-
17th September 2013, 08:39 AM
#2081
Senior Member
Seasoned Hubber
தாராளமாக...யார் எப்போது வேண்டுமானாலும் தொடங்குங்கள். எழுதுங்கள். என்னைப் பொறுத்த வரையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஒரு விவாதம் முடிந்த பிறகு மற்றொன்று என்ற நடைமுறை இருந்தால் குழப்பம் இல்லாமலும் ஒன்றுக்கொன்று இடையில் திசை மாறாமலும் இருக்க வசதியாக இருக்கும் அவ்வளவே. கால வரையறை கூட வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக நீண்ட நாட்களுக்கு இழுக்காமல் இருப்பதற்காக ஒரு ஏற்பாடு இருந்தால் நல்லதாக இருக்கும் என்பது தான். So that every body will take interest in posting. அதுவும் ஒவ்வொருவரும் தவறாமல் ஒரு கருப்பொருளில் விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
அது சரி, இதுவே ஒரு விவாதப் பொருளாகி விடப் போகிறது. இதனை சட்டென்று முடிக்க வேண்டும்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th September 2013 08:39 AM
# ADS
Circuit advertisement
-
17th September 2013, 08:53 AM
#2082
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகத்துக்கு நாமகரணம் சூட்டிய எங்கள் கலகக்கார கிழட்டுத் தோழன் புகழ் வாழ்க!
-
17th September 2013, 09:01 AM
#2083
Junior Member
Newbie Hubber

Originally Posted by
joe
நடிகர் திலகத்துக்கு நாமகரணம் சூட்டிய எங்கள் கலகக்கார கிழட்டுத் தோழன் புகழ் வாழ்க!

என் பார்வையை விசால படுத்தி, என் மனித நேயத்தை அகல படுத்திய கலக மனிதன்.
எங்கள் நடிகர்திலகத்திற்கு அளிக்க பட்ட பட்டங்களிலே,அவர் பெயரோடும் ,உயிரோடும் இணைந்து விட்ட "சிவாஜி" உயர்வானது ,உன்னதமானது.
நடிகர்திலகத்தின் வாழ்கை கனவுகளிலே ஒன்று முழு படமும் பெரியாராக நடிப்பது.
ஆனால் சிறிய காட்சியில் 1960 இல் பெற்ற மனம் (மு.வ.கதை) படத்தில் பெரியாராக தோன்றுவார்.
ராகவேந்தர் சார்,பதிவிட இயலுமா?
-
17th September 2013, 09:16 AM
#2084
Junior Member
Newbie Hubber
பெரியார்.(நான் புரிந்து கொண்ட வரை)
பெரியார் கடவுள் மறுப்பு, உயர்சாதி எதிர்ப்பு இவற்றை கருவியாக்கி ,சமுதாய சாதி இறுக்கத்தை இளக செய்யவும் ,மூட நம்பிக்கை உடைப்பையும் ,அடிமை விலங்கருப்பதையும் மைய நோக்கமாக கொண்டவர்.
தலித்தை விட தாழ்த்த படுவது தலித்தின் மனைவியே என்று புரிந்து ,பெண் விடுதலைக்கு தளம் அமைத்தவர்.
மாற்று கருத்துகளை ஒடுக்க நினைக்காமல், கேட்டு பொறுமையாக விடையளித்தவர்.
தன் கலகம் தனி மனித எதிர்ப்பாகவோ,இன துவேஷமாக மாறி சமூக கொந்தளிப்பு நேராமல் இயக்கத்தை நேரியக்கமாக நடத்திய தூய்மையாளர்.
அவர் பேச்சை மூன்று முறை நேரில் கேட்டு ,நிறைய படித்து தெரிந்தது எனக்கு வாழ்வில் பாதை காட்டியது.
இப்போது எனக்கு உள்ள வருத்தங்கள்-
அவர் போட்ட பாதையில் நடப்பதாக கூறுபவர்களே,சாதி இன துவேஷத்தை முன்னிறுத்துவது.
எல்லாமே விவாதத்துக்கு,கேள்விக்குரியது என்று சொன்ன அவரை பற்றியே விவாதிக்க விடாமல் அடக்க பார்ப்பது.
தெய்வங்களின் சிலைகளை நீக்கி விட்டு அதற்கு பிரதியாக மனித சிலைகளை வணங்கும் மூட வழக்கங்களை வளர்ப்பது.(புத்தருக்கு நேர்ந்த அதே விபத்து)
-
17th September 2013, 09:26 AM
#2085
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th September 2013, 09:33 AM
#2086
Junior Member
Newbie Hubber
சினிமா நூற்றாண்டு விழா வை முன்னிட்டு கீழ்கண்ட நடிகர்திலகத்தின் படங்கள் திரையிட படுகின்றன.
சத்யம் - 17/09/2013- கர்ணன்
உட்லண்ட்ஸ் -18/09/2013- ஆண்டவன் கட்டளை
20/09/2013- சவாலே சமாளி
23/09/2013-கலாட்டா கல்யாணம்
அபிராமி- 16/09/2013- பாச மலர்
4 பிரேம்ஸ் - 19/09/2013- கவுரவம்
பரிசோதனை முயற்சியான அந்த நாள், தேச விடுதலையை முன்னிறுத்தி உலக புகழ் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்ட புதிய பறவை,நம் கலாசார தூதுவன் தில்லானா மோகனாம்பாள், ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்ய பட்ட தெய்வ மகன் போன்றவை எப்படி விடு பட்டன என்பது வியப்புக்குரியது.
-
17th September 2013, 10:08 AM
#2087
Senior Member
Diamond Hubber
விசுவாசமான விஸ்வம்.

இன்னொரு முக்கியமான விஷயத்தைப் பற்றியும் எழுத வேண்டும். ராஜாவில் விஸ்வத்தின் (மனோகர்) பங்கு மிக முக்கியமானது. செம அலட்சியமான கேரக்டர். கதையை ஆரம்பித்து வைத்து அதே போல கிளைமாக்ஸில் நுழைந்து களேபரம் பண்ணும் கேரக்டர். சிங்கப்பூரிலிருந்து வரும் விஸ்வத்தை போலீஸ் பின்தொடர்ந்து சென்று கண்காணிக்கத் தொடங்க, சிகப்புத்தலை மனிதன் விஸ்வத்திற்கு ரகசியமாய்த் தகவல் தந்து விட்டு நழுவ, ஹோட்டலில் ரூம் எடுத்து பால்கனியிலிருந்து விஸ்வம் தன்னை போலீஸ் நோட்டமிடுவதை கண்காணித்து, கொஞ்சமும் பதட்டமில்லாமல் டென்னிஸ் ரேக்கட்டுடன் வெளியே வந்து, டென்னிஸ் கோர்ட்டில் விளையாடி, பின் பில்லியர்ட்ஸ் விளையாடுமிடம் வந்து, அங்கு விளையாடும் ஒரு வயதானவருக்கு எந்த பந்தைப் போட வேண்டும் என்று இயக்குனர் சி.வி.ஆருக்கு (முன்னால்) சொல்லியும் கொடுத்து, பின் ரேக்கட் ஸ்டாண்டில் சிகப்பு கைப்பிடி போட்ட ரேக்கட்டை வைத்து விட்டு, அங்கிருக்கும் கண்ணாடியைப் பார்த்து, துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, வேறு ஒரு ரேக்கட்டை மாற்றி எடுத்துக் கொண்டு, அங்கு ஒன்றும் தெரியாதது போல அமர்ந்து கூல் ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டிருக்கும் மப்டி போலீஸ் அதிகாரிகளிடம் நக்கலாக வாயில் கவ்விக் கொண்டிருக்கும் சிகரெட்டுக்கு நெருப்பு பற்ற வைக்க சொல்லிக் கேட்கும் (மனோகரின் அந்த சிரிப்பு கலந்த நக்கலான பார்வை சூப்பர் )அந்த சில நிமிடக் காட்சிகளில் விஸ்வம் வில்லனாக இருந்தாலும் ஈஸியாக நம் மனதில் 'பச்'சென்று ஒட்டிக் கொள்வான். அதே போல விறுவிறுப்பையும் தொடக்கி வைப்பான்.
பெர்மிட் இல்லாமல் மது குடித்து போலீஸ் வந்து கேட்கும் போது "அதான் ஆகஸ்ட் 30 இலிருந்து ரத்து செய்யப் போறாங்களே... அப்புறம் பெர்மிட் எதுக்கு?" என்று தன் தவறுக்கு வரப் போகும் அரசாங்கத்தின் ஆணையை சாதகமாக்கி தப்பித்துக் கொள்ள நினைக்கும் புத்திசாலி. ஆனால் விஸ்வம் புத்திசாலியாக இருந்தாலும் அவனை ஈஸியாக கோபப்படுத்தி விடலாம். லஞ்சத்திற்கு மயங்காத அதிகாரியிடம் கோபமுற்று கான்ஸ்டபிளின் (சந்திரபாபு) தத்தக்கா..பித்தக்கா செயல்களில் கோபம் உச்சத்துக்கு ஏற, அவனை ஓர் அறை அறைந்து போலீஸ் வசம் சிக்கும் அவசர புத்திக்கும் சொந்தக்காரன்.
தாடிக்கார வாலாவுடன் விஸ்வம் கைகொடுத்து நிற்கும் போட்டோவில் விஸ்வத்தை மறைத்து தாடிக்காரன் யாரென்று கமிஷனர் கேட்க "தெரியாது" என்று ஆணித்தரமாகக் கூறும் விஸ்வம் மறைந்த விஸ்வத்தின் பகுதியை கமிஷனர் பிறகு பிரித்துக் காட்ட, "அறிமுகமில்லாத இரண்டு பேர் அசந்தர்ப்பமாக எங்காவது நின்றிருப்போம்... அதை எவனாவது போட்டோ எடுத்திருப்பான்... அதை ஒரு சாட்சியாக வச்சுகிட்டு என்னை குறுக்குக் கேள்வி கேட்டால் என்ன நியாயம்?" என்று எகத்தாளமாக வாதிடுவான். பயம் என்பது அறவே இருக்காது. ஜெயிலில் ராஜா ஒரு கேடியாக நாடகாமாடுவது தெரியாமல் அவனுடைய வலையில் அழகாக மாட்டுவான் விஸ்வம். போலீஸ்காரனிடமே தம்முக்கு நெருப்பு கேட்கும் துணிவு கொண்ட அவன் ராஜாவின் தம்மிற்கு நெருப்பு பற்ற வைக்க நேர்ந்தது அவனுடைய துரதிருஷ்டமே. "நம்பிக்கைங்கிறது அண்ணன் தம்பிகிட்ட கூட இல்லாமல் இருக்கலாம்... ஆனா திருடன்கிட்ட கண்டிப்பா இருக்கணும்" என்ற ராஜாவின் தந்திரப் பேச்சை நம்பிக் கெட்ட கெட்ட அப்பாவி.
ஜெயிலில் இருந்து திரும்பும் விஸ்வம் சின்ன பாஸ் பாபுவை சந்திப்பான். "குமார் இருந்த இடத்தில் யாரோ ராஜாவாமே?!" என்று கேட்பான். அது அவன் அனுப்பி வச்ச ராஜா என்பது அப்போதுதான் அவனுக்கே தெரியும். பெரிய பாஸை சந்திக்க துடிதுடிக்கும் விஸ்வம் அதற்கு ஏற்பாடு செய்ய சொல்லி பாபுவைக் கேட்க பாபு அது முடியாத காரியம் என்று கூற ராஜா மட்டும் தலைவரை எப்படி சந்தித்தான் என்று விஸ்வம் எதிர்க் கேள்வி கேட்பான். "தலைவர் தான் அவனை சந்திக்கணும்னு ஆசைப்பட்டாரு" என்று பாபு கூற பொறாமைத் தீ மனதில் பற்றி எரிய விஸ்வம் பாபுவிடம் " நீ அவனைப் பற்றி பிரமாதமா பாராட்டிப் பேசியிருப்பே" என்று நக்கலடிப்பான்..(எதிரும் புதிருமாக இருவரும் சேரில் அமர்ந்து முதுகைக் காட்டிக் கொண்டிருப்பது காட்சிக்கு இன்னும் ஆழத்தைக் கொடுக்கும்... அர்த்தத்தையும் கொடுக்கும்.) "பாராட்டும்படியா ராஜா பெரிய காரியங்களை சாதிச்சிருக்கானே" என்று பாபு பதிலுரைப்பான். அதற்கு விஸ்வம் தரும் சற்றே ஆத்திரமும், கோபமும் எரிச்சலும் கலந்த பதிலைப் பாருங்கள்.
"ஏன்? இத்தனை வருஷமா நாங்க எதையுமே சாதிக்கலையா?"
(மனோகரின் இந்த டயலாக் டெலிவிரி ரொம்ப ரொம்ப பிரமாதமாக இருக்கும்)
"என்னடா புதுசா வந்தவனை இப்படி தூக்கிப் பிடிக்கிற? நானெல்லாம் பழுத்துக் கொட்டை போட்டவன்...நான் செய்யாததையா அவன் செஞ்சுட்டான்? சும்மா நிறுத்துடா! என்று அந்த வார்த்தைகளுக்கு நமக்கும் பாபுவுக்கும் சேர்த்து அர்த்தம் புரிய வைப்பான் விஸ்வம்.
"எவ்வளவு உழைத்தோம்... நேற்று வந்த ராஜா பாஸை சந்தித்தித்து விட்டானே... அதுவும் போலீஸ் அதிகாரி என்று தெரியாமல் இந்த பேக்குகள் அவனை நம்பி மோசம் போகிறதே" என்று ராஜாவைக் காட்டிக் கொடுப்பவனும் விஸ்வமே.
கிளைமாக்ஸில் விஸ்வத்தின் பங்கு மகத்தானது. அதைப் பற்றி நிறைய எழுதி விட்டதால் விஸ்வாசமான விஸ்வத்தை (அவனைப் பொறுத்த வரை அவன் ரொம்ப கரெக்ட்) விசால மனதுடன் பாராட்டி
அவனை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இப்போது மனோகர். விஸ்வமாக செம கலக்கு கலக்குவார். கவர்ச்சியான அழகு. அந்த நீண்ட அடர் கிருதா ஸ்டைல் அவருக்கு மிக பொருத்தம். அலட்சிய வசன உச்சரிப்பு, அதே போல அலட்சிய அங்க அசைவுகள்... கேரக்டரை உள்வாங்கி புரிந்து நடிக்கும் வெகு இயல்பான நேர்த்தி... டென்னிஸ் உடையில் பின்னி எடுப்பது, நடிகர் திலகத்துடன் ஜெயிலில் கலக்குவது, பாலாஜியிடம் நக்கலான குத்தல் பேச்சுக்கள், கிளைமாக்ஸில் மாட்டி கொண்டு விழி பிதுங்குவது என்று ஆர்ப்பாட்டமாகச் செய்திருப்பார்.
பாலாஜி இவரை நன்றாக யூஸ் செய்வார். ராஜா, நீதி, என் மகன், உனக்காக நான் என்று சுஜாதா சினி ஆர்ட்ஸின் மனம் கவர்ந்த வில்லன். இவருக்கென்ற பிரத்தியோக ஸ்டைலால் நடிகர் திலகத்தின் ரசிகர்களையும் ஈர்த்தவர். சென்டிமென்ட்டாக நடிகர் திலகத்துடன் இவர் பணிபுரிந்த பெரும்பான்மையான பல படங்கள் ஹிட்.
ஆமாம்! ஒரு சந்தேகம் ரொம்ப நாளாகவே! பாலாஜி ஏன் தன் படங்களில் நம்பியார் அவர்களை யூஸ் செய்யவில்லை? இதற்கே இருவரும் மலையாளிகள்தானே! யாருக்காவது காரணம் தெரியுமா? முரளி சார், கார்த்திக் சார் ப்ளீஸ்.
Last edited by vasudevan31355; 17th September 2013 at 10:20 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
17th September 2013, 10:24 AM
#2088
Senior Member
Diamond Hubber
.இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் அவர்கள் ராஜாவில் ஒரு காட்சியில்
-
17th September 2013, 10:26 AM
#2089
Junior Member
Newbie Hubber
மனோகர்....
என் மனம் கவர்ந்த ஸ்டைல் வில்லன். வண்ணக்கிளி, நான், ராஜா,மீண்டும் வாழ்வேன்,நீதி,எங்கள் தங்க ராஜா போன்ற படங்களில் மிக மிக ரசித்துள்ளேன். வாசு சார், ரொம்ப நன்றி.
உண்மைதான் .பாலாஜி நம்பியாரை உபயோக படுத்தியதில்லை. பாலாஜி அம்மாதான் கேரளா பக்கம்.அப்பா நம்ம ஆள்தான். பாலாஜி ,ராஷ்மி (y .G .P ) அவர்களின் அரை சகோதரர்.அப்பா ஒருவரே. நம் Y .G .மகேந்திராவின் மாமா.
Last edited by Gopal.s; 17th September 2013 at 10:29 AM.
-
17th September 2013, 10:35 AM
#2090
Junior Member
Seasoned Hubber
Mr Vasu Sir,
Excellent writeup of Raja and pls write about Mr Kannan of En Thambi and also post the sword fight
scene in the stunt series.
I had an opportunity to see the above movie at chennai with our friends on sunday. What an
amazing experience to watch the movie. Our NT simply superb in all aspects. Typical theatre
experience.
Bookmarks