-
15th September 2013, 07:29 PM
#11
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
ராஜா-1972.
இறுதி காட்சி
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் நீடிக்கும் படு சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ். எல்லை மீறிய புத்திசாலித்தன வெளிப்பாடுகள். நாயகர் கோஷ்டியும் சரி... வில்லன் கோஷ்டியும் சரி... நீயா நானா போட்டி. மாறி மாறி வெற்றி தோல்வி. நம்பகமற்ற நம்பகத்தன்மை. தான் யாரன்று நிரூபிக்கப் பாடுபடும் விஸ்வம். விஸ்வம் வெற்றி பெறும் போதெல்லாம் தாழியை உடைக்கும் நடிகர் திலகமும், பாலாஜியும், மேஜரும். ஒரு வினாடி அப்படி இப்படி கவனம் சிதறினால் கிளைமாக்ஸ் பார்த்ததே வேஸ்ட் என்றாகி விடும். ஆனால் கவனம் சிதறாது. நகத்தைக் கடித்தபடியேதான் பார்க்க வேண்டும். "அதுதான் விஸ்வம் என் கூட இருக்கிறானே" என்று மேஜர் வகையாக மனோகரை மாட்டிவிடும் போது திரையரங்கில் பொது ஜனங்களிடமிருந்து எழும் ஆரவாரமே அனைவரும் கிளைமாக்ஸுக்கு அடிமை என்று தெரிந்து விடும். அப்படி ஒன்ற வைத்து விடும் அவ்வளவு பெரிய கிளைமாக்ஸ் காட்சி.
இந்த கிளைமாக்ஸ் காட்சி பாதிப்பு சிவிஆரின் 'சங்கிலி'யில் மீண்டும் வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதே ராஜா, மேஜர், மனோகர் கூட்டணி இருக்கும் சுவாரசயமாகவே இருக்கும். ஆனால் ராஜாவை நெருங்க முடியுமா?
ஒ.கே கோபால். உங்களின் அருமையான ராஜாவிற்கு மறுபடி மீண்டும் நன்றி. இன்னும் விரிவாக நிறைய எழுதலாம். நேரம்தான் இல்லை. என்னுடைய feedback இல் தவறிருந்தால் சொல்லுங்கள்.
ராஜ கனவுகளுடன் இன்று ஜம்மென்று உறங்குவேன்.
Last edited by vasudevan31355; 15th September 2013 at 07:33 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
15th September 2013 07:29 PM
# ADS
Circuit advertisement
Bookmarks