-
31st October 2013, 10:42 PM
#3611
Junior Member
Senior Hubber
Dear Vasu Sir
Thanks for Article about Great Record Creator of World Cinema Nadigar Thilagam Sivaji's PARASAKTHI. Nobody in the World Created Such Record from his First Film.
SIVAJI IS THE GOLDEN GIFT TO INDIAN CINEMA
C.Ramachandran
-
31st October 2013 10:42 PM
# ADS
Circuit advertisement
-
31st October 2013, 11:32 PM
#3612
Junior Member
Regular Hubber
தீபாவளி முதல் கோவை ஷன்முகாவில் நடிகர் திலகம் அவர்களின் மூன்று பரிமாண நடிப்பில் வெளிவந்த 200வது மதோன்னத, தரணியை அதிரவைத்த வெற்றி படைப்பு திரிசூலம் !
நடிகர் திலகம் மற்றும் திரிசூலம் - சாதனைகளின் சில துளிகள்.
1) நடிகர் திலகம் நடிக்க வந்து 25வது வருடம் 1979 என்பது மட்டும் அல்ல. 25 வருடத்தில் 200 படங்களை நிறைவு செய்த சாதனை. அதாவது ஒரு வருடத்திற்கு சராசரி 8 திரைப்படங்கள்.
இன்னும் சொல்லப்போனால் 45.625 நாட்களுக்கு (ஒன்றரை மாத இடைவெளியில்) ஒரு நடிகர் திலகத்தின் ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது !
பல சமயங்களில் ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்து இரெண்டுமே பிரம்மாண்ட வெற்றியும் கண்டிருக்கிறது (உதாரணம் : சொர்க்கம் & எங்கிருந்தோ வந்தாள் / ஊட்டி வரை உறவு & இரு மலர்கள் மற்றும் பல )
2) 45.625 நாட்களுக்கு ஒரு திரைப்படம் என்றால் ஒரே மாதிரியான சாதாரண மசாலா கதைகள் மட்டும் படமாக்க படவில்லை. புராண, இதிகாச, சமுதாய சீர்திருத்த, வரலாற்று காவியங்கள் இதில் அடங்கும். ஒவொரு கதாபாதிரத்திர்கேற்றார்போல தன்னை மாற்றிக்கொள்ளும் பாங்கு எந்த நடிகருக்கு இவர் அளவிற்கு இவர் நடித்த காலத்தில் வந்திருக்கிறது என்று சற்றே எண்ணி பார்க்கவும்..!
உலக திரையுலகில் மிக மிக பிரபலமாக இருந்தும், தமிழ் திரை உலகில் என்றுமே உச்சத்திலிருந்தும், தமிழ் திரை உலகின் வர்த்தகம் பெரிதளவில் இவரை நம்பி இருந்தும், இவரால் எந்த தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ, கதாசிரியர்களோ, சக நடிகர்களோ, விநியோகஸ்தர்களோ மற்றும் எந்த தனிமனிதனோ தொந்தரவடயவில்லை,உள்ளத்தால், உடலால் பாதிப்படையவில்லை என்பது மிக பெரிய சாதனை.
நேர்மை,
நேரம் தவறாமை,
கண்ணியம் காத்தல்,
ஒழுக்கம் ,
தொழில் பக்தி,
இயக்குனரை மதித்தல்,
சக நடிகர்களுக்கு சம வாய்ப்பு அளித்தால்
கட்டுகோப்பு
உயர்ந்த சிந்தனை
இப்படி பல நல்ல குணங்கள் நடிகர் திலகத்திற்கு இருந்ததால் தான் இவரை வைத்து திரைப்படம் தயாரிக்க, தயாரிப்பாளர்கள் நான் நீ என்று அவர் திரை துறையில் இருக்கும் வரை போட்டி போட்டார்கள் !
ஒரு வருடத்தில் 8 படங்கள் என்றால், இவரால் பிழைத்தவர்கள், இவரை வைத்து பிழைத்தவர்கள் எத்துனை பேர் என்று சற்று எண்ணிப்பாருங்கள் !
லைட் பாய் முதல் டச்-உப பாய் வரை,
சக நடிகர்கள்,
சக நடிகையர்,
இயக்குனர்கள்,
உதவி இயக்குனர்கள்,
அலங்காரம்,
நடனம்,
சண்டைபயிர்ச்சி,
கலை,
கேமரா,
கதாசிரியர், அவருடைய சிஷ்யர்கள்,
போஸ்டர் ஓட்டுபவர்கள்,
திரையரங்கு உரிமையாளர்,
தியேட்டர் கான்டீன்,
சைக்கிள் மற்றும் கார் பார்கிங்,
மற்றும் பலர் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நடிகர் திலகத்தின் திரைப்படம் வரும்பொழுதெல்லாம் நல்ல வருமானம் பெற்று வளமுடன் வாழ்ந்திருக்கிறார்கள் !
200 வது திரைப்படம் திரிசூலம் 1979இல் வெளிவந்து இன்று வரை எங்கு திரையிட்டாலும் நல்ல மகசூல் செய்துகொண்டிருகிறது என்றால் அது மிகையாகாது. தவறானவர்கள் கைகளில் இந்த திரைப்படம் போகும்போது அவ்வப்போது சிறிது வேண்டுமென்றே பாதிபடைய அவர்கள் வைத்தாலும் மீண்டும் ஒரு போஏனிக்ஸ் பறவை போல உயிர்தேழுந்துள்ளதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
திரிசூலம் வெளிவந்தபோது சாதனைகளின் சில துளி !
1) சாந்தி, கிரான், புவனேஸ்வரி திரையரங்குகளில் 900 காட்சிகள் அதாவது ஒவ்வொரு திரையரங்கிலும் 100 நாட்கள் வரை தொடர்ந்து அரங்கு நிறைவு ( continous houseful shows) கண்ட திரைப்படம்.
2) 12 வாரங்களில் ருபாய் ஒரு கோடி வசூல் சர்வ சாதாரணமாக ஊதி தள்ளிய படம்.
3) 1974இல் வெளிவந்து அதற்க்கு முன் ஏற்படுத்தப்பட்ட அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து சுமார் ருபாய் 1.5 கோடிக்கு மேல் வசூல் செய்த நடிகர் திலகத்தின் "தங்கபதக்கம்" திரைப்பட வசூலை திரிசூலம் முறியடித்தது ! நம் திரி நண்பர்களுக்கு ஒரு விழாவில் திரு. Rm வீரப்பன் கூறியது நினைவிருக்கலாம். ! அது எந்த விழா என்று திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் அல்லது திரு முரளி அவர்கள் நினைவுபடுத்தினால் நன்றாக இருக்கும் !
200வது திரைப்படம் 200 நாட்கள் ஓடியது மிகபெரிய சாதனை. ஆனால் இந்த சாதனை ஏற்கனவே சிலமுறை நடிகர் திலகம் ஏற்படுத்தியுள்ளார் என்பதுதான் உண்மை !
மேலே கூறியவை சாதனையின் ஒரு சில துளிகளே !
திரிசூலம் மீண்டும் ஒரு நல்ல வெற்றியை பெரும் என்பதில் ஐயமில்லை. ! விநியோகிப்பவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
Last edited by Saraswathi Lakshmi; 31st October 2013 at 11:45 PM.
-
1st November 2013, 06:11 AM
#3613
Junior Member
Newbie Hubber
எஸ்.எல். அருமை.திரிசூலம் வெற்றி காண பிரார்த்திக்கிறேன்.
-
1st November 2013, 09:34 AM
#3614
Senior Member
Seasoned Hubber
Last edited by RAGHAVENDRA; 1st November 2013 at 10:03 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
1st November 2013, 12:08 PM
#3615
Junior Member
Seasoned Hubber
Dear SL , your narration carries tons of passion and involvement . Well researched mail with good amount of statistics . Kindly do continue

-
1st November 2013, 12:52 PM
#3616
Junior Member
Devoted Hubber
அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தலைவரைப்போல முக பாவங்கள் காட்ட யாராலும் முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
..ஆனால் அதில் ஓரளவு காட்டகூடவா யாரும் இல்லை என நினைத்திருந்தபோது,
தற்செயலாக எனக்கு இந்த வீடியோ கிடைத்தது.விடையும் கிடைத்தது.கண்டு மகிழுங்கள்..
http://in.screen.yahoo.com/babys-emo...144913027.html
-
1st November 2013, 01:21 PM
#3617
Junior Member
Seasoned Hubber
E&OE
Shanti - ஒரு மேலோட்ட பார்வை
நேற்று முரசில் சாந்தி - படம் பார்த்தபின் கிடைத்த மன சாந்தியில் உறங்க சென்றேன் . எப்படிப்பட்ட படம்! - இப்படியெல்லாம் கூட நடிக்க முடியுமா ?! மற்றவர்கள் இருந்தும் NT மற்றுமே இருப்பது போன்ற ஒரு பிரமை ---- பிரிண்ட் was not up to the mark . மணிரத்தினத்தின் படத்தை பார்ப்பது போல் ஒரு இருள் சூழ்ந்த பிரிண்ட். இந்த படத்தை பல ஜாம்பவான்கள் இந்த திரியில் அலசி உள்ளார்கள் - எனவே என் பங்கு ஒரு சின்ன அணில் மாதிரிதான் -----
The story gives lots of emphasis on value system in society தொட்டு தாலி கட்டியவன்தான் கணவனாக இருக்க வேண்டும் - நல்ல சமயத்தில் ( உயிர் போகும் தருவாயுலும் ) கணவனாக நடிக்க இருக்கும் கட்டாயத்தில் தள்ளபடுபவனை ஒரு உயர்ந்த மனைவி ஒருகாலும் கணவனாக ஏற்று கொள்ள மாட்டாள் - உயிரை விட தயங்க மாட்டாள். நல்ல உயர்ந்த கருத்து - whether this suits to present is highly debatable .
நடிப்பு - ஒருவன் பல பிரச்சனைகள் தன்னை சூழும்போது , தன்னை தானே பல கேள்விகள் கேப்பது உண்டு - எவளவு அழகாக NT தன் நிலைமையை புரிய வயிப்பார் - நாமே எழுந்து சென்று விஜயகுமாரியை சமாதான படுத்தினால் என்ன என்று தோன்றும் ! இந்த தமிழகம் புரியாமலே , புரிந்துகொள்ளாமலே பல சாதனையாளர்களை தொலைத்துவிட்டதே என்று வருத்தமாக உள்ளது .
இந்த படத்தில் NT க்கு முன்று வேடங்கள் - ஆச்சிரியமாக இருக்கிறதா ? - ஒன்று - நட்புக்கு உதாரணமாக இருக்கவேண்டிய பாத்திரம் - இது அவர் இரத்தத்தில் ஊரிய ஒன்று - சும்மா ஊதிவிடுவார் . இரண்டாவது நண்பனின் மனைவியுடன் கணவனாக இருக்கவேண்டிய நிலைமை - He takes the Value system to the height of Himalayas - முன்றாவது - தான் காதலித்த பெண்ணை கைவிடாம அதே சமயத்தில் கல்யாணமும் பண்ணிக்கொள்ள முடியாமல் a catch 22 situation - excellent acting displayed in all the three different roles.
மற்ற பல நடிகர்களும் இந்த படத்தில் வருவார்கள் ஆனால் சாந்தி தருவது NT ஒருவர் மட்டுமே !
தேவிகா இந்த படத்தை ஒரு தொய்வு இல்லாமல் NT யுடன் பார்த்து கொள்வார்- Excellent chemistry , history , mathematics and I'm not competent enough to write more about this pair .
பாடல்கள் :
" வாழ்ந்து பார்க்கவேண்டும் " - "ஆசை அளவு காண வேண்டும் " - என்ன மாதிரியான வார்த்தைகள் - ஆசைகள் மட்டும் அளவுடுன் இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்/ இருக்கும் !!
"யார் இந்த நிலவு " - இந்த பாடலையும் , நடிப்பையும் சொல்ல இனி வார்த்தைகள் இல்லை
"செந்தூர் முருகன் கோயிலிலே "- அருமையான பாடல் - நாள் முழுதும் கேட்டுகொண்டிருக்கலாம்
"நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் " - என்ன பாடல் - NT நம் மனதில் என்றோ வந்துவிட்டாலும் , பாடல் புதியதாகவே உள்ளது
" ஊரெங்கும் மாவிலை தோரணம் " - கண்ணில் இனி நீர் இல்லை
முடிவுதான் சற்றே ஏமாற்றமாக உள்ளது - யாருமே தப்பு செய்யாமல் ஏன் தனக்கு தானே தண்டனை வழங்கிகொள்கிறார்கள் என்றுதான் புரியவில்லை . NT யையும் தேவிகாவையும் கொல்லாமல் விட்டதால்தான் சாந்தி கிடைத்தது முடிவில் ! Overall a great show and happy to watch a great pair !
Ravi

-
1st November 2013, 01:29 PM
#3618
Senior Member
Seasoned Hubber
அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நேரத்தில் நடிகர்திலகம் அவர்களோடு தீபாவளி நினைவு ஒன்றைப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
தீபாவளி அன்று வீட்டுக் கடமையை விரைவாக முடித்துவிட்டு, அன்னை இல்லம் சென்றால், நடிகர்திலகம் அவர்கள் FRESH ஆக அமர்ந்திருப்பார். இதுமாதிரியான விசேஷ நாட்களில் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் ஜோராகக் காட்சியளிப்பார் நடிகர்திலகம். பேரன், பேத்திகள் வெடிகளை கொளுத்துவதை கொஞ்ச நேரம் ரசிப்பார். அவருடன் செர்ந்து நானும். வெடி புகை என்பது நடிகர்திலகத்துக்கு அலர்ஜி என்பதால் சிறிதுநேரத்திலேயே வீட்டிற்குள் சென்றுவிடுவார். அதன்பின் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். புதிய 10 நோட்டினை அன்பளிப்பாக அளிப்பார். ஒருமுறை ஆர்வக் கோளாறில் ஒரு ரசிகர் அந்த ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்க, ரூபாய் நோட்டு என்பது நாம் வணங்கும் கடவுள் மாதிரி - அதில் கையெழுத்திடுவதோ, கிறுக்குவதோ, கடவுளையே அவமதிப்பது மாதிரி என்று கூறி, அவரைக் கடிந்துகொண்டார் நடிகர்திலகம். அவருடையை தேசபக்தியைப் பாருங்கள்.
அதுமாதிரி ஒரு விசேஷ தருணத்தில் நடிகர்திலகத்திற்கு நான் மரியாதை செய்தபோது எடுத்த ஒரு புகைப்படத்தையும் இந்த தீபாவளி நினைவாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமைப்படுகிறேன்.

(புகைப்படத்தில் தலைவருடைய பார்வையையும், சுற்றியிருப்பவர்களுடைய பார்வையும் கவனிக்க)
நன்றி
Last edited by KCSHEKAR; 1st November 2013 at 01:55 PM.
-
1st November 2013, 01:41 PM
#3619
Junior Member
Seasoned Hubber
-
1st November 2013, 02:05 PM
#3620
Junior Member
Devoted Hubber

Originally Posted by
KCSHEKAR
அனைத்து நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நன்றி
KC சார்,
தலைவரின் தீபாவளி வாழ்த்துக்களை எங்களுக்கும் வாங்கி கொடுத்த(புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் பாணியில்) உங்களுக்கு கோடானு கோடி நன்றி.
அன்புடன்,
ganpat
Bookmarks