- 
	
			
				
					22nd October 2013, 03:00 PM
				
			
			
				
					#3331
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
							
							
						
						
				
					
						
							'அருணோதயா  தீபாவளி' நடிகர் திலகத்தின் அரிய பேப்பர் கட்டிங்கிற்கு ரொம்ப ரொம்ப நன்றி!
						 
 
 
 
 
 
 
- 
		
			
						
						
							22nd October 2013 03:00 PM
						
					
					
						
							 # ADS
						
					
			 
				
					
					
						Circuit advertisement
					
					
					  
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 03:02 PM
				
			
			
				
					#3332
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Regular Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							Dear Ravi sir,your article,NASA,old-scriptures,NT was fine.Our people don't realize the value of the thing they have.The day is not far ,when people accept NT as the DOYEN of film-world globally.
						 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 03:36 PM
				
			
			
				
					#3333
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 03:46 PM
				
			
			
				
					#3334
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							டியர் ரவி (g94127302) சார்,
 
 தங்கள் உயரிய பாராட்டிற்கு மிக்க நன்றி!
 
 தங்களின் அசாதராணமான ஆங்கிலப் பதிவுகள் தூள் கிளப்புகின்றன. அருமையான விஷயங்களை கொண்டு வந்து அலசி இறுதியில் அதை  தலைவருடன் அழகாக கோர்த்து, இணைத்து முடிச்சுப் போடும் தங்கள் பாணி முற்றிலும் புதிது. அதிலும் நாசா பதிவு அற்புதம். (ஹனுமான்ஜியின் பழத் தாவல் அட்டகாசம்). அழகான உவமை. வித்தியாசமான சிந்தனை. தங்கள் பதிவுகளில் நுண்ணிய அறிவு புலப்படுகிறது. தங்கள் மனித நேயமும் விளங்குகிறது. வித்தியாசமான தங்கள் சிந்தனைக் களத்திற்கு என் மனமகிழ்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்கும்
 
 அன்பன்
 வாசுதேவன்.
 
 
 
 
				
				
				
					
						Last edited by vasudevan31355; 22nd October 2013 at 07:34 PM.
					
					
				 நடிகர் திலகமே தெய்வம்  
 
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 04:19 PM
				
			
			
				
					#3335
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							சிவாஜியின் காதல்கள்-4
 
 புதையல்-1957
 
 சின்ன சின்ன இழை பின்னி விண்ணோடும் முகிலோடும் விளையாடிய தங்க மோகன தாமரை பரிமளா ----உனக்காக எல்லாம் உனக்காக.
 
 முதல் காட்சி -தபால் கொண்டு வருபவர், தபால் படிக்காமலே கிழிக்க படுவதை கண்டு ஆச்சர்யமுற்று கேட்க,நீங்களே படித்து பாருங்கள் என்று தபால் காரரை அந்த பருவ மங்கை வேண்ட,தபால் காரர் ,இப்படி கசமுசான்னு கிழிச்சிட்டியே ,ஒட்டுமா என்று ஓட்ட வைத்து(சத்தமாவா,மனசுக்குள்ளா,உங்க இஷ்டம்) ,அவர் படிக்கும் அழகிலே ,மயங்கி மனதை பறி கொடுத்து கிழிக்க பட்ட கடிதத்தையும் போற்றி வைக்கும் பரிமளா-துரை காதல் முதல் காட்சியிலேயே களை கட்டி விடும்.(படிக்கும் நடிகர் யாரென்று சொல்லவும் வேண்டுமோ)
 
 குதிரை வண்டியில் வரும் துரையை தோழிகள் கேலி செய்ய ,நிபந்தனையற்ற ஆதரவை துரைக்கு நல்கி,கடையாணி கழற்றிய வண்டியை துரத்தி சென்று ,அம்மா அப்பாவை பற்றி பரிமளா விசாரிக்க,(இருக்காங்களா,அவங்க இதுக்கு சம்மதிப்பாங்களா ,துரையின் கிண்டல்),தன் கதையை சொல்ல இரவு தனியாக கடற்கரை பக்க மண்டபத்துக்கு வர சொல்ல, அட...பரிமளாவும் சரிதான் சொல்லி விடுகிறாள்.என்ன கதை...
 
 ஒரு காதல் காட்சி படு சுவாரஸ்யமாகவும் ,கதைக்கே திருப்பு முனையாகவும் அமையும் அதிசயம் இந்த மண்டப சந்திப்பு காட்சி....
 
 இரவிலே தாமரையாய்,பகலில் நிலவாய் ,குறுந்தொகை படிக்கும் காதலர்கள்...முகத்தையும்,இதழையும் வருடும் துரையின் கரங்கள்,நாணத்தோடு ரசிக்கும் பரிமளா,கோடி கதைகள் பேசி ,பார்ப்போர் காதல் உணர்வையும் தூண்டி துடித்தெழ செய்யும்.தன்னுடைய கதையை சொல்லி இதுதான் தங்கம் புதைத்த இடம் (தங்கை தங்கம்)என்று காட்ட,தங்க புதையலை தேடி அலையும் வெள்ளியம்பலம் கோஷ்டி காதில் பட,துரத்த பட்டு மதகடியில் காதலர்கள் ஒளியும் காட்சி...அந்த கால சொல்லி அடித்த கில்லி.....
 
 விண்ணோடும் முகிலோடும் காட்சி-சுருங்க சொன்னால் தமிழில் வந்த முதல் முதல் அசல் காதல் காட்சி. இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte  என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்....பார்த்து களியுங்கள் அய்யாமார்களே....
 
 இந்த காதல் இப்படியென்றால், துர்பார்க்கிய ,வயதானவனுக்கு சூழ்ச்சியினால் வாழ்க்கை பட்டு ,பாதாள அறையில் அடை படும் துரையின் மேல் ஒருதலை காதல் கொள்ளும் மேனகா...சகதியில் விழுந்து விட்ட சந்தனத்தை உதாசீனம் செய்வதா,என்னும் மேனகாவிடம்,பின்னே அதை மேலே எடுத்து பூசி கொள்வதா என்னும் துரையிடம்,இல்லையில்லை குப்பையில் கோமேதகம் இருந்தால் என்னும் உதாரணத்திற்கு,நமக்கு சொந்தமில்லாதது என்று பதிலுக்கு, தனியுடமை என்கிறீர்களா என்னும் மேனகாவிடம்,இந்த மாதிரி விஷயங்களில் பொதுவுடைமை கூடாதம்மா என்னும் குறும்பு...
 வந்திருப்பது மாறுவேட பரிமளா என்று அறியாமல் ,குடு குடுப்பை காரனிடமே துரையை வசிய படுத்த வேண்ட ...(குடுகுடுப்பை காரர் பாவம் துரையின் பிடியில்,தட்டலில் திணறினாலும்,இரவு உருண்டு புரண்டு அருகில் படுப்பார்.அது என்னாடா படியில் மேல் நோக்கி உருண்டு என்ற துரை கிண்டல்),தப்பி போக மேனகாவை ஏமாற்ற ,சத்தியமா உன்னை பிரிய மாட்டேன் என்று மாறுவேட பரிமளா கையால் அடித்த சத்தியம் செய்து,ஓடும் போது என் கதி என்று கேட்கும் மேனகாவிடம் நீ வேறா என்று அடிதடி சண்டை வேறு...(துரை ரசிக்க வேறு செய்வார்)புதையல் சுவடியை காதலர்களை பலி கொடுக்க மாற்றியெழுதும் மேனகாவே இறுதியில் பலியாகும் சோகம்....
 
 பரிமளாவை ஒரு தலையாய் காதலிக்கும் துக்கா ராம் (சந்திர பாபுவின் மிக சிறந்த பாத்திரம்)...நூற்று கணக்காய் தினம் கடிதம் எழுதி குவிப்பதும்,(முதல் காட்சி கடித உபயம் இவரே),பரிமளா சீயக்காய் தூள் ஆர்டர் வரும் போது அதகளம் செய்வதும்,பரிமளா இவரை வெள்ளியம்பலத்திடம் மாட்டி வைக்க,புதையலை தேடி அலைய கட்டாய படுத்த படுவதும் (தின அட்டவணை வேறு குளித்தல்,சாப்பிடுதல்,தூங்குதல்,உலா போதல் என்று!!!),கடைசியில் பரிமளா தன்னை காதலிக்கவில்லையென்றாலும் தான் மாட்டுவதை விரும்பவில்லை என்று அவள் நல்லுள்ளத்தை புரிந்து தானே போலீசிடம் செய்யாத குற்றத்திற்கு சரணடையும் தியாகி காதலர்...
 
 புதையல்...விறுவிறுப்பான தங்க காதல் புதையல்.
 
 
 
 
				
				
				
					
						Last edited by Gopal.s; 22nd October 2013 at 04:31 PM.
					
					
				 
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 04:35 PM
				
			
			
				
					#3336
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 05:29 PM
				
			
			
				
					#3337
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Senior Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							//இன்ப லாகிரியில் உன்மத்தம் கொண்ட காதல் பித்தோடு காதலர்கள் களி நடம் ஆடும் ,நடிப்பின் சாதனை.Silhoutte என்று சொல்ல படும் நிழல் படத்தில் தொடங்கி,துரத்தி விளையாடி,கை கோர்த்து கடலில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து களித்து, ஜடையை இழுத்து,விளையாடி,குட்டி கரணம் அடித்து இன்ப பித்து உணர்த்தி,விளையாட்டாய் மடியில் கை போட செல்லமாய் தட்டி விடும் அழகி. காதலி கையை பிடித்து முட்டி போட்டே நடை பழகும் கடற்கரையோர காதல்.// ஹலோவ்..ஜி.எஸ் (கோபால் சார்) இது என்ன படக் காட்சியா மனதில் பதிந்திருந்த அனுபவக் காட்சியா..ம்ம் கலக்குங்க..
 
 அது சரீ ஈ.. நான் புதையல் முழுக்கப் பார்த்ததில்லை (அதுக்காக மெம்பர்ஷிப் கான்ஸல் செஞ்சுடாதீங்க) பரிமளா பத்மினி தானே.. யாரந்த மேனகா
 
 என்.வி.எஸ்(நெய்வேலி வாசுதேவன் சார்), மிக்க நன்றிங்க..நன்னாத்தான் இருக்கா கொயந்தை..இப்போ தள்ளாத வ்யதாயிருப்பாங்க..ஆமா இவங்க தான் ப்ரசண்ட் சினேகாவோட பாட்டியா  
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 07:09 PM
				
			
			
				
					#3338
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Veteran Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
				
					
						
							வாசுதேவன் சார், கோபால் சார், சின்னக்கண்ணன் சார் தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. 
 
 டியர் வாசுதேவன் சார்,
 
 ஒவ்வொருமுறையும் நான் ஐட்டம் நடிகையர் பற்றி பதிவிடும்போது எழுத்துக்களால் மட்டுமே அமைந்த என் பதிவுகளை மேலும் அழகு படுத்தும் விதமாக மேற்கொண்ட தகவல்களையும், நிழற்படங்களையும், வீடியோ பதிவுகளையும் தந்து முழுமையாக்குவது தாங்கள்தான். இம்முறையும் அதே போல ஸ்டில்களையும், வீடியோவையும், மேலதிக விவரங்களையும் தந்து ஸ்னேகலதா பதிவை சுவையூட்டி இருப்பதுடன், என்மகன் படத்தின் இந்தி பதிப்பான பே-இமான் படத்தின் பதிவுகளையும் தந்து அசத்தி விட்டீர்கள். மனமார்ந்த நன்றி.
 
 வழக்கமாக இதுபோன்ற வில்லன் கூட்டத்து அழகிகள் இறுதியில் மனம் மாறி கதாநாயகனுக்கு உதவி செய்வதோடு அந்த வில்லனின் துப்பாக்கி குண்டுக்கே இறையாவதாக நமது கதாசிரியர்கள், இயக்குனர்கள் கதையமைப்பார்கள். (பட்டணத்தில் பூதம், மீண்டும் வாழ்வேன் படங்களில் 'சாக்லேட்', வைரநெஞ்சம் படத்தில் 'ஒன்பது', ராஜாவில் 'குழந்தை' உள்பட பல அழகிகளுக்கு இந்த முடிவுதான். ஆனால் ஐஸ்கிரீமுக்கு இப்படத்தில் அப்படியில்லை என்பது ஆறுதல்).
 
 தங்கள் சிறந்த சப்போர்ட்டுக்கு மீண்டும் மீண்டும் நன்றி....
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 07:37 PM
				
			
			
				
					#3339
				
				
				
			
	 
		
			
			
				Junior Member
			
			
				Newbie Hubber
			
			
			
			 
			
				
 
 
			
				
				
						
						
				
					
						
							வாசு சார்,
 
 கார்த்திக் சாரோடு சேர்த்து நானும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டவன். உங்கள் முனைவு இல்லையென்றால் பல பதிவுகளுக்கு visual சப்போர்ட் கிடைத்திருக்காது. தங்கள் உழைப்பினால் பலர் பதிவுகள் மேலும் மெருகேறி விளங்கின என்றால் மிகை அல்ல. உங்கள் சிநேகத்திற்கு நன்றி.
 
 
 
 
 
 
 
- 
	
			
				
					22nd October 2013, 07:42 PM
				
			
			
				
					#3340
				
				
				
			
	 
		
			
			
				Senior Member
			
			
				Diamond Hubber
			
			
			
			
			
				  
 
					    
				 
 
			
				
				
						
						
							
						
				
					
						
							புதையலைத் தோண்டி காதல் முத்துக்கள் எடுத்துத் தந்த கோபால் துரைக்கு பாராட்டுக்கள்.
						 
 
 
 
 
 
 
Bookmarks