- 
	
			
				
					18th October 2013, 07:13 AM
				
			
			
				
					#3241
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							டியர் ராகவேந்திரன் சார்,  கார்த்திக் சார், சந்திரசேகரன் சார், ரவி சார் 
 
 நாயகியர் தொடர், பராசக்தி பதிவுகளுக்கான தங்கள் பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							18th October 2013 07:13 AM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 07:17 AM
				
			
			
				
					#3242
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் 
மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
			
		 
 
 
 அருமை ரவி சார். சத்தியமான வார்த்தைகள். பலருக்கு இது புரிவதில்லை.
 
 அழகான குட்டிக் கதைகள் கூறி நடிகர் திலகத்துடன் அவற்றை ஒப்பீட்டு சிறப்பு சேர்த்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 08:38 AM
				
			
			
				
					#3243
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							இன்றைய இந்து தமிழ் நாளிதழில் பி.பி.சி.யின் தொடக்கத்தைப் பற்றிய நினைவு கூறல் வெளிவந்துள்ளது. அதில் நடிகர் திலகத்தின் பி.பி.சி. வானொலி பேட்டி பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.
 
   
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 08:46 AM
				
			
			
				
					#3244
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 85வது பிறந்த நாள் விழா, 01.10.2013 அன்று மாலை சென்னை மியூசிக் அகாடெமி அரங்கில் நடைபெற்றது. விழாவில் நெல்லை கண்ணன் அவர்களின் உணர்ச்சி மிக்க உரை நம் பார்வைக்காக. இணையத்தில் முதன் முதலா முழுமையாக. நன்றி யூட்யூப் மற்றும் சிவாஜி பிரபு அறக்கட்டளை.
 
 
 
 
 
 
				
				
				
				
					 விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்.... 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 09:35 AM
				
			
			
				
					#3245
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							டைரக்டர்கள் பாணி
 
 ஒரு ஜாலி பார்வை.
 
 நம் தமிழ்ப்பட இயக்குனர்கள் அனைவரும் அவரவர்களுக்கென்று ஒரு தனிப் பாணியை கடைப் பிடிப்பார்கள். சில விஷயங்களை அவர்களால் விட்டுக் கொடுக்கவே முடியாது. அது படத்திற்கு சிறப்பு சேர்த்தாலும் சரி! படத்தை பஸ்பமாக்கினாலும் சரி. சரி! சில இயக்குனர்களின் பாணிகளைப் பற்றி ஜாலியாகப் பார்ப்போம். இது பொதுவான ஒரு பார்வைதான். நடிகர் திலகங்களின் படங்களும் இதில் சேர்ந்து கொள்ளும். அவர் இல்லாமலா?
 
 கிருஷ்ணன் பஞ்சு:
 
  
 
 பார்ப்பதற்கு கிராமத்து ஏர் உழவர்கள் போல் அப்பாவிகள் போல இருப்பார்கள். பார்த்தால் இயக்குனர்கள் போலவே தெரியாது. ஆனால் கில்லாடிகள். ஹை-கிளாஸ் ரசனை உள்ளவர்கள். உருவத்திற்கும், இயக்ககத்திற்கும் சம்பந்தமே இருக்காது. இவர்களுக்கு ஒளிப்பதிவு நச்சென்று இருக்க வேண்டும். இவர்கள் இயக்கம் படங்களின் காட்சிகள் போட்டோ பிரேம் போல இருக்கும். பராசக்தி ஒன்று போதாதா! அதே போல காட்சிகளின் கோர்வை அட்டகாசமாக இருக்கும். காட்சிகள் தவ்வாது. அதிகமான நடிக நடிகையர்களைக் கையாளுவார்கள். காட்சிகளில் அழுத்தம் கொடுத்து மனதில் ஆழமாகப் பதிய வைப்பதில் கை தேர்ந்த திறமை சாலிகள். படு ஜென்டிலாக படத்தைக் கொண்டு போவார்கள். உயர்ந்த மனிதன் போன்ற சிக்கலான கதையமைப்பு, பாத்திரம் இவைகளை அநாயாசமாகக் கையாளுவார்கள். பாத்திரத்தின் தன்மை கெடாது. நிஜமாகவே உயர்ந்த மனிதர்கள். இந்த நாள் உங்கள் நாள் போல் இன்பமாயில்லையே? அது ஏன்... ஏன்?  கிருஷ்ணன் பஞ்சுவே!
 
 ராமண்ணா:
 
 இவர் பாணியே தனி. கமர்ஷியல் பைத்தியம். குடும்பக் கதையை எடுத்துக் கொண்டு ஆக்க்ஷன் பேக்கேஜ் ஆக்குவார். ஆக்ஷன் படங்களில் குடும்பப் பாசத்தை நுழைப்பார். தங்கச் சுரங்கம் ஞாபகத்திற்கு வருமே!
 
 இவரது படங்களில் நீளம் அதிகமாக இருக்கும். கத்தரி வைக்க மாட்டார். கத்தரியும் போட மாட்டார். எப்படியோ ரசிகர்களின் நாடி பார்த்து உட்கார்ந்து ரசிக்க வைத்து விடுவார். செலவுக்கு கொஞ்சமும் அஞ்சாத இயக்குனர். பணத்தை தண்ணீராக செலவழிப்பார். காட்சிகளிலும் பணத்தைப் பறக்க விடுவார். உடைகளில் கூட சில்லறைகளைப் பதிப்பார். அப்போதே நிறைய கலர் படங்களை எடுத்து தள்ளியவர்.
 
 கவர்ச்சிப் பிரியர். ஹீரோயின்களை படு கிளாமராகக் காட்டுவதில் சூரர். (நான்- ஜெயா பிகினி சீன். மூன்றெழுத்து ஸ்ரீவித்யா போட்டில் ஆட்டம். தங்கச்சுரங்கம்- நிர்மலா குளியல்) துணை நடிகைகளை அதிகமாக பயன் படுத்துவார். சண்டைக் காட்சிகள் நிறைய சேர்ப்பார். ஏராளமான நட்சத்திரப் பட்டாளம் உண்டு. ரவிச்சந்திரன் என்றால் இவருக்கு ரசகுல்லா.
 
 இவருக்கு ஒரு தனிப் பாணி உண்டு. ஹீரோயின்களை சேற்றில் மூழ்க வைத்துப் பார்ப்பதில் இவருக்கு தனி சுகம்.(பாரதி)  ஹீரோயின்கள் மாத்திரமல்ல. வண்டிகளையும்தான். சொர்க்கம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில்  சேற்றில் தான் படமே ஓடும். அது போல நடிகைகளின் மேலே பெயின்ட்டைப் பீய்ச்சிப் பார்பதிலும், பார்க்க வைப்பதிலும் கை தேர்ந்தவர். துப்பாக்கி வழியாக் கூட பெயின்ட்டைப் பாய்ச்ச வைப்பார். (மூன்றெழுத்து) குளியல் சீன கண்டிப்பாக உண்டு. டப்பாங்குத்து ஆட்டம் இல்லாமல் இவர் படம் இருக்காது. கட்டழகு பாப்பா, ஆணாட்டம் பெண்ணாட்டம், இரவில் வந்த குருவிகளா, ராஜா கண்ணு போகாதடி) லாரி, கார், பெட்டி, என்றால் இவருக்கு அல்வா. (பெட்டிக்குள்ளே போட்டடைத்த பெட்டைக் கோழி, போதுமோ இந்த இடம், சொல்லாதே யாரும் கேட்டால், என்னைப் போல் ஒருவன் கிளைமாக்ஸ் சண்டை) ஜெயலிதா மேடம் என்றால் இவருக்கு உயிர். (சக்தி வந்தாளடி) நிறைய படங்களில் பாக்தாத் பேரழகி நாயகி. குலுக்கு ஆட்டப்  பைத்தியம். (பொன் மகள் வந்தாள்) அசோகன், மனோகர் இல்லாமல் இவர் படம் பெரும்பாலும் இருக்காது. ரிஸ்க் எடுப்பது இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. இல்லையென்றால் திரையுலகின் இரு துருவங்களையும் இணைத்து கூண்டுக்கிளி எடுத்து இரு தரப்பு ரசிகர்களையும் இன்று வரை சிறைக் கூண்டுக்குள் தள்ளியபடி இருப்பாரா!
 
 கே.எஸ். கோபால கிருஷ்ணன்
 
  
 
 பலே கில்லாடி. ஆள்தான் பார்க்க நோஞ்சான். ஆனால் கீர்த்தி பெரிது.
 
 குடும்பம், குழப்பம், விரிசல், உணர்ச்சிப் பிரவாகம் இப்படியாகக் காய் நகர்த்துவதில் கை தேர்ந்தவர். இவர் பள்ளியில் படிக்கும் போது பரீட்சை  சமயங்களில் டீச்சரிடம் எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்கியே அவரை கொன்னு இருப்பார் போல. பக்கம் பக்கமாக வசனங்கள் எழுதுவார். அளவுக்கு அதிகமாக நடிகர்களை எக்ஸ்ப்ரெஷன் கொடுக்க வைப்பார்.
 
 இவருக்குப் பிடித்த நடிகர்கள் 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி, சாமிக்கண்ணு, ரங்காராவ், தேங்காய் சீனிவாசன், கே.ஆர்.விஜயா.
 
 இப்போதுதான் நீங்கள் ஆழமாக கவனிக்க வேண்டும். இவர் ஒரு குறப் பிரியர். ஆமாம் சார். இவர் படங்களில் பெரும்பாலும் குறவர்கள் டான்ஸ் அல்லது அது தொடர்பான டான்ஸ் இல்லாமல் இருக்காது. அவ்வளவு ஏன்? குறத்தி மகன் என்று முழு நீள அதுவும் கலர்ப்படமாக எடுத்து விட்டாரே! நீர் நிலம் நெருப்பு அப்படிப்பட்ட டைப்தான். ஏன்? தலைவர், பத்மினிக்கு பேசும் தெய்வத்தில் அழகான இதய ஊஞ்சல் ஆடவா பாட்டைக் கொடுத்து பின் இருவரையும் குறவர்களை விட மோசமான டப்பங்குத்து ஆடவைத்து அந்தப் பாட்டைக்  கெடுத்தாரே! ஆயாலோ! ஆயாலோ! கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா.
 
 ஒரு குடும்பத்தை வைத்து அதில் குழப்பம் உண்டாக்க இரு வில்லிகளை (மாமியாரோ, நாத்தனாரோ) வைத்து விடுவார். (அந்தக் காலத்தில் சுந்தரிபாய், தாம்பரம் லலிதா இடைக்காலத்தில் ராஜசுலோச்சனா, சி.ஐ.டி.சகுந்தலா) செக்ஸை லாவகமாகப் புகுத்துவதில் வல்லவர்.  கே. ஆர். விஜயாவையே நத்தையில் முத்துவில் ஓடும் நதியில் குளிக்க வைத்து ஆடையை ஓட வைத்தவர் ஆயிற்றே. இவரின் ஆஸ்தான நடிகை கே.ஆர்.விஜயா. தமிழ்ப்படங்கள் கலரை நோக்கி ஓடும் போது அடுக்குமல்லி என்ற கருப்பு வெள்ளை, பாலாபிஷேகம் என்ற கருப்பு வெள்ளை படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றி அடையச் செய்து அனைவரையும் மிரள வைத்த பேர்வழி. சாமிப் படங்களையும் வெற்றி பெறச் செய்து காட்டியவர். ஆதி பராசக்தி எடுத்து அப்போதே தசாவதாரம் காட்டியவர்.
 
 இவர் ஜெமினியை வைத்து எடுத்த உறவுக்குக் கை கொடுப்போம் படுதோல்வி அடைந்தது. ஆனால் பின்னாளில் விசு இதே கதையை சுட்டு சம்சாரம் அது மின்சாரம் எடுத்து சூப்பர் ஹிட்டானது. இதுதான் விதி. கன்னட உதயசந்திரிகாவை வைத்து சுவாதி நட்சத்திரம் என்ற ஒரு நல்ல படத்தையும் அளித்தவர்.
 
 எப்படியோ! குடும்பக் கதையா? கூப்பிடு கோபாலை (நான் கோபால் கிருஷ்ணனை சொன்னேன்பா....குடும்பக் கதைக்கும் கோபாலுக்கும் என்ன சம்பந்தம்?) என்று சொல்லுமளவிற்கு வெற்றிகளைக் குவித்தவர். படிக்காத பண்ணையார்தான் ஷாமியோவ்.
 
 ஏ.சி.திருலோகசந்தர்.
 
  
 
 நம்ம இயக்குனர். கலக்கல் பேர்வழி. அப்போதே M.A. இவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் தலைவர் எழுந்து நிற்பாராம். படிப்புக்கு நடிப்பு கொடுக்கும் மரியாதை.
 
 இவர் எப்படி தெரியுமா? ஏறினால் ரயில். இறங்கினால் ஜெயில். பின்னு பின்னுவென்று பின்னுவார். தங்கை, இருமலர்கள், தெய்வ மகன், திருடன், என்று கலக்கி காக்டெயில் விருந்து படைப்பார். அதே நேரத்தில் அன்பே ஆருயிரே, அன்புள்ள அப்பா என்று தடம் புரள்வார். கொஞ்சம் கத்தரி போட மறந்து விடுவார். இழுவை சில படங்களில் ஜாஸ்தி. இவரும் ஒரு கே.ஆர்.விஜயா பிரியர். ஒன்றிரண்டு சண்டைக் காட்சிகள் வேண்டும் இவருக்கு. தலைவரை சக்கை வேறாக சாறு வேறாகப் பிழிந்து எடுத்து விடுவார். துணிச்சல்காரர். விஜயஸ்ரீயை காபரே ஆட வைத்த இவர் கே.ஆர். விஜயாவையே காபரே டான்ஸ் ஆட வைத்து நம்மை ஓட வைத்த இயக்குனர். இருமலர்களை அருமையாகப் பண்ணி சக்செஸ் ஆக்கினார். தெய்வ மகனைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
 
 (இவரைப் பற்றி ஒரு சமயம் தலைவரிடம் பேசி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன். இவரைப் பற்றி ஏதாவது சொன்னால் தலைவருக்கு கோபம் வந்து விடும்.)
 
 ம்...நிஜமாகவே அவன்தான் மனிதன் இந்த தெய்வ மகன் (வீரத் திருமகன் ஆயிற்றே)! கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா.
 
 ஏதோ! என் இஷ்டத்திற்கு எழுதி விட்டேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள். இன்னும் சில இயக்குநர்களைப் பற்றி தொடர்கிறேன். இல்லையென்றால் கழட்டிக் கொள்கிறேன்.
 
 ஓ.கே.வா.?
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 18th October 2013 at 10:05 AM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 11:58 AM
				
			
			
				
					#3246
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு சார் - எங்கிருந்து இப்படியெல்லாம் ம் புதிய ideas உங்களுக்கு வருகிறது - எனக்கு ஒரு chinese statement நினைவுக்கு  வருகிறது 
 
 A great thinker was asked -
 What is the meaning of life ?
 He replied -
 " LIFE itself has no MEANING ,
 LIFE is an OPPORTUNITY to create a MEANING"
 
 
 நீங்கள் ஒரு positive meaning யை இந்த திரிக்கு கொடுத்தவண்ணம் இந்த திரியின் LIFE யை பல படுத்துகிறீர்கள் பன்மன்டங்கு
 
 Ravi
    
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 12:21 PM
				
			
			
				
					#3247
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				அதே நேரத்தில் அன்பே ஆருயிரே, அன்புள்ள அப்பா என்று தடம் புரள்வார்
			
		 
 
 
 Not too much sure about Anbe..as i havent seen it much...but whats wrong with Anbulla Appa....
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 12:38 PM
				
			
			
				
					#3248
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Seasoned Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  vasudevan31355  
 டைரக்டர்கள் பாணி
 ஒரு ஜாலி பார்வை.
 .?
 
 
 
 டியர் வாச்தேவன் சார்,
 
 இயக்குனர்கள் பற்றிய தங்களின் பார்வை மிகவும் சிறப்பாக இருந்தது.  இந்த நேரத்தில் இயக்குனர்கள் கிருஷ்ணனன் பஞ்சு அவர்களைப் பற்றி நடிகர்திலகம் கூறியவற்றைப் பகிர்ந்துகொள்ள எண்ணுகிறேன்.
 
 1992 ஆம் வருடம் (என்று நினைக்கிறேன்)  இதயவேந்தன் சிவாஜி மன்றத்தின் சார்பில் சென்னை  ராஜா அண்ணாமலைமன்றத்தில் நடிகர்திலகத்தின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அதில் நடிகர்திலகமும் கலந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள்.  விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் நடிகர்திலகம் அதிர்ச்சியடைந்தார்.  காரணம் அதில் சிறப்பு விருந்தினர் பட்டியலில் டைரக்டர் கிருஷ்ணன் பெயரும் இடம் பெற்றிருந்ததால்.  என்னைக் கூப்பிட்டு கிருஷ்ணன் அண்ணனுக்குக் கார் அனுப்பபட்டுள்ளதா என்றும், அவரைக் கூப்பிட்டு வர யாராவது செல்கிறார்களா என்பதையும் கவனித்துக்கொள்ளச் சொன்னார்.  திரு.ராஜசேகரன் உடல்நலக் குறைவு காரணமாக என்னை  விழாவிற்கு நடிகர்திலகத்துடன் காரில் செல்லப் பணித்தார். விழா நாளன்று, கிருஷ்ணன் அண்ணன் வருவதற்கு முன் தான் செல்லவேண்டும் என்று கூறி அதன்படியே முன்கூட்டியே சென்று அமர்ந்திருந்த நடிகர்திலகம், டைரக்டர் கிருஷ்ணன் வந்தவுடன் மேடையிலேயே  அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.  விழா முடிந்து காரில் வரும்போது, கிருஷ்ணன் அவர்களைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தார்.  பராசக்தி ஆரம்பத்தில் பஞ்சு அவர்கள் தன்னிடம் கடுமையாக நடந்துகொண்டாலும், கிருஷ்ணன்தான் தன்னை ஊக்கப்படுத்தி, உற்சாகம் தருவார் என்று கூறியதோடு, அடுத்த நாள் காலை என்னை, அப்போது தென்சென்னை மாவட்டத் தலைவராக இருந்த வளர்மதியன் அவர்களைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வரச்சொன்னார். அவர் கூறியபடியே   அடுத்த நாள் காலை அன்னை இல்லம் சென்றோம்.  ரூ.5000/- ஐ எங்களிடம் கொடுத்து, கிருஷ்ணன் அண்ணன் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியிடம் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார் நடிகர்திலகம்.  கிருஷ்ணன் அவர்களிடம் கொடுத்தால் அவர் அதை அனாவசிய செலவு செய்துவிடுவார் என்று அப்படிக் கூறியிருக்கிறார். அதன்படியே டைரக்டர் கிருஷ்ணன் அவர்களின் மனைவியிடம் அந்தப் பணத்தைக் கொடுத்தபோது, நன்றி தெரிவித்ததோடு, அவ்வப்போது கணேசு தான் பண உதவி செய்து வருவதாகவும்  தெரிவித்தார்.
 
 டைரக்டர் கிருஷ்ணன் அவர்கள் மீது மரியாதை வைத்திருந்ததோடு, அவருக்கு வெளியில் தெரியாமல் உதவி செய்துவந்த நடிகர்திலகத்தின் நன்றி மறவா குணத்தை எவ்வாறு போற்றுவது?
 
 இந்தத் தகவலைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
 
 தாங்கள் ஏற்கனவே தாங்கள் பதிவில் குறிப்பிட்ட இயக்குனர்களுடன்  நம் நடிகர்திலகம்
  
  
   
 
 
 
 
				
				
				
					
						Last edited by KCSHEKAR; 18th October 2013 at 01:22 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 12:38 PM
				
			
			
				
					#3249
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  rsubras  
 Not too much sure about Anbe..as i havent seen it much...but whats wrong with Anbulla Appa.... 
 
 
 நான் படங்களின் hit basic ஐ சொன்னேன் சார்.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					18th October 2013, 12:42 PM
				
			
			
				
					#3250
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							
	
		
			
			
				
					  Originally Posted by  KCSHEKAR  
  ரூ.5000/- ஐ எங்களிடம் கொடுத்து, கிருஷ்ணன் அண்ணன் வீட்டிற்குச் சென்று அவருடைய மனைவியிடம் இதைக் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று கூறினார் நடிகர்திலகம். 
 
 
 கிருஷ்ணனுக்கே கொடை கொடுத்த கர்ணன். நன்றி சந்திரசேகரன் சார் தங்களுடைய அருமையான நினைவலைகளுக்கு.
 
 
 
 
 
 
 
Bookmarks