-
15th September 2013, 05:36 PM
#2021
Junior Member
Devoted Hubber

Originally Posted by
NTthreesixty Degree
கோபால் சார்,
உங்களுடைய "ராஜா" நடை அற்புதம்.
1972 வின் " hero 72 " அல்லவா நம் திரை உலக சித்தர்.
ராஜா திரைப்படம் மூலம் நடிகர் திலகத்தின் மற்றொரு முகம் இந்த திரை உலகம் கண்டது. அதுவரை அவருடைய திரைப்படங்களில் மசாலா என்ற ஒரு விஷயம் இருப்பது அவ்வளவு துல்லியமாக எடைபோடபடவில்லை.
ராஜா திரைப்படத்தை பார்த்தோமேயானால் அவரின் நடை, உடை, பாவனை எல்லாமே முதல் ரகம்.
விதவிதமான உடைகள் இவை அனைத்தும் ஏனோ தானோ என்ற வண்ணத்தில் இல்லாமல் ஒரு hollywood முறையில் இருக்கும்.
அதுவும் அந்த கருப்பு நிற transparent ஷர்ட் இரண்டில் ஒன்று பாடலில் வரே...வா ..! கலைச்செல்வியும் அதற்கேற்றார்போல shorts போட்டுகொண்டு வருவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
ராஜாவின் வசூல் பற்றி சொல்ல தேவையே இல்லை !
குறிப்பாக DEVIPARADISE திரையரங்கு வரலாற்றில் 1972 ராஜாவிற்கு முன் வெளிவந்த அனைத்து திரைப்படங்களின் வசூல் சாதனைகளை சர்வ சாதாரணமாக சொடுக்கு போடும் நேரத்தில் குறைவான நாட்களிலேயே "ராஜா " மிகவும் ஸ்டைலாக முறியடித்தது என்றால் அது மிகையில்லை.
ராஜான்னா ராஜாதான் !
.....
-
15th September 2013 05:36 PM
# ADS
Circuit advertisement
-
15th September 2013, 06:13 PM
#2022
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
இந்த படம் மிக பெரிய வெற்றி பெற்றும் நடிகர்திலகம் திரும்பி திரும்பி இதே மாதிரி படங்களில் சிக்கி கொள்ளவும் இல்லை என்பதே நடிகர்திலகத்தை வித்யாசம் காட்டியது.
ராஜாவுக்கு அடுத்ததாக ஆண்டனியாகவும், அருணாகவும் முற்றிலும் வித்தியாசம் காட்ட இந்த ஒரு ராஜாவாலேதான் முடியும். கூண்டிலே அடைபடாத, அடைத்து விட முடியாத சிங்கமல்லவா!
Last edited by vasudevan31355; 15th September 2013 at 07:34 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th September 2013, 06:34 PM
#2023
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
(தடக் தடக்).முடிந்து தன் கயிற்றை அறுத்து வில்லன்களை அட்டாக் பண்ணி, surprise கொடுத்து lighter இல் போட்டோ எடுக்கும் லாவகம்... வேறு ஒரு நடிகன் கனவு கூட காண முடியாத நடிப்பு.
காமெரா லைட்டரால் 'தம்' பற்றவைத்து முதலில் மேடத்தை 'க்ளிக்' செய்து பின் லைட்டரை கைகளால் மேல்கீழ் வாக்கில் பிடித்தபடி இரண்டு முறை ஷேக் செய்வார். அடுத்து ரொம்ப காஷுவலாக இருப்பது போன்ற பாவனையில் சிகரெட்டுடன் சிரித்தபடியே அடியாள் ஒருவனின் பின் பக்கத்தைத் தட்டியபடியே குமாரிடம் வருவார். வந்து "ஸாரி... மை டியர் சன்" என்றபடி அப்போது குமாரை 'கிளிக்' செய்து முன் செய்தது போலவே மூன்று முறை லைட்டரை மேலும் கீழும் ஷேக் செய்வார். அடுத்து சேரில் அமர்ந்திருக்கும் பாலாஜியிடம் சென்று அவரை 'கிளிக்' கி மறக்காமல் மூன்று முறை லைட்டரை ஷேக் செய்வார். லைட்டர் அணைந்து அணைந்து போய் சிகரெட் பற்ற வைக்க முடியாமல் போகிறது என்று அனைவரும் நம்ப வேண்டுமென்று வேண்டுமென்று நாடகம் நடத்துவார். ஷேக் பண்ணுவதற்கு வேறு காரணமும் உண்டு.
இந்த எமகாதகன் எல்லாவற்றையும் அதி நுணுக்கமாகத் தெரிந்து கொண்டுதான் தொழிலிலேயே இறங்குவார் போல் இருக்கிறது. என்ன ஒரு தொழில் பக்தி!
Last edited by vasudevan31355; 15th September 2013 at 06:37 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th September 2013, 06:45 PM
#2024
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
ஒரு நேருக்கு நேர் சண்டை காட்சியில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்?
வில்லன் குமார் ஒரு நேரத்தில் இவரின் இரு கைகளையும் வசமாகப் பிடித்து முறுக்கிக் கீழே கொண்டு வரும்போது கீழுதட்டைப் பற்களால் கவ்வி அந்த வலியை ஒரு செகண்ட் காண்பிப்பார் பாருங்கள்!அடாடா!அடாடா!அடாடா!அடாடா!
-
15th September 2013, 06:52 PM
#2025
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
கல்யாண பொண்ணு அதற்கு அற்புத உதாரணம்.ஒரு back and sideways ஸ்டெப்ஸ் போட்டு துவங்குவாறே அதை சொல்வதா ,கைகளை விரித்து hop step பாணியில் ஒன்றை செய்வாரே அதை சொல்வதா, தெய்வத்தால் எதுதான் முடியாது?
நிற்கவே மாட்டார். துருதுறுவென்று ஆடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருப்பார். படகில் "ஒருபக்கக் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ" வின் போது குனிந்தபடி இவர் நிற்கும் போது அந்த வயலட் நிற கோட் பின் பக்கமாக காற்றில் ஆடும் அழகு. கோடி முறை பார்த்திருப்பேன்.
-
15th September 2013, 06:55 PM
#2026
Senior Member
Veteran Hubber
அன்புள்ள கோபால் சார்,
ராஜா படத்தில் நடிகர்திலகத்தின் பெர்பாமென்ஸை அலசோ அலசென்று அலசித்தள்ளி விட்டீர்கள். நடிகர்திலகத்தை மட்டுமே மையமாகக்கொண்டு அலசியதாலோ என்னவோ மற்ற சிறப்பம்சங்களைத் தவிர்த்து விட்டீர்கள். கேமரா, லொக்கேஷன், வித்தியாசமான ரீ-ரிக்கார்டிங் இசை என்று அனைத்தையும் ஒரு பிடி பிடிப்பீர்கள் நான் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும் ஆய்வு முழுமையாகவே இருந்தது. அது சரி நடிகர்திலகத்தை சுற்றித்தானே எல்லாமே. எல்லாத்தரப்பு ரசிகர்களையும் ஒருசேர ஈர்த்த படமல்லவா?. வித்தியாசமான படமென்பதை வித்தியாசமாகத் துவங்கும் டைட்டிலே நமக்கு உணர்த்திவிடும். நீங்களே குறிப்பிட்டது போல பக்கா வின்னிங் டீம் அமைந்தது இப்படத்துக்கு.
மிக அருமையான விமர்சனத்தை பதித்துள்ளீர்கள். மற்றவர்களின் அதிரடிகளும் வந்து களை கட்டும் என எதிர்ப்பார்க்கிறோம்...
-
15th September 2013, 06:57 PM
#2027
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
இன்ஸ்பெக்டர் உடை அற்புதமாக இருக்கும். அந்த காட்சியில் stiffness காட்டி எல்லோரையும் குழப்பி பிறகு போலிசை விரட்டும் நயம்.
லேசாக ராதாவைப் பார்த்து துப்பாக்கியை தன் கன்னத்தின் பக்கமாக வைத்து மிக லேசான தலையசைவில் தான் ஒரு போலீஸ் அதிகாரிதான் என்று ராதாவிற்கு மட்டுமே உணர்த்துவார். அற்புதமாய் இருக்கும்.
-
15th September 2013, 07:11 PM
#2028
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
இறுதி காட்சி நடிகர்திலகம் நினைத்தாலும் அவருடைய திறனை கட்டு படுத்த முடியாது என்று அவர் காட்டும் சுவாரஸ்ய வெளியீடு.
பாலாஜி தன் அம்மாவை மனோகர் கொடுமைப்படுத்தியவுடன் தாங்கமாட்டாமல் மனோகரை புரட்டி எடுப்பார். பண்டரிபாய்க்கும் பாலாஜி அவர் மகன்தான் என்று தெரிவிக்கப்பட்டு விடும். அம்மாவின் கால்களில் அழுதபடியே பாலாஜி சென்று விழுவார். ரங்காராவ் "இது என்ன குழப்பத்துக்கு மேலே குழப்பம்?" என்று குழம்புவார். மனோகர் "என்ன பாபுவோட அம்மாவா? என்று ஆச்சரியப்படுவார். அப்போது அவர் பக்கமாக திரும்பி நிற்கும் நடிகர் திலகம் "ஆமாம்... பாபுவோட அம்மா...உனக்குத் தெரியாது? என்று சொன்னபடி இடது கையில் பிடித்திருக்கும் ஹேன்ட் கர்சிப்பை ஒரு உதறு உதறியபடி திரும்புவார்.
அருமையோ அருமை! excellent ஆக இருக்கும்.
Last edited by vasudevan31355; 15th September 2013 at 07:45 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th September 2013, 07:21 PM
#2029
Senior Member
Veteran Hubber

Originally Posted by
vasudevan31355
நிற்கவே மாட்டார். துருதுறுவென்று ஆடிக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருப்பார். படகில் "ஒருபக்கக் காதல் இரு பக்கமாக சம்மதம் சொல்பவள் நீயல்லவோ" வின் போது குனிந்தபடி இவர் நிற்கும் போது அந்த வயலட் நிற கோட் பின் பக்கமாக காற்றில் ஆடும் அழகு. கோடி முறை பார்த்திருப்பேன்.
'நேரில் வந்த ரதியோ மதியோ' வரிக்கு தன இடுப்பில் கைவைத்துக்கொண்டு இடுப்பை லேசாக பின்பக்கம் அசைக்கும் லாவகம், முதல் சரணம் முடிந்து பல்லவி துவங்கும்போது, ஒரே சீராக தாவித்தாவி ஓட்டமும் நடையுமாக செல்லும் அழகு...
இரண்டாவது சரணத்தில் ஆட முடியாதபடி படகில் ஏற்றிவிட்டு விட்டார் இயக்குனர். இருந்தும்கூட சரணம் முடிவில் தரைக்கு வந்ததும் 'நீ ஆடியாடி போகும் வேகம் பொண்ணுக்கு சரிதானா' என்ற வரியில் தன் வித்தையைக் காட்டுவார்.
-
15th September 2013, 07:29 PM
#2030
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
இறுதி காட்சி
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நீடிக்கும் படு சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ். எல்லை மீறிய புத்திசாலித்தன வெளிப்பாடுகள். நாயகர் கோஷ்டியும் சரி... வில்லன் கோஷ்டியும் சரி... நீயா நானா போட்டி. மாறி மாறி வெற்றி தோல்வி. நம்பகமற்ற நம்பகத்தன்மை. தான் யாரன்று நிரூபிக்கப் பாடுபடும் விஸ்வம். விஸ்வம் வெற்றி பெறும் போதெல்லாம் தாழியை உடைக்கும் நடிகர் திலகமும், பாலாஜியும், மேஜரும். ஒரு வினாடி அப்படி இப்படி கவனம் சிதறினால் கிளைமாக்ஸ் பார்த்ததே வேஸ்ட் என்றாகி விடும். ஆனால் கவனம் சிதறாது. நகத்தைக் கடித்தபடியேதான் பார்க்க வேண்டும். "அதுதான் விஸ்வம் என் கூட இருக்கிறானே" என்று மேஜர் வகையாக மனோகரை மாட்டிவிடும் போது திரையரங்கில் பொது ஜனங்களிடமிருந்து எழும் ஆரவாரமே அனைவரும் கிளைமாக்ஸுக்கு அடிமை என்று தெரிந்து விடும். அப்படி ஒன்ற வைத்து விடும் அவ்வளவு பெரிய கிளைமாக்ஸ் காட்சி.
இந்த கிளைமாக்ஸ் காட்சி பாதிப்பு சிவிஆரின் 'சங்கிலி'யில் மீண்டும் வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதே ராஜா, மேஜர், மனோகர் கூட்டணி இருக்கும் சுவாரசயமாகவே இருக்கும். ஆனால் ராஜாவை நெருங்க முடியுமா?
ஒ.கே கோபால். உங்களின் அருமையான ராஜாவிற்கு மறுபடி மீண்டும் நன்றி. இன்னும் விரிவாக நிறைய எழுதலாம். நேரம்தான் இல்லை. என்னுடைய feedback இல் தவறிருந்தால் சொல்லுங்கள்.
ராஜ கனவுகளுடன் இன்று ஜம்மென்று உறங்குவேன்.
Last edited by vasudevan31355; 15th September 2013 at 07:33 PM.
நடிகர் திலகமே தெய்வம்
Bookmarks