Page 198 of 399 FirstFirst ... 98148188196197198199200208248298 ... LastLast
Results 1,971 to 1,980 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #1971
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    வெற்றிக்கு ஒருவன் (08.12.1979)

    நண்பர் கோல்ட்ஸ்டார் சதீஷ் திடீரென ‘வெற்றிக்கு ஒருவன்’ ஸ்டில்களைப் பதிவிட்டிருப்பதை பார்த்ததும் எனக்கும் நினைவு பின்னோக்கிப் பயணிக்கத் துவங்கியது. ரிலீசன்று முதல்முதல் பார்த்த அனுபவம் மனதில் நிழலாடத் துவங்கியது. (பிறகென்ன, இதுபோன்ற நினைவலைகள் மற்றும் அசைபோடல்கள்தானே நம் சொத்துக்கள்). நடிகர்திலகத்தின் படங்கள் வழக்கம்போல சனிக்கிழமை வெளியாவது போலவே இந்தப்படமும் சனிக்கிழமையன்று ரிலீசானது. முதல் நாள் காலைக்காட்சி மன்றத்துக்கான ஸ்பெஷல் காட்சியாக கீழ்ப்பாக்கம் ஈகா திரையரங்கில் நடைபெற்றது. அன்றைக்கு காலை மிக முக்கியமான வேலை இருந்ததால் ஸ்பெஷல் காட்சிக்குப்போக முடியவில்லை. சாந்தி வளாக நண்பர்களான கோவை சேது, மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், வீரராகவன் அன்புள்ள காலைக்காட்சிக்கு ஈகா சென்றிருந்தனர். படம் எப்படி என்று தெரிந்துகொள்ள மனது அலை மோதியது. காலைக்காட்சி பார்த்துவிட்டு வீடுகளுக்கு சென்றவர்கள் மாலை 3.30 மணிக்கு மீண்டும் சாந்தியில் கூடினர். சாந்தியில் அப்போது பட்டாக்கத்தி பைரவன் 51-வது நாளாக ஓடிக்கொண்டிருந்தது. வெற்றிக்கு ஒருவன் படம் பற்றிய ரிசல்ட் இப்படியும் அப்படியுமாக இருந்தது. (வெற்றிக்கு ஒருவன் படத்தின் முந்தைய பெயர் 'கண்ணே கனியமுதே', இது முன் வந்த 'அன்பே ஆருயிரே' பெயர்போல உள்ளது என்ற அதிருப்தி ரசிகர்கள் மத்தியில் உலவியது. வெற்றிக்கு ஒருவன் என பெயர் மாற்றப்பட்ட பின் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்).

    அத்துடன் இப்படம் கவரிமான் படக்கூட்டணியால் உருவாக்கப்பட்டு வந்ததால் அதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதே கூட்டணியால் உருவாக்கப்பட்டு வந்த 'ரிஷிமூலம்' படமும் அப்போது தயாரிப்பில் இருந்து வந்தது.

    ரசிகர்கள் அனைவரும் (ஸ்பெஷல் காட்சி பார்த்தவர்கள் உள்பட) மாலைக்காட்சிக்கு திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ரிசர்வ் செய்திருந்தோம். (படம் ஸ்டார், ஸ்ரீகிருஷ்ணா, ஈகா தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது). எனவே நான்கு மணியளவில் சாந்தியில் இருந்து ஜாகையைக் கிளப்பிக்கொண்டு ஸ்டார் நோக்கி நடையைக்கட்டினோம். ஏற்கெனவே படம் பார்த்திருந்தவர்கள் காட்சிகளைப் பற்றி சிலாகித்துப் பேசியவண்ணம் வந்தனர்.

    திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எப்போதும் ஹிந்திப்படங்கள் அதிகமாக ஓடக்கூடிய தியேட்டர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் உருது பேசும் முஸ்லிம்கள் அதிகமிருப்பது காரணமாக இருக்கலாம். யாதோன்-கி-பாராத் அங்குதான் ஒரு வருடம் ஓடியது. தமிழ்ப்படங்கள் அபூர்வமாகவே திரையிடப்படும். வருடத்தில் 12 வாரங்கள் அனைத்து அரங்குகளிலும் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்ற அரசு சட்டமியற்றியபின் அங்கு ஸ்டாரில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டன. அப்படி திரையிடப்பட்ட சிவகுமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்களுக்கு மேல் செம ஓட்டம் ஓடியது. அப்படி ஸ்டாரில் திரையிடப்பட்ட படம்தான் வெற்றிக்கு ஒருவன். (நண்பகல் காட்சி பார்ப்பதற்கு மிக அருமையான தியேட்டர் ஸ்டார்).

    படம் சுமார் என்ற ரிசல்ட் வந்திருந்த போதிலும் நமது ரசிகர்கள் தியேட்டர் அலங்காரங்களிலும், மாலைகளிலும் குறை வைக்கவில்லை. ஆனால் எப்படித்தான் அலங்காரம் செய்தாலும் சில தியேட்டர்களில் எடுபடாது. அதில் ஸ்டார் தியேட்டரும் ஒன்று. அந்த சமயத்தில் சாந்தி வளாகத்தில் இளையராஜா எதிர்ப்பு கோஷ்டி ஒன்று உருவாகி, இளையராஜா இசையமைத்த படங்களைப் பற்றி குறை சொல்வதும், குதர்க்கம் பேசுவதுமாக இருந்து வந்தது. இந்தக்கூட்டத்துக்கு செல்வராஜ் என்பவர் தலைமையேற்று வீண் விவாதங்கள் செய்து வந்தார். அவர்களும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள்தான். இருப்பினும் இளையராஜா படங்கள் என்று வரும்போது நடிகர்திலகத்தின் படங்களையும் வைத்துப்பார்க்காமல் பேசுவார்கள். இதனால் சாந்தியில் பலமுறை வீணான சச்சரவுகள் வந்துள்ளன. ஏற்கெனவே இவர்கள் கவரிமான், நல்லதொரு குடும்பம் போன்ற படங்களை கன்னா பின்னாவென்று விமர்சித்துள்ளனர். இப்போது செல்வராஜும் தன கூட்டத்துடன் ஸ்டாரில் ஆஜராகியிருந்தார். அவர்கள் காலை சிறப்புக்காட்சி பார்த்திருந்ததால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பற்றியெல்லாம் அவர்கள் மட்டமாக பேசத்துவங்கியதும், ரசிகர்கள் மத்தியில் திடீரென கலவரம் மூண்டது. (அவர்கள் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றியோ மற்ற விஷயங்களைப்பற்றியோ குறை சொல்ல மாட்டார்கள். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இப்படி மட்டமாக பேசுவது ரசிகர்களுக்கு ஆத்திரமூட்டத்தானே செய்யும்).

    அதுவும் கலவரம் நடந்தது போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில். நல்லவேளை போலீஸ் வந்து தலையிடுவதற்குள் மன்றத்தினரே கலவரத்தை அடக்கி விட்டனர். இது முடிந்த கையோடு மாலைக்காட்சிக்கு கதவுகள் திறக்க உள்ளே போய்விட்டோம்.

    டைட்டில் அட்டகாசமாகத் துவங்கினாலும், படம் துவக்கம் மந்தமாகவே இருந்தது. தொட்டதற்கெல்லாம் பயப்படும் கோழையாக நடிகர்த்திலகத்தைப்பார்க்க கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. போகப்போக படம் டல்லடித்தது. எஸ்.பி.முத்துராமன், இளையராஜா. பாபு கூட்டணியிலிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தந்தையின் கொலை நடந்ததை நினைத்து நினைத்து நடிகர்திலகத்துக்கு தைரியமும், ஆவேசமும், பழியுணர்ச்சியும் பொங்கத் துவங்கியதிலிருந்து படம் சூடு பிடித்தது.

    நடிகர்திலகம் - ஸ்ரீபிரியா ஜோடியின் டூயட் பாடல் 'தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி' பாடல் மிக நன்றாகப் படமாக்கப் பட்டிருந்தது. வில்லனின் கையாள் 'லென்ஸ்-கன்' கொண்டு சுடுவதற்காக, பலமாடிக் கட்டிடத்தில் ஏறும்போது படிக்கட்டில் அவன் காலடியோடு கூடவே கேமரா தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியில் பாபுவின் ஒளிப்பதிவு கைதட்டல் பெற்றது. இதற்கு சற்று முன் மூடுபனியில் பாலுமகேந்திரா இதை முயற்சித்திருந்தாலும் இந்த அளவுக்கு தொடர்ச்சியாக இல்லை.

    தைரிய புருஷனாக ஆனபின் நடிகர்திலகத்தின் நடிப்பு தூள் பரத்தியது. அதர்க்கேற்றாற்போல வில்லன் நம்பியார், அவரது மேனேஜர் ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். தியாகம் படத்துக்குப்பின் இந்தப்படத்தில் ஜஸ்டின், நடிகர்திலகத்துடன் சண்டைக்காட்சியில் நடித்திருந்தார். ஸ்ரீபிரியா ஜோடிப்பொருத்தம் இப்படத்தில் நன்றாக இருந்தது. படம் முடிந்து வெளியே வந்தபோது, சிறப்புக்காட்சி பார்த்த ரசிகர்கள் சொன்ன அளவுக்கு மோசமில்லைஎன்று தோன்றியது. அவர்கள் காலையில் ரொம்ப எதிர்பார்த்துப்போய், எதிர்பார்த்தபடி இல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் போலும். ஆனால் மாலையில் நாங்கள் மோசமான ரிசல்ட்டோடு பார்க்கச்சென்றதால் பரவாயில்லை என்று தோன்றியதோ என்னவோ.

    இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சமீபத்திய தொலைக்காட்சி பேட்டிகளில் நடிகர்திலகத்துடன் தான் பணியாற்றிய அனுபவங்களைக் கூறும்போது, தான் பணியாற்றிய கவரிமான், வெற்றிக்கு ஒருவன், ரிஷிமூலம் மூன்றும் சரியாகப்போகவில்லை என்ற தவறான தகவலைச் சொல்லி வருகிறார்.. அவரது இயக்கத்தில் வந்த 'ரிஷிமூலம்' மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது. புவனேஸ்வரி தியேட்டரில் அப்படத்தின் 100-வது நாள் ஷீல்டைப் பார்த்திருக்கிறேன்.

    'ரிஷிமூலம்' என்றதும் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 40-க்கு 38 இடங்களில் அமோக வெற்றிபெற. அ.தி.மு.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன. இதைத்தொடர்ந்து கருணாநிதியின் நச்சரிப்பால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலையில் நடந்துகொண்டிருந்த அரசு கலைக்கப்பட்டது (இந்திரா செய்த பெரிய தவறு). அமைச்சரவை கலைக்கப்பட்டதை கண்டித்து எம்.ஜி.ஆர். தலைமையில் மவுண்ட் ரோடு அண்ணாசிலையிலிருந்து கவர்னர் மாளிகைக்கு மாபெரும் கண்டன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் சாந்தி தியேட்டர் அருகே வந்தபோது, சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கே ஓடிக்கொண்டிருந்த ரிஷிமூலம் படத்தின் பேனர்களும், கட்-அவுட்களும் முற்றிலும் கிழித்தெறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர் இருந்த வாகனம் முன்னே புகாரி ஓட்டல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த அ.தி.மு.க.வினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1972
    Junior Member Regular Hubber
    Join Date
    May 2021
    Location
    Fiji
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Gopal Siri am not able to know in which year you were there and your present age.I am 47now and i was in my 20-23 yrs of age at neyveli.,I have gone through your threads detailing some political background of the fans and you have openly declared the leadres you accept.I am almost in your line of thinking and lot of frequency matching is there .Only problem is that I may not be regular to the thread,but still I am happy to have come in contact of people like you.Thank you.Wishes.
    Quote Originally Posted by Gopal,S. View Post
    Vetrikku oruvan- Sivaji's amasing remorse after hís father's death ís a scene to remember. Adal Padalil dance hás some òf the
    graceful and well executed dificult steps.Thanks Gold Star.

    Pon- I lived in Neyveli for the first 17 years òf my life in E-41-Kamaraj Road(Main Bazaar Road Re-chritened),Block-18 just opposite to Girls' High School.

  4. #1973
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் சுப்பு சார்,

    அருமையான காட்சியை தரவேற்றியுள்ளீர்கள், இறுதியில் தலைவர் பாசத்தோடு மு க வை தழுவும் போது அந்த நாள் ஞாபகம் பாடலோடு தலைவர் மற்றும் முக வின் அந்நாளைய புகைப்படமும் பின் இருவரின் இந்நாளைய புகைப்படமும் பின் தலைவரது சிலையை மட்டும் காணும் போது மனம் ஏனோ வலித்தது.
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  5. #1974
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்
    வெற்றிக்கு ஒருவன் ரிலீஸ் நாள் நினைவுப் பதிவு நம் எல்லோரையும் அந்நாளுக்கே அழைத்துச் சென்று விட்டது.

    அந்நாளைய நினைவுகளை அசை போட மற்றோர் பதிவு

    சென்னை சாந்தி திரையரங்கில் அவன் தான் மனிதன் ஓடிக் கொண்டிருந்த போது நடிகர் திலகத்தின் கட் அவுட்



    அன்பே ஆருயிரே திரைப்படத்தில் நடிகர் திலகம் திரைப்படம் பார்ப்பதாக வரும் காட்சியில் இது இடம் பெற்றது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1975
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    செப்டம்பர்-21

    முக்கிய நிகழ்வுகளுக்கு ஒரு வாரம் முன்பாவது கட்டியம் கூறுதல் தமிழ் மரபன்றோ?

    அரசே அங்கீகரித்தாயிற்று,உனக்கும் சினிமாவுக்கும் உள்ள பிரிக்க முடியா பந்தத்தை,நூற்றாண்டு விழாவை உன் பிறந்த நாளிலே தொடங்க சொல்லி.

    தந்தைக்கு உபதேசம் செய்தான் அந்த சாமிநாதன்.
    ஆனால் தெய்வத்தின் திறமையிலே மூழ்கி மெய்மறந்து, அவர் வியாபார பராகிரம சாதனை மறந்திருந்த இந்த தந்தைகளுக்கு ,காலத்தால் பிந்திய பம்மல் சாமினாதனன்றோ ஆவண மந்திரங்களை தந்தருளினான்.

    கலிபோர்னிய அனைத்துலக மூளையும் இணைந்தும் வடிவமைக்க முடியா நினைவதிசயமே?என்னுடன் உரிய நேரம் வந்திருந்தால் கங்கையாக ஓட வேண்டியதை ,கமண்டலத்தில் அடைத்து விட்டாயே? ஆனால் ஒரு சினிமா அகத்தியனின் கமண்டலத்தில் அடை பட்டு உனக்கும் பெருமை தேடி,எங்களையும் நிமிர வைத்து விட்டாய்.

    தமிழர்களுக்கு அதிசய உன்னத லட்சிய மலர்மாலை கட்ட ,காகித பூக்களால் ஒத்திகை பார்த்து விட்டாய்.

    உனக்கு திருமணமாகி, ஒவ்வொரு தமிழனின் லட்சிய கனவாகிய நடிகர்திலகம் போல வீடமைய அனைத்தும் வல்ல இறைவனை துதித்து உன்னை வாழ்த்தும் அன்பு அண்ணன்.

  7. #1976
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கார்த்திக் சார்,

    நன்றி! 'வெற்றிக்கு ஒருவன்' அட்டகாசப் பதிவைத் தந்து என்னுடைய கடலூர் நினைவுகளை கிளர்ந்தெழச் செய்து விட்டீர்கள். உங்கள் அன்புள்ள காலைக்காட்சியை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். தங்களாலும், ராகவேந்திரன் சாராலும், ராமஜெயம் சாராலும் கடலூர் வாசியான எனக்கு தங்களின் சென்னை அனுபவங்கள் கலக்கலாகக் கிடைக்கின்றன. அருமையான மெமரி பவர். (இது ஓவர் டோஸ் இல்லை. இருந்தாலும் தங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காது என்று நினைக்கிறேன்) நீங்கள் சொன்னது போல சுமாரான ரிசல்ட்தான் இங்கும் கடலூரில் கிடைத்தது. படத்தின் பின் பகுதி ஜெட் வேகமெடுத்தது. முன்பகுதி வெகுவாக சொதப்பியது. பொதுவாக ரசிகர்களுக்கு ஏமாற்றமே. அப்படியும் மூன்று வாரங்களுக்குக் குறையாமல் கடலூர் பாடலியில் நன்றாகத்தான் போனது. இளையராஜா நன்றாகப் பண்ணியிருந்தார். "யார் ..மாமனோ ஜோடியோ" ஜானகியின் குரலில் வித்தியாசமான ஒரு காபரே நடனப் பாடல். சண்டைக் காட்சிகள் நல்ல விறுவிறுப்பு. சமகால நடிகர்கள் வாயில் விரலை வைக்கும் வண்ணம் "ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ" நீக்ரோ நடனப் பாடலில் நடிகர் திலகத்தின் அநாயாசமான மூவ்மெண்ட்ஸ். நம்பியாரின் வில்லத்தனம் எல்லாம் இருந்தும் முன் கதையால் முக்காடு போட்டுக் கொண்ட திரைப்படமாயிற்று. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்குக் குறைவில்லை. இப்படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். விரைவில் முயற்சிக்கிறேன். ஆனால் இந்த சிறிய பதிவுக்கு மூல காரணாமாய் இருந்த கோல்ட் ஸ்டாருக்கும், அட்டகாசமான தங்களுக்கே உரித்தான பாணியில் 'வெற்றிக்கு ஒருவன்' பதிவைத் தந்து கடலூர் நினைவுகளை பின்னோக்கிப் பார்க்க வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! தங்களின் ஜோரான வெற்றிக்கு ஒருவனுக்கு என்னுடைய சிறிய பரிசு.

    'வெற்றிக்கு ஒருவன்' படத்துவக்க விழாவில் நடிகர் திலகம். (நன்றி: இந்து)



    'வெற்றிக்கு ஒருவன்' ஸ்டில்ஸ்



    நடிகர் திலகமே தெய்வம்

  8. #1977
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    "ஆடல் பாடலில் உலகமே மயங்காதோ" நீக்ரோ நடனப் பாடலில் நடிகர் திலகத்தின் அநாயாசமான மூவ்மெண்ட்ஸ்.

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #1978
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'தோரணம் ஆடிடும் மேடையில்'

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #1979
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'முத்தமிழ்ச்சரமே இளங்கொடி மலரே' (டி.எம்.எஸ், ஷைலஜா முதன் முதலில் இணைந்த சூப்பர் டூயட்)

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #1980
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வெற்றிக்கு ஒருவனில் பிடித்தவை

    1. அட்டகாசமான டைட்டில் காட்சி. . ஓடி வந்து கையைத் தூக்கியபடி தரும் சூப்பர் ஸ்டைல் போஸ்.விதவிதமான நெகடிவ் ஷேட்களில் கோபமான முகபாவங்களில் நடிகர் திலகம். அப்படியும் இப்படியும் கைகளால் குத்துவது போன்ற ஷாட்கள். அதற்கேற்ற ராஜாவின் அதிரடி பின்னணி இசை.

    2.மேஜருடன் டைனிங் ஹாலில் நடிகர் திலகம் முட்டை சாப்பிடும்போது முட்டை ஓடு வாயில் பட்டுவிட அதை அறியாமல் 'முட்டையிலே முள்ளு' என்று சொல்லும் அப்பாவித்தனம்.

    3.மேஜர் நம்பியாரின் வீட்டிற்கு income tax ரெய்ட் போகும் காட்சி. மிகப் பிரமாதமான விறுவிறு காட்சி. (மேஜர் கம்பீரமாகப் பண்ணியிருப்பார்),
    நம்பியாரும், ஒய்.ஜி.பியும் கடப்பாரை கொண்டு இடித்து சுவற்றில் பதுக்கியுள்ள தங்கங்களையும் பணத்தையும் வெளியே எடுக்க எத்தனிக்கையில் மேஜர் பொறி வைத்து வில்லன்கள் இருவரையும் பிடிக்கும் கட்டம்.

    (மேஜர் ரோலை தலைவரே செய்திருந்தால் இன்னும் படம் நன்றாகப் போய் இருக்கும் என்பது எனது கருத்து. தலைவர் பின்னிப் பெடல் எடுத்திருப்பார்)

    4. நடிகர் திலகம், புஷ்பலதாவுடன் கல்யாணப் பத்திரிகை கொடுத்து விட்டு வரும் மேஜரை உயர்ந்த கட்டடத்தின் மொட்டை மாடியிலிருந்து மோகன்பாபு லென்ஸ் துப்பாகியால் சுட்டு வீழ்த்தும் அந்த திக் திக் பரபரப்புக் காட்சி. அதற்கேற்ற ராஜாவின் அற்புத பின்னணி இசை. (தொங்கியிருந்த படத்தை தூக்கி நிறுத்தும் காட்சி)

    5. தந்தையின் மரணத்தைத் தாங்க மாட்டாமல் சாப்பிடச் சொல்லும் ஸ்ரீபிரியாவிடம் தந்தை தனக்கு ஊட்டி ஊட்டி வளர்த்ததை எண்ணி எண்ணி சொல்லி சொல்லி சிரிப்பும் அழுகையுமாக உணர்ச்சிகளைக் கொட்டுமிடம்.

    6. ஹோட்டலில் ஜக்கு மற்றும் அடியாட்களை நடிகர் திலகம் புரட்டி எடுக்குமிடம்.

    7. நம்பியாரிடம் சேட்டாக மாறுவேடத்துடன் தேங்காயுடன் வந்து கலக்குமிடம்.

    8. தேங்காய் ஸ்ரீனிவாசனை மோகன்பாபு சுட்டுக் கொலை செய்தவுடன் சிம்மம் போல சீறி கையில் உருட்டுக் கட்டையுடன் எதிரிகளைப் பந்தாடித் துவைக்கும் காட்சி. (நடிகர் திலகத்திடம் அப்படி ஒரு ராட்சஷ வேகம்!)

    9. 'ஆடல் பாடல்' பாடல் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் ட்ரம்ஸ் இசைக்கு ஏற்றவாறு நடிகர் திலகம் ஸ்ரீபிரியாவுடன் ஆடும் அந்த அற்புத நீக்ரோ நடனம்.. கலக்கி எடுக்கும் டி .எம்.எஸ்ஸின் கம்பீரக் குரல்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •