரமா , KRV , ரவி என்று எல்லா காட்சிகளிலும் கலகலப்பு க்கு உத்தரவதாம் கொடுக்கிறார்
வீட்டை வாடகைக்கு விடும் காட்சியில் , KRV சமைக்கும் காட்சியில் , interview காட்சியில் , சோ , மனோரமா உடன் திட்டம் தீட்டும் காட்சி என்று சிரிப்பு தோரணம் தான்
ரவியும் தன் பங்குக்கு நாகேஷ் உடன் சேர்ந்து சிரிப்பு தோரணம் கட்டுகிறார் , சண்டை காட்சியில் வழக்கம் போல சுறு சுறுப்பு , மனைவியை பிரிந்து தேடும் காட்சியில் , ராதா தான் தன் மனைவி என்று அலைபாயும் மனதில்அற்புதமாக முகத்தில் கொண்டு வந்து விடுகிறார்
முக்தா ஸ்ரீனிவாசன் படங்களுக்கு உண்டான சிரிப்பு கதை , ஒரு நோய் யின் அடிப்படையில் கதை அமைத்து நம்மளை 3 மணி நேரம் சிரிக்க வைக்க விடுகிறாக்கள்
-
21st September 2013, 08:09 AM
#497
Junior Member
Newbie Hubber
Rahul Ram,
I love your review on Ninaivil Nindraval. One of my favourite Teen movies. Muktha has derived his formula from the success of Thenmazhai and continued there on.
Ninaivil nindraval plusses are Cho for dialogue, V.Kumar's Music (paravaigal siraginal outstanding),apart from Ravi,Cho and Nagesh.
-
28th February 2014, 10:38 AM
#498
Senior Member
Seasoned Hubber
-
3rd June 2014, 10:23 AM
#499
dear all
enakku raviyin "akkarai patchai" mattrum janaki sabatham vcd thevai. chennaiyil kidaikiratha
-
4th June 2014, 06:29 AM
#500
Senior Member
Diamond Hubber
ஹாய் கோ,
இப்போது அசரப் போகிறீர்கள் பாருங்கள். உங்கள் ரவியும், எங்கள் லதாவும் இளமை கொப்பளிக்க படு ஸ்டைலாக ஆடிப் பாடும் இரு பாடல்கள். அற்புதமான பாடல்கள். நீண்ட நாட்கள் பார்க்க முடியாதா என்று ஏங்கித் தவித்த பாடல்கள் 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்தில். நான் ரொம்ப என்ஜாய் செய்து பார்த்தேன். நீ பார்த்து விட்டு உன் அசத்தல் நச்' கருத்தை பதிவு செய். பிறகு பாடலைப் பற்றி விரிவாக அலசலாம். ஓகேவா?
ஓரிடம்.... உன்னிடம்
பெண்ணுக்கு சுகம் என்பதும்
Bookmarks