-
18th October 2013, 12:38 PM
#11
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
டைரக்டர்கள் பாணி
ஒரு ஜாலி பார்வை.
.?
டியர் வாச்தேவன் சார்,
இயக்குனர்கள் பற்றிய தங்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நேரத்தில் இயக்குனர்கள் கிருஷ்ணனன் பஞ்சு அவர்களைப் பற்றி நடிகர்திலகம் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.
1992 ஆம் வருடம் (என்று நினைக்கிறேன்) இதயவேந்தன் சிவாஜி மன்றத்தின் சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைமன்றத்தில் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் நடிகர்திலகமும் கலந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் நடிகர்திலகம் அதிர்ச்சியடைந்தார். காரணம் அதில் சிறப்பு விருந்தினர் பட்டியலில் டைரக்டர் கிருஷ்ணன் பெயரும் இடம் பெற்றிருந்ததால். என்னைக் கூப்பிட்டு கிருஷ்ணன் அண்ணனுக்குக் கார் அனுப்பபட்டுள்ளதா என்றும், அவரைக் கூப்பிட்டு வர யாராவது செல்கிறார்களா என்பதையும் கவனித்துக்கொள்ளச் சொன்னார். திரு.ராஜசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக என்னை விழாவிற்கு நடிகர்திலகத்துடன் காரில் செல்லப் பணித்தார். விழா நாளன்று, கிருஷ்ணன் அண்ணன் வருவதற்கு முன் தான் செல்லவேண்டும் என்று கூறி அதன்படியே முன்கூட்டியே சென்று அமர்ந்திருந்த நடிகர்திலகம், டைரக்டர் கிருஷ்ணன் வந்தவுடன் மேடையிலேயே அவருடைய காலில் விழுந்து வணங்கினார். விழா முடிந்து காரில் வரும்போது, கிருஷ்ணன் அவர்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தார். பராசக்தி ஆரம்பத்தில் பஞ்சு அவர்கள் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டாலும், கிருஷ்ணன்தான் தன்னை ஊக்கப்படுத்தி, உற்சாகம் தருவார் என்று கூறியதோடு, அடுத்த நாள் காலை என்னை, அப்போது தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த வளர்மதியன் அவர்களைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வரச்சொன்னார். அவர் கூறியபடியே அடுத்த நாள் காலை அன்னை இல்லம் சென்றோம். ரூ.5000/- ஐ எங்களிடம் கொடுத்து, கிருஷ்ணன் அண்ணன் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியிடம் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார் நடிகர்திலகம். கிருஷ்ணன் அவர்களிடம் கொடுத்தால் அவர் அதை அனாவசிய செலவு செய்துவிடுவார் என்று அப்படிக் கூறியிருக்கிறார். அதன்படியே டைரக்டர் கிருஷ்ணன் அவர்களின் மனைவியிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, நன்றி தெரிவித்ததோடு, அவ்வப்போது கணேசு தான் பண உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
டைரக்டர் கிருஷ்ணன் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்ததோடு, அவருக்கு வெளியில் தெரியாமல் உதவி செய்துவந்த நடிகர்திலகத்தின் நன்றி மறவா குணத்தை எவ்வாறு போற்றுவது?
இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
தாங்கள் ஏற்கனவே தாங்கள் பதிவில் குறிப்பிட்ட இயக்குனர்களுடன் நம் நடிகர்திலகம்


Last edited by KCSHEKAR; 18th October 2013 at 01:22 PM.
-
18th October 2013 12:38 PM
# ADS
Circuit advertisement
Bookmarks