-
2nd October 2013, 09:16 PM
#11
Senior Member
Seasoned Hubber
பாவ மன்னிப்பு ,,,, நிறைவு செய்யும் முன் ..
இது வரை இணையத்தில் அதிகம் தென்பட்டிராத தகவல் மற்றும் நிழற்படம்
இப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை உருவாக்க மெல்லிசை மன்னருக்குத் தேவைப்பட்ட காலம் ஆறு ஆண்டுகளும் 15 நாட்களும் ...
என்ன வியப்பாக உள்ளதா...
இப்படித் தான் மெல்லிசை மன்னர் கேட்கிறார்..
பாவ மன்னிப்பு பாடல் பதிவிற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பாடலை கண்ணதாசன் எம்.எஸ்.வி.யிடம் தந்து ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பயன் படுத்திக் கொள்ள சொல்கிறார். அதை அப்படியே செய்வதாக சொல்லியிருந்தார் மெல்லிசை மன்னர். பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பாடலுக்கு வெகு நேரமாக யோசித்தும் மெட்டு புலப்படவில்லை. ஹார்மோனியத்தில் கண் வைத்தவாறு யோசனை செய்கிறார் மெல்லிசை மன்னர். கண்ணதாசன் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்த பாடல் நினைவுக்கு வருகிறது. அப்பாடலை எடுத்து பார்க்கிறார். சிந்திக்கிறார்.
இரவு நேரங்களில் சாந்தோம் கடற்கரையிலிருந்து மீனவர்கள் முன்னிரவு நேரத்தில் ஏதோ ஒரு பாடலை பாடிய படி பொழுதைக் கழிக்கின்றனர். நெஞ்சை வருடிச் செல்லும் அந்த இனிய பாடல் அவருக்கு நினைவுக்கு வருகிறது. அதனை எண்ணிய படியே அப்போதைக்கு பாடல் பதிவு ஒத்திவைக்கப் படுகிறது. பிறகு மெல்லிசை மன்னர்கள் இருவரும் ஒரு ஆங்கிலப் படத்திற்கு செல்கின்றனர். திரைப்படம் துவங்கும் முன் ஆங்கிலப் பாடல் அல்லது இசை ஒலிக்கும். அன்று ஒலித்த அந்த இசையைக் கேட்டு அவர்கள் வியப்புறுகின்றனர். அந்த செம்படவர் பாடிய அதே மெட்டில் இந்த ஆங்கிலப் பாடல்... பொறி தட்டுகிறது...
மீண்டும் கவியரசரை அழைக்கிறார்கள். அமர்கிறார்கள். அந்த இரு ட்யூனின் அடிப்படை இனிமையினையும் மென்மையினையும் மட்டும் எடுத்துக் கொண்டு புதியதாக ஒரு மெட்டை உருவாக்குகிறார்கள். கவியரசர் பாடல் வரிகளை சொல்லச் சொல்ல எண்ணி 15வது நிமிடத்தில் பாடல் உருவாக்கம் முடிந்து விட்டது.
ஆறு ஆண்டுகள் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட அப்பாடல் எது ... தெரியுமா...
விடையைச் சொல்ல முயலுங்கள். அது வரை இந்த அபூர்வமான நிழற்படத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
2nd October 2013 09:16 PM
# ADS
Circuit advertisement
Bookmarks