-
27th October 2013, 05:57 PM
#3491
Senior Member
Diamond Hubber
Malai malar 26-10-2013

Last edited by vasudevan31355; 27th October 2013 at 06:51 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
27th October 2013 05:57 PM
# ADS
Circuit advertisement
-
27th October 2013, 06:37 PM
#3492
Senior Member
Diamond Hubber
இன்றைய தினமலர் வாரமலர்.

Last edited by vasudevan31355; 27th October 2013 at 06:44 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
28th October 2013, 12:51 AM
#3493
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part I
ஐந்து ஆறு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் இந்த வார நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியலை பதிவிட்டிருந்தார் ராகவேந்தர் சார். அதில் சன் லைஃப் டிவியில் இரு மலர்கள் என்று பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். 26-ந் தேதி சனியன்று இரு மலர்கள் என்று இருந்தது. இதற்கு முன்பு Z தமிழ் டிவியிடம் இந்த ஒளிப்பரப்பு உரிமை இருந்தது. அவர்கள் காலை 10 மணி அல்லது பகல் 2 மணிக்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே பார்க்கவே முடியவில்லை. இப்போது சன் லைஃப் தொலைகாட்சியில் வருகிறது என்றவுடன் அதுவும் மாலை 7 மணிக்கு எனும்போது பார்க்கலாமே என்ற ஆசை.வீட்டில் டிவிடி இருக்கிறது. இருந்தாலும் ஆசை.
25-ந் தேதி வெள்ளி மாலை சுமார் 7.10 மணிக்கு முரசு தொலைக்காட்சியை வைத்தபோது வெள்ளி மணி ஓசையிலே பாடல் காட்சி. ரசித்துப் பார்த்த்து விட்டு அடுத்த பாட்டு என்னவென்று பார்த்தால் மகராஜா ஒரு மகராணி பாடல். உடனே புரிந்து விட்டது ஒரு படப் பாடல்கள் வரிசையில் இரு மலர்கள் பாடல்களை போடுகிறார்கள் என்று. வெளியே போகும் வேலையை தள்ளி வைத்து விட்டு பாடல்களை பார்க்க தொடங்கினேன். சன் லைஃபில் மறு நாள் இந்தப் படம் என்பதால் போட்டிக்கு போடுகிறார்கள் என யூகித்துக் கொண்டேன். அன்னமிட்ட கைகளுக்கு, கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மன்னிக்க வேண்டுகிறேன் சோக வடிவம் ஆகியவையும் பார்த்து விட்டு தெய்வ செயல் திரைப்படம் ஆரம்பித்தவுடன் வெளியே கிளம்பி சென்றேன். மாதவி பொன் மயிலாளும் மன்னிக்க வேண்டுகிறேனும் நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டிருந்தன.
மீண்டும் வீட்டிற்கு வரும்போது 9 மணி. அப்போது சன் லைஃப் தொலைக்காட்சியை போட்டவுடன் ஷாக். காரணம் இரு மலர்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவேந்தர் சார் போட்ட பட்டியலில் தேதி மாறிவிட்டது என்பது தெரிந்தது. ஏன் முரசு தொலைக்காட்சி ஒரு படப் பாடல்களாக இந்தப் படத்தை ஒளிப்பரப்பியது என்பதும் புரிந்தது.
அப்போது முதல் அதாவது மகராஜா ஒரு மகராணி பாடல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு மணி நேரமும் படம் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.
பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].
நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இரு மலர்கள் விமர்சனத்தை இதே திரியில் முன்பே நான் எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக் கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார். கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.
தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார்.கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.
இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.
(தொடரும்)
அன்புடன்
Last edited by Murali Srinivas; 28th October 2013 at 01:02 AM.
-
28th October 2013, 01:00 AM
#3494
இரு மலர்கள் -இடைவேளைக்கு பிறகு - ஒரு மீள் பார்வை - Part II
முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்
அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.
அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடமால் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும். முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி. அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.
மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய வீட்டுக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?
இறுதியாக படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.
ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.
இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.
அன்று பார்த்த நான்கு பாடல் காட்சிகளை பற்றியும் சொல்ல வேண்டும். வெள்ளி மணி ஓசையிலே [இது முரசில் வந்தது]. படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும்வரை
தவம் இருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!
மகராஜா பற்றி சொல்லி விட்டேன்.
அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோவில் சேர்ந்த ஒரு மலரும்
என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.
இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு. இந்த பாடலைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு சாரதா அற்புதமாக எழுதியிருந்தார். அது இப்போது வாசிக்க கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.
கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக
என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.
அதே போன்று இரண்டாவது சரணத்தில் .
தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தின் முதல் பகுதியை அன்று பார்த்திருந்தால் இன்னும் இரண்டு பார்ட் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
ஆயிற்று, இன்னும் நான்கு நாட்கள் போனால் நவம்பர் 1 வந்து விடும், நாற்பது ஆறு ஆண்டுகள் கடந்து விடும். இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.
ACT அவர்களிடம் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். சார் ஒரு மூன்று படங்கள் மிகுந்த போட்டிக்கிடையே அதாவது மற்றொரு நடிகர் திலகத்தின் படத்தோடயே போட்டி போட்டு ரிலீஸ் செய்தீர்கள்.இதற்கும் போட்டி போட்ட படங்கள் உங்கள் படங்களை விட அதிக எதிர்பார்ப்பையும் வெற்றி பெறுவதற்கான மூலக்கூறுகளை அதிகமாக கொண்ட படங்கள்.அப்படியிருந்தும் எப்படி சார் தைரியமாக ரிலீஸ் செய்தீர்கள் என்று கேட்டபோது ACT சிரித்துக் கொண்டே " என் சரக்கு முறுக்கு" என்றார்.
அன்புடன்
PS 1 : நடிகர் திலகத்தின் மற்றொரு படத்துடன் போட்டி போட்ட ACT யின் படங்கள்
இரு மலர்கள் - போட்டி படம் ஊட்டி வரை உறவு - Nov 1,1967
எங்கிருந்தோ வந்தாள் - சொர்க்கம் - Oct 29,1970.
பாரத விலாஸ் -24.03.1973, ராஜ ராஜ சோழன் - 31.03.1973.
PS 2: என் சிபாரிசினால் படம் பார்த்த என் அலுவலக colleague படம் பார்த்துவிட்டு என்னிடம் கேட்ட கேள்வி " சார், இந்தப் படத்தோட உல்டாதான் சில்லென்று ஒரு காதல் போலிருக்கு" என்றார்.
-
28th October 2013, 07:25 AM
#3495
Junior Member
Newbie Hubber
முரளி ,
தோய்ந்து எழுதுவது என்பார்களே, அது இதுதான்.
இரு மலர்கள் படத்தை பொறுத்த வரை இன்னொரு நெஞ்சில் ஓர் ஆலயம்.
அவரவர்களின் கோணத்தில் உணர்ச்சி தெறிப்பு , வெடிப்பு இவை அற்புதமாக பதிவான படம். என்னதான் பத்மினி,கே.ஆர்.விஜயா மாஞ்சு மாஞ்சு நேர் நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்ய பார்த்தாலும்,நடிகர்திலகத்தின் உளவியல் பார்வை கொண்ட situation சார்ந்த உணர்ச்சி cocktail மற்றவற்றை அலை மாதிரி அடித்து சென்று விடும்.
கண்ணதாசன்-எம்.எஸ்.வீ stale ஆக போன நேரத்தில் வாலி-எம்.எஸ்.வீ இணைவு புத்துணர்வு தந்தது.(நன்றி ஏ.சி.டி)
எனக்கு பிடித்தவை மன்னிக்க, அன்னமிட்ட.
முன்னரைத்த காதலை முடிவுரையாய் தர சொல்லும் பாடலில் செல்லமாய் நடிகர்திலகம் உந்தன் ஆசையை தூண்டுகிறேன் என்று மார்பில் விரல் வைக்க ,நாணும் நாட்டிய பேரொளியின் response ???அடடா????
சுசிலாவின் குரலில் சொன்னது நீதானா, அன்னமிட்ட கைகளுக்கு, ஒரு நாளிரவு பகல் போல் நிலவு பாடல்கள் என் மனதை கீறி கண்ணீர் துளிக்க வைத்து விடும். இந்த முறை எம்.எஸ்.வீ சார் வீட்டு பேரன் வரவேற்பில், சுசீலாவிடம் ஆசி பெற்றது எனக்கு கிடைத்த மோட்ஷம்.
Last edited by Gopal.s; 28th October 2013 at 09:37 AM.
-
28th October 2013, 07:36 AM
#3496
Junior Member
Newbie Hubber
நேற்றுதான் ஒரு re -make படத்தின் பாடல்களை கேட்டு கொண்டிருந்தேன். அந்த கால நினைவலைகள் திரும்பியது.
எஸ்.டீ.பர்மன்,ஆர்.டீ.பர்மன்,சங்கர்-ஜெய்கிஷன்,லட்சுமி-பியாரி போன்றவர்களின் இசையமைப்பில் வந்த படங்கள் மொழி மாற்றம் அடையும் போது, எம்.எஸ்.வீ அவர்களின் சொதப்பலால்தான் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை.
பாவ மன்னிப்பு,பாசமலர்,நெஞ்சில் ஓர் ஆலயம்,ஆலயமணி என்று எம்.எஸ்.வீ - டி.கே.ஆர் இணைவில் வந்து இசை புரட்சி நடத்தி வெளி மாநில இசையமைப்பாளர்களை திணற வைத்த காலம் எங்கே? துரோகம் செய்து ,ஒரு அற்புதமான தமிழ் இணையை கழட்டி விட்டு ,இளைய ராஜா வரும் வரை எழுபதுகளில் தமிழ் பட இசையையே தரம் இறக்கி வைத்திருந்த கெட்ட காலம் எங்கே?
வினை விதைத்தவன் மட்டும் வினை அறுக்கவில்லை. தமிழர்கள் நாமும் 71-76 ,தலையெழுத்தே என்று இந்தி இசை கேட்டு கொண்டிருந்தோம்.
Last edited by Gopal.s; 28th October 2013 at 07:49 AM.
-
28th October 2013, 07:45 AM
#3497
Senior Member
Seasoned Hubber
Nadigar Thilagam films in TV Channels 28.10.2013 – 02.11.2013
J MOVIES
THIRUPPAM – 28.10.2013 – 5 PM
BANDHAM – 29.10.2013 – 5 PM
RAJA MARIYADHAI – 30.10.2013 – 5 PM
MANNAVARU CHINNAVARU – 31.10.2013 – 5 PM
JALLIKKATTU – 01.11.2013 – 5 PM
DHAVANI KANAVUGAL – 02.11.2013 – 5 PM
MEGA 24
RAJA BHAKTHI – 30.10.2013 – 2.30 PM
UTHAMA PUTHIRAN – 31.10.2013 – 2.30 PM
THIYAGAM – 30.10.2013 – 6 PM
NEETHIYIN NIZHAL – 31.10.2013 – 6 PM
VASANTH TV
VASHKKAI – 31.10.2013 – 2 PM
AS MURALI SIR EXPRIENCED, THE PROGRAMMES GIVEN ABOVE ARE SUBJECT TO LAST MINUTE CHANGE. INFO COMPILED FROM WEBSITE.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
28th October 2013, 07:56 AM
#3498
Junior Member
Newbie Hubber
நேற்றைய கவர்ச்சி கன்னிகள் அம்மா,அத்தை ரோல் களில் வர கூடாது என்று அவசர சட்டம் பிறப்பிக்க பட வேண்டும். நான் ரத்த கையெழுத்திட தயார்.
சத்தியமா சத்திய ப்ரியா பதிவு டாப் டக்கருதான்.
-
28th October 2013, 07:58 AM
#3499
Junior Member
Newbie Hubber
வாசு,
உன்னுடைய சண்டை,கதாநாயகியர்,இயக்குனர் ,ஆடை தொடர்கள் இந்த திரியில் நெய்யாக எரிய வைத்து ஒளி கொடுக்கிறது. நன்றி.
-
28th October 2013, 08:01 AM
#3500
Junior Member
Newbie Hubber
சரஸ்வதி லட்சுமி ,ரவி சார் lower down batsman ஆக வந்து செஞ்சுரி partnership அடைந்து விட்டார்கள். தொடருங்கள்.ரசிக்க கூடிய பதிவுகள்.
Bookmarks