Page 252 of 399 FirstFirst ... 152202242250251252253254262302352 ... LastLast
Results 2,511 to 2,520 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2511
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு நண்பர் கண்பத் சார்,

    'துளிவிஷம்' பற்றிய தங்கள் மனமுவந்த பாராட்டிற்கு என் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பம்மலார் புத்தகத்துக்கான தங்களுடைய உவமான உவமேயங்கள் அழகு.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2512
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    அன்பு சகோதரர் பம்மலார் அவர்களால் வெளியிடப்படவிருக்கும் "நடிகர்திலகம் புகழ் மாலை-1" மாபெரும் வெற்றி பெற்று நமது ரசிகர்கள் அனைவரின் கரங்களிலும் தவழ இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #2513
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செய்தி

    நடிகர்திலகம் சிவாஜி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, சரஸ்வதி சபதம் என்ற பெயர் "நவீன சரஸ்வதி சபதம்" என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் வழக்கறிஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நகைச்சுவைப் படம் என்றும், யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை இல்லை என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் வேறு ஏதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனாலும், நமது கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்த தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #2514
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    நேரமில்லாத காரணத்தால் தங்கள் 'நீதி' பதிவை இப்போதுதான் முழுமையாகப் படித்து சுவைத்தேன். படம் ரொம்ப எளிமை. உங்கள் எழுத்திலும் அது தெரிந்தது. தலைவர் ஓடும் ஸ்டைலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 'அவன்தான் மனிதன்' படத்தில் 'அன்பு நடமாடும்' பாடலின் இடையில் கால் சரியானதும் குடையை விரித்துப் பிடித்தபடி ஒரு அழகு ஓட்டம் ஓடி வருவாரே! கிரேட்! எஸ்.வி சுப்பையாவுடன் நிலத்தில் கடுப்படித்து பழித்துக் காட்டும் சீன் ரொம்ப எனக்குப் பிடிக்கும்.

    இன்னொன்று கவனித்தீர்களா! நீங்கள் எழுதுவீர்கள் என்று நினைத்தேன். தலைவர் அந்த முரட்டு ஜீன்ஸ் உடையில் நல்ல உயரமாகத் தெரிவார். 'நாளை முதலி'ல் மிக நன்றாக உணரலாம். அதே 'எங்களது பூமியில்' வழக்கமான உயரமாகத் தெரிவார்.

    தலைவரும் மனோரமாவும் டிராக்டரில் பேசிக் கொண்டே வரும் சீன் மறக்க முடியாதது.

    கடந்த கால நினைவுகள் "மனோரமா"



    அப்போது கடலூர் அருகே (செம்மங்குப்பம் கிராமம்) 'ஒரே முத்தம்' என்றொரு படம் ஷூட்டிங் நடந்தது. ஜெய்கணேஷ், சுமித்ரா ஜோடி. அதில் கலந்து கொள்ள ஆச்சி வந்திருந்தார். அவர் ஓய்வாக ஆற்றோரம் நடந்து கொண்டிருந்தார். கிராமத்தார் பலரும் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரிடம் யாரும் ஒரு அச்சம் காரணமாக பேசவில்லை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது? 'டிராக்டர் பொன்னம்மா' என்று உரக்கக் குரல் கொடுத்து கத்தி விட்டேன். டக்கென்று திரும்பிய ஆச்சி என்னைக் கவனித்து விட்டார்கள். என்னை அருகே வரச் சொல்லி கூப்பிட்டார்கள். சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். "என்ன சொன்னே"? என்று கேட்டார்கள். நான் சற்று தயங்கியவாறு 'டிராக்டர் பொன்னம்மா' என்று சொன்னேன்.

    அவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது. "உனக்கு அந்த ரோல் பிடிக்குமா? என்று கேட்க 'பிடிக்கும்' என்றேன். "வேறு என்ன பிடிக்கும்?" என்றார். 'நடிகர் திலகத்தை உயிரைவிட மேலாக பிடிக்கும்' என்றேன். சொன்னதுதான் தாமதம். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே! "அப்ப நீ நம்ம ஆளு" என்றார்கள். "கொஞ்ச தூரம் என்னுடன் நடந்து வா! என்றார்கள். அப்போது நடிகர் திலகத்தைப் பற்றியும், அவர் படங்களில் ஆச்சியின் நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தேன். ஆச்சியும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டே வந்தார்கள். பின் 'வா வாத்யாரே ஊட்டாண்டே' என்று ஆச்சி பாட ஆரம்பிக்க கூடவே நானும் பாட ஆரம்பிக்க ஒரே ஜாலியாக இருந்தது. (மனோரமா கூடவே நான் பாடியவனாக்கும்!) ஆச்சி ரொம்ப அன்பாக நடந்து கொண்டார்கள்.

    அதற்கு முன் ஆச்சியைப் பிடித்தாலும் ஆச்சி நிரந்தரமாக என் மனதில் ஆட்சியைப் பிடித்தது இச்சம்பவத்திற்குப் பிறகுதான்.

    அடுத்தநாள் நான் ஆச்சியை பார்த்தது சிதம்பரம் மெயின் ரோட்டில் அதே கிராமத்தில். ஆச்சி வண்டி நின்று கொண்டிருந்தது. யாருமே இல்லை. நான் போய் எட்டிப் பார்த்தேன். பார்த்தால் ஆச்சி. ஆச்சி என்னைப் பார்த்ததும் நீயா என்று அடையாளம் கண்டு கொண்டார்கள். "ஊருக்குப் போயிட்டு வர்றேன் தம்பி! குடிக்க இங்கே டீ கிடைக்குமா?...கடை தெரியவில்லை. அதான் டிரைவரை அனுப்பி வைத்து விட்டு வெயிட் செய்கிறேன். தலை வேறு வலிக்கிறது" என்றார்கள். பின் நான் கடை சென்று டீ வாங்கிக் கொண்டு கொடுத்தேன். (காசு அவர்கள்தான் கொடுத்தார்கள். நம்மிடம் அப்போது ஏது?) அழகாகச் சாப்பிட்டுவிட்டு நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.

    'நீதி' என்றாலே இந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து விடும். ஆச்சிக்கு இப்போது அடிக்கடி உடம்பு முடிவதில்லை என்று செய்திகள் கேட்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் எல்லா நலனும் பெற்று வாழ நம் திரியின் சார்பாக வாழ்த்துவோம்.

    இந்த நினைவலைகளை நினைக்க வைத்த உங்களுக்கு நன்றி.

    எனக்கு டிராக்டர் பொன்னம்மா பற்றி தனியாக எழுத மிக மிக ஆசை.

    எழுதலாமா?
    Last edited by vasudevan31355; 26th September 2013 at 11:28 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2515
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    எனக்கு டிராக்டர் பொன்னம்மா பற்றி தனியாக எழுத மிக மிக ஆசை.
    எழுதலாமா?
    கண்டிப்பாக எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம். முடிந்தால் எனக்குப் பிடித்த ஜில் ஜில் ரமாமணியையும் சேர்த்து எழுதுங்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #2516
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    THULIVISAM.,,, A movie by name itself i disliked those days, in early sixties regular morning shows in north madras theatres on sundays and spl shows on festival days still i have no inclanation to see it for obvious reasons,
    now your fantastic coverage has created my wish to see it very early.AFTER SIXDECADES,
    WONDERFUL SKILLS.
    t

  8. #2517
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    vasudevan sir
    அள்ளஅள்ள குறையாத காமதனுசெல்வம் போல் அல்ல வா
    உங்களடிம் இருந்து விஷயங்கள் வெளி வருகி ன்றது
    மனோரமா பற்றிய பதிவு
    பம்மலர் சார்
    காத்து இருக்கிறோம் உங்கள் புத்தகத்துக்காக
    உங்கள் முயற்ச்சி வெற்றி அடைய எல்லாம்
    வல்ல அந்த கணேச பெருமானை வாங்குகின்றோம்
    gkrishna

  9. #2518
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கார்த்திக் சார்,
    தங்கள் ஆலம் பதிவு இப்போதே போடுங்கள்.இனியும் காத்திருக்க முடியாது.(ஆலத்தை இப்போதே போட முடிந்தால் சந்தோஷ படுவேன்.)
    Last edited by Gopal.s; 26th September 2013 at 04:52 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. #2519
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ஆச்சியை டிராக்டர் பொன்னம்மாவாக சந்தித்த அனுபவம் நன்றாக இருக்கிறது வாசு சார். டிராக்டர் பொன்னம்மாவை தனியாக எழுதுவதற்கு ஆசையா? எங்களுக்கு என்ன கரும்பு தின்பதற்க்கு கசக்குமா என்ன? நன்றாக எழுதுங்கள். நாங்கள் ரசிக்கிறோம்.

    கார்த்திக் சார், கோபாலும், சின்னக்கண்ணனும் ரொம்பவே ஏங்கி போயி இருக்கிறார்கள். எங்கள் பொறுமையை இப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டுமா? கொண்டு வாருங்கள் ஆலத்தின் பதிவை உடனடியாக.

    சின்னக்கண்ணன் சார், என்ன சொல்றதுன்னே தெரியலை. இம்மாந்திறமையை வைத்துக்கொண்டு இம்மா நாளும் இன்னா செஞ்சிக்கிட்டு இருந்தீங்க. உங்க புலமையில் மயக்குறீங்க. உங்க கவிதைக்காகவாவது கார்த்திக் ஆலம் பதிவை உடனடியா கொண்டு வரமாட்டாரா? இல்லை தவிக்கவிட்டு, இதுமாதிரி இன்னும் நாலு கவிதையை உங்க கிட்ட இருந்து வரட்டும்-னு நெனச்சி தள்ளிப் போட்டுற மாட்டாரு? அதனால உங்க கவிதையை தினமும் கொடுங்க. அவரும் ஆலம் பதிவை உடனடியாக கொடுக்கட்டும். (பதிந்து விட்டு பார்த்தால் உங்க கவிதையை காணோம். என்ன சின்னக்கண்ணன் சார் இப்பிடி பண்றீங்க?)

    மற்றபடி மாற்று பெயரில் மற்ற திரியில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் எங்கள் அண்ணனை உடனடியாக இந்த திரிக்கு வருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சேவை - இந்தத் திரிக்கு தேவை.

    புலவர்களும் கோபம் தணிந்து இத்திரிக்கு வருகை புரிய வேண்டும்.
    Last edited by kalnayak; 26th September 2013 at 07:02 PM.

  11. #2520
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    சுஹராம் தங்களுக்கு நல்வரவு. தொடர்ந்து நடிகர் திலகத்தின் புகழ் பாடும் ரசிகர் சேனையில் மற்றொரு வீரராக தாங்கள் வருகை புரிவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
    எவ்வளவு ஏமாற்றமான ஒரு கணிப்பு ராகவேந்தர் சார்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •