Page 267 of 399 FirstFirst ... 167217257265266267268269277317367 ... LastLast
Results 2,661 to 2,670 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #2661
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எல்லாமே பிடிக்கும். இன்னும் சில.

    1. ரொம்பப் பிடித்தது டைட்டில். நெகடிவ் ஷேட்ஸ் மறைந்து, மறைந்து அழகாய்த் தெரியும் தலைவரின் உருவம். அப்போதைய அரசியல் சூழ்நிலையில் நடிகர் திலகத்தின் ஆதிக்கம் எப்படி இருந்தது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கும் பாடல்.

    2. சுருள் சண்டை முடிந்ததும் "சேர்வைடா... சேர்வை" என்றபடி பின்பக்கம் முடிந்துள்ள வேட்டியை அவிழ்த்து விடும் வேகம்.

    3. "ஊருக்கெல்லாம் தெரியும்படியா உனக்கு தாலி கட்டினேன். இப்ப யாருக்கும் தெரியாமே நானே உனக்கு புடவை கட்டி விடறேன்" என்ற தயக்க வழிசல்.

    4. "விவாகரத்து வெங்கடசாமி! என் விவகாரத்தில தலையிடாத சாமி" மிரட்டல்.

    5. எதுவும் முடியாமல் போன பட்சத்தில் தலையில் துண்டை முக்காடாகப் போட்டு தெருவில் 'தேமே' என்று நடந்து வருதல். அதை விட டாப் 'அய்யா வந்துட்டாரு' என்று வேலையாட்கள் கூக்குரலிட, அங்கிருக்கும் முக்காலியை காலால் எட்டிப் பிரட்டி உதைத்து விட்டு (அந்த நாற்காலி கூட அவர் செயலுக்கு எப்படி கட்டுப் படுகிறது!) "எல்லாம் வெளியே போங்க" என்று வெறுப்பாக கூறுதல். வெறுப்பாக கூறினாலும் கம்பீரம் எள்ளளவும் குறையாது. (மூக்கையன் பாதியாகவும் முகேஷ் பாதியாகவும் அட்டகாசமாக இருப்பார்)

    6. அந்த சோக "என்னடி ராக்கம்மா". பட்டை உரித்து விடுவார். உட்கார்ந்தபடி தலையை சாய்வாகச் சாய்த்து கொடுக்கும் அற்புத போஸ். அடுத்து கதவை திறந்தபடி நிற்கும் போஸ், "என் பட்டம்... என் திட்டம்... என் சட்டம்" வரிகளின் போது குளோஸ்-அப்பில் லேசான தலையாட்டல்கள். கண்களை ஒரு தடவை இமைத்தபடி பண்ணும் அமர்க்களம். "காற்றாகப் பறந்ததடி"... வரியை இரண்டாம் முறை உச்சரிக்கையில் இடது கையை தலைக்கு மேலே வைத்தவாறு உட்கார்ந்து தரும் இணையே இல்லாத போஸ். பாடலின் முடிவில் படிக்கட்டில் அமர்ந்து பழையனவற்றை நினைத்து வெறித்துப் பார்த்தபடி தரும் போஸ். இந்தப் பாடல் முழுதும் போஸ்களிலேயே பின்னி எடுப்பார். (டிஎம்.எஸ் பண்ணும் அமர்க்களமும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியே அச்சு அசல் தலைவர் குரல்).



    7. பஞ்சாயத்துக் கதையை அப்பத்தாளிடம் சொல்லும் ஒப்புயர்வற்ற சீன். ("நான் வந்திருக்கேனே... உயிரோட") அப்படியே திரும்பி "கேட்டானே ஒரு கேள்வி... இதுவரைக்கும் யாருமே என்னைக் கேட்காத கேள்வியைக் கேட்டான் அப்பத்தா!" (இந்த இடத்தில் அந்தக் கண்களைப் பார்க்கணுமே!) அவமானம் பிடுங்கித் தின்ன ஆத்திரமும், கோபமும் முகத்தில் நர்த்தனமாட

    "கேட்டான் அப்பத்தா! பொஞ்சாதியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா பஞ்சாயத்து பண்ண வந்திருக்கேன்னு கேட்டானே ஒரு கேள்வி என்னை?" குரல் தழுதழுக்க, தொண்டை ஆத்திரத்தில் அடைக்க, கைவிரல்களை விரித்து வைத்துக் குமுறுவர் பாருங்கள்.

    இந்த ஒரு காட்சி போதும்யா.

    எவருக்கும் விளங்க வைக்க வேண்டிய அவசியமில்லை.
    Last edited by vasudevan31355; 30th September 2013 at 12:41 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2662
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?//

    ஓலமிட்டு ஏங்கி நிக்கும்
    ..உள்மனசைத் தேற்று தற்கு
    வாளமீனப் போல தேகம்
    ..வார்த்துவிட்ட பொன்னா மின்னி
    கோலமிடப் புள்ளி வச்சு
    ..கோடுபோடக் காத்தி ருக்க
    ஆலமின்னும் வார லையே
    ..ஆசநெஞ்சு ஓய லையே..!

  4. #2663
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    அழகான ஒப்பீடு. கர்ணனையும், நடிகர் திலகத்தையும் உண்மையாகவே ஒப்பிட்டு உள்ளீர்கள். ஆஹா! தலைவரைப் பற்றிய அருமையான புரிதல் தன்மையைத் தங்களிடத்தில் காண்கிறேன். சேர்ந்த இடமெல்லாம் முதுகில் குத்தப்பட்டுதான் வந்தார் என்பதை எவ்வளவு அழகாக் கூறியுள்ளீர்கள்! அதற்கான பலன்களையும் அனுபவிக்கத்தான் போகிறார்கள் என்றும் அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

    எவ்வளவு திறமைசாலிகள் திரியில் இருக்கிறீர்கள்! எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள்! நினைக்கவே பெருமையாய் இருக்கிறது சார். அடுத்த உங்கள் பதிவை சுவைக்க வெகு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

    அருமையான பதிவிற்கு நன்றிகள் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2664
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    இன்றைய மாலைப் பொழுது .... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள்... எது போவதென்று மனம் அல்லாடல் .. ஒன்று .. மஹாலட்சுமி திரையரங்கில் நீண்ட நாட்களுக்குப் பின் நான் வாழ வைப்பேன் திரைப்படம், ஞாயிறு மாலைக் காட்சி ரசிகர்களின் அளப்பரையுடன் பார்க்கும் வாய்ப்பு.. இரண்டாவது இதழொலி வாயிலாக நடிகர் திலகத்திற்கு ட்ரிப்யூட்... இரண்டாவதே முதலிடம் பிடித்தது
    டியர் ராகவேந்திரன் சார்,

    இந்திய விசிலிசைச் சங்கம் நடத்திய செவாலியே சிவாஜிக்கு விசிலஞ்சலி நிகழ்ச்சி பற்றி தங்களுடைய பதிவு சிறப்பாக இருந்தது.

    Quote Originally Posted by raghavendra View Post
    மேடையில் ஒரு நண்பர் மிகவும் எச்சரிக்கையாக தப்பித் தவறிக் கூட நடிகர் திலகத்தின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்து வெற்றி பெற்றார். ஆஹா... என்னே ஒரு நல்ல எண்ணம்..
    தாங்கள் குறிப்பிட்டிருப்பது யார் என்பது தெரியவில்லை. ஆனால் தாங்கள் விழாவில் பேசியவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
    Quote Originally Posted by raghavendra View Post
    நடுவில் ஒரு சிறிய விழா. விழாவிற்கு வருகை தந்த கலைஞர்கள் வியட்நாம் வீடு சுந்தரம், வெண்ணிற ஆடை ஸ்ரீகாந்த், மோஹன் சர்மா, பிறைசூடன், டாக்ட்ர் சொக்கலிங்கம் ஆகியோர் பேசினார்கள்.
    ஆனால் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் சார்பில் மேடையில் பேசிய திரு.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயரை எப்போதும் போல தாங்களும் தப்பித் தவறிக் கூட எழுதிவிடக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக தவிர்த்திருக்கிறீர்கள்.

    நன்றி.
    Last edited by KCSHEKAR; 30th September 2013 at 11:33 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  6. #2665
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    பட்டிக்காடா பட்டணமா கேள்வித்தாள் மிகவும் சூப்பர். ரசிகர்கள் அனைவருமே பட்டதாரிகள் ஆகியிருப்பார்கள். இப்படி வித்தியாசமான சிந்தனைகளுடன் பதிவுகள் தயாரிப்பதில் வல்லவர் நீங்கள் என்பதை இன்னொருமுறை நிரூபித்து விட்டீர்கள். திரியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில் தங்கள் பங்களிப்பு மகத்தானது.

    டியர் ரவி சார்,

    கர்ணனையும் கணேசரையும் ஒப்பிட்ட தங்கள் பதிவு மிக அற்புதம். நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு. அடிக்கடி வந்து இப்படிப்பட்ட அருமையான பதிவுகளை அளியுங்கள்.

    டியர் வாசுதேவன் சார்,

    கோபால் சாரின் வினாத்தாளுக்கு சுவையூட்டும் வண்ணம் தாங்கள் பதித்த பட்டிக்காடா பட்டணமா நிழற்படங்கள் அனைத்தும் மிக மிக நன்று. அதற்கு முன் வந்திருந்த அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்த மகத்தான காவியத்துக்கு நல்ல நினைவுட்டல். நன்றி.

    டியர் ராகவேந்தர் சார்,

    சரியான நேரத்தில் பம்மலார் அவர்களின் அறிய 'ஆவணப்பதிவுகளை' மீள்பதிவிட்டு, பல்வேறு 'ஆணவப்பதிவுகளுக்கு' பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்களும் நன்றிகளும். எவ்வளவு அறிய ஆவணங்கள்..!!!. திரட்டி, பாதுகாத்து, அளித்த பம்மலார் அவர்களுக்கு எந்நாளும் நன்றிகள்.....

  7. #2666
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் ராகவேந்தர் சார்,

    நடிகர்திலகத்துக்கு அளிக்கப்பட விசிலஞ்சலி நிகழ்ச்சி பற்றிய தங்கள் நேரடி கவரேஜ் நன்றாக உள்ளது. ('இதழொலி' என்ற சொல்லாட்சி அருமை). நிகழ்ச்சியில் பேசிய பிரபலங்களில், நடிகர்திலகத்தின் பெயரை 'கவனமாக' தவிர்த்த அந்த பிரகஸ்பதி யாரென்று ஓப்பனாகவே சொல்லியிருக்கலாம். ரசிகர்களின் ஊகங்களுக்கு விட வேண்டியதில்லையே.

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையில் வந்த பல பாடல்களில் 'விசில்' இடம்பெற்றுள்ளது. உதாரணத்துக்கு 'அந்த நாள் முதல்' (பாவமன்னிப்பு),, 'கேள்வி பிறந்தது அன்று' (பச்சைவிளக்கு), 'நெஞ்சத்திலே நீ' (சாந்தி), நீரோடும் வைகையிலே (பார்மகளேபார்), என பல பாடல்கள் உண்டு. அவற்றை விளக்க விழாவில் தங்களுக்கு வாய்ப்பு அமையாதது துரதிஷ்டமே....

  8. #2667
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //கார்த்திக் சார்- எங்கே ஆலம்?எங்கே ஆலம்?//

    ஓலமிட்டு ஏங்கி நிக்கும்
    ..உள்மனசைத் தேற்று தற்கு
    வாளமீனப் போல தேகம்
    ..வார்த்துவிட்ட பொன்னா மின்னி
    கோலமிடப் புள்ளி வச்சு
    ..கோடுபோடக் காத்தி ருக்க
    ஆலமின்னும் வார லையே
    ..ஆசநெஞ்சு ஓய லையே..!
    ஓஞ்சு போகாதே கட்டைகள்
    காய காயவே கனன்றெரியும் கங்கனெவே
    ஆலம் விழுதுகள் போல் ஐடம் ஆயிரம்
    வந்துமென்ன வேரென நின்றவளே ,என்
    உடலும் உள்ளமும் விறைப்பாகவே
    இன்றும் மிடுக்கோடு ,காளையென் ரேகை
    என்றும் ஆருடன் எவனும் அறிந்ததேயில்லை
    என் எதிர்காலமே என் கைகளால் அழிவதை
    கண் மூடி சுகித்தவன் கதறியே தொழுகிறேன்
    காட்டு என் ஆலத்தை ,என் மன ஆழத்தை அறிய
    சின்ன கண்களே போதுமே,நன்றி நண்பரே.
    Last edited by Gopal.s; 30th September 2013 at 12:24 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. #2668
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    புரிந்தவருக்குக் கருமம்
    புரியாதவருக்குக் கவிதை.
    ஆலத்துக்காக ஒலமிட்டழும்
    நீலகண்டனே!
    இந்தா! ..... பசியாறு.


    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2669
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    விசிலாஞ்சலி நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு என்னைப் போல வர இயலாதவர்களுக்கு வரப்ரசதமாய் அமைந்துள்ளது. சென்னையில் இது ஒரு வசதி. நிகழ்ச்சியை அருமையாக அளித்த நல்லுள்ளங்கள் வாழ்க. நல்ல தொகுப்பு. நன்றி தங்கள் அம்சமான கவரேஜுக்கு.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2670
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    என்றும் ஆருடன் எவனும் அறிந்ததேயில்லை
    ஆருடன் ஒருவன் கருடனாக நான் இருக்கிறேன் தம்பி.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •