-
14th October 2013, 07:01 PM
#11
Junior Member
Newbie Hubber
'குறைந்த வயதுள்ள எனக்கு இந்த விருது ஏன்...?' - சர்வதேச விருதை ஏற்க கமல் தயக்கம்
வயதான கலைஞர்களுக்கு தரும் விருது குறைந்த வயதுடைய எனக்கு எதற்கு என்று கூறி, ஒரு சர்வதேச விருதை திருப்பித் தரப் போகிறாராம் நடிகர் கமல்ஹாஸன். அது மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட உள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது. பொதுவாக இந்த விருது வயதான மூத்த நடிகர்களுக்குத்தான் இதுவரை வழங்கப்பட்டு வந்ததாம். இந்த முறை கமல் ஹாஸன் இந்திய சினிமாவுக்கு செய்த சாதனைகளுக்காக இந்த விருதினை அவருக்குத் தர முடிவு செய்து, அறிவித்துள்ளனர் விழாக் குழுவினர்.
இந்த விருதை ஏற்கலாமா வேண்டாமா என யோசனையில் உள்ளார் கமல். இது குறித்து கமல் கூறுகையில், "இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும். அதே நேரம் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த இந்தக் கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் கொஞ்சம் பொறுத்திருங்கள்.... இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என்று சிபாரிசு செய்யவும் நான் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சினிமாவில் உதவி நடன இயக்குனராக பணியாற்றியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அந்த வகையில் இப்போதும் நான் மாணவன்தான். விரைவில் புதிய இந்திப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.
-
14th October 2013 07:01 PM
# ADS
Circuit advertisement
Bookmarks