-
19th September 2013, 09:56 AM
#11
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நடிகர் திலகத்தின் 305 படங்களில் திரும்பத்திரும்ப பிரபலமான படங்களையே அலசுவதால் வேறு படங்கள் இவருக்கு இல்லை போலிருக்கிறது என்கிற எண்ணத்திற்கு இடம் கொடுக்காமல் மிக மிக அபூர்வமாக, இதுவரை விவாதிக்கப் படாத படத்தை எடுத்துக் கொள்ளுமாறு நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். கோபால் சார், Let us explore more of his films very rare and hither to not discussed.
இதனைத் தொடங்கி வைக்க சரியானவர் நம் வாசு சார் தான். வாசு சார் தெய்வ மகன் முடிந்த பின்னர் தாங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தை நாம் விவாதிப்போமே.
Choice is yours.
மன்னியுங்கள் ராகவேந்தர் சார் தங்கள் மனம் புண் பட்டிருந்தால். செப்டம்பர் மாதமானதால் தெய்வமகன்,புதிய பறவை,வசந்த மாளிகை போன்ற காவியங்களை தவிர்க்க இயலாது. தாங்கள் "போதும் இதெல்லாம்" என்ற பாணியில் பதிவு போட்டு ,மற்றதை கெடுத்ததில் எனக்கு வருத்தமே.
நான் இனி எதிலும் தலையிட போவதில்லை. தெய்வமாகி விட்ட அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அனைவரும் செயல் பட்டால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களோடு நிறைய முரண் பட்ட போதிலும்,நடிகர்திலகம் ஒருவருக்காகவே உடல்,பொருள்,ஆவியை கொண்டிருக்கும் உங்களை போன்ற வழிகாட்டி எங்களுக்கு மிக அவசியம்.தடங்கலுக்கு வருந்துகிறேன்.
தொடரலாம்.
Last edited by Gopal.s; 19th September 2013 at 10:03 AM.
-
19th September 2013 09:56 AM
# ADS
Circuit advertisement
Bookmarks